அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்புடன் நடைபெற்ற இவ்வாண்டுக்கான ஆசிரியர் தின நிகழ்வுகளின் முழு காணொளியை இங்கே பதிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு ஆரம்பம் முதல் நிறைவுவரை மிகச் சிறப்பாக இந்த காணொளியை பதிவு செய்த மீடியா மேஜிக் நிறுவனர் சகோதரர் நிஜாம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் !
அதிரைநிருபர் பதிப்பகம்
51 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
எங்கள் ஆசிரியர்களையும் அவர்களின் சிறப்பையும் காணக்கிடைத்தமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி.
இக்காணொளியை பதிந்து எம்மைப்போன்றவர்களை மகிழ்வித்த அதிரை நிருபர் த்ளத்திற்கு நன்றியும் துஆவும்
காணொளியில் கண்டு கொஞ்சம் நான் சங்கடப்பட்ட விடயம்.. கார்த்திகா என்ற வெளியூர் ஏழை மாணவியின் சாதனை குறித்து அண்ணா சிங்கார வேலு அவர்கள் பேசும்போது யாரும் கரவொலி எழுப்பாமல் அவர் "கை தட்டலாமே" என்று கேட்டுக்கொண்டதற்குப் பிறகு கைதட்டியது.
நமதூரைச் சேர்ந்தவர்கள் சாதித்தால் மட்டும்தான் கரவொலி எழுப்ப வேண்டும் என்றில்லை. யார் சாதித்தாலும் அவர்களையும் ஊக்கப் படுத்தும் மனநிலை நம் அனைவருக்கும் வேண்டும். இனியாவது மாற்றிக் கொள்வோம்.
சகோதரர்களுக்கு.....ஆசிரியர் தினம் என்பது ஒரே நாளில் முடிவடைந்த ஒரு நிகழ்ச்சி இதை ஒரே தொகுப்பு பதிவாக வெளியிடாமல் மேலும் மேலும் அதை முன்னிலை படுத்தி 5 பதிவுகளாக வெளியிடுவது தேவையற்ற சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களை ஒட்டுமொத்தமாகப் போட்டு என்போன்ற நேரம் குறைவாக வாய்க்கப் பெற்றோரை வதைக்காமல் பகுதி பகுதியாகப் பதிந்து உதவிய அதிரை நிருபரின் சமயோஜித புத்தியை வரவேற்கிறேன்.
மணிக்கணக்கில் தொடர்ந்து ஒரே பதிவைப் படிக்கும்/பார்க்கும் எரிச்சலிலிருந்து தப்பித்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்ததில்.
ஜமாய்ங்க, அ.நி.
கைதட்டுதல் சம்மந்தமான ஜாஃபரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
ஆர்வம் இல்லாத விசயங்களை அடிக்கடி காண நேர்ந்தால் சலிப்படைவது மனித இயல்பே
ஏற்றி விட்ட ஏணிகளை கௌர விக்க நீங்கள் கொடுத்த மூனு நாள் போதுமா? மூந்நூறு நாள் கொடுத்தாலும் அந்தக் கடன் தீருமா? மூனு நாளும் போதாது! முன்னூறு நாளும் போதாது! இறக்கும் வரை தீராத நன்றிக்கடன் அந்தக் கடன்!
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு/
-[திருக்குறள் பாடல் 110-செய் நன்றி அறிதல்]
S,முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
கைதட்டுதல் சம்மந்தமான ஜாஃபரின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
ஆசிரியர்கள் ...வாரத்தில் 5 நாட்கள் வேலைசெய்யும் இவர்களில் சிலர் பள்ளியில் அரைகுறையாக பாடம் நடத்திவிட்டு அரசு சம்பளம் போதாது என்று வசதியான வீட்டு பிள்ளைகளுக்கு Tuition சொல்லிகொடுத்து பணம் பார்க்கும் வர்க்கமும் இவர்களில் உண்டு .
ஊருலே வாரத்துலே 7 நாளும் வேலை செய்யாம ஊருலே சோறு ஏரிலே தண்ணின்னு தின்னுட்கிட்டு தெண்டமா திரியிற கூட்டம் ஒன்னு இருக்கு
\\எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு/\\
ஏணிப்படிகளை ஏற்றமுடன் நினைத்திட எத்தனை விழியங்கள் இட்டாலும் , காண்பதற்கு எங்கள் இருவிழிகளும் போதா. ஏணிப்படிகளை ஏளனமாய் நினப்பதில் ஓர் ஆதம திருப்தியா? ஏனிப்படி?
உண்மையில், கவிவேந்தர் சொல்லை வழிமொழிகிறேன்: எங்களைப் போன்று பணிச்சுமையில் உழலும் போதில், நேரம் கிட்டாமைக் காரணியமாக நகைச்சுவை விருந்தளித்த அண்ணா சிங்காரவேலு அவர்களின் சொற்பொழிவை இன்றுதான் கேட்க முடிந்தது. இன்னும் நிறைய விழியங்கள் இட்டாலும் என் விழிகட்கு விருந்தன்றோ?
வாழ்க. அ.நி. யின் சேவைகள்!
கவியன்பன் கருத்துக்கு ஒரு "likes"
Assalamu Alaikkum
Very nice and thoughtful speech by our former student of our school, Mr. Anna Singara Velu.
My heartfelt congratulations to all of our teachers there. Teachers are to be always encouraged and recognized as our brother mentioned in his speech.
Thanks a lot to brother Mr. Nizam, Media Magic for his great video coverage with clear audio and video of our teachers, and energetic and young future leaders of India.
Thanks and best regards editors of AN. for their efforts to bringing this video to the world wide media.
It was too sentimental to watch my school, my teachers the souls who inspired and motivated me, gave me the base for my all achievements till date. Alhamdulillah.
Jazakkallah khairan.
B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com
ஆங்காங்கே அவசியமானதை ஓடவிட்டும், முழுமையாகவும் காண நல்ல சான்ஸ்.
காண ஒலி, ஒளி தந்தமைக்கு நன்றி.
காண ஒளி தந்த அல்லாஹ்விற்க்கு நன்றியும் அந்தக் கண்ணைக்கொண்டு எழுத்துக்களை படிக்க கற்றுதந்த ஆசிரியர்களுக்கு துவாக்களும், அதனை தொகுத்தளித்த சகோ.நிஜாம் அவர்களுக்கும் ஸ்பெஷல் துவாவும்
கவியன்பனின் கருத்துக்கும் அதற்கு முன்னர் தம்பி சபீர் அவர்களின் கருத்துக்கும் இரட்டை லைக்ஸ் .
================================================================
கனடாவிலிருந்து தம்பி அபூபக்கர் அவர்கள் புதிதாக ஒரு நல்ல விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார்கள்.
//ஆசிரியர்கள் ...வாரத்தில் 5 நாட்கள் வேலைசெய்யும் இவர்களில் சிலர் பள்ளியில் அரைகுறையாக பாடம் நடத்திவிட்டு அரசு சம்பளம் போதாது என்று வசதியான வீட்டு பிள்ளைகளுக்கு Tuition சொல்லிகொடுத்து பணம் பார்க்கும் வர்க்கமும் இவர்களில் உண்டு .//
முதலாவதாக-
பள்ளிகளில் அரை குறையாக பாடம் நடத்துகிறார்கள் என்கிற வாசகத்துக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். ஆசிரியர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் பற்றி ஹாஜா முகைதீன் சார் அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இப்படி அரை குறை ஆசிரியர்கள் அரை சதவீதம் கூட இருக்க மாட்டார்கள்.
அடுத்ததாக
டியூஷன் நடத்தி சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்தும் கடுமையான கண்டனத்துக் உரியது. அவர்கள் டியூஷன் நடத்துவதை தங்களது ஒய்வு நேரத்தைக் கூட பலவீனமான மாணவனை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதற்காக பயன்படுத்தி பாடுபடுவதாகவே நான் பார்க்க விரும்புகிறேன்.
ட்யூஷனுக்கு வருபவர்கள் இரண்டு வகை. ஒன்று இயற்கையிலேயே பலவீனமான மக்கு மாணவன். இரண்டாவது இன்னும் நிறைய மார்க்குகளைப் பெற்று போட்டித் தேர்வுகளில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்று நினைக்கும் மாணவன். இவர்களை உருவாக்குவது ஒரு தவறாகவோ ஐ.பி. சி யின் கீழ் வரும் குற்றச் செயலாகவோ கருத முடியுமா?
அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்களே வேலை நாள் என்பது அரசின் விதி. ஆனாலும் விடுமுறை நாட்களில் கூட ஸ்பெஷல் கிளாஸ் வைத்து நடத்தி பாடங்களை முடிப்பது உலகறிந்த விஷயம். இதே போல் அரசு வேலைகளில் இருக்கும் தாலுகா ஆபீசிலோ கலெக்டர் ஆபீசிலோ ஒரு கிளார்க் விடுமுறை நாளில் கூட வேலை பார்ப்பதாக காட்ட முடியுமா?
எத்தனை ஆசிரியர்கள் ஒரு சாதாரண தொகுப்பு ஊதியம் என்று வாங்கிக் கொண்டு சாதனையாளர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெரியுமா?
சாதாரணமாக ஏர்போர்டில் இருக்கும் வண்டியை நமது சாமான்களை ஏற்றி வந்து நமது காருக்கு நாமே மாற்றிய பின் அந்த வண்டியை எடுத்துப் போக பின்னாலேயே ஒருவன் வந்து அரசு ஊதியம் வாங்கும் ஒருவன் நூறு இருநூறு என்று கேட்கும் காலத்தில் நமது பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்து , தனது தனி வாழ்வின் நேரங்களை ஒதுக்கும் ஆசிரியர்களுக்கு சிறு தொகைகளை கொடுப்பது தவறா? அல்லது எந்த ஆசிரியராவது போகும்போது கவனித்துவிட்டுப் போங்க என்று சொல்லிக் கேட்டு இருக்கிறோமா?
தயவு செய்து புனிதப் பணிகளை போற்ற வேண்டாம். ஆனால் இழிவு படுத்தாதீர்கள்.
இன்னும் கேள்வி இருந்தால் கேட்கலாம் பதில் தர காத்து இருக்கிறேன்.
சகோ .இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு ..........ஆசிரியர் பனி புனிதம் என்கிறீர்கள் ...........சில ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் பற்றிய செய்திகள் பத்திரிகையில் வருகின்றனவே ?????????
தம்பி கனடா அபூபக்கர் அவர்களுக்கு,
உண்மைதான். மனிதனின் மூக்கில் சிந்த வேண்டிய சளி இருக்கிறது. அவனது அடிவயிற்றில் அசிங்கம் இருக்கிறது.
அதே மனிதனிடம்தான் மூளை, கண் , காது, நாக்கு, வாய், பல்,ஈரல, நுரை ஈரல, மண்ணீரல், பித்தப் பை போன்ற பயன்தரும் உறுப்புகளும் இருக்கின்றன.
மூக்கில் உள்ள சளிக்காகவும், அடி வயிற்றில் இருக்கும் அசிங்கத்துக்காகவும் மனிதப் படைப்பே தவறு என்று சொல்வீர்களா?
அது கிடக்கட்டும் உங்கள் வீட்டில் பலாப்பழம் வாங்கி அறுத்தால் அதில் உள்ள சுளைகளை சாப்பிடுவீர்களா அல்லது அதில் உள்ள நெட்டி, சக்கை, மேல் தோல் ஆகியவற்றை சாப்பிடுவீர்களா?
புல்லுருவிகள் எங்கும் எதிலும் உண்டு. கருப்பு ஆடுகளும் எங்கும் காணப்படும். ஒரு சில வெறியர்களின் விளையாட்டுக்காக ஒரு துறையையே பழி தூற்றுவது சரியா?
தவறு செய்யும் ஆசிரியர்கள் .0001 கூட இல்லை. நாட்டின் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையையும், பாலியல் தவறு நிருபிக்கப் பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட முடிந்தால் ஒப்பிட்டுக் கருத்துத் தாருங்கள்.
தம்பி கனடா அபூபக்கர் அவர்களுக்கு,
நமது ஊரை உதாரணம் காட்டி, இன்னொரு கேள்வியும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
உங்களுக்கு தென்னந்தோப்பு இருக்கலாம். அந்தத் தோப்பில் ஐநூறு மரங்கள் இருக்கலாம் . ஒரே ஒரு மரத்தின் மேல் நேற்றுப் பெய்த மழையின் காரணமான இடி விழுந்து அது கருகிவிட்டால் மொத்த தோப்புமே கருகிவிட்டது என்று முடிவெடுத்துவிடுவீர்களா? தோப்பின் வாசலை இழுத்து திண்டுக்கல்லில் இருந்து புதுப் பூட்டு வரவழைத்து பூட்டிப் போட்டு விடுவீர்க்ளா?
இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு .......புனிதம் என்ற சொல்லுக்கு உரியோர் 100 சதவிகதம் தவறு செய்யாதவர்கள் ......அவர்களிலும் கருப்புள்ளிகளை குறிப்பிட்ட தாங்கள் அங்கெ புனிதம் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாமே ?????????
Br Aboobacker
அஸ்ஸலாமு அலக்கும்.
சில முஸ்லீம்கள் தவறு செய்வதால் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது உங்கள் வீம்பான வாதம்..
ஆசிரியராக இருந்தும் அவர்களோடு வாழ்ந்துப் பார்த்தால் தான் தெரியும் அந்த துறையில் உள்ள வலியும் சுகமும்.
சும்மா நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து ஏதோ கருத்து போட வேண்டும் என்பதற்காக கருத்திட்டு கண்டதை சொல்லி ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் கேவலப்படுத்தாதீர்கள் காக்கா..
தம்பி அபூபக்கர் அவர்களுக்கு,
புனிதம் என்ற வார்த்தையை தவிர்க்கலாமே என்று கேட்டு இருக்கிறீர்கள்.
புனிதர்கள் என்று அழைக்கப் படுபவர்களிலும் புல்லுருவிகள் உண்டு என்பதே என் வாதம்.
ஸ்ரீலஸ்ரீ பிரேமானந்தா சாமியார், ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சாமியார் ஆகியோர் இப்படிப் பட்டோர். இவர்கள் உணமையிலேயே இதற்கு தகுதி படைத்தோரா?
கிருத்துவ தேவாலயங்களில் பிஷப்புகள் St. என்று அடைமொழி வைத்து அழைக்கப் படுகிறார்கள். புனிதமுடைய என்று இதற்குப் பொருள். எத்தனையோ கிருத்துவ சாமியார்கள் தவறான பாலியல் குற்றங்களுக்காக அவர்களின் திருச்சபையால் தண்டிக்கப் பட்டு இருக்கிறார்கள். ஒரு பாதிரியார் நாகர் கோயிலில் தனது மருமகளையே பெண்டாட அழைத்த வழக்கில் அண்மையில் தண்டிக்கப் பட்டார். அவரையும் அவர் செய்த தவறு வெளிவரும் முன்பு புனிதர் என்றுதான் உலகம் அழைத்தது.
புனிதர்கள் அல்லது புனிதப் பணி செய்பவர்கள் தங்களின் புனிதத்தை மீறும்போது புனிதம் என்கிற அடைமொழிக்கான தகுதியை இழப்பார்கள்.
என் வாதத்தின் அடிப்படையே ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த துறையையே பழிதூற்றலாமா? என்பதே. இதற்காக பல உதாரணங்களை உங்களுக்குத் தந்தேன். அவற்றுக் கெல்லாம் இயன்றால் பதில் தர முயற்சி செய்யுங்கள்.
கனடா நாட்டைப் பற்றி சில உண்மைகள் தெரிய வேண்டும். அது குளிர் பிரதேசமா சூடான நாடா? இப்போது அங்கு சீசன் கடும் வெயிலா? அந்த நாட்டில் எலுமிச்சம் பழம் விளையுமா? விளையாவிட்டால் மார்க்கெட்டில் இறக்குமதி செய்த எலுமிச்சம் பழம் கிடைக்குமா?
வாதத்திற்கு மருந்து உண்டு விதண்டா வாதத்திற்கு மருந்து இல்லை . எந்த ஒரு ஆசிரியராலும் கொடுக்க முடியாத அருமையான விளக்கம் எங்கள் ஆசான் இப்ராகிம் அன்சாரி காக்காவின் விளக்கம் மூக்கில் சளி இருப்பதற்காக மூக்கையெ வெட்டி எரிய முடியுமா வைத்தில் மலம் இருப்பதற்காக வைத்தயே வெட்டி எரிய முடியுமா இதை விட விளக்கம் வேண்டுமா .மாணவர்களின் ஏக்கம் சரியே காக்கா எங்களுக்கு ஆசானாக வரவில்லையே என்ற ஏக்கம் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் தம்பி அந்த குறையை நிவர்த்தி செய்கிறார் .தம்பியும் ஒன்றும் குறைந்தவர் இல்லை ஆசிரியர் தின விழ புகை படங்களை பார்த்து நான் புளங்காகிதம் அடைந்தேன் ஒன்று தான் தலைமை ஆசிரியராக இருந்தாலும் முன்னால் தலைமை ஆசிரியரையும் விழாவின் சிறப்பு விருந்தினர் தன தனயனையும் முன் வரிசையில் அமர வைத்து தான் பின் வரிசயில் அமர்ந்துகொண்டு அழகு பார்த்த எங்கள் மஹபூப் அலிக்கு ஒரு சலாம் .
இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு .......அடியேனின் இளைமைப்பருவ பள்ளி வாழ்க்கையை தங்களுடன் பகிர்கிறேன் ......நான் வாய்க்கால் ஸ்கூலில் நான்காவது படித்த காலம் சுமார் 40 ஆண்டுகள் இருக்கும் .......அப்போது என்னின் நண்பன் ஒருவன் செக்கடி குளத்தில் நீச்சல் தெரியாமல் இறக்க அன்று காலை நான்வகுப்பரையில் புக்கை வைத்துவிட்டு அங்கு மைய்யத்திற்கு சென்றுவிட்டு வகுப்பறை சென்றேன் அப்போது ஆசிரியரிடம் விளக்கம் சொல்லிவிட்டு வகுப்பறைக்கு செல்ல முயன்ற போது அப்போது அந்த ஆசிரியை என்னை தீட்டுடன் வரதே குளித்திவிட்டு நாளைக்கு வா என்று சொல்ல இதை என் தாயாரிடம் சொல்லி இஸ்லாத்தில் அது தீட்டு இல்லை என்று அது அப்போதே பெரிய issue ஆனது.ஒரு வீட்டில் பூஜை அறை,படுக்கை அறை ,சமையல் அறை ,வரவேற்ப்பு அறை என்று இருக்கும் போது இதுபோன்ற கழிவறைகளும் இருக்கத்தான் செய்யும் ...புகழ்ச்சிகள் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே எனது வாதம் ......மேலும் தம்பி சமீர் அவர்களுக்கு ........கனடா குளிர்நாடே இதை உங்களுடைய புனிதமிக்க ஆசான் உங்களுக்கு இதை முறையாக சொல்லி கொடுக்க வில்லை என்றே நினைகின்றேன் ....
கனடா குளிர் நாடு என்று என் ஆசான் சொல்லிக் கொடுத்து இருக்கிறார். அதையும் மீறிய தேவைகளால் இப்படி ஒரு சந்தேகம் கேட்கவேண்டுமென்று தோன்றியது.
மனதில் எழும் சந்தேகங்களை கேள்வி கேட்டுத் தெரிந்து கொள் என்றும் ஆசிரியர் சொல்லித்தந்து இருக்கிறார்.
''திண்டுக்கல் பூட்டுருக்கு;
தென்னந் தோப்பு 'கேட்டு'ருக்கு;
பூட்டு வே.......ன்......ன்னு....ம்மா பூ.....ட்.....டு !
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
தம்பி அபூபக்கர்,
இளமையில் பள்ளி வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்கு வருந்துகிறேன். வாய்க்கால் ஸ்கூலில் உங்களுக்கு ஆசிரியை ஆக இருந்த அந்த ஒரே ஆசிரியை இடம்தான் நீங்கள் உங்கள் படிப்பு காலம் முழுதும் படித்தீர்களா? வேறு ஆசிரியர்களும் உங்களுக்குப் படித்துக் கொடுத்தார்களா என்பதையும் சொல்லுங்கள். அதில் ஒருவர் கூட நல்லவராக உங்கள் மனதை ஆக்ரமிக்காதது ஒரு துரதிஷ்டமான விஷயமே.
இப்படி ஒரு உதாரணத்தை வைத்து வாழ்க்கை முழுதுக்குமான ஒட்டு மொத்த முடிவு எடுப்பது நல்லதல்ல. இப்படிப் பல உதாரணங்கள் சொன்னபோதும் நீங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள். பரவாயில்லை. நான் சொன்னது தவறா அல்லது நீங்கள் சொன்னது தவறா என்று இந்தத் தளத்தில் வந்து உரையாடும் மற்றவர்கள் இனி விளக்கம் சொல்லட்டும் .
புகழ்ச்சிகள் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பது சரியே. நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு MOTIVATION நிகழ்ச்சி. உற்சாகப் படுத்தும் நிகழ்ச்சி. பாராட்டு நிகழ்ச்சி. பாராட்டும்போது நீங்கள் ஒரு சனியன் பிடித்தவர்கள்- உங்களுக்கு ஒன்றுமே தெரியாது நீங்கள் உருப்படாதவர்கள் எங்கள் அபூபக்கரை வாய்க்கால் ஸ்கூலில் தீட்டு என்று சொல்லி வகுப்பிற்குள் விட மறுத்தவர்கள் என்றெல்லாம் கூறி பாராட்ட முடியாது. ஆசிரியப் பணி அறப்பணி புனிதப் பணி என்றுதான் பாராட்ட முடியும். இதுதான் நடந்தது. இன்னும் நடக்கும்.
கொள்ளையடிக்கும் அரசியல் கட்சித்தலைவர்களை "தானைத் தலைவா" என்று அழைக்கும் சமுதாயத்தில் படித்துத்தந்த ஆசியர்களுக்கு ஒரு கரண்டி சீனி தூக்கலாகப் போட்டு ஒரு காபி கொடுப்பது தவறல்ல.
வானிலை ஆரூடம் சொல்லும் உயர் அழுத்த, மேகம் தாங்கிய, சாரல் துளி, ஈரம் நிறைந்த ராமனன் எந்த பள்ளிக் கூடத்தில் படித்திருப்பார் ?
அவர் டிவியில் வந்து சொல்வதற்கு முன்னரே நிறைய இடங்களில் மழை பெய்யுதாமே !!
சகோ .தாஜுதீன் அவர்களுக்கு அடியேனின் கருத்துகளில் சிலர் என்ற வார்த்தையே இருக்கும் மாறாக ஒட்டு மொத்த ஆசான்களையும் நான் வெறுப்பவன் அல்ல .கருத்துக்களை அறிந்து புரியும் தன்மைகளை உங்களின் புனித மிக்க ஆசான் உங்களுக்கு முறையாக சொல்லிதரவில்லை போலும்.
அன்பின் தம்பி அபூபக்ரு(கனடா),
அஸ்ஸலாமு அலைக்கும், (உங்களின் உள்ளத்தில் அமைதியும் சமாதானமும் உண்டாவதாக- தற்பொழுதுள்ள நிலையில்)
சின்னச் சின்ன செயலுக்குக்கூட அடுத்த வரைப்பாராட்டிப் பழக வேண்டும். வீட்டையோ அல்லது அலுவலகத்தையோ நன்றாக பெருக்கித் துடைக்கும் பணியாளை; விரைந்து சமைத்து சாப்பிடத்தரும் தாயை அல்லது மனைவியை; சொன்ன நேரத்தில் தனது வேலையை செய்து முடிக்கும் நண்பனை; அவன் நேர்த்தியாக உடை உடுத்தும் பழக்கத்தை; தேர்வு நேரத்திலாவது சீக்கிரம் எழுந்து படிக்க அமர நினைக்கும் பிள்ளையை; குழந்தையின் அழகான கையெழுத்தை என்று எதையும் பாராட்டலாம்.
மனத்தில் பொறாமையும், தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணமும் அதனால் தோன்றிய உள்அச்சமும் கொண்டவர்களே அடுத்தவர்களைப் பாராட்ட மறுக்கிறார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களும் தன் நிலைமை மீறி ஆசைப்படாதவர்களும் அடுத்தவரைப் பாராட்டத் தயங்குவதே இல்லை. இந்த இரு பிரிவினரில் நாம் எந்தப் பிரிவில் இருக்கிறோம் என்பது மிக முக்கியம்.
செய்கிற வேலைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும்; இன்னும் சற்று அதிகமாக உழைக்க வைக்கும். ‘தன்னுடைய முயற்சியும் உழைப்பும் அங்கீகரிக்கப்படுகிறது’, என்ற எண்ணம் நம்பிக்கையை வார்க்கிறது. இன்னும் நன்கு செயலாற்ற வேண்டும் என்கிற வேட்கையை உண்டாக்குகிறது.
வீட்டுக்குள்ளிருந்து வெளிப்படுகிற மனிதன் பட்டை தீட்டப்படாத வைரம். அடுத்தவருடன் சாதுர்யத்துடன் பழகி அனுபவம் பெறுகின்றபோதுதான் அந்த வைரம் பட்டை தீட்டப்பட்டு ஒளி வீசுகின்றது.
தங்களை மற்றவர்கள் குறைசொல்வதையோ…விமர்ச்சிப்பதையோ யாரவது விரும்புவார்களா? நாலு பேர் மத்தியில் பிறரை நாம் விமர்ச்சிக்க முற்பட்டால் அதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. அது அவர்களுக்கு கோபத்தையேதான் கொடுக்கும். அதனால்… நாம் சொல்ல நினைப்பதை, சொல்ல விரும்புவதை, மறைமுகமாக…குறிப்பாக… சாதுர்யமாகத் தெரிவித்தால் நம்முடைய சக மனிதத் தொடர்பானது வெற்றிகரமானதாக இருக்கும், இல்லையேல்… வெற்றுக்கரமாகத்தான் இருக்கும்.
இன்றைய சமுதாயத்தில் தனிமனிதப் பிரயத்தனம் மட்டுமே ஒரு மனிதனை முன்னேற்றி விடாது. சக மனிதனுடன் அனுசரித்துப் போகும் சாமர்தியமும் வேண்டும். அதைச் சாதுர்யத்துடன் செயல்படுத்தும் திறனும் வேண்டும். அதாவது பிறருடைய மனோபாவத்தையும், மன இயல்பையும், தெளிவாகப் புரிந்து கொண்டு அதை நேர்மறையாக… அனுசரணையுடன் கையாண்டு அதன் மூலம் வெற்றி கொள்வது அல்லது பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதுதான் சகத் தொடர்பு சாதுர்யம்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் எவ்விதமாக நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அன்புள்ள நல்ல மனிதர் என்றுதானே? அப்படியானால் யாரையும், எதற்காகவும் குறை கூறாதீர்கள். மற்றவர்களின் சிறிய குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
(இவைகள் யாவும் என்க்கு ஓர் ஆசான் கற்பித்தவைகள்)
தொடர்ச்சி...
சிலர் மற்றவர்களை பலவீனப்படுத்துகிற அவசரத்தில் தங்கள் பலங்களை இழந்துவிடுகிறார்கள். மற்றவர்களை கேவலமாகப் பேசி மற்றவர்களை இழிவு படுத்துகிறோம் என்று நினைத்து நம் கம்பீரத்தை இழந்து விடுகிறோம்.
ஒரு வினோதமான விதத்திலே வம்பு பேச்சுக்கும் (GOSSIP) கவலைக்கும் எவ்வளவு ஒற்றுமையிருக்கிறது! இரண்டுமே சஞ்சலமான - அமைதியற்ற - மனத்தின் விளைவுகள் ஆகும். அமைதியைத் தொலைத்து சஞ்சலத்திலே சிக்கிக் கொண்ட மனத்திற்கு தொடர்ந்து மாறுகிற தோற்றங்களும் வெளிப்பாடுகளும் செயல்களும் தேவைப்படுகின்றன; அது தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; ஆக்ரமிக்கப்பட்டிருக்க வேண்டும்; நாள்தோறும் வளர்கிற கிளுகிளுப்பான கிளர்ச்சிகளையும், நிலைக்காத ஈடுபாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். வம்பு பேச்சானது மேற்சொன்ன எல்லாவற்றையும் உட்கொண்டிருக்கிறது.
தொடர்ந்த பழக்கத்தாலும், சூழ்நிலைகளின் தாக்கத்தாலும் - மனத்தின் சுயநினைவுமிக்க படலங்கள் - சலனத்தால் கிளர்ச்சியுற்றும், அமைதியற்றும் உழல்கின்றன.
மனத்தின் அமைதியற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும்போதே, வம்பு பேச்சும் கவலையும் கைவிட்டுப் போகும்.
யூகித்தலும் - குறுகுறுப்பான ஆர்வத்தைப் போலவே - அமைதியற்ற தன்மையின் அடையாளம் தான். எனவே, அமைதியற்ற மனமானது, அது என்னதான் வரமும் திறமும் பெற்றிருந்த போதிலும், புரிந்து கொள்வதையும், அறிவதையும், அதனால் பிறக்கிற பேரின்பத்தையும் அழித்துவிடுகிறது.
(இவைகளும் எனக்கு ஓர் ஆசான் கற்பித்தவைகள்)
///சகோ .தாஜுதீன் அவர்களுக்கு அடியேனின் கருத்துகளில் சிலர் என்ற வார்த்தையே இருக்கும் மாறாக ஒட்டு மொத்த ஆசான்களையும் நான் வெறுப்பவன் அல்ல .கருத்துக்களை அறிந்து புரியும் தன்மைகளை உங்களின் புனித மிக்க ஆசான் உங்களுக்கு முறையாக சொல்லிதரவில்லை போலும்.///
அஸ்ஸலாமு அலைக்கும், அபூபக்கர் காக்கா,
முதலில் எப்படி அறிந்து புரிந்து கருத்திட வேண்டும் என்று பாடம் நடத்தியமைக்கு மிக்க நன்றி காக்கா.. பாடம் எடுத்த நீங்களும் கொஞ்சம் அதை உங்களுக்கும் நினைவு படுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் காக்கா.
என்னுடைய கருத்தை மீண்டும் வாசித்துப்பாருங்கள் காக்கா… //சில முஸ்லீம்கள் தவறு செய்வதால் முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது உங்கள் வீம்பான வாதம்.. // ஆதரிப்பது போல் என்று ஒரு சந்தேகத்தில் சொல்லியுள்ளேன் என்பதை நினைவூட்டுகிறேன்.
சில ஆசிரியர்கள் காசுக்காக டியூசன் எடுக்கிறார்கள் என்றீர்கள், சிலர் பாலியல் சேட்டை செய்கிறார்கள் என்றீர்கள். அதற்கு மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி காக்கா 6ம் வகுப்பு மாணவனுக்கு புரியும்படி தெளிவான விளக்கம் கொடுத்தார்கள். அதனை ஒரு பொருட்டாகவே நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.
பிறகு ஆசிரியர் பணி ஒரு புனிதப் பணி என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஆசிரியர் பணியில் உள்ள கண்ணியம், புனிதம் எப்படி கேட்டுப்போய் உள்ளது என்பதை நீங்கள் தான் இபுறாஹீம் அன்சாரி காக்காவுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் விளக்குங்களேன்..
கூடுதலாக ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்… மவுத்துக்கு போயிட்டு வந்த உங்களை தீட்டு என்று வகுப்பறைக்கு வர வேண்டாம் என்று ஆசிரியை சொன்ன அந்த காலத்திலும், நம்மவர்களும் அது போன்ற மூட நம்பிக்கையில் சிக்கியிருந்தார்கள் என்பதை கூடுதல் தகவலாக நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் உங்கள் தாயார் போன்றவர்கள் அதில் விதிவிலக்காக இருந்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத்து செய்வானாக..
இஸ்லாமியர்களான நம்மவர்கள் பலர், மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்த அந்த அறியாமை காலத்தில் இஸ்லாத்தை பற்றி அறியாத அந்த ஆசிரியை “தீட்டு, குளித்துவிட்டு வா” என்று சொன்னது அவரின் அறியாமை என்பது இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை காக்கா? இதை போய் ஒரு காரணமாக சொல்லி அந்த ஆசிரியை தவறானவர் என்ற கருத்தை உருவாக்குவது எந்த வகையில் நியாயம் காக்கா?
//ஒரு வீட்டில் ,படுக்கை அறை ,சமையல் அறை ,வரவேற்ப்பு அறை என்று இருக்கும் போது இதுபோன்ற கழிவறைகளும் இருக்கத்தான் செய்யும் //
ஆசிரியர் பணி பற்றி அழகான உதாரணத்தை சொல்லியுள்ளீர்கள்… ஜஸக்கல்லாஹ் ஹைரா…
நீங்கள் சொன்னதை வைத்தே கேட்கிறேன், இப்போ சொல்லுங்கள் காக்கா… உதாரணமாக, நீங்கள் 50 லட்சம் செலவழித்து புதுவீடு கட்டி இருக்கிறீர்கள், அந்த வீட்டிற்கு மார்புல்ஸ், நல்ல கலர்புல் பயிண்ட், லையிட்டிங், சென்றலைஸ்ட் ஏசி என்று அமர்கலமாக கட்டியுள்ளீர்கள், ஆனால் கழிவரை என்பதால் நீங்கள் அதனை அவ்வளவு சிறப்பாக கட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டை பற்றி உங்கள் சொந்தங்கள், நண்பர்கள் சொல்லும் போது உங்கள் வீட்டின் கழிவரை அப்படி இருக்கு இப்படி இருக்கு என்று அதன் நாற்றத்தை மட்டும் பேசுகிறார்கள். இவ்வளவு செலவழித்து கட்டிய வீட்டை பற்றி ஒருவார்த்தைக் கூட அவர்கள் பேசவில்லை என்றால் நீங்கள் சந்தோசப்படுவீர்களா? எரிச்சலைடைவீர்களா?
புகழ்ச்சிகள் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பது சரியே. நடைபெற்ற நிகழ்ச்சி ஒரு MOTIVATION நிகழ்ச்சி. உற்சாகப் படுத்தும் நிகழ்ச்சி. பாராட்டு நிகழ்ச்சி. தயவு செய்து வருங்கால சந்ததிகளை பண்புள்ளவர்களாக உருவாக்கும் நம் பள்ளிகளின் நல்ல ஆசிரியர்களை வரம்போடு புகழ்ந்து, அவர்களை ஊக்கப்படுத்துவதில் தவறேதுமில்லை. ஒரு சில பூல்லுருவிகளின் தவறுகளை இங்கு பேச வேண்டாம்..
இஸ்லாம் புனிதமான மார்க்கம், ஒரு சில பெயர் தாங்கி இஸ்லாமியர்கள் செய்த தவறினால் இஸ்லாத்தின் புனிதம் பாழாகிவிடுமா? புனித இஸ்லாத்தின்படி தன்னுடைய செயல்களை முழுமையாக ஒருவர் செய்கிறார், சில முஸ்லீம்கள் செய்யும் தவறுகளால் இஸ்லாத்தை புனிதமான மார்க்கம் என்று செல்ல வேண்டாம் என்று சொல்லுவது எந்த வகையிலும் நியாமில்லை தானே... இது போல் தான் கண்ணியமான, புனிதமான ஆசிரியர் பணியை ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அந்த பணியை புனிதப் பணி என்று சொல்லமட்டேன் என்று சொல்லுவது நியாயமில்லை... நான் சொல்லுவது தவறாக இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன்.
இந்த முறை சலாத்திற்கு பதில் சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்..
அ.நி.நெறியாளர் தம்பி! அஸ்ஸலாமுஅலைக்கும்!
இப்போ கனடா நாட்டின் உஸ்ட்ன நிலை எவ்வளவு என்று கனடாவின் வானிலை 'மையத்திடம்' தொடர்பு கொண்டு தயவு செய்து கேட்டு சொல்கிரீர்களா?
['மையத்து'பேசாது' என்று பதில் சொல்லப்படாது]
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.
சகோதரர்களுக்கு எனது கருத்துக்கு வேண்டுமென்றே வீண் விவாதம் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மேலும் கவியன்பன் கலாம் அவர்களே நீங்கள் நிச்சயமாக எனக்கு அறிவுரை சொல்ல வில்லை மாறாக பிறருக்கு சிபாரிசே செய்கின்றீர்கள் இதைவிட கூடுதல் அறிவுரை நான் உங்களுக்கு கூற முடியும் .உவமையும் கற்பனைகளும் இஸ்லாத்தில் கூடாது என்றே உமறு புலவர் போன்றோர் நம் சமுதாயத்தால் புறக்கணிக்க பட்டவர்கள் அவைகளை எடுத்துக்கொண்டு தங்களை தாமே முன்னிலை படுத்துவதும் அறிந்தவர்களுக்கு புரியும்..........
வாதத்திற்கு மருந்து உண்டு விதண்டா வாதத்திற்கு மருந்து இல்லை
//பிறருக்கு சிபாரிசே செய்கின்றீர்கள்// சரிதான் யார் அந்தப் பிறர்?
நம்மில் யாரும் பிறர் இல்லையே ! அப்படி அபூபக்கர் ஏதாவது பார்டர் பாகுபாடு வைத்து இருக்கிறாரா? அதுதான் இவரது பிரச்னையா? புரிகிறது.
//பிறருக்கு சிபாரிசே செய்கின்றீர்கள்// சரிதான் யார் அந்தப் பிறர்?
நம்மில் யாரும் பிறர் இல்லையே ! அப்படி அபூபக்கர் ஏதாவது பார்டர் பாகுபாடு வைத்து இருக்கிறாரா? அதுதான் இவரது பிரச்னையா? புரிகிறது.
//.உவமையும் கற்பனைகளும் இஸ்லாத்தில் கூடாது //
ஹிஹி
சகோதரர்களுக்கு......அடியேனிடம் நிச்சயமாக பாகுபாடு இல்லை ....மாறாக அனைத்தும் என்னின் வெளிப்படையான கருத்துக்களே ...எல்லோரும் ஒட்டுமொத்த கருத்துக்களை வெளியிடும் போது ஒரு வித்தியானமான கருத்து அங்கெ வரும்போது அதை தயவு செய்து ஆராய முற்படுங்கள் .....தெளிவு கிடைக்கும் .......... 'வெங்காயத்தை உரிக்க உரிக்க கிடைக்கபெறுவதோ அதன் தோல் மட்டுமே' ......... சுபம் ............
Ebrahim Ansari சொன்னது…
//பிறருக்கு சிபாரிசே செய்கின்றீர்கள்// சரிதான் யார் அந்தப் பிறர்?
//நம்மில் யாரும் பிறர் இல்லையே ! அப்படி அபூபக்கர் ஏதாவது பார்டர் பாகுபாடு வைத்து இருக்கிறாரா? அதுதான் இவரது பிரச்னையா? புரிகிறது.//
நம்மில் யாரும் பிறர் இல்லை என்பது நமக்கு புரிகின்றது புரிய வேண்டிய ஆளுக்கு புரியவில்லையோ !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அன்பார்ந்த அதிரை நிருபர் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகிகளுக்கு,
கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக எங்களதும் உங்களதுமான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டபோது நீங்கள் அனைவரும் தானே முன் வந்து அளித்த பல்வேறு வகையான ஒத்துழைப்புக்கும், உங்களின் சார்பாக நமது பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகளுக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசுக்கும், அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பை காணொளியாகப் பதிவாக்கி உலகெங்கும் உலவவிட்ட உன்னத செயலுக்கும். பள்ளியின் தொடர்புடைய அனைவரின் சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஜசாக் அல்லாஹ் ஹைரன்.
நான் சொல்வது சரியாக இருக்குமென்றால் இது போன்ற நிகழ்ச்சி இந்தப் பள்ளியின் வரலாற்றில் முன்னாள் மாணவர்கள் மூலமாக நடத்தப் படுவது இதுவே முதல் முறையாக இருந்தது என்று கருதுகிறேன். இதற்காக பங்களித்த உங்கள் அனைவருக்கும் இறைவன் மேலும் நல்ல வளங்களையும், உடல் நலங்களையும் தந்தருள்வானாக என்று பள்ளியின் சார்பிலும் என் சார்பிலும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அன்றைய தினம் அடித்த மகிழ்ச்சியின் அலை இன்று வரை எமக்குள் ஓயவில்லை.
நிகழ்ச்சியை கண்டவர்கள் தந்து இருக்கும் கருத்துரைகள் எங்களை இன்னும் அதிகமாக அர்ப்பணிப்புடன் இந்தக் கல்விச்சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள பெரும் ஊக்கமாக இருக்கின்றன. குறிப்பாக கவிஞர் சபீர், கவியன்பன் அபுல் கலாம், பெரியவர் எஸ். முகமது பாரூக், சாகுல் ஹமீது, ஜகபர் சாதிக். பக்ருதீன் அலி அகமது, தாஜுதீன், தஸ்தகீர், ஜாகிர் உசேன், யாசிர் மற்றும் அதிரை நிருபரின் அனைத்து அன்பான வாசகர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளிக்கு ஒரு கலையரங்கம் கட்டித்தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை அதிரை நிருபரின் மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களிடம் முன் வைத்து இருக்கிறேன். அல்லாஹ் நாடினால் அடுத்த வருட ஆசிரியர் தினத்தை அந்த அரங்கிலேயே கொண்டாடலாம். இன்ஷா அல்லாஹ்.
நமது பள்ளியின் வளர்ச்சிக்கும் அரசுப் போட்டிதேர்வுகளில் நூறு சதவீதம் முழுமையான வெற்றிபெறவும் நீங்கள் அனைவரும் துஆச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் நன்றியுடன்,
வஸ்ஸலாம்.
ஏ. மகபூப் அலி
தலைமை ஆசிரியர்
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அதிராம்பட்டினம்
//முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளிக்கு ஒரு கலையரங்கம் கட்டித்தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை அதிரை நிருபரின் மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களிடம் முன் வைத்து இருக்கிறேன். அல்லாஹ் நாடினால் அடுத்த வருட ஆசிரியர் தினத்தை அந்த அரங்கிலேயே கொண்டாடலாம். இன்ஷா அல்லாஹ். //
வ அலைக்கும் ஸலாம்,
தலைமை ஆசிரிய அவர்களே!
என்னுடைய நீண்ட நாள் கனவை இப்படி அதிவிரைவாய் அறிவிப்பாக வெளிவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; அதிலும், தங்களின் பதவி காலத்தில் இன்ஷா அல்லாஹ் கட்டி முடிப்போம்; என் ஒத்துழைப்பும் உதவியும் இன்ஷா அல்லாஹ் உண்டு என்று இம்மாமன்றத்தில் உறுதியளிக்கிறேன்.
(என்னை முன்னிலைப் படுத்தல் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டோர்க்கு அன்றும் இன்றும் என்றும் கூறும் ஒரே விடை இதுதான்: “ இப்படி வெளீப்படையாக என்னை முன்னிலைப்படுத்துவதும் ஓர் உளத்தூய்மையான நோக்கம் என்னவென்றால் என்னைப் பார்த்து அதன்படியே படிப்பவர்களும் ஆர்வம் பெற்று அதிரைக்குப் புகழ் சேர்க்க வேண்டும் “ என்பதே. இதனைப் பலமுறை சொல்லியும் பயனில்லை; இன்று இதோ இந்த முன்னறிவிப்பு மூலமாவது அறிவார்களாக. ஆம், இப்படிச் சொல்லுவதால் அடுத்தவ்ர்க்கும் ஆரவமும் ஊக்கமும் பிறக்கும்; அதுவே என்னை முன்னிலைப் படுத்தலில் சிறப்பும்)
//முன்னாள் மாணவர்களின் சார்பாக பள்ளிக்கு ஒரு கலையரங்கம் கட்டித்தரவேண்டுமென்று ஒரு கோரிக்கையை அதிரை நிருபரின் மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களிடம் முன் வைத்து இருக்கிறேன்.//
இன்ஷா அல்லாஹ் !
ஆயத்த வேலைகளுக்கு சொடுக்கு போட்டாச்சு !
\\//நம்மில் யாரும் பிறர் இல்லையே ! அப்படி அபூபக்கர் ஏதாவது பார்டர் பாகுபாடு வைத்து இருக்கிறாரா? அதுதான் இவரது பிரச்னையா? புரிகிறது.//
வேண்டா தவொரு விவாதம் கிளப்புவதை
மீண்டும் அனுமதியோம் வித்தகர்காள்- தூண்டும்
விளக்கின் ஒளியாய் விளங்குகின்ற ஆசான்
விளக்கம் அறியாமை வீண்.
உட்பொருள் தேறும் உணர்வுகளும் நல்லறிவுப்
பெட்பும் உடைய பெரியோர்கள்- இப்புறத்தே
உள்ளார்கள் உண்மை உணர்வார்கள் என்பதனால்
கொள்ளார்கள் இந்தக் குணம்.
மறப்போம்; மன்னிப்போம்
\\இன்ஷா அல்லாஹ் !
ஆயத்த வேலைகளுக்கு சொடுக்கு போட்டாச்சு !\\
சொற்களால் போட்டநம் சோபனச் செய்திகள்
கற்களாய் மாறிடும் காண்.
இந்தப் பதிவில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான வீண் விவாதத்துக்கு வருந்துகிறேன். அன்பின் தம்பி கவியன்பன் அவர்களின் பண்பாடான அணுகுமுறையும் கருத்துக்களும் நெஞ்சை ஈர்த்தன. ஜசாக் அல்லாஹ் ஹைரா.
//சொற்களால் போட்டநம் சோபனச் செய்திகள்
கற்களாய் மாறிடும் காண்.//
திரைகளைக் கிழிக்கும் கவியன்பனின் முத்திரை
அன்பின் சகோதரர்களே!
உச்ச நட்சத்திரங்களாய் உள்ளவர்கள் (தமிழகம் மற்றும் கேரளா) தன்னைப் பயிற்றுவித்த ஆசிரியைகட்கு வழங்கியுள்ள மரியாதை மற்றும் குறிப்பாக அந்த ஆசிரியையின் வங்கிக் கணக்கில் ரூபாய் 3 இலட்சம் வைப்புத் தொகையாக்கியது பற்றிய செய்திக் குறிப்பை இன்று காலை “கலிஜ் டைம்ஸ்” செய்தித் தாளிகையில் படித்ததும், நாம் ஏன் நம் பள்ளிக்கு இந்தக் கட்டிடம் உருவாக உதவக் கூடாது என்ற எண்ணம் மேன்மேலும் மேலும் உண்டானதால் ஈண்டு இதனைப் பதிகிறேன்.
இதனைப் படித்து விட்டு சினிமாக்காரன்கட்கு வக்காலத்து என்று மீண்டும் ஒரு விவாதம் கிளப்ப வேண்டா,
அந்த சினிமாக்காரர்கள் (மம்முட்டியும் ரஜனியும்) தன் வருமான வரிக்காகச் செய்தார்கள் என்றோ, சினிமாக்காரர்களை நாம் பின்பற்ற வேண்டுமா என்றோ விவாதம் கிளப்ப வேண்டா. இங்குக் குறிப்பிட்ட விடயத்திலிருந்து ஓர் அரிய தகவல் என்னவென்றால்
அகரம் கற்பித்து நம்மைச் சிகரம் ஏற்றியவரகளை நாம் உயரம் எட்டியதும் மறவாமல் அவர்களின் துயரம் களைதல் என்பது மட்டும் தான்.
முகநூலில் மம்முட்டியின் பேட்டியும், கலிஜ் டைம்ஸில் ரஜனியின் அறிவிப்பும் பார்த்ததன் பின்னர் உயரம் சென்ற நாமும் உடன் உதவ வேண்டும் என்ற எண்ணத்தைத் தான் அங்கு உணர்ந்தேன். அதனாற்றான் உடன் ஈண்டு இடல் கடன் என உணர்ந்தேன்.
குறிப்பு: ஆன்லைன் என்னும் நேரலை நேர்முகக் கவியரங்கில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்திருப்பதால் எந்த நேரமும் அழைப்பர் என்று காத்திருக்கின்றேனாதலால் தான் இந்த “ஐடி”யில் என் பின்னூட்டம் பதிவாகி விட்டது. இந்த “ஐடி” யில் தான் என்னை அழைப்பர் என்பதால் இதனையே இன்று திறந்து வைத்துள்ளதால் ஏற்பட்டதன் குழப்பம் அறிக.
Post a Comment