Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹராம் ஹலால் பேணி ! - காணொளி பாட்டு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2012 | , , , , , , ,

ஹலால் – ஆகுமாக்கப் பட்டது, ஹராம் – விலக்கப் பட்டது ! இதனைத் தெரியாத இஸ்லாமிய சகோதரர்கள் அரிதிலும் அரிதே !

மார்க்கப் பிரச்சாரம், புத்தகங்கள், செயல் முறை விளக்கங்கள் என்று ஊடகங்களின் வாயிலாக அனுமதிக்கப் பட்டதையும், அனுமதிக்கப் படாததையும் எடுத்துச் சொல்லப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தச் சின்னஞ்சிறு பாலகன் தன்னால் இயன்ற முயற்சியாக பாடியிருக்கும் பாடலின் கருத்தோட்டம் கேட்பவர்களை உலுக்கியெடுக்கும் கேள்விகள், சிந்திக்க வைக்க பாய்ச்சும் அம்புகளாக வீரிட்டு எழுகிறது.

கேட்டுத்தான் பாருங்களேன் !

காணொளிப் பாடலை பாடியது : A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர்.


அதிரைநிருபர் குழு

18 Responses So Far:

Shameed said...

ஒரே ஷாட்டில் பாட்டை பாடி முடித்த குட்டிப்பையன் A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர்.வாழ்த்துக்கள்

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

அன்புத்தம்பியின் வருங்காலம் நல்லதாக இருக்க எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்திடுவோம். ஆமீன்.

வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Head Office Palayankottai.
Tamil Nadu.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
******************************************************************************************************************************************

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///ஒரே ஷாட்டில் பாட்டை பாடி முடித்த குட்டிப்பையன் A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர் ////

வழிமொழிகிறேன் ---- வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா? தம்பி அபூபக்கரின் மகனாயிற்றே. அதுதான் சக்கைப்போடு போடுகிறார். பாராட்டுக்கள்- வாழ்த்துக்கள் து ஆவுடன்.

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்.

கலக்கிட்டே பையா.

(கொலவெறி பாடித்திரியும் பொடுசுகளுக்கிடையே ஹராம் ஹலாம் பாடல் கற்றுக்கொடுத்த எல் எம் எஸ்ஸுக்கும் வாழ்த்துகள்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஒரே ஷாட்டில் பாட்டை பாடி முடித்த குட்டிப்பையன் A.முஸ்தகீம் த/பெ. லெ.மு.செ.அபூபக்கர் ... மாஷா அல்லாஹ்..

KALAM SHAICK ABDUL KADER said...

மாஷா அல்லாஹ். உங்களின் வளர்ப்பின் நற்பலனைக் காணொளி ஊடாக அறிய முடிகின்றது. நன்றாகப் பயிற்சி கொடுத்தால் நமதூரின் சிறந்த பாடகராய் இன்ஷா அல்லாஹ் வருவார்; இம்மாணவர் பயிலும் பள்ளியில் பாட்டுப் போட்டியில் இப்பாடலைப் பாடினால் மாற்று மதததவர்கட்கும் இஸ்லாமியச் சிந்தனை ஊற்றெடுக்கும் என்பது என் எண்ணம்; பாடலில் ஈமான் எனும் நம்பிக்கை ஊறிக் கிடப்பது திண்ணம்.

தற்பொழுது அடியேன் தொடர்ந்து “வஞ்சி விருத்தம்”, ’’சமநிலைச் சிந்து’’ மற்றும் “வஞ்சித்துறை” ஆகிய பாவினங்களில் செய்யுள் இயற்றிக் கொண்டிருப்பதால், இம்மாணவனின் குரலால் பாடும் அளவுக்கு அப்பாடல் இனங்களில் யாத்து நேரில் இன்ஷா அல்லாஹ் வழங்கலாம் என்று எண்ணியுள்ளேன். இச்சிறுவனின் கணீரென்றக் குரலில் என் கண்ணிப்பாக்கள் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வெளிவரும் காலத்திற்காகக் காத்திருக்கிறேன். தமிழ்மாமணி, புலவர் (மர்ஹூம்) பஷீர் ஹாஜியார் அவர்கள் இயற்றியுள்ள சிறுவர்கட்கானப் பாக்கள் மற்றும் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் இயற்றியுள்ள சிறுவர்கட்கானப் பாக்கள் வாங்கி இம்மாணவனிடம் கொடுத்துப் பயிற்சி பெறச் செய்க.
“விளையும் பயிர் முளையிலே” என்பதை உண்மைப்படுத்தி விட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்!
ஊக்கப்படுத்தி இங்கு ஆக்கப்படுத்திய இவரின் வாப்பா அவர்கட்கும், பதிவு செய்த நெறியாளர் அவர்கட்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

இன்ஷா அல்லாஹ் பெருநாள் விடுப்பில் வந்து உங்கள் மகனைக் காண அவாவுடன் இருக்கிறேன்.

Anonymous said...

மாஷா அல்லாஹ் ஊக்கப்படுத்தி இங்கு ஆக்கப்படுத்திய இவரின் வாப்பா என்னுடைய நண்பர் அபூபக்கர் அவர்கட்கும், பதிவு செய்த நெறியாளர் அவர்கட்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்.இதைப்போல் ஒவ்வொருவரும் தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும். சகோதரர் A.முஸ்தகீம் சென்ற வருடம் இஜாபா பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்றார்.

இதற்கு காரணம் அவருடைய பெற்றோர்கள் தான் அதைப்போல் ஒவ்வொரு பெற்றோர்களும் தன்னுடைய பிள்ளைகளை உற்ச்சாகமும்,ஊக்கமும் படுத்த வேண்டும். பெற்றோர்கள் மட்டும் ஆர்வமாக இருந்தால் மட்டும் போதாது பிள்ளைகளும் ஆர்வமாகவும்,ஊக்கமுமாக இருக்க வேண்டும். சகோதரர் முஸ்தகீம்முக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக. இன்னும் நல்ல பயிற்சி கொடுத்தால் நன்றாக பாடுவான். இந்த பாட்டைக் கொண்டாவது ஹராம் பக்கம் செல்லாமல் இருப்பார்களா நம் முஸ்லிம் மக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! மருமவனே... கலக்குறியே !

P.S.: "சொந்தக்காரய்ங்கலா இவய்ங்கன்னு ம்ம்ஹும் ஆரம்பிச்சிட்டாய்யான்னு" தோனுச்சுன்னா என்ன பன்றது !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பக்கர் மகனே!
இனிமை அருமை
இன்னும் வளர வாழ்த்துகள்!

crown said...

Ebrahim Ansari சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா? தம்பி அபூபக்கரின் மகனாயிற்றே. அதுதான் சக்கைப்போடு போடுகிறார். பாராட்டுக்கள்- வாழ்த்துக்கள் து ஆவுடன்.
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் விதை முளைத்து காய் கனிந்து இப்ப அதை தின்று கொட்டையுடன் சக்கையையும் சேர்த்து சக்கைபோடு போடும் பக்கரின் மகன் டக்கராபாடுரான்.மாஸாஅல்லாஹ்!.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே!

என் மூத்த மகன் a. முஸ்தகீம் பாடிய காணொளி பாட்டை கேட்டு விட்டு வாழ்த்துக்கள் .துஆக்கள் சொன்ன செய்த அனைத்து நல்லுள்ளம் கொண்ட மூத்தவர்களுக்கும்.நண்பர்களுக்கும் என் மகனின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

முஸ்தகீம் என்றால் நேரான வழி என்று பொருள்.கடைசி வரையிலும் நேரான வழியில் இருந்து பிறரையும் நேரான வழியில் அழைப்பவனாக இருக்க அல்லாஹ் உதைவி புரிவானாக.

ஹமீது காக்கா,அலாவுதீன் காக்கா,மச்சான் தாஜுதீன் // ஒரே ஷாட்டில் பாட்டை பாடி முடித்த குட்டிப்பையன் A.முஸ்தகீம்.// ஒரே ஷாட்டில் பதிவு செய்ய மொபைலில் எத்தனை ஷாட் கொடுத்தேன் என்பது அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம்.

அபு இபுராஹிம் // P.S.: "சொந்தக்காரய்ங்கலா இவய்ங்கன்னு ம்ம்ஹும் ஆரம்பிச்சிட்டாய்யான்னு" தோனுச்சுன்னா என்ன பன்றது !?// மச்சான் p .எடுத்துட்டு s .க்கு முன்னாடி l .m . சேர்த்துக்கிட சொல்லுங்க.பிரச்சினை தீர்ந்து விடும்.


கலாம் காக்கா // இன்ஷா அல்லாஹ் பெருநாள் விடுப்பில் வந்து உங்கள் மகனைக் காண அவாவுடன் இருக்கிறேன்.//

மிக்க மகிழ்ச்சியுடன் எதிர் பார்க்கின்றேன்.

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

வ அலைக்க முஸ்ஸலாம்.

,நண்பன் தஸ்தகீர் // அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் விதை முளைத்து காய் கனிந்து இப்ப அதை தின்று கொட்டையுடன் சக்கையையும் சேர்த்து சக்கைபோடு போடும் பக்கரின் மகன் டக்கராபாடுரான்.மாஸாஅல்லாஹ்!.

மாஷா அல்லாஹ்.நன்றி என் மகன் அடுத்த பாட்டுக்கு தயாராகிவிட்டான் .

டி. ராஜேந்திரன் வசனத்தை மறந்தாலும்.நீ மறக்க மாட்டாய் போலும்.

S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீது said...

அழகாய் பாடிய குட்டிப்பையன் A.முஸ்தகீம் (த/பெ. லெ.மு.செ.அபூபக்கர்) இனிமை அருமை இன்னும் வளர வாழ்த்துகள்!

Yasir said...

சகோதர் லெ.மு.செ.அபுபக்கர் அவர்களின் எழுத்தில் எந்த வித பயமும்,தயக்கமும் இன்றி..அல்லாஹ்வை முன்னிருத்தி கருத்துக்கள் இருக்கும்
அந்த நெஞ்சுரம் இந்த பிஞ்சின் பாட்டில் நிறையவே நிறைந்து இருக்கின்றது..அல்லாஹ் ஹராம் ஹலால் பேணி நடப்பவர்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹராம் ஹலால் பாட்டை கேட்டுவிட்டு வாழ்த்து சொன்ன சகோதரர்கள்.s.o.s. தாஜுதீன் காக்கா ,அன்பின் யாசிர் அவர்களுக்கும் நன்றிகள்.

/சகோதர் லெ.மு.செ.அபுபக்கர் அவர்களின் எழுத்தில் எந்த வித பயமும்,தயக்கமும் இன்றி..அல்லாஹ்வை முன்னிருத்தி கருத்துக்கள் இருக்கும்/

அல்லாஹ் அக்பர் ...நாளை மறுமையை முன் நிறுத்தி நம் வாழ்க்கை நகர்ந்தால்.எந்த அக்கிரமக்கரர்களுக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் ஏற்படாது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு