Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மையல் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | April 30, 2016 | , , ,


இழுத்து கொண்டும்
இழைத்து கொண்டும் செல்கிறது கவிதை

தொட்டதெல்லாம்
தொடுத்து கொள்கின்றன எண்ணங்கள் வண்ணங்களாக

விடு பட்ட
எழுத்துகள் வினா எழுப்புகின்றன
எனை கொண்டு எப்பொழுது வடிப்பாய் என

இரகசியங்கள்
மெளனித்து கொள்கின்றன
வார்த்தைகளின் பிடியில் சிக்கிடாமல்

அலுப்பதேயில்லை
எழுத்துகளின் ச"மையல்"

நட்புடன் ஜமால்

12 Responses So Far:

நட்புடன் ஜமால் said...

ஜஸாக்கல்லாஹு ஹைரன்

crown said...

விடு பட்ட
எழுத்துகள் வினா எழுப்புகின்றன
எனை கொண்டு எப்பொழுது வடிப்பாய் என
---------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.வயத்துக்கு வந்த பெண் வாக்க படாமல் போனால் அது சரியாகுமா?அதுபோல் விடுப்பட்ட எழுத்துக்களும் கேட்கதானே செய்யும்? அருமை வரிகள்!

crown said...

இரகசியங்கள்
மெளனித்து கொள்கின்றன
வார்த்தைகளின் பிடியில் சிக்கிடாமல்
-------------------------------------------
அருமை ! ரகசியத்தின் வாயில் அதுவே பூட்டை போட்டுக்கொண்டுள்ளது திறந்துவிடாமல்!

crown said...

அலுப்பதேயில்லை
எழுத்துகளின் ச"மையல்"
----------------------------
சலிப்பதே இல்லை இப்படி சமைத்தால் சாப்பிட!

crown said...

இழுத்து கொண்டும்
இழைத்து கொண்டும் செல்கிறது கவிதை
-------------------------------------
எல்லாம் "மையல்" கொள்வதால் இழுத்துக்கொண்டும்,அதன் அழகை இழைத்துக்கொண்டும்!இளைமையின் காதல் அதுவே அழகிய கவிதை!

crown said...

தொட்டதெல்லாம்
தொடுத்து கொள்கின்றன எண்ணங்கள் வண்ணங்களாக
--------------------------------------------------
நற்சிந்தனையில் உதிப்பதெல்லாம் இன்பம் தரும் வண்ண மயம்!

sabeer.abushahruk said...

சிலருக்கு மட்டுமே வார்த்தைகளுக்குள் அவற்றின் முழு அர்த்தத்தையும் திணித்து வாக்கியங்களில் அமைக்க இயலும்.

அந்தத் திறமை தங்களிடம் கொட்டிக்கிடக்கிறது.

வாரி வழங்குங்கள், எங்களைப் போன்ற தமிழ் விரும்பிகள் அனுபவித்து மகிழ்கிறோம்.

sabeer.abushahruk said...

க்ரவ்னின் தமிழுரை மையலுக்கு மையல் சேர்த்து சொக்கவைக்கிறது பதிவு.

ajmal said...

புத்தகம் போடுங்கள்

ajmal said...

புத்தகம் போடுங்கள்

அதிரை.மெய்சா said...

எழுத்துக்களின் ச' மையல் அருமை.

Unknown said...

இந்தக் 'கவிதை'யை எழுதியவருக்கு:

புதுக் 'கவிதை'யானாலும் மரபுக் கவிதையானாலும், தமிழிலக்கண அறிவு கொஞ்சமாவது தேவை. அண்மையில் வெளிவந்த 'நல்ல தமிழ் எழுதுவோம்' என்ற நூலைப் படிக்கவும். சென்னை இலக்கியச் சோலைப் பதிப்பு. என் கருத்தைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு