அந்த திக் திக் நேரங்கள்...


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? தாயும், சேயும் எப்படி இருக்கின்றனர்? என ஒவ்வொருவருக்கும் இதயத்தின் திக், திக் ஓசை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆண் குழந்தையானால் அது வளர்ந்து சுன்னத் செய்யும் பருவம் வந்ததும் அதற்கு அதனால் வரும் பயம் கலந்த திக், திக் அந்த குடும்பத்தையே தொற்றிக்கொள்ளும்.

பெண் குழந்தையானால் அது பருவம் அடையும் தருவாயில் அதன் பெற்றோருக்கு வரும் ஏதேச்சையான திக், திக் அந்த குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும்.

ஆண், பெண் பிள்ளைகளை ஆரம்ப பள்ளி அனுப்பும் பொழுது பள்ளி செல்லும் முதல் நாள் வரும் பயம் கலந்த திக், திக் நாளடைவில் பள்ளிக்கட்டணம் செலுத்தும் நாளை எண்ணி பக், பக் வென மாறிப்போகும்.

அமைதியாய் இருக்கும் பரிட்சை அறையில் வினாத்தாள் வாங்கும் சமயம் படித்த கேள்விகளா? அல்லது படிக்காதது வந்து விட்டதா? என அதை பார்க்காமலேயே திக், திக் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பரவத்தொடங்கும்.

பரிட்சைகளெல்லாம் எழுதிய பின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் பொழுது அவரவருக்கு எதிர்பார்ப்பிற்கேற்ப திக், திக் ஓசை ஓயாமல் அடிக்கத்தொடங்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ பருவத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பின் அதை செய்தது யார்? என ஆசிரியர்களால் விசாரணை துவங்கும் சமயம் திக், திக் தானாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு இதயத்தில் ஆனாகிவிடும்.

அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என அமைதியாய் இருந்து வரும் ஊரில் திடீரென ஒரு மூலையில் வெடிக்கும் கலவரம், குழப்பத்தால் ஒட்டு மொத்த ஊரினருக்கும் திக், திக் சூழ்நிலையை ஏற்படுத்தும்.

முதன் முதலில் அயல்நாடுகள் செல்வோருக்கு விசா, விமான டிக்கெட் ஏற்பாடுகள் ஆகி விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுதும், வரிசையில் ஒவ்வொருவராக குடியுரிமை அதிகாரிகளின் முன் சென்று நிற்கும் பொழுதும் நாம் குற்றமேதும் செய்யாமல் அப்பாவியாக இருந்தும் இதயத்தில் திக், திக் தீயாய் பற்றிக்கொள்ளும்.

வருடங்கள் சில கழித்து அயல்நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி சென்று தாய், தந்தையரை, உற்றார், உறவினரை, சொந்த, பந்தங்களை பார்க்க ஊர் திரும்பும் வேளையிலும், கொண்டு செல்லும் சாமான்களுக்கு கூடுதல் லக்கேஜ் ஏதேனும் வந்து விடாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு அசைவிலும் திக், திக் அடிக்காமல் யாரும் ஊர் திரும்புவதில்லை.

வீட்டினரால் திருமண ஏற்பாடாகி அந்த அரிய தருணம் நெருங்கும் வேளையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும், இறுதியாக மணமேடையில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியவர்களின், குடும்பத்தினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும் என்ன தான் நாம் உடல் பலசாலியாக இருந்து சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் இதய பேஸ்மெண்ட் திக், திக் என கொஞ்சம் ஆட ஆரம்பித்து விடும்.  

நன்கு படித்து முடித்து உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ ஒரு நல்ல வேலைவாய்ப்பு தேட நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டு உரிய இடம் சென்றடைந்து நேர்முக தேர்வு நடத்தும் அதிகாரியால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதில் அளித்து திரும்பும் வரை திக், திக் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

அரசு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்புடன் கூடிய திக், திக் திசையெல்லாம் பரவிக்கிடக்கும்.

பணியிடங்களில் மேலதிகாரிகளால் ஏதேச்சையாக சந்திக்க அழைக்கப்படும் பொழுது எதற்கென்றே தெரியாமல் திக், திக்கும் கூடவே சேர்ந்து வரும்.

விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகும் பொழுது உள்ளத்தில் திக், திக் நிரம்பிக்கிடக்கும்.

நாம் நேசிக்கும் சிலர் திடீரென இவ்வுலகை விட்டுப்பிரியும் பொழுது அதைக்கேட்கும் சமயம் மனவேதனையுடன் செய்வதறியாது திகைக்கும் சமயம் உள்ளத்தில் திக், திக் குடிகொள்ளும்.

வீட்டினர்களுக்கு திடீரென சுகக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயமோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் சமயமோ பரிதவிக்கும் உள்ளத்தில் திக், திக் வந்து பாய் விரித்து படுத்துக்கொள்ளும்.

மரண தண்டணைக்கைதிகளின் மரண தண்டணை நிறைவேற்றப்படும் சில மணித்துளிகளுக்கு முன்னர் அவர்களின் இதயம் திக், திக்கால் எப்படி திண்டாடி இருக்கும் என அவர்களையும், நம்மை படைத்த அந்த இறைவனுக்கே நன்கு விளங்கும்.

உலகில் பெரும் குற்றங்களுக்கு தண்டணை இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களால்  நிறைவேற்ற கட்டளையிடப்பட்டிருக்கும் இறைவன் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மன்னித்தால் அந்த தண்டணையிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவிக்கலாம் எனவும் தெளிவுர நமக்கு என்றோ தெரிவித்துவிட்டான் இறைவன். எனவே குற்றத்திற்காக தண்டிக்கும், மன்னிக்கும் இரு பெரும் பொறுப்புகளைப்பெற்றிருக்கும் மனிதர்களாகிய நாம் அந்த ஏழைப்பெண் ரிஸானா நஃபீக்கை அவள் குடும்ப ஏழ்மை கருதி அப்படியே அவள் தவறு செய்திருப்பினும் மன்னித்து விட்டு உலக இஸ்லாமிய எதிரிகளின் வாய்களை அடைத்திருக்கலாமே? அதனால் இறைப்பொருத்தத்தை நிரம்பப்பெற்றிருக்கலாமே? அரபு நாட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என உண்மைநிலையறியாது உளரும் ஊடகங்களுக்கும் பாலைவனத்திலும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் அன்று முதல் இன்று வரை மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என  அந்த பாதிக்கப்பட்ட அரபுக்குடும்பம் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உலகுக்கு எடுத்துரைத்திருக்கலாமே? என்ற துக்கம் கலந்த ஏக்கம் நம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை.

திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சவுதியில் தண்டணை நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த இலங்கைப்பெண் ரிஸானா நஃபீக்கின் ஞாபகமும், அவர் பெற்றோரின் துக்கம் தொண்டையை அடைக்கும் பேட்டியும் பார்த்தபின் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிரிச்சி. அதற்கு பின் எனக்கு தூக்கத்தை தொடர இயலாமல் போய் காலையில் எப்பொழுதும் போல் எழும்பி வழக்கம் போல் பணிக்கு வந்து விட்டேன். அதன் தாக்கமே இந்த ஆக்கம் எழுத வித்திட்டது.

இது எதோ ஒரு இஸ்லாமியப்பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு வந்த பச்சாதாபமும், இரக்கமும், பரிவும் அல்ல. உலகில் எந்த மூலையிலும் மனிதனாய் பிறந்த எவருக்கும் வேதனை தரும் நிகழ்வுகளும், அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதே மார்க்கம் போதிக்கும் நம் விருப்பமும், ஆசையுமாகும். அதை சரிவர உலக ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களின் தவறேயன்றி அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது.

சமீபத்தில் நம் வடக்கு எல்லையை பாதுகாத்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் இருவர் (பாக்கிஸ்தான் ராணுவத்தாலோ அல்லது இரு நாட்டு எல்லையின் சீர்கேட்டை என்றுமே விரும்பும் சில அயோக்கிய பிரிவினைவாதிகளாலோ) கொல்லப்பட்டு அதில் ஒரு வீரனுடைய தலை துண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு யாரும் ஒரு போதும் வக்காலத்து வாங்க இயலாது. அந்த வீரனின் தலை கிடைக்காமல் அவர் முண்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர்கள் மேற்கொண்ட ஆக வேண்டிய சடங்குகள் அவர்கள் நம்பிக்கைப்படி செய்ய இயலாமல் வேதனையில் தவித்து வருவதால் வரும் வலியை வெளியிலிருந்து யாரும் அந்தளவுக்கு உணர்ந்து விட முடியாது. அவ்வளவு கொடுமையான வலி தன் மகனின் தலையை திருப்பித்தர கேட்டு நம் நாட்டு அரசிக்கு அவர்கள் கோரிக்கை வைத்து நிற்பது. கண்ணீருக்கு நிறமில்லை, வேதனைக்கு மதமில்லை, மார்க்கமில்லை. எனவே யாருடைய வேதனையையும் யாரும் கொச்சைப்படுத்த உலகில் யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அல்லாஹ் அந்த பெண்ணுக்கு மறுமையில் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக.... அவரின் பிரிவால் வாடும் அந்த ஏழைக்குடும்பத்திற்கு அவர் ஹயாத்தோடு இருக்கும் பொழுது என்ன வருமானம் கிடைத்ததோ அதை விட பன்மடங்கு அந்த குடும்பத்திற்கு நினையாப்புறத்திலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பாயாக....ஆமீன்.

இதுபோல் வாழ்வில் நாம் சந்திக்கும் எத்தனையோ திக், திக் நிகழ்வுகள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அதை பின்னூட்டம் மூலம் நீங்கள் தொடரலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

25 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

தம்பி நெய்னா அவர்களே! உங்களின் திக் திக் பட்டியலைப் படிக்கும்போது அடுத்தது என்ன வரப்போகிறது என்பதே இப்போது நான் உணர்ந்த திக் திக் . First Class.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

இப்பவெல்லாம் கண்டதுக்கும் திக்கு, திக்குண்டு அடிக்க ஆரம்பித்து விட்டது. கடைத்தெருவிற்கு மீன் வாங்கப்போனாலும் சரி, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரிக்கு ஊசி போடப்போனாலும் சரி விலைவாசி உயர்வைக்கண்டும், இன்ன பிற நிகழ்வுகளைக்கண்டும் திக், திக் நம் அன்றாட வாழ்வில் உடனிருக்கும் ஒரு உற்ற தோழனாகி விட்டது.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் MSM N,

உங்களின் திக் திக் லிஸ்டை படிக்கும்போதே, நடந்த சம்பவங்களை கண் முன்னே மீண்டும் காட்டியது போன்ற உணர்வு. மறந்த நிகழ்வுகளை தட்டி எழுப்பி ஞாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

தேவையற்ற பின்னூட்டங்கள் வந்து சர்ச்சையை கிளப்பினால் திக் திக் என்று வரும் வலைத்தள நடத்துனர்களுக்கு. :)

பெயரில்லா சொன்னது…

திக் திக் அனுபவம் பேசுது...

அதிரை சித்திக் சொன்னது…

ஹோம் ஒர்க் செய்யாமல் ..அந்த ஆசிரியர் வருகை என்னும் போது
ஏற்படும் திக் திக் ..இளம் எஞ்சில் நெருப்பு ஈட்டி குத்தும்
திக் திக் ...

அபு இஸ்மாயில் சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
நண்பா நெய்னா இதை படிக்கும்போதே திக் திக்னு அடிக்குதுப்பா ,

//நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும்//

அதற்க்கு பிறகு வரக்கூடிய அந்த இரவை பற்றிய திக் திக்
சூப்பர் !!

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ஹாஜி முஹம்மது சாரு சைக்கிள்ல பள்ளிக்கொடத்துக்குள் எண்டர் ஆகும் பொழுது ஒட்டு மொத்த பள்ளிக்கூடத்திற்கே திக்கு, திக்குண்டு அடிக்கும் தெரியும்ல?????

செரமப்பட்டு கொடிப்பிடித்து, நடு ராத்திரி லாரியிலெ பட்டுக்கோட்டையில் நடக்கும் கட்சிக்கூட்டத்திற்கு சென்று சோர்வுடன் திரும்பி வந்து, மன்றப்பந்தல் போட்டு, ஈ.எம். ஹனீஃபா பாட்டு கேட்டு, கலர்கலரா கொடி ஒட்டி, மணவறை போல் அலங்கரித்து, தெருவெல்லாம் பேனர் கட்டி ஏதோ நம் வீட்டு கல்யாண காரியம் போல் கச்சல் கட்டிக்கொண்டு கட்சிக்குப்பணியாற்றி சொந்த, பந்தகளையெல்லாம் தேர்தல் தினத்தன்று வாகனங்களில் முறையே பரிவுடன் ஏற்றி நம் கட்சிக்கு சிந்தாமல், சிதறாமல் வாக்களிக்கச்செய்து பெருவாரியாய் ஜெயிக்கச்செய்து எவனோ கோட்டையில் அரியணை ஏறி சகல சவுகரியங்களுடன் வாழ‌ தேர்தல் முடிவன்று நமக்கு ஏனோ திக்கு, திக்குண்டு அடிக்கும்.......

இர‌வில் அடுத்த‌ வீட்டு ம‌ர‌ம் ஏறி அந்த‌ கொய்யாவை ப‌வ்விய‌மாய் கொய்து வ‌ந்து அடுத்த நாள் 'எந்த‌ க‌லிச்ச‌ல்ல‌ போவானோ.......' என‌ அடுத்த‌ ஊட்டு ராத்தா வெள‌ங்காம‌ல் ஏசுவ‌து கேட்டு திக், திக் என்று அடிக்கும்.

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Compiling a list of fears to explose to the readers is fine.

Empathized over the beheaded sister.... She might had fear, but they would give injection that makes them calm and quiet before beheading. At the beading moment she might not feel any fear.

The people whoever having fear unnecessarily cannot achieve anything great.

I think the subject of fear is not to have fun.

We need to have courage to face any fear by strong belief in Allah and His unmatched power to change anything.

Similar to darkness goes away while light comes, fears go away by nourishing the mind with courage.

Thanks and best regards

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

Wa alaikum mussalaam.

Dear Bro. Ameen,

Had you ever experienced the 'thick thick' fear in front of the scale stick of our Jawiya main gate holding by Saykkaadi in order to enter it at your childhood?

Of course, we have to face and break all fears with the real believe of almighty Allah.

However, even though we have to cross these kind of fears from our childhood.

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Actually the childhood fearness affects when we become adults.

Most children are afraid of teachers even in the class. They should have good relationship with each other and the learning environment will be conductive to friendly and healthier.

Lets think about the future of the children whose courage is supressed continuously by threatening just by the presense of the teacher.

Most people hesitate to write or speak(in English) (Tamil also encouraged) because of the fear(same thick thick) of others would find mistakes.

Shameed சொன்னது…

ராக்கெட் விடும் நேரம் கவுண்ட் டௌன் தொடங்கியவுடன் ஏற்ப்படும் திக் திக்

அப்துல்மாலிக் சொன்னது…

யூ டியூபில் தலை வெட்டிய வீடியோவையும் (பெண்ணை உக்காரவைத்து 5 நிமிடம் ஏதேதோ பேசிக்கிட்டிருந்தாங்க, அந்த திக்திக் கணம் அந்தப்பெண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்?) பார்த்து தொலைத்து அடுத்த இரண்டு நாள் தூக்கம் தொலைந்த இரவாக கடந்தது எனக்கு மட்டுமே தெரியும்......

sabeer.abushahruk சொன்னது…

பெரும்பாலும் அனைவருமே கடக்க நேரிட்ட திக் திக் நிமிடங்களை உங்களுக்கே உரிய பாணியில் வரிசைப்படுத்திச் சொல்லியிருப்பது வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஜாவியா வாசலில் குதிகால்களைத் தூக்கி உயரம் கூட்டி காண்பித்து அனுமதிக்குக் காத்திருந்த திக் திக்கும் மறக்க முடியாததுதான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அருமை மச்சான் திக்திக் பற்றிய நல்ல தொகுப்பு!

ஒரு காலத்தில் நம்ம அப்பாவை பார்த்தாலே எனக்கு திக்திக் எனக் கொள்ளும்.
வாத்தியார் பாடம் நடத்தும்போது எங்கோ கவனித்து விட்டு பின் அவர் போகும் வரை நம்மிடம் எதுவும் கேட்டுவிடக்கூடாதே என திக்திக் தொடரும்.
ஜாவியாவுக்கு உன்னோடு வந்துவிட்டு உன்னை மட்டும் உள்ளே விட்டு என்னை திருப்பி விடக் கூடாதே என திக்திக் தொடரும்.

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A சொன்னது…

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நிச்சயமாக
பலமுறை வந்து செல்லும் திக் திக்

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

”திக்”ஆனப் பாலில் கலந்தச் சுவையான தேத்தண்ணிக் குடித்தது போல் மிகவும் சுவையான ஓர் ஆக்கம் “திக் திக்” இதில் குறிப்பிட்டுள்ள எல்லாமே எல்லார்க்கும் கிடைத்தவைகள் என்பதால் மலரும் நினைவுகளாய் மணக்கின்றன.

இன்னமும் மேலாளரின் அழைப்பைக் கேட்டு அவரின் அறைக்குட் செல்லும் பொழுது “திக் திக்” ஏற்பட்டு உடல்நடுங்குவது, தலைமையாசிரியரைக் கண்டதும் அன்று ஏற்பட்ட அதே உணர்வின் வெளிப்பாடா?

இம்மிக்ரேஷன் முடிந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறி ஊர்க்குச் செல்லும் வாகனத்தில் ஏறியதும் “திக் திக்” எல்லாம் ஓடிப் போய்விட்டதும் தேர்வு முடிந்த மாணவனைப் போல் முகமும் அகமும் மலர்ந்து விவரிக்க இயலாத ஓர் இன்பம் உடலெங்கும் ஒடிப் பரவும் அந்த நிமிடங்களும்,

முதல் இரவின் “திக்திக்” அந்தமுதல் அனுபவம் கிடைத்ததும் ஓடிவிடும் அந்த நிமிடங்களும்,

நாளை மறுமையின் பயத்தில் “திக்திக்” அதிகமாகிக் கேள்விகள்-விசாரணைகள் முடிந்துச் சுவனம் என்னும் பேரின்பம் சுவைக்கப் போகும் அந்த நிமிடங்களும்


ஈடில்லா இன்பத் தருணங்கள்!

அருமையான மலரும் நினைவு மலர்களைப் பரப்பிய அன்புச் சகோதரர் மு.செ.மு.நெய்நா அவர்கட்கு நன்றி=ஜஸாக்கல்லாஹ் கைரன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்னாடி வரைக்கும் திக்கு, திக்குண்டு அடிச்சிரிச்சிம்மா.....

சிரமப்பட்டு சிட்டுக்குருவி போல் உழைப்பில் சிறுக,சிறுக சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்டி வெளிப்புற சிமெண்ட் பூச்சு பூசும் சமயம் வடகிழக்கே வானம் கன்னங்கரேண்டு கருத்துக்கிட்டு மப்பும், மந்திரமுமாய் வானில் கருணையின்றி பூச்சு பூசி வரும் சமயம் வீடு கட்டும் ஒவ்வொருவருக்கும் திக்,திக்குண்டு அடிக்கும்.

இங்கு வந்து திக்கு, திக்குண்டு அடிச்ச எல்லார்க்கும் ரொம்ப தேங்க்ஸ்.....

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

புதிய வேலைக்காக இறுதி நேர்முக தேர்வை முடித்துவிட்டு, offer letterக்காக காத்திருக்கும் போது திக் திக்குண்டு அடிக்கும். தற்போது எனக்கு ஏற்படும் திக் திக் இதுவே. :)

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

திக் திக் தருணங்கள்
சகோ நெய்னாவின் சிந்தனைகள் அருமை

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு திக் திக் எண்ணம், எதற்கு என்றால் ஏதோ ஒரு திக் திக் செய்தி வரப்போகுதோ என்ற நிலை, நல்லோதோர் பதிவு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்,
இந்த பதிவை படிக்கும் போதே ஒரு திக் திக் எண்ணம், எதற்கு என்றால் ஏதோ ஒரு திக் திக் செய்தி வரப்போகுதோ என்ற நிலை, நல்லோதோர் பதிவு வாழ்த்துக்கள்

Yasir சொன்னது…

அப்பப்பா எத்தனை வைகையான திக் திக்...நாம எல்லோரும் இதனை அனுபவித்து (கொண்டு) இருக்கின்றோம்,பிள்ளைகளின் ஒபன் ஹவுஸ் டேக்கு அவங்களுக்கு திக் திக் கென்று இருக்கின்றதோ..நமக்கும் ரொம்ப இருக்கும்...நல்ல வித்தியாசமான திக் திக் சிந்தனை வாழ்த்துக்கள் நண்பரே

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//ம்மாடீ அபுல்கலாம் காக்கா இங்கே வராம கொஞ்சம் முன்னாடி வரைக்கும் திக்கு, திக்குண்டு அடிச்சிரிச்சிம்மா.....//

உண்மையில் எனக்கு நிரம்ப “திக்திக்” இம்மாதத்தில்..

1) என் அன்புமகன் வாகனவிபத்தில் அடிபட்டு விட்டான் என்ற செய்தி கேட்டு
2) அதனால் என் நெஞ்சில் வலி ஏற்பட்டு
3) ஊர்ச்சென்று பார்க்க விமான பயணச்சீட்டுக் கிட்டும் வரை
4) பணிபுரியும் இடத்தில் குறுவிடுப்புக் கிட்டும் வரை
5) விமானப் பயணத்தில்
6) சென்னையிலிருந்து அதிரை வரை பேருந்து பயணத்தில்
7) அன்பு மகனைக் காணும் வரை
8) நேற்று அவரின் கைக்கட்டைப் பிரிக்கும் வரை
9) இனி, இன்ஷா அல்லாஹ் மீண்டும் அபுதபி பயணிக்கும் வரை
10) என் அன்புமகன் தேர்வு எழுதி முடியும் வரை

நிச்சயமாக, இந்த ‘திக்திக்” இருதயத்தின் |லப்டப்| ஒலி நிற்கும் வரைக்கும் தொடரும்....................................................!!

sheikdawoodmohamedfarook சொன்னது…

ரிசானா ராபிக்கின் மரணதண்டனை நிறைவேற்றம் மனிதர்களின் நெஞ்சுக்குள்ளே அடித்த 'டிக்--டிக்'மட்டுமல்ல, உலகமக்களின் கருணைகொண்டஇதயங்களைஒருகனம் நிறுத்திவைத்த டிக்-டிக். /கருணையுள்ள நெஞ்சுக்குள்ளே இறைவன்வாழ்கிறான்/

sheikdawoodmohamedfarook சொன்னது…

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????