Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பருவமறிந்து பயிரிடலாமே ! - அனுபவம் பேசுகிறது ! 25

அதிரைநிருபர் | April 21, 2011 | ,

மாணவமணிகள் பள்ளி மேல்நிலை இறுதித் (+2) தேர்வில் மதிப்பெண்கள் எப்படியிருக்குமென்றும் அல்லது இவ்வளவு நிச்சயம் பெற்றிடுவோம் என்றும் முடிவுகளால் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கும் இளசுகளே !

நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? ஒருவேளை கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? சந்தேகங்கள் அலையலையாய் அடிக்கத்தான் செய்யும்!. சரி மறுபக்கம், கட்டுக்கோப்புடனிருந்த பள்ளி வாழ்க்கை நிறைவுக்குள் வந்து விட்டது. இனி, ஜாலியான கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்டமாகக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் பலர்.

கொஞ்சம் கவனமாக என்ன சிரத்தை எடுத்தால்(மட்டுமே) +2 வுக்குப் பிறகான எதிர் நோக்கும் காலத்துக்கு நீங்களே சிவப்புக் கம்பளம் விரித்துக்கொள்ளலாம்.

இதெல்லாத்தையும் விட மனசுக்குப் பிடித்த பாடப் பிரிவில் விருப்பமான ஒரு கல்லூரியில் சேர்ந்தாகி விட்டது. இனி, கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். படபடப்பு, ஆர்வம், பயம், பரவசம், "இனி நான் காலேஜ் ஸ்டூடன்ட்டாக்கும்!" என்று முதல் ஆண்டின் சில மாதங்களும் ஓடிடும். அதிலும் சீனியர்களின் ராகிங் வலையில் சிக்கநேர்ந்தால், கல்லூரி வாழ்க்கையின் அவஸ்தை, அத்தியாயமாகப் பதிவாகும் கலக்கமும் உங்களிடம் இருக்கலாம்.

ஊரோடு கல்லூரி என்றிருந்தால் பரவாயில்லை ஒருவேளை விடுதி வாசம், ஆரோக்கியம் இல்லாத உணவுகள், வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை இவைகளையும் சந்திக்க நேரிடும்.

ராகிங் மூலம் நட்பு பாராட்டுவதுதான் பெரும்பாலான சீனியர்களின் நோக்கமாக இருக்கும். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில், உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்யச்சொல்லும் போது தயங்காமல், இதில் எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்து விடுவதே நல்லது. அதையும் மீறி கட்டாயப்படுத்தினால், பேராசிரியரிடமோ, கல்லூரி முதல்வரிடமோ புகார் செய்யலாம்.

தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் படிக்க நேரும் மாணவர்களுக்கோ, ஆரம்ப காலங்களில் தவிர்க்க இயலாத சங்கடங்கள் இருக்கலாம். ஆங்கிலம் என்பது தமிழைப் போல ஒரு மொழிதான். அதை மிகச் இயல்பாகக் கற்கலாம். ஆங்கிலம் என்பது அறிவு (knowledge) அல்ல. கூடுதல் தகுதியாக ஒரு மொழிப் புலமை மட்டுமே ! ஆகவே, ஆங்கில அறிவு என்பதற்கு பதிலாக ஆங்கிலப் புலமைதான் சரி. சித்திரமும் கைப் பழக்கம் ஆங்கிலமும் நாப் பழக்கம்!

மாணவர்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். நவநாகரிக உடைகள் அணியும் மாணவர்களைப் பார்த்து, குற்றவுணர்ச்சியால் குறுகுறுக்கத் தேவை இல்லை. வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதுதான் அவசியம். நாம் அணியும் உடை எந்த விதத்திலும் நமது கண்ணியத்தைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.

வசிப்பிடத்தைப் பலருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பிரச்னைகள் இரண்டொரு வாரங்களில் சரியாகிவிடும். அதனால், பயம் தேவை இல்லை. சிலர் வீட்டில் ஆறு பரோட்டா சாப்பிடுவார்கள். ஆனால், விடுதியில் மூன்று பரோட்டா மேல் சாப்பிட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சத்தில், கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிடுவார்கள். உணவு விஷயத்தில் மட்டும் எங்கேயும் எப்போதும் கூச்சம் வேண்டாம்.

கல்லூரிப் பருவத்தில் பல சமயம் நீங்களே தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். இரண்டாம் ஆண்டு விருப்பப் பாடம் துவங்கி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று பல விஷயங்களைப்பற்றி தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது பல சமயங்களில் மன உளைச்சலை உண்டாக்கி, தூக்கம் கெடுத்து, குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படி முடிவெடுக்க முடியாத சமயங்களில் தனிமை தவிர்த்து, பெற்றோர் அல்லது விவரம் தெரிந்த சீனியர், பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள். நாளை நீங்களே ஒரு வழிகாட்டி ஆகலாம் !

இவைகள் எல்லாவற்றையும் விட சிறகை விரித்துப் பறக்கும் பறவைகளாகிவிட்டோமே என்றில்லாமல் பெற்றோர் சொல் கேட்பதும் அவர்களின் மனங்களை குளிர வைப்பதும் கற்ற கல்வியின் பலனாகத்தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதிப்பதும் அவர்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்துவதும் கற்ற கல்வியினால் கண்ட பலனாக இருக்க வேண்டும்.

சரி, இத்தனை போராட்டங்களும் ஏன் ?

கௌரவமான ஒரு வேலையைக் கைக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்காகத்தானே ! கல்லூரிப் பருவத்திலேயே தங்களின்வேலை வாய்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதும். கல்லூரியில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள நிதானமும், உத்வேகமும் வேலை குறித்து முடிவு செய்வதிலும் வேண்டும்!

கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே எதிர்காலத்துக்கு ஏற்பத் தன்னை மெருகேற்றிக் கொள்வதில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் உலகத்தையே கட்டி ஆளலாம் என்று இதுவரை கற்பனைக் கோட்டை கட்டி இருந்தால், அதனை பக்கவாட்டில் வைத்துவிடுங்கள் ஊறுகாயாக தொட்டுக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளில் ஆங்கில புலமையைவிட, டெக்னிக்கல் சம்பந்தமான அறிவையும், இண்டஸ்ட்ரி தொடர்பான விழிப்பு உணர்வையும்தான் சோதிக்கிறார்கள்.

இறுதி ஆண்டில் புராஜெக்ட்களைத் தங்கள் கைப்படச் செய்து முடிப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்களில் உங்களுக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கும். விலைக்கு வாங்கும் புராஜெக்ட்கள் உங்களின் இயல்பான திறமையைக்கூட மறைத்து, எதிரான எண்ணத்தை உண்டாக்கும்.

அதிமுக்கியமாக எந்த செமஸ்டரிலும் அரியர் (இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் வேட்பளாராக) இல்லாமல் இருப்பது நலம். தகுதியுடைய மாணவர்கள் அதிக அளவில் இருந்தால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் சராசரிகளும் கணக்கில்கொள்ளப்படும். தனித் திறமைத் தகுதிகளுக்கும் அங்கீகாரம் உண்டு. தனித் திறமைகொண்டவர்கள் மற்றவர்களிடம் எளிதில் கலந்து பழகுவார்கள் என்ற எண்ணம் உதிப்பதற்கு கவிக் காக்காவின் வரிகளும் தான் ஞாபகத்திற்கு வருகிறது "கனவு மெய்ப்பட வேண்டும்".

இதற்கு மேலும் (வலுவான அனுபவமிக்க) பயி(ல்வான்)ன்றவகள் நிறைந்திருக்கும் சபையிது ஆதாலால் அவர்களின் ஆலோசனைகளும், ஆர்பரிக்கும் அனுபவங்களும் கருத்தாய்வார்கள் இதனைத் தொடர்ந்தே !

மேற்சொன்னவைகள் (அனுபவப்)பட்டதும், (உணர்வுகளைச்)சுட்டதும், (இனிமையாக)நேசித்ததும் அன்றையச் சூழலில் கற்றவைகளையும் கோர்வையாக்கியிருக்கிறேன்.

- அபுஇபுறாஹிம்

25 Responses So Far:

sabeer.abushahruk said...

மிக்க பயனுள்ள கட்டுரை. தக்க சமயத்துப் பரிந்துரை, சொக்க வைக்கும் சொற்றொடர்கள் என எழுந்து நிற்க வைக்குது இவ்வாக்கம்!

கல்வி விஷயத்தில் வழிகாட்டலாகட்டும் விழிப்புணர்வாகட்டும் அதிரை நிருபரின் அக்கறை பாராட்டத்தக்கது!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அமர்களம், சிக்ஸர்.காக்காவின் ஆக்கத்தில் மற்மொறு மணிமகுடம்.அருமையான விளக்கம்.(ஆங்கிலம் என்பது அறிவு அல்ல. கூடுதல் தகுதியாக ஒரு மொழிப் புலமை மட்டுமே ! அருமை,அருமை).

sabeer.abushahruk said...

ரேகிங்கைக் குறித்த பயம் இனி தேவையில்லையென்று நினைக்கிறேன். சட்டப்படித் தடை செய்யப்பட்டுவிட்டதாலும் நாவரசுவைக் கொன்ற மாணவனுக்கு ஆயுள் தண்டனையை நேற்று உறுதிப்படுத்தி தீர்ப்பு வந்திருப்பதாலும் ரேகிங் மட்டுப்பட்டிருக்கும் என்று நம்புவோம்.

நுனி நாக்கு ஆங்கிலம் கண்டு பயப்பட வேண்டாம். வொக்காபுலேரியில் காதிர் முகைதீன் பள்ளி மாணவனே சிறந்தவன் என்று வகுப்பில் லீட் மேனாக புதுக்கல்லூரியில் நிரூபித்த அனுபவித்தில் சொல்கிறேன், "நீங்கதான்ப்பா பெஸ்ட்"!

ஆல் த பெஸ்ட் டு கல்லூரிகளின் புதிய வரவுகளுக்கு!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான ஆலோசனைகள் மற்றும் விளக்கம்.

இப்பதிவை எழுதிய என் சகோதரரிடமிருந்து நிறைய இது போன்ற அறிவுரைகள் நேரிலும் , அலைப்பேசியிலும் அதிகம் பெற்றிருக்கிறேன்.

பதிவில் படிக்கும் போது மிக அருமை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கல்வியில் புதிய பயனம் தொடர இருக்கும் இளம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வினாடியும் மார்க்கத்தை பேணிநடக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் அன்பு மாணவர்களே.

Shameed said...

அச்சு தொழிலில் இருப்பதால் இவரின் ஆக்கங்கள் அனைத்தும் அச்சு அசலாக அருமையக இருக்கிறது

Yasir said...

காக்கா நீங்கள் பட்டதையும்,சுட்டதையும்,நேசித்ததையும் கோர்வையாக்கி ஒரு சிறந்த மாலையாக உருவாக்கி வரும் சமுதாயத்தின் கழுத்தில் போட்டு இருக்கிறீர்கள்...அறிவுரை அறவே பிடிக்காது என்பவர்களும் போட்டிபோட்டு படிக்கும் அளவிற்க்கு உங்கள் எழுத்தாக்கம் இருக்கிறது....சமுதாய சிந்தனை உள்ள இந்த மாதிரி ஆக்கங்கள் உங்களிடம் இருந்து நிறைய வர வேண்டும்...நாம் சமுதாயம் வளர வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்று ஒரு விவாதம் நடந்தது எனது அலுவலகத்தில்...

அங்கே !

"அறிவுரைகள் சொல்வதற்கு இனிக்கும் அதே நேரத்தில் கேட்பவனுக்கு கசக்கும்" இப்படித்தான் ஒருவர் சொன்னார் உடனே எங்களுக்கு அறிவுரை செய்து கொண்டிருந்தவர் "அதெப்படி என்றார்?" கோபமாக !

காது கொடுத்து கேட்பதோ அல்லது கூர்ந்து கவனிப்பதோ வாசிப்பதோ அவரவர் ஆர்வத்தைப் பொருத்தது அதுதான் மேல்தூக்கி விடும் இதுவும் அனுபவம் பேசக் கேட்டது !

Yasir said...

என்னுடைய சவுதி கஸ்டமர் இந்த வேலைவாய்பு தகவலை அனுப்பி உள்ளார்....யாருக்கும் உபயோகப்படலாம் என்று இங்கு பதிகிறேன்

Currently 800 Vacancies in Dar Al Riyadh (K.S.A)

The website of the company is: http://www.daralriyadh.com/

And the direct link to Jobs is: http://www.daralriyadh.com/Careers/CurrentOpenings.aspx?pid=1bb1d14b-a1b0-4e70-a917-c7d3b50c465d&sid=fa276aa2-547c-444f-a04c-11212335f669

Yasir said...

//நாவரசுவைக் கொன்ற மாணவனுக்கு ஆயுள் தண்டனையை நேற்று உறுதிப்படுத்தி தீர்ப்பு வந்திருப்பதாலும்///...தீர்ப்புதான் இங்கே ஆள் எங்கயோ காக்கா...ஜான் டேவிட் ஆஸ்ரேலியாவில் அமர்களமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறான்...இப்போதான் தேடப்போறங்களாம் இண்டர்போல் வழியாக...நாம் நாட்டு லட்சணம் இப்படி இருக்கு..தீர்ப்பே கேட்டதும் நாம் எல்லாரும் அவன் ஜெயிலில் இருப்பதாக நினைத்து இருப்போம் :)

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம் சொல்லியிருப்பது எல்லாக்கல்லூரிகளிலும் உடன் இணைத்து தர வேண்டிய முக்கிய விசயம். மாணவர்கள் இதைப்படித்து விட்டு கல்லூரிக்குள் நுழைந்தால் வயிற்றுக்குள் சிறகடிக்கும் பட்டாம் பூச்சி தவிர்க்கலாம். எனது 2 வது மகனின் கல்லூரி வாழ்க்கை இன்னும் 1 வாரத்துக்குள் ஆரம்பிக்க போவதால் அவனுக்கு ஏதாவது சொல்லி அனுப்ப எனக்கு விசயம் கிடைத்து விட்டது.

மற்ற மாணவர்களுக்கு ஒரு சின்ன நினைவூட்டல்...

1] கல்லூரி வாழ்க்கையில் படிப்பு என்ன சொல்கிறதொ அதை நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் வெளியே வந்த பிறகு உலகம் உங்கள் சொல் கேட்கும்...அப்படி இல்லாமல் மாற்றி நடந்தால் உலகத்தின் சொல்லை நீங்கள் கேட்க வேண்டி வரும்.

2] படிப்பது என்பது வேறு...எக்ஸாமுக்கு படிப்பது என்பது வேறு...எக்ஸாமுக்கு படிப்பதில் நீங்கள் எப்படி திறமையுடன் பதில் சொல்கிறீர்கள் என்பதெ உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும்..கவனிக்க...சர்டிபிகேட்டில் உள்ள மார்க் மட்டும் பேசினால் போதும்...வருங்காலங்களில் மேல்படிப்புக்கோ , வேலைக்கோ போகும் போது நீங்கள் இன்டர்வீவில் அதிகம் பேசினால் சப்பைக்கட்டு மாதிரி ஆகிவிடாமல் மார்க் இருக்க வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//1] கல்லூரி வாழ்க்கையில் படிப்பு என்ன சொல்கிறதொ அதை நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் வெளியே வந்த பிறகு உலகம் உங்கள் சொல் கேட்கும்...அப்படி இல்லாமல் மாற்றி நடந்தால் உலகத்தின் சொல்லை நீங்கள் கேட்க வேண்டி வரும்.//

அசத்தல் காக்கா மிகச் சரியாக சொன்னீர்கள்...

இன்னொரு விஷயமும் சட்டுன்னு பட்டது ஆதலால் உங்கள் வரவைக் கண்டதும் சொல்லிடவும் துணிந்துட்டேன்.

"கல்லூரி வாழ்க்கையென்பது நிறைய திருட அழைக்கும் அழகு(கள்) ஆங்காங்கே நிழலாடும் அது நீங்கள் இதுவரை பார்த்திறாது போல் பிரம்மை கொடுத்திடும் வீட்டிலுள்ளோரை முறைக்கத் தூண்டிடும், திறந்த கண்களால் கனவுகள் வரும் இவைகள் யாவும் பேருந்துப் பயணத்தில் எதிராக கடந்துச் செல்லும் தென்னை மரமாகவோ வயலாகவோத்தான் தெரிய வேண்டும், பெற்றவங்களுக்கு உகந்ததாக அல்லது வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமென்று மனக்கதவை திறந்து வைக்கக் கூடாது"

சொன்னவைகள் புரிந்தால் புதிரும் புதுமை படைக்கும் !

crown said...

ஆடைகளைக் களைவதா சுதந்திரம்?

http://islamicdress.blogspot.com/2005/10/blog-post.html

source : http://islamicdress.blogspot.com/2008/07/blog-post_18.html

crown said...

கல்லூரி வாழ்க்கையென்பது நிறைய திருட அழைக்கும் அழகு(கள்) ஆங்காங்கே நிழலாடும் அது நீங்கள் இதுவரை பார்த்திறாது போல் பிரம்மை கொடுத்திடும் வீட்டிலுள்ளோரை முறைக்கத் தூண்டிடும், திறந்த கண்களால் கனவுகள் வரும் இவைகள் யாவும் பேருந்துப் பயணத்தில் எதிராக கடந்துச் செல்லும் தென்னை மரமாகவோ வயலாகவோத்தான் தெரிய வேண்டும், பெற்றவங்களுக்கு உகந்ததாக அல்லது வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்குமென்று மனக்கதவை திறந்து வைக்கக் கூடாது"
---------அஸ்ஸலாமு அலைக்கும்.இப்படியெல்லாம் எழுதமுடியுமா? வியக்கிறேன்.விக்கித்து நிற்கிறேன். கற்கிறேன், கவனமாய் இருக்கிறேன்.இன்னும் கற்க ஆவலாய் இருக்கிறேன். உங்கள் உறவு கிடைத்தற்கு மகிழ்வில் திளைக்கிறேன். அல்லாஹுக்கே நன்றி சொல்கிறேன். எல்லாபுகழும் அல்லாஹுக்கே! மேலும் பல ஆக்கம் எதிர்பார்க்கிறேன்.----------------------------------------------------

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இங்லீஸ் ஒரு அறிவல்ல! கூடுதல் மொழிப்புலமை--மிகச்சரியான விளக்கம்.
மொத்தத்தில் படிக்கப்போற மாணவனுக்கு மிகச்சரியான வழிகாட்டுதல்கள்.

ZAKIR HUSSAIN said...

//கல்லூரி வாழ்க்கையென்பது நிறைய திருட அழைக்கும் அழகு(கள்) ஆங்காங்கே நிழலாடும்....//

இந்த விசயத்தை ஒரு படிக்காத பாட்டி சொன்ன விதம் சரியாக எல்லோர் மனதிலும் பதிந்தது..இப்போது அந்த பாட்டி இல்லை அவர் சொன்ன அறிவுரை இன்னும் மனதில் இருக்கிறது..

"பருவத்திலெ பன்னி கூட அழகாகத்தான் தெரியும்"

sabeer.abushahruk said...

//திறந்த கண்களால் கனவுகள் வரும்//

டைப் ரைட்டிங் தெரியும்; ஆனா இந்த ரைட்டிங் ஒரு டைப்பாவுல இருக்கு.

ஜாகிரு, இந்த ரெண்டு பேரும் ( தம்பியும் மகுடமும்) இந்த மாதிரி காலங்களை ஒரு பெருமூச்சோடும் கோடு வேர்டிலேயும் பேசிக்கிறதை கவனிச்சியா? ( ஜாயிரு சபீரு ஞாபகம் வருமே?)

நீ வேற ஏன் படுத்துறே. யாரு அந்த பார்ட்டி...சாரி பாட்டி.

கலாமே கனவு கானச் சொல்லி இருக்காரு. பசங்களா, தாரளமா கனவு காணுங்க, அப்பிடியே கொஞ்சம் படிச்சிக்குங்க!

sabeer.abushahruk said...

//தீர்ப்பே கேட்டதும் நாம் எல்லாரும் அவன் ஜெயிலில் இருப்பதாக நினைத்து இருப்போம் :)//

நிஜமாவே நான் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ. அபுஇபுறாஹீமுக்கு...

கல்லூரிக்குச்செல்ல இருக்கும் காளைகளை கிள்ளி, துள்ளி எழுப்பும் உங்களின் இந்த ஆக்கம்.

படபடக்கும் பரவசம் பாய் விரித்து உறங்கும் உள்ளத்தில்

கடகடவென புகையின்றி ஓடும் ரயில் வண்டியாய் பூரிப்பு

மடமடவென முறுக்கேறும் வாலிபம் வாய்விட்டு சிரிக்கும்

சரசர‌ வென சப்தமிட்டு பிறரை நம்பக்கம் திருப்பும் நல்ல செருப்பு

கமகமவென நறுமணம் வீசும் வாப்பா வாங்கித்தந்த நல்ல செண்ட்

டபடபவென உள்ளம் 200 சிசியாய் பைக்கின்றி பறந்து சிம்மாசனத்தில் அமரும்

குளுகுளு வென உள்ளம் குளிரும் அரியர் இன்றி தேரும் ஒவ்வொரு செமஸ்டரிலும்

கருகருவென கருப்பு மையில் மீசை வைத்து எடுத்த பாஸ்போட் (போலி) மீசையும் உண்மையில் முளைத்து முறுக்கேறும்

அரியர் இன்றி தேறினால் இறுதியில் நீ அரியணை ஏறுவாய்..

சிரமப்பட்டு படித்தால் இறுதியில் சிம்மாசனங்கள் உன்னைத்தேடி வரும்.

நன்கு படித்து நல்ல தேர்ச்சி பெறு உன்னைத்திருமணம் முடிக்க மணப்பெண்கள் வரிசையில் நிற்கும்.

உன்னை ஒரு சான்றோன் எனக்கேட்கும் உன் பெற்றோர் அகம் மகிழ்ந்து உன்னை வாழ்த்தி அந்த வல்லவனையே என்றும் வணங்கி நிற்பர்.

உன் சுற்றம் சுகம் பெரும் உற்றார் உறவு பலப்படும்

நண்பர்கள் படை உன்னை என்றும் சூழ்ந்து நிற்கும்

பிரகடணப்படுத்தப்படாத செங்கோல் ஆட்சி நீ செல்லுமிடமெல்லாம் உன்னைச் சுற்றி,சுற்றி வரும்.

இளமையில் கல்; முதுமைக்கு முன் வாழ்வை வெல்.

நல்ல தேர்ந்த உயர் படிப்பால் நாம் கண்ட அதிசயமே அசந்து போகும் ஆச்சரியம் இதுவே...இதுவே...


பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதி இன்ஷா அல்லாஹ் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற‌ இருக்கும் நம் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்களும், து'ஆவும்...



மு.செ.மு. நெய்னா முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று வாசித்ததில் ரசித்தது !

"எந்தத் துறைக்குச் செல்வதாக இருந்தாலும், எது அடிப்படையானது?"

"வாசிப்பு!"(தாங்க)

பாபா சாகேப் அம்பேத்கர், லண்டன் சென்று இருந்தபோது, 'எங்கே தங்க விரும்புகிறீர்கள்?’ என்று நண்பர்கள் கேட்டதற்கு, 'எங்கு நூலகம் அருகில் இருக்கிறதோ, அங்கு!’ என்றார்.

ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அட்வான்ஸில் முதல் 100 டாலர்களுக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.

'உங்களது சிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள், உங்களது சிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்’ என்றார் வால்டேர்.

"ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, அறிவின் கதவுகள் திறக்கின்றன!"

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மேற்கொண்டு படிக்க நல்ல பல வசதி,வாய்ப்புகள் படிக்கும் பருவத்தில் இருந்தும் நம்மில் பலர் சரிவர மேற்கொண்டு படிக்காமல் குறைந்த பட்ச ஒரு பட்டப்படிப்புடனோ அல்லது பாதியிலேயோ நிறுத்தி குடும்ப சூழ்நிலையால் உள்நாடு/அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு தேடி அன்று சென்ற நாம் இன்று நன்கு படித்தவர்கள் நல்ல பல வசதி வாய்ப்புகளுடன், அதிகாரத்தில் இருந்து வருவதை பார்க்கும் பொழுது நமக்கு இன்னொரு வாய்ப்புகள் இருந்தால் நாமும் இவர்கள் போல் நன்கு படித்து வந்து முன்னேறலாமே என்று மனதிற்குள் ஏங்க வைக்கிறது (பொறாமையின்றி.

எப்படி நாம் குர்'ஆன் மற்றும் ஹதீஸை மேற்கோள் காட்டி மார்க்கப்பெரியவர்கள் சொல்ல பல முறை கேள்விப்பட்டிருக்கிறோமோ 'மறுமையில் பல தவறுகள் செய்து இறுதியில் படைத்த இறைவன் முன் கேள்விக்கணக்கு கேட்க நிறுத்தப்படும் மனிதன் தீமை அதிகரித்து பிறகு நரகத்திற்கு செல்ல இறைவனால் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின் இறைவனைப்பார்த்து அச்சமயம் மனிதன் கேட்பானாம் இறைவா எனக்கு இன்னொரு முறை உலகில் சென்று வாழ‌ ஒரு வாய்ப்பு கொடு! நான் அதில் நல்ல பல அமல்கள் செய்து உன்னிடம் அதிகமான நன்மையுடன் வருகிறேன் அதன் மூலம் நான் சுவர்க்கம் செல்ல உதவி செய் என்று மன்றாடுவானாம்.'

பிற‌கு இறைவ‌ன் அவனிடம் கொடுத்த‌ ந‌ல்ல‌ வாய்ப்பை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ இய‌லாத‌ துர்பாக்கிய‌சாலி நீ! என‌வே இவ‌னை ந‌ர‌க‌த்தில் தூக்கி எறியுங்க‌ள் என‌ இறைவ‌ன் ம‌ல‌க்குக‌ளிட‌ம் க‌ட்ட‌ளையிடுவான் என‌ குர்'ஆன் ஹ‌தீஸ் வாயிலாக‌ அறிகிறோம்.

இதே போன்ற‌ ம‌ன‌நிலை தான் உல‌கிலேயே ச‌ரிவ‌ர‌ ப‌டிக்காமல் வந்து இன்று அத‌ன் ப‌லாப‌ல‌ன்க‌ளை அனுப‌விக்க‌ இய‌லாம‌ல் த‌விக்கும் கோடானகோடி ம‌க்க‌ளின் நிதர்சனமான‌ நிலையாக‌ உள்ள‌து.

மேலே நான் ந‌ல்ல தேர்ந்த‌ மார்க்க‌/உல‌க‌ க‌ல்வியை இம்மை ம‌ற்றும் ம‌றுமையுட‌ன் ஒப்பிட்டு குறிப்பிட்ட‌தில் த‌வ‌றேதும் இருப்பின் இறைவா ம‌ன்னித்த‌ருள்வாயாக‌....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

KALAM SHAICK ABDUL KADER said...

//சித்திரமும் கைப் பழக்கம் ஆங்கிலமும் நாப் பழக்கம்!// ஆம். அப்பழக்கம் பெற வேண்டுமானால் பேசிப் பழக வேண்டும் அல்லவா? மெட்ரிக் மாணவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசிட முடியாமல் இருப்பதால், அப்பள்ளியின் தரம் என்ன? ஆசிரியர்கள் மாணவர்களிடம் (மெட்ரிக் பள்ளியில்) ஆங்கிலத்தில் பேசினால் நாப் பழக்கம் வரும் அல்லவா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பகிர்ந்துக்கலாமேன்னு தோணிச்சு...

அன்று !

சென்னையில் படித்துக் கொண்டிருக்கும்போது, ரஷ்யாவிலிருந்து வந்திருந்த மூன்று ஃபுரபெசர்கள் மனிதவளம் பற்றி ஒரு கருத்தரங்கில் பேசினார்கள் ஆவர்களின் பேச்சை ஒரு (பளீரென்ற வெணமையான) பெண் தமிழிலே மொழிபெயர்த்தார். சும்மாச் சொல்லக் கூடாது மிக அருமையான தமிழ்.. கருத்தரங்கு முடிந்ததும் அவரிடம் சென்றும் எப்படி ரஷ்ய மொழி கற்றீர்கள் சென்னையில் எங்கிருக்கிறது கற்பதற்கான இடமென்றோம் (கூட்டாகச் சென்று நாங்கள் கேட்ட இடம் ஜெர்மன் கல்சுரல் செண்டர்) சிரித்தே விட்டார் !

காரணம் "நான் ரஷ்யாவைச் சார்ந்தவள்தான் தமிழை இங்கே வந்து தமிழ் கத்துக்கிட்டேன் எனக்குத் தேவைப்பட்டதால், நான் இங்கே வேலை செய்யும் அணு உலை ஆரம்ப ஆராய்ச்சி மையம் சுற்றி தமிழ் பேசும் மக்கள்தான் இருக்கிறார்கள் அவர்களோடு உறவாட அது அவசியமாகப் பட்டது உறுதியோடு கற்றுக் கொண்டேன் என்றார் !

அவசியத்தை உணர்ந்தாலே முதல்படி !

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தமிழ் தொலைக்காட்சியில் இலங்கை வானொளிப் புகழ் பி.ஹெச்.அப்துல் ஹமீத் அவர்களோடு கலாய்த்துக் கொண்டிருந்தார்கள் அப்போது அவரின் பேச்சுத் தமிழைப் பற்றிச் சொல்லும் போது அவர் சொன்னது "அன்றைய இலங்கை அதிபர் ஜெய்வர்த்தனே தமிழர் பகுதியில் பேசும் பேச்சினை மீட்டிங்கில் தமிழில் மொழியாக்கம் செய்ய சொல்லியிருக்கிறார் இவரோ எனக்கு சிங்களம் சரளமாக்கத் தெரியாதே" என்று பின் வாங்கியிருக்கிறார் ஆனால் அதிபரும் விடுவதாக இல்லை "நீங்களே செய்யுங்கள் என்று கட்டயப் படுத்தியிருக்கிறார்"

மீட்டிங் நடந்த மேடையில் அதிபர் பேசும்போது நிசப்தமாக இருந்த கூட்டம் இவர் மொழி மாற்றம் செய்யும்போது கரகோஷம் எழுவதுமாக மீட்டிங்கும் நடந்து முடிதிருக்கிறது.

அதிபர் பேசும் வாக்கியத்தின் முதல் வாக்கியத்தையும் அவர் முடிக்கும்போது சொல்லும் வாக்கியத்தையும் காதில் வாங்கிக் கொண்டு என்ன பேசியிருப்பார் என்று யூகம் செய்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் அதோடு வழக்கமாக தமிழர் பகுதியில் அதிபர் வந்தால் என்ன பேசுவார் என்றும் பழகியதால் சமாளித்ததாகவும் சொல்லியிருந்தார்.

மொழிப் புலமைக்கும் கிரகித்து உள்வாங்கும் ஆர்வமும் அவசியமே !

crown said...

மொழிப் புலமைக்கும் கிரகித்து உள்வாங்கும் ஆர்வமும் அவசியமே !
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த வரியின் மேலே உள்ள கருத்துக்கள் இந்த வரியை அப்படியே பிரதிபலிக்கிறது.கலாம் காக்கா கருத்திட்டபின் எழுதிய உங்கள் கருத்து இப்படித்தானே கிரகித்து வாங்கியதால் நீங்கள் கருத்தை பகிர்ந்துக்"கலாமே"ன்னு தோணிச்சு...என்று ஆரம்பித்த உங்கள் கிரகிப்பு தன்மையை காட்டுவதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.(அட! கிரவுன் கண்டுபிடிச்சிட்டானே!!!.)கலாமேன்னு அடைமொழியில் வருவது போல் வார்தை அமைத்தது சிறப்பு.

அப்துல்மாலிக் said...

நல்ல அறிவுரை, நாம படிக்கும் காலத்தில் இது மாதிரி அறிவுரை, சரியான கைடு இல்லாமல் நிறையபேர் திக்குக் தெரியாமல் இருந்தது வேறுகதை, இக்கால மாணவர்களுக்கு இந்த வழிகாட்டல் ஒரு வரபிரசாதம், நிச்சயம் இது மாதிரி ஆலோசனைகளை மாணவர்கள் பயன்படுட்திக்கொள்ள்வேண்டும், சரியான திட்டமிடல் எதிர்காலத்தின் போக்கை நிர்ணயிக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு