Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இனிப்பும் கசப்பும் - பகுதி 1 19

அதிரைநிருபர் | April 07, 2011 | ,

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப் பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ

அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:

பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்!

சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM) - இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.

வகை - II (Type - II):
Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்

மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய்(gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில்(pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன.



உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக (glycogen - கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது(பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாம்' போடுவதுமாதிரி!). அடுத்த உணவு கிட்டதபோதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogen ஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? அவைகளைக் விரிவாகக் காண்பதற்கு முன்னால் இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை அடுத்த பதிவில் விரிவாக காணலாம். இன்ஷா அல்லாஹ்.


தொடரும்...

-- உமர்


அன்பான அதிரைநிருபர் வாசகர்களே,

இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் இல்லாத குடும்பமே இல்லை. இந்த ஆக்கம் நம் அதிரை புதல்வர் மர்ஹூம் உமர்தம்பி அவர்கள் தென்றல் என்ற தன் வலைப்பூவில் எழுதிய நீண்ட பதிவு, இதை ஏற்கனவே நம் அதிரைநிருபரில் பதிந்திருந்தாலும் எல்லோரும் படிக்கும் வண்ணம் தொடராக சுருக்கமாக புத்தம் புதுவடிவில் நம் அதிரைநிருபரில் மீள்பதிவு செய்கிறோம்.

இந்த அருமையான மருத்துவ பதிவை எல்லோரும் படித்து பயன்பெறுவீர்கள் என்று நம்புகிறோம். பயன்பெறும் இந்த மருத்துவ ஆக்கத்தை நமக்கு தந்த நம் அதிரை உமர்தம்பி அவர்களுக்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக.


--அதிரைநிருபர் குழு.

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நினைவூட்டும் அற்புதமான பயனுள்ள தகவல் யாவருக்கும்.

மர்ஹூம் உமர்தம்பி(மாமா) அவர்கள் இதேபோல் நிறைய எழுதியிருக்கிறார்கள் அவைகளை ஆவணப் படுத்துவதில் சிரத்தை எடுக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

ஒரு ஆய்வுக் கட்டுரை அல்லது மருத்துவக் கட்டுரை எதுவாக இருந்தாலும் அதற்கான (விஷுவல்) காட்சிகள் கொடுப்பது என்பது கலலயே அதனை இங்கே பதிந்திருக்கும் படங்களும் சாட்சி இதனைத் தேடிப் பிடித்து பதியும் (என்)தம்பியின் உழைப்பும் பாராட்டத்தக்கதே !

Yasir said...

மர்ஹும் உமர்தம்பி அவர்களின் இந்த தொகுப்பு..பல தலைமுறையினருக்கு பயன் படக்கூடியது....நல்ல,பயனுள்ள நாம் அறிந்திரதாத தகவல்கள்

Yasir said...

//40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப் பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது// சின்ன திருத்தம் :) 8 பேருக்காவது இனிப்பு நீர் குறைபாடு உள்ளது...சீனியை எல்லாம் இனிமேல் ஹிஸ்ரி புக்குல படிக்கிற அளவிற்க்க்கு அதன் பயன்படுத்துவோர் குறைந்து போய் விடலாம்

Yasir said...

இனிப்பு நீர் இல்லை எனக்கு இல்லையென்று சொன்னால் ரொம்ப கேவலமாக பார்க்கிறார்கள்....இனிப்பு நீர் இருந்தால்தான் அவன் சமுதாயத்தில் கவுரமாக நடத்தபடும் பாங்கும் அதிகரித்து வருகிறது....ஏனென்றால் பணக்காரர்களுக்கு முதலில் தெரிய வந்த இந்த குறைபாடு என்பதால்...ஆனால் இன்று அன்றாடம்காட்சியையும் வறுத்து எடுக்கிறது

Yasir said...

இனிப்பு நீர் வந்தவர்களின் அவலம் சொல்லிமாயாது....முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊருக்கு ஒருவர் விருந்துக்கு அழைத்தார் என்று சென்றேன்...பெரும்பணக்காரர் அவருக்கு இனிப்புநீர் போல...வகை வகையான உணவுகளை எங்களுக்கு சமைத்து வைத்துவிட்டு...வாயில் எச்சில் ஊற..இது நல்ல இருக்கா அது நல்லா இருக்கா என்று எங்களிடம் கேட்டுதான் தெரிந்து கொள்ளமுடிந்ததது...உட்கொண்டு உணரமுடியவில்லை....ஏன் கொஞ்சம் சாப்பிடுங்கேளன் என்றதற்க்கு...தம்பி இப்ப grace period தான் வண்டி ஒடிக்கிட்டு இருக்கு...உடலில் உள்ள 80% உறுப்புகளுக்கு near expiry ஆகிடுச்சு..அல்லாஹ் இருக்கான் என்று அவர் சிறிது செயற்க்கை நகைச்சுவையுடன் சொன்னாலும்....நன்றாக சாப்பிட்ட உணவு சிறிது கசந்தது எனக்கு

sabeer.abushahruk said...

மீள்பதிவுக்கான முழுத்தகுதியும் வாய்ந்தது இந்தத் தொடர். நேரில் வாழ்த்த முடியாமல் போனாலும் அவர்களின் ஆஃகிரத்து வாழ்க்கைக்கு என் து'ஆ!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

என்ன ஒரு ஆச்சர்யம் இங்கு உலகம் தொடரில் அதிரை புதல்வர் மர்ஹும் உமர் தம்பிக்கு அரங்கம் அமைத்த செய்தியையும் சேர்த்து இருக்கலாமே என்று பின்னுட்டம் இட்டு விட்டு இனிப்பும் கசப்பும் கட்டுரைக்கு வந்தால் அதிரை புதல்வர் மர்ஹும் உமர் தம்பி அவர்களின் கட்டுரை வந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது!!!

N.A.Shahul Hameed said...

அருமையான என் அன்பு நண்பர் உமர் தம்பியின் ஆக்கம் என்றதும் ஆவலுடன் படித்தேன். அவருடன் நேரடியாகப் பேசியது போன்ற உணர்வு என்னுள் ஏற்பட்டது. என் இனிய நண்பர் உமர் எந்த விசயத்தைப் பற்றிப் பேசினாலும் அதுபற்றி முழுமையான அறிவோடுதான் பேசுவார்.
சொல்லும் போது மிக எளிமையாகவே விளக்குவார். ஏன் எனக்கே 1976, 77 களில் ஹார்ட்லி ஆஸிலேட்டர் (Hartley Oscillator Shabeer you know that?) பற்றி நடத்தினார்.
அவரின் எளிமையும் தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத அடக்கமும் என்றும் என் நினைவை விட்டு அகலாது.
அவருக்கும் சர்க்கரை நோய் இளம் வயதிலேயே இருந்தது. அதுவே அவரை அது பற்றி ஆழமாக ஆய்வு செய்து கட்டுரை வெளியிட வைத்துள்ளது போலும்.
வல்லான் அல்லாஹ் அவருக்கு நற்பதவி நல்க நாம் எல்லோரும் வேண்டுவோம்
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Yasir said...

மாஷா அல்லாஹ்--உமர்தம்பி காக்காவின் அறிவு மெய் சிலிர்க்கவைக்கிறது

HARTLEY OSCILLATOR

The HARTLEY OSCILLATOR is an improvement over the Armstrong oscillator. Although its frequency stability is not the best possible of all the oscillators, the Hartley oscillator can generate a wide range of frequencies and is very easy to tune. The Hartley will operate class C with self-bias for ordinary operation. It will operate class A when the output waveform must be of a constant voltage level or of a linear waveshape. The two versions of this oscillator are the series-fed and the shunt-fed. The main difference between the Armstrong and the Hartley oscillators lies in the design of the feedback (tickler) coil. A separate coil is not used. Instead, in the Hartley oscillator, the coil in the tank circuit is a split inductor. Current flow through one section induces a voltage in the other section to develop a feedback signal.

அப்துல்மாலிக் said...

காலத்திற்கேற்ப உபயோகமான தொடர், இத்தோடு இதற்கான விழிப்புணர்வையும் ஒவ்வொரு தொடரிலும் கொடுத்தால் நலம்

ZAKIR HUSSAIN said...

Good article by Bro.Omar...even though it is published in his absence, it has his quality of good writing to be remembered always

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum Yasir,
I was a M.Sc., Physics graduate and joined KMC as a Tutor. At that time I had the golden opportunity to move closer with Mr.Umar Thambi, who was a fresh B.Sc., Zoology Graduate.
His abiding interest in electronics, photography, cinematography and all the modern technology made me to be one of his few close friends. We will discuss all areas. One day when I asked him about an electronic theory he started teaching me about Hartley Oscillator. I remained tongue tied and listened to him sincerely. After he finished I asked him with a smile, "Umar, dont u remember I too am an electronics graduate?" He immediately burst into laughter and told in an apologizing note "sorry sir really I forgot it."
I learned a lot from him and we remained as good friends and well wishers all our days. Inshya Allah if time permits I will recollect my memories of my dear friend Umar Thambi with AN soon.
Thanks for your timely posting of Hartley Oscillator.
Wassalam
N.A.Shahul Hameed

sabeer.abushahruk said...

சார் /யாசிர்,

புத்தகப் புழுக்களான உங்களிருவரிடமிருந்தும் இப்படித்தான் எதிர்பார்க்க முடியும். எனக்கோ கிரவுனுக்கோ கீழ்கண்டபடிதான் ஆஸிலேஷன் நினைவுக்கு வரும்:

என்னதான்
கணக்கீடுகளுக்குள்
ஆஸிலேஷனை வகுத்தாலும்
பிடித்தவளின்
வெட்கப்பார்வை
நிறுத்திவிடாதா
ஹார்ட்டையும் ஆஸிலேஷனையும்?!

sabeer.abushahruk said...

என் ஏ எஸ் சார் அவர்களுக்கு,
உங்களின் அறிவுப்புக்குப்பிறகு உங்கள் ஆக்கத்தின்மீதான எதிர்பார்ப்பு மிகவும் கூடிப்போய்விட்டதால் இனியும் தாமதிக்காமல் உடனே வகுப்பெடுக்கவும்.

கலாய்க்க...சாரி... கவனிக்க நாங்கள் ரெடி!

Yasir said...

//Inshya Allah if time permits I will recollect my memories of my dear friend Umar Thambi with AN soon//sir it is our humble request that you make your time free to write about this noble man....we owe lot from him ...its time to pay back at-least this way

Yasir said...

///வெட்கப்பார்வை
நிறுத்திவிடாதா
ஹார்ட்டையும் ஆஸிலேஷனையும்?!///..ஆமா காக்கா ...அந்த பார்வை ஒன்றே போதுமே காக்கா....கவுத்திடுமே தலைகிழா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

N A S ஐயா !

உமர்தம்பி(மாமா) அவர்களைப் பற்றி தாங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வுகள் அப்படியே எங்கள் கண்கள் முன்னால் நிழலாடுகிறது.

அவர்கள் கல்லூரிக் காலங்களில் நடாத்திய வானொலி ஒலிபரப்பு பற்றியும் தாங்கள் அறிந்ததை அவசியம் சொல்லியே ஆகவேண்டும்... அன்றே அவர்கள் உள்ளங்கையளவு கணினிவவத்துக் கொண்டு அதனையும் கேபில் இணைப்பு இல்லாமலே பிரிண்டிங் செய்தார்கள் இன்றுதான் ப்ளூடூத், கம்பியில்லா இணைப்புகள், அதன் பின்னர்தான் அவர்களின் ஆய்வுக் கண்ணோட்டம் கணினியையே உயில் எழுத வைத்தது அவர்களின் சாதனையே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///என்னதான்
கணக்கீடுகளுக்குள்
ஆஸிலேஷனை வகுத்தாலும்
பிடித்தவளின்
வெட்கப்பார்வை
நிறுத்திவிடாதா
ஹார்ட்டையும் ஆஸிலேஷனையும்?! ///

ஒன்னுமே புரியலை இது என்னங்க ? அக்கவுண்டஸியா ?

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே,

கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

அதிரை உமர்தம்பி அவர்கள் பற்றிய புதிய தகவல்களை தந்த பேராசிரியர் NAS அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த பதிவின் அடுத்த பகுதி விரைவில் ஒர் இரு நாளில் வெளிவரும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு