சோலை
பெருங்கடலுட் பேரலையின் உப்புக் காற்றைப்
பிறர்க்குதவும் விதமாகச் சுழற்சி யாக்கி
அருங்காற்றுப் பிள்ளைகளாய் ஈன்றெ டுத்தே
ஆவலுடன் கொஞ்சிமிக மகிழ்ந்து நிற்க
விரும்புவிதம் அணியணியாய்த் தழுவிக் கொண்டு
வீசுகின்ற குளிர்காற்றாம் மங்கை நல்லாள்
கரும்பினிலும் தேனுள்ளும் மறைந்த இன்பம்
கனிவுடனே தருவதுவே சோலை யாகும்.
அதிரை அஹ்மத்
13 Responses So Far:
பெருங்கடலுட் பேரலையின் உப்புக் காற்றைப்
பிறர்க்குதவும் விதமாகச் சுழற்சி யாக்கி
அருங்காற்றுப் பிள்ளைகளாய் ஈன்றெ டுத்தே
------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.சாச்சாவின் அமுதமிழ் அழகு தென்றலாக மாறி இங்கே வீசுகிறது!என்னே புலமை ,இனிமை.உப்புக்காற்றை அதன் சுழற்சி கொண்டே மாற்றி அது நாம் நுகரும் நறும் மணம் தரும் நல்காற்றாய் அருள் காற்றாய் ஈன்றுதந்தது.வார்தை செரியும் கற்பனை திறனும்.அல்ஹம்துலில்லாஹ்!
அந்த மெல்ல வீசும் காற்றை இன்பம் தரும் மங்கையாக்கி இன்னும் காதல் ரசம் மாற இளமை!அது சோலையில் வீசும் போது கரும்பாகவும் தேனாகவும் சோலையே மாறிவிடுகிறது!கற்பனையும்.மொழிஆற்றலும் ஆட்சி செய்கிறது.முன்பு எழுதிய அருவிகளை பற்றிய கவிதையிலும் இளமை துள்ளியது.சாச்சா விளையாடுங்க உங்க இளமையை மறுபடியும் கவிதையாக ,காவியமாக!
சோலையைப்பற்றி சுருங்கச்சொ.னாலும் மரபுக்கவிதையில் அழகாகச்சொல்லியிருக்கிறீர்கள் காக்கா. அருமை வாழ்த்துக்கள்.
அழகான சோலை...!
சோலைக்குள்
ஆற்றிற்கு வாய்த்ததொரு சாலை
உப்புக்காற்றை சுழற்றி மாற்றியது
சோலை இலைவிரிப்பா
சேலை புன்சிரிப்பா
அருமை
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா
படித்துச் சுவைத்துப் பாராட்டியோர்க்கு நன்றி.
நான் இணைத்த 'ஒப்புச் சோலை'யை மாற்றி, உண்மைச் சோலைப் படமாக்கிப் பதிவு செய்த 'அதிரை நிருபர்' குழுவுக்கும் நன்றி.
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
பிறந்தது
கடலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
பிறந்தது
கடலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
காற்றின் நலினம்
கவிதைக் கரு
தென்றல்:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
காற்றின் நலினம்
கவிதைக் கரு
தென்றல்:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
பிறந்தது
கடல் அலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
பிறந்தது
கடல் அலையில்
புகுந்தது
பூங்காவில்
தென்றல்:
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கே கருத்திடும் காலம் தொட்டே அமீன் காக்கா ஒரு கருத்தை இருமுறை பதிவிடுகிறார் இன்றோ அதற்கு மேலும் ஏதும் காரணம் உண்டா?
Post a Comment