ஒரு பேட்டி...
ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..
இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.
ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்..
இப்போது இணைய தளத்தில் அதிகம் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டை பொருத்தவரை அதிராம்பட்டினத்தை சார்ந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இருப்பினும் இவர்களின் கல்விக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்புடன் செயலாற்றிய பல ஆசிரியர்கள் இப்போது ஒய்வு பெற்று விட்டார்கள்.
அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என நினைவு வந்தவுடன் எனக்கு கிடைத்த டெலிபோன் நம்பரில் தொடர்பில் கிடைத்த ஆசிரியர் SKM.H என்று நான் படிக்கும் காலங்களில் அன்புடன் அழைக்கப்பட்ட ஹாஜா முஹைதீன் சார். நானும் அவரின் பழைய மாணவன் ஆதலால் சில நல விசாரிப்புகளுக்கு பிறகு...
உங்கள் மாணவப்பருவம், பள்ளியில் சேர்ந்து பணியாற்றியது பற்றி...
பள்ளிப்பருவம் எல்லாம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளிதான் [ அப்போது உயர்நிலை மட்டும் தான்] பிறகு பி.யு. சி எல்லாம் Kadhir Mohideen college , 3 வருடம் ஆசிரியராக பணியாற்றிய பிறகு புதுக்கோட்டை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியில் B.T படிப்பு முடித்து, 8- 9 வருடம் ஹையர் செக்டரி ஆசிரியர் ஆகி 1986ல் தலைமை ஆசிரியர் பொறுப்பு ...பிறகு 31- 05- 1998 ல் ஓய்வு பெற்றேன்...
ஒரு மிகப்பெரிய பணியை இவ்வளவு சிம்பிளாக சொன்னது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது..இடைப்பட்ட காலங்களில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை ஏமாற்றம் , எத்தனை வெற்றி எதையும் ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவம் சாரின் வார்த்தைகளில் தெரிந்தது.
இப்போது உங்களது வேலை பற்றி...
1998 செப்டம்பரிலிருந்து IMAM SHAFI MATRIC HIGHER SECONDARY SCHOOL, ஏறக்குறைய 70 Teachers, 30 பேர் கொண்ட Non Teaching Satff, உதவியுடன் 1600 மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது.
மறக்கமுடியாத நிகழ்வுகள், மாணவர்கள் பற்றி...
நிறைய இருக்கிறது,நிறைய மாணவர்களும் இருக்கிறார்கள். மாணவர்கள் பெயர் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை..என் வயதும் அதற்க்கு ஒரு காரணமாக இருக்களாம். நாடகம் விளையாட்டு என்று எனக்கு ஆர்வம் இருந்ததால் சில மாணவர்கள் எனக்கு ஞாபகம் இப்போதைக்கு வருகிறது.நாடகங்களில் பங்கேற்ற ஜாபர், அஸ்ரப், சிராஜுதின், நூர்முஹம்மது, விளையாட்டில் சிறப்பாக இருந்த அல் அமீன். உன் பெயரில் இன்னொரு மாணவன் இருந்தான் [அவனும் ஜாஹிர் ஹுசேன் தான்.. உனக்கு ஜூனியராக இருக்க வேண்டும்.]
நினைவில் நிற்கும் நிகழ்வுகளில் என் ஆசிரியர் பணியையே சொல்லலாம்...நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.
இன்னும் ஒன்று ஒருமுறை பக்கத்து ஊரில் தேர்தல் தலைமை அதிகாரியாக போயிருக்கும்போது [அசம்ப்ளி எலக்சன்] ஒரு P.E.T ஆசிரியர் என்னைவிட மூத்தவர் [ வேலை/வயது இரண்டிலும்] என்னைப்பார்த்து சொன்னது எப்படி சார் நீங்கள் ஒரு P.E.T (physical education teacher) ஆனால் என்னை விட வயதிலும் , சர்வீசிலும் குறைந்தவர் எப்படி எனக்கு தேர்தல் அதிகாரியாக அரசு நியமித்து இருக்கிறது.??
உடனே நான் சொன்னேன் ' சார் முதலில் ஒரு உண்மை.. நான் P.E.T அல்ல, கிராஜுவேட் முடித்து , தலைமை ஆசிரியாக இருப்பதுடன் ஒரு Mathematics Teacher. நான் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் மாணவர்களுடன் District/ Divisional Sports போவதை பார்த்து என்னை P.E.T ஆக நினைத்து விட்டார்.’
இல்லை சார் இன்றும் ஸ்லிம் ஆக இருக்கும் உங்கள் உடல்வாகு பார்த்து அவர் முடிவு செய்து இருக்களாம்..- இது நான்
ஒரு முறை District Education Officer ஆக இருந்த ஒருவருடன் இலக்கிய மேடையில் பேசிய பிறகு, அடுத்த நாள்அவர் நமது ஸ்கூலுக்கு வந்த போது நான் கணக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் போது 'நீங்கள் ஏன் கணக்கு பாடம் எடுக்கிறீர்கள்?...போய் கணக்கு ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றவுடன்..சார் நான் கணக்கு ஆசிரியர்தான் என விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.
முன்னால் / இந்நாள் மாணவர்கள் ஒரு ஒப்பீடு……..
' அப்போது இருந்த மாணவர்களிடம் இருந்த obedience இப்போது பார்ப்பது அறிதாகிவிட்டது.. அதற்க்கு காரணம் சூழ்நிலைகள், சட்டம் எல்லாம்தான். மாணவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என்று இல்லை நாம் அவனிடம் அன்பாக ஒரு 10 நிமிடம் பேசினாலும் அவனது தவற்றை உணர வைத்து விடலாம். முன்பு ஒரு ஆசிரியரிடம் கோபமாக நடந்த மாணவனை எனது அன்பால் திருத்திய 2 நிகழ்வுகள் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
தமிழ் , இலக்கியம் மற்றும் நாடகம் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?
' உண்மையிலேயே நான் தமிழ் இலக்கியம் படிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு அப்ளிகேசன் போட்டு இடம் எல்லாம் கிடைத்து விட்டது , அப்போது டாக்டர் மு.வரதராசன், பேராசிரியர் அன்பழகன் எல்லோரும் அங்கு பேராசிரியராக பணீயாற்றிய காலம்...அப்போது உள்ள குடும்ப பொருளாதார சூழ்நிலையில் நான் மெட்ராஸ் போய் படிக்க முடியவில்லை.
நான் ஆசிரியர் பணியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களை, அகில இந்திய வானொளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்தேன் அதில் நான் எழுதி மிகப் பிரபலமான இரண்டு நாடகங்கள் மாவிரன் அலெக்சாண்டர், மாவீரன் திப்பு சுல்தான், அறிவியல் நிகழ்ச்சிகள் ஆறு முறையும் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சி மூன்று முறையும் எழுதி இயக்கியிருக்கிறேன்.
உங்கள் குடும்பம் பற்றி..
2 மகன்கள், 1 மகள் எல்லோருக்கும் கல்யாணமாகிவிட்டது... நானும் 2002 ல் குடும்பத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டேன். நீ எப்படிப்பா இருக்கே..உனக்கு எத்தனை பிள்ளைங்க...உன் வாப்பா சவுக்கியாமா..என் சலாத்தை அவர்களுக்கு சொல்லிவிடு...
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் சாரின் அன்பான விசாரிப்பில் நான் நெகிழ்ந்துதான் போனேன்.
ZAKIR HUSSAIN
நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்
41 Responses So Far:
மதிப்பிற்குறிய சார் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ துஆ செய்வோம்.
என் பெரும் அன்பிற்குரியவர்களும் ப்ளஸ் ஒன்னில் என் வகுப்பாசிரியருமானவர்களும் நான் மிகவும் மதிக்கும் ஆசிரியர்களில் முதன்மையானவர்களுமான எஸ் கே எம் சாரின் புகைப்படம் பார்த்ததுமே நெகிழ்கிறது மனது.
சாரோடு நினைவுகளைப் பகிர்ந்து அதை எங்களுக்காகவும் பதித்த ஜாகிருக்கு என் நன்றி.
சாருக்கும் எனக்குமான தொடர்புகள் இன்றும்கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சார் நீண்ட காலம் தீர்க்க ஆயுளோடும் ஆரோக்கியத்ட்கோடும் வாழ என் துஆ.
அன்பின் அசத்தல் காக்கா:
நமது முன்னாள் ஆசிரியகள் பற்றி தாங்கள் எழுத நினைத்திருந்ததை இன்று முதல் பதிவாக எங்கள் யாவரின் மரியாதைக்குரிய SKM-H சார் (மாமா) அவர்களைப் பற்றி முதலில் எடுத்து வைத்த அவர்களின் பசுமையான நினைவுகூறல் பழைய மாணர்வகளை அச்சூழலுக்கே அழைத்துச் செல்கிறது.
படிக்கும் காலத்தில் அகில இந்திய வானொளியில் மாவீரன் திப்பு சுல்தான் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் அதிரைநிருபரை தொடர்ந்து வாசித்துக் கொண்டு மவுனமாக இருப்பவர்கள் அதில் எனது முக்கியமாக மாவீரன் திப்புவாக நடித்த நட்பு (நடுத்தெரு) இக்பால் மற்றும் ஆஸ்பத்திரி தெரு ஜாஜிர் ஹுசைன் (மேலே ஞாபகத்திலிருக்கும் மாணவர்களில் ஒருவர்).
அருமையா உரையாடல் நினைவுகளைக் கிளறிவிட்ட உசுப்பல் !
"அலகிலா அருளும்,அளவில்லா அன்பும் இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி உலகேல்லாம் படைத்து உயர்வுரக் காக்கும் புலமையோன் தனக்கே புகழல்லெல்லாம் அனைத்தும்" என்று சார் ஆரம்பிக்கும் பேச்சு இன்னும் என் காதுகளில் தேனாக ஒலித்து கொண்டு இன்றும் பசுமையாக உள்ளது
சார் என்னை பலமுறை ஆர்வமூட்டி அவர்களின் முயற்ச்சியால் மூன்று முறை என் குரல் அகில இந்திய வானொலியில் பேச்சு போட்டி மற்றும் காந்தி ஜெயந்தி தின உரை மூலம் ஒலித்தது அது எனக்கு மறக்க முடியாத நாளாகும்
அபு இபுறாஹீம்,
எதைவைத்து என்னருமை சார் என்னை ப்ளஸ் ஒன்னில் 'சிறந்த மாணவனாக' தெரிந்தெடுத்து பரிசு வழங்கினார் என்பது மட்டும் இப்பவும் எனக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
கவிக் காக்கா : அவசியம் கேட்டுத் தெரிய வேண்டிய விஷயம் (கேட்கனும்)..
என் யூகம் "நிறைய ஹைட்ராலிக்" உசுப்பும் உந்துதால் உங்களிடம் இருப்பதை அன்றே அறிந்து வைத்திருந்ததால்.
அடுத்து எல்லா வற்றையும் விட அதிகமான மதிப்"பெண்"களோடு வகுப்பில் வலம் வந்திருக்கலாம்.
அடுத்து நாடகத்தில் நடிக்கச் சொல்லியிருந்தால் நீங்கள் மட்டும் படித்துக் கொண்டிருந்தக்கலாம் !! :))
P.S.: நிச்சயம் கேட்டுச் சொல்கிறேன் :)
கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசியரியர்களில் ஜனாப்.ஹாஜா முஹைதீன் சாரும் ஒருவர். பள்ளிப் பருவ மாணவ கலாட்டாகள் இடையேயும் நன்கு படித்து ஆண்டு இறுதித்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றவதற்கு (1990-91) மாண்புமிகு ஹாஜாமி சாரின் கண்டிப்பான தண்டனையும் காரணமாக இருந்தது.
ஹாஜாமி சாரின் மாஸ்டர் பீஸ் நாடகம் "தலை கேட்டான் தம்பி"யை மீறி நாங்களே எழுதி,இயக்கி,நடித்த சமூக நாடகம் முதலிடம் பெற்றது. இதற்குக் காரணமான திரு.ஷன்முகம் சாரும் நன்றிகூற கடமைபட்ட ஆசிரியர்களில் ஒருவர்.
ஜாகிர்காக்கா,தற்போது நீங்கள் ஊரில் இருந்தால் ஹாஜி முஹம்மது சார், அஹமது தம்பி சார், சீனிவாசன் சார் போன்ற மாணவர்களை பட்டைதீட்டிய ஆசிரியர்களை காணொளிபேட்டிகண்டு போடலாமே!
அதிரை எக்ஸ்ப்ரஸ் & நிருபர் டீம் இதற்கு முயற்சி செய்தால் நல்லது.
இதை வழிமொழிய நண்பர்கள் க்ரவ்ன் தஸ்தகீர், மு.செ.மு.நெய்னா, ஜபருல்லாஹ் ஆகியோரும் வருவார்கள் என்று நம்புகிறேன்.
மதிப்பிற்குறிய ஹாஜாமி சார் அவர்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ துஆ செய்வோம்.
அபு அஸீலாவின் யோசனையை அவர் அழைத்தவர்கள் வழிமொழிவதற்கு முன் நான் வழிமொழிகிறேன். அத்துடன், மாஸ்டர்ஸ் லிஸ்டில் லியாக்கத் அலி சார், அலியார் சார் ஆகியோரையும் சேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அபு அஸீலா: "நாங்களே" வில் உங்களோடு இணைந்த அந்த நண்பர்களின் பெயர்களையும் குறிப்பிட்டால் செய்தி கலை கட்டும்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தில் ஹாஜாமி சாரின் சமயோஜித உதவி என் நெஞ்சில் ஆழமாக பதிந்த ஒன்று.
அப்போதெல்லாம் நம்மூரில் ப்ளஸ் 2 அரசுத் தேர்வுகள் பட்டுக்கோட்டையில்தான் நடக்கும். ( நாங்கள்தான் ப்ளஸ் 2 கல்வி முறையின் முதல் செட்) நான் என் இறுதி பரீட்சையான பையாலஜி தேர்வு எழுத கேள்வித்தாள் வாங்கவும் உயிர்போகும் அளவுக்கு வயிற்று வலி துவங்கவும் சரியாக இருந்தது.
வலி என்றால் உட்காரகூட முடியாத வலி. அழுதுகொண்டே தலையை பெஞ்சில் போட்டு படுத்துவிட்டேன். போச்சு வாழ்க்கையே முடிஞ்சு போச்சி ஃபெயில்தான். அப்பவெல்லாம் ஃபெயிலான இப்ப மாதிரி அடுத்தமாசமெல்லாம் எழுத முடியாது. ஒரு வருஷம் போச்சு என அழ, வலி தீவிரமடைந்தது. சூப்பர்விஸர் கண்டு கொள்ளாமலிருந்தார். 10 - 15 நிமிடங்கள் கழித்து கதை முடிந்தது என் இருந்த என்னிடம் ஹாஜாமி சார் திடீரென வந்து "என்னாச்சுப்பா"ன்னார். வலியில் துடிப்பது கண்டு வருந்தினாலும் ஹாஸ்பிட்டல் போய் வர நேரமில்லாததால், நல்லா படிக்கிற பசங்களுக்கு கண்விழித்து படிப்பதால் அல்ஸர்தான் வரும் என்ற சமயோஜித புத்தியில் பறந்துபோய் மாத்திரை கொணர்ந்து சாப்பிடச்சொன்னார்.
மாத்திரை சாப்பிட்ட 10 நிமிஷத்தில் ஒரு பக்கம் சாய்ந்தால் மட்டும் வலி குறைந்ததை உணர்ந்து அதே பொஸிஷனில் மூளையின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கத் துவங்கி முழு பரீட்ச்சையையும் முடித்தேன்.
தேர்வு எழுதி வெளியே வரும்போது விசாரித்த சாரிடம் பஸாயிடுவேன் என்று சொன்னபோது மனசு லேசானது அத்துடன் அந்த மனசில் ஹாஜாமி சார் பெரிய இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டார்.
இதில் மற்றுமொரு புதிர் என்னவெனில் அபு இபுறாஹீம், அப்படி கஷ்டப்பட்டு எழுதிய உயிரியல் தேர்வில் நான் நாம் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேறி யிருந்தேன்!!!
MOHAMMED SIS
ஹாஜி முஹம்மது சார், அஹமது தம்பி சார், சீனிவாசன் ஆகியோரின்
போட்டிக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டால் என்னை அழைக்கவும்.
என்னை தொடர்பு கொள்ள தாஜித்தின் காக்க அவர்களிடம் என்னுடைய தொலைபேசி என்னை பெற்றுக்கொள்ளவும்.
சகோ அபூஅஸீலா : மேற்சொன்னவர்கள் ஏற்கனவே வரிசையில் இருக்கிறார்கள் ! அவர்களும் பதிவுக்குள் நிச்சயம் கொண்டு வந்திடுவார்கள். ஸ்ரீனிவாசன் சார் மற்றும் அஹமது தம்பி சார் இருவரும் சமீபத்தில் ஏப்ரல் இருபதாம் தேதி ரிடையாகினர்...
ஜாஹிர் காக்காவின் ரவுண்ட்க்கு பின்னர் இவர்களோடு உரையாடலாம் இன்ஷா அல்லாஹ்...
கவிக் காக்கா, அதான் உறவுகளோடு நட்பு வைத்தே உறவாடுகிறீர்களோ !
தம்பி முஹம்மத் : உன்னுடைய அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாசமிகு ஜாஹிர் காக்கா,
மிக அருமையான பசுமை நினைவுகள் நிறைந்த பதிவு. SKMH அவர்களிடம் நீங்கள் எல்லாம் காதிர் முகைதீன் பள்ளியில் பாடம் கற்றீர்கள். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காவிட்டாலும், அவர்களிடமிருந்து வீட்டிலேயே "வாழ்க்கை பாடம்" கற்றுக்கொண்டேன், இன்னும் கற்றுக்கொண்டுவருகிறேன். அவர்கள் மேல் இருக்கும் மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அவர்களின் நற்பண்புகள் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
அல்லாஹ் போதுமானவன்.
SKM.H அவர்களின் நல் வாழ்வுக்காக படைத்தவனிடம் துஆ செய்கிறோன்.
நம் காதிர் முகைதீன் பள்ளியின் மறக்க முடியாத ஆசிரியர்களின் பட்டியலில் SKMH சார் அவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. SKM சார் அவர்கள் மாணவர்களுக்கு தந்த ஊக்கம், பலரை முன்னேற்றப் பாதையில் செலுத்தி இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. இவர்களைப் போன்ற முத்தான பல ஆசிரியர்களை நாம் முழுமையாக (100%) பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
இதுவரை கமென்ட்ஸ் எழுதியவர்களுக்கும், எழுத ஆயத்தமாகி மவுசையும் கீ-போர்டையும் பிடித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.
சகோதரர் அபு அஸீலா சொன்ன மாதிரி..மற்ற ஆசிரியர்களையும் பேட்டி எடுக்க தயாரார். 10 நிமிடத்துக்குமுன் தான் வாவன்னாசாரிடம் பேட்டி எடுத்தேன். இன்னும் 1, 2 தினங்களில் வெளியாக இருக்கிறது. எனக்கும் வீடியோவில் எடுக்க ஆசைதான். நான் மலேசியாவில் இருப்பதால் தற்போதைக்கு டெலிபோனில்தான் பேட்டி எடுக்க முடிகிறது.
ஒரு மாதம்ஊரில் தங்க வாய்ப்புகிடைத்தால் ஒரு Nikon DSLR/COOLPIX 12.0 வைத்துக்கொண்டு தூள் பரப்பலாம்...ஹ்ம்ம்...மு.செ.மு. நெய்னா வேறு அப்பப்ப ஊர் ஞாபகத்தை தருகிற கட்டுரையா பார்த்து வெளியிடுகிறார். [ நெய்னா...என்னுடைய 'வதுவாப்பேறு' எப்பொதும் உங்களுக்கு உண்டு]
மாஷா அல்லாஹ், நானும் 11/12ம் வகுப்பில் கணக்கு ஆசிரியராக மதிப்பிற்குரிய ஹாஜாமுகைதீன் சார் அவர்களிடம் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்பு கிடைத்தது, இன்னும் இப்போது பார்த்தாலும் அந்த நட்பு/அறிவுரை கலந்த பேச்சில் மாற்றமில்லை, அவர்களிடம் நான் மாணவனாக இருந்தமைக்கு பெருமைபடுகிறேன், அவர்களீன் மகன் என்னுடன் ஒன்றாக பயின்றதால் எங்களிடன் இருந்த நெருக்கும் இன்னும் அதிகமாகியது. நம் பள்ளிக்கு கிடைத்த வரபிரசாதம் அவர்கள். நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து நம் சமுதாயத்திற்கு கல்விப்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
எனக்கு படிப்பு,நடிப்பு இதோடு துடிப்பிலும் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வமூட்டிய பெருமை சார் அவர்களையே சேரும். அல்லாஹ் அவர்களின் சேவைகளை ஏற்றுகொண்டு நீண்ட ஆயுளை கொடுத்து நம் குழந்தைகளும் அவர்களின் ஆலோசனை பெற்று எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற வழி வகுப்போம்.
மின் அஞ்சலில் பெற்ற கருத்து
-----------------------------------
பள்ளியில் படித்த பருவகாலத்தின் மறக்க முடியாத நினைவுகளை என் கண்ணியத்திற்குரிய ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A.,B.Sc.,B.T. அவர்களின் பேட்டியின் மூலம் ஆனந்தம் அடைகின்றேன்.
(1969 - 1975) 6 முதல் 11 வகுப்பு வரை பயின்றவன் நான். 9, 10, 11 வகுப்புகளில் நான் அவர்களிடம் கணிதம் பயின்று, அன்றைய SSLC யில் கணிதத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவன் என்கின்ற முறையில் எனக்கும் ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A.,B.Sc.,B.T. அவர்களுக்கும் மறக்க முடியாத நினைவுகள் பல உல.
அவர்கள் இயற்றிய நாடகங்களில் துணிவே துணை, தீரன் திப்பு சுல்தான், புலித் தேவன், நீதியா பாசமா, தாயகமே உனக்காக என்ற மேடை நாடகங்களில் முக்கிய பாத்திரகளிலும், மாவீரன் அலெக்சாண்டர் என்ற வானொலி நாடகத்தில் மாவீரன் அலெக்சாண்டர் பாத்திரத்திலும் நடித்தவன் நான்.
அது மட்டுமல்லாது என் ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A.,B.Sc.,B.T. அவர்களின் சீரிய வழி காட்டுதலில், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் நிலையும், அதனைத் தொடர்ந்து கல்லூரியிலும் அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் சுழற் கோப்பையும் பெற்றேன்.
என் ஆசானுக்கு தமிழில் எந்த அளவுக்கு ஆர்வமுண்டோ அந்த ஆர்வத்தை அவர்கள் எனக்கு தந்ததோடு, அவர்களின் பாடமாகிய கணிதத்திலும் எனக்கு ஆர்வம் கொடுத்து கணிதம் பிரிவில் பட்டம் பெற்றேன்.
நூர் முஹம்மது / தமாம் / சவூதி அரேபியா
அஸ்ஸலமுஅலைக்கும்
மதிப்பிற்குரிய SKMH சார் அவர்களை நேரில் சந்தித்த போன்ற நிறைவை தந்தது. எங்கள் குடும்ப உறுப்பினர்களோடு சந்தித்து கொள்ளும் போதெல்லாம் SKMH சார், அலியார்சார்,வாவன்னாசார் இவரகளையெல்லாம் நினைவு கூராமல் எங்கள் சபை கலைந்தது இல்லை.
இவர்கள் செய்த பணியை தொடர்ந்திட யாரும்(தயாரா)இல்லையே என்பதே என் ஆதங்கம். பசுமை நிறைந்த நினைவுகளை உசுப்பி விட்ட சகோ.ஜாஹிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த பின்னூட்டத்தில் நான் எவ்விதத்தில் கலந்து கொள்வது என்று தெரியல்லை.
இமாம் சாஃபி(ரஹ்) பள்ளியில் ஆறாம் வகுப்புவரை பயின்று, பின் மன்னார்குடி,தஞ்சாவூர்,பாபநாசம் என்று ஊர் ஊரா படித்து(பார்த்து) வந்ததால் அன்று முதல் என் பள்ளி நண்பனும், இன்று வரை பாசமிகு நண்பனுமாகிய என்.சஃபாதை போல் SKM சாரைபற்றி நான் எழுதமுடியவில்லை.இருந்தாலும் அவரைப்பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
SKM அவர்கள்மூலம் பயன்பெற்று இங்கு பதியப்படும்/பட்டிருக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு நன்மையின் ஏட்டில் பதியட்டும்.ஆமீன்.
மு.ச.மு.MR
மின் அஞ்சலில் பெற்ற கருத்து
--------------------------------------
மரியாதைக்குரிய SKM-H சார் அவர்களைப் பற்றி அதிராம்பட்டினம் வலைப்பூவில் வந்திருப்பதாக எனது சகோதரி சொன்னதும் உடனடியாக பார்த்தேன் அப்படியே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர், அவர்களை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று ஆர்வத்தையூட்டியிருக்கிறது.
நான் கா.மு.மே.பள்ளியில் (85-87 வருடம்) மேல்நிலை வகுப்பு படிக்கும் போது என்னையும் எனது தோழியையும் எனது வகுப்பு ஆசிரியர் சிரின்வாசன் அவர்களிடன் ஒத்துழைப்போடு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி என்று எல்லா வற்றிலும் கலந்து கொள்ள வைத்து தஞ்சை மாவட்டத்திலேயே முதல் பரிசை பெற்று வர பயிற்சி தந்த ஆசான். பேச்சுத் திறன் கொண்ட ஆசிரியர் அவர்களின் பேச்சை இன்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போன்று இருக்கிறது.
நிச்சயம் அதிராம்பட்டினத்திற்கு வருவேன் சார் அவர்களையும் எனது நண்பர்களையும் சந்திப்பேன்.
தயவுகூர்ந்து எனது கருத்தை சார் பற்றி எழுதியிருக்கும் இந்தப் பக்கத்தில் பதியவும்
மரியாதையுடன்
முன்னாள் மாணவி
புதுதில்லி
( 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) (1979-1986)
காதிர்முகைதீன் பள்ளியில் பயின்ற நினைவுகள் பசுமையானது- அதிலும் குறிப்பாக - ஹாஜாமுகைதீன் சார் அவர்களின் வகுப்பு என்றால் எனக்கு ஆர்வம்-
கணித பாடத்தின் -இடைஇடையே- சுவராசியமான பொது அறிவு
எங்கள் குடும்பத்தில் அனைவரும் (அல் அமீன்) விளையாட்டிலும் படிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் என்பதால்- ஹாஜா முகைதீன் சார் அவர்களுக்கு எங்கள் மீது தனி பிரியம்-
சார் அவர்களின் பேட்டி வந்துள்ளது என்று (அபு இபுறாஹீம்-நெய்னாதம்பி சொன்னவுடன் - மாத கடைசி வேலை பளுக்கு இடையே - ஹாஜா முகைதீன் சார் பற்றி சொல்ல பல இருந்தும் - சிறிய அளவே பின்னூட்ட மிட முடிந்தது- மன்னிக்கவும்
நீங்கள் உடல் சுகத்துடன் நீண்ட நாட்கள் எங்களிடையே இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
(அபு இபுறாஹீம்)
சாரிடம் சொல்லுங்கள் - நம் மாணவ சமுதாயம் பயன் பெறும் வகையில் ஒரு சிறந்த முன் மாதிரி தொடர் எழுதுவதற்கு - ===========================================================
(மிகச்சிறந்து அறிவு ஆசான்கள், ஹாஜா முகைதீன்சார், ரங்கராஜ் சார், லியகத்தலி, சீனிவாசன் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் -இவர்கள் போல் சிறந்த ஆசிரியர்கள் வேறு எங்கும் காணமுடியாது, )
-முகமது மீரா
அஸ்ஸலாமு அலைக்கும்,
comments பகுதியில் எனது கருத்துரைகள் பதியப்படாமல் இடையூறு நேர்ந்தது. அதனால், இம்மடல் மூலம் மின்னஞ்சலில் என் கருத்துக்களை வைக்கின்றேன்.
கண்ணியத்திற்குரிய ஆசான் SKMH அவர்களைப் பற்றிய எங்களின் நினைவு நாடாக்களைச் சுழல விட்ட “அதிரை நிருபர்” குழுவினர்க்கு நெஞ்சம் படர்ந்த நன்றிகள். ஆனந்தக் கண்ணீர் மல்க ஆசானின் கண்ணியத்திற்குரிய உரையாடல் படித்ததன் மூலம் என் ஆசைகள் நிறைவேறி விட்டன:
1) அடிக்கடி யான் MST காக்கா அவர்கட்கு வரையும் மடல்களில் என் ஆசான் SKMH அவர்கள் போன்று பல்கலை வேந்தர் எவரும் இதுகாறும் நமது ஊர் பள்ளிகளில் ஆசான்களாக அமையவில்லை;அதனாற்றான், எங்கட்கு கிடைத்த அப்பேறு எங்கள் மக்கள் படிக்கும் இமாம் ஷாஃபி போன்ற பள்ளிகளில் உள்ள மாணவர்கட்கு கிடைக்கவில்லை. (இதனைக் கண்ணுற்ற ஜனாப் MST காக்கா அவர்கள் எங்கள் ஆசான் SKMH அவர்களிடம் என் மடலைக் குறிப்பிட்டு “ உலகம் முழுதும் உள்ள உங்கள் மாணவர்கள் உங்களை மறக்கவே இல்லை” என்று கூறியதாக என்னிட SKMH அவர்கள் சென்ற முறை விடுமுறைப் பயணத்தில் ஊரிலிருந்த போழ்து சொன்னார்கள்). இன்று இவ்வுண்மை இங்கு பதியப்படுகின்றது கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.
2) சென்ற இரு வாரங்கட்கு முன்பு யான் AEM க்கு எழுதிய மடலில் “ஹாஜா முஹைதீன் சார், அலியார் சார் போன்ற தியாக மனப்பான்மை உள்ளவர்கள் இல்லாததன் காரணம் தான் இன்று இமாம் ஷாஃபி பள்ளியின் தரம் குறைந்ததா?” என்று கேட்டேன். அதன் உண்மைகள் இப்பொழுது என்னைப் போன்ற KMHS முன்னாள் மாணவர்களின் பதிவுகள் ஜனாப் SKMH அவர்களின் அறிவுத் திறனை உணர்த்தும் வண்ணம் தங்களின் எண்ணம் கூறும் உண்மை காரணங்களை கை வண்ணத்தில் பதிந்து உள்ளதைக் கண்டு மகிழ்ச்சி; நெஞ்சில் நெகிழ்ச்சி.
3) எங்களால் ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமையுடன் திகழ அடிப்படைக் காரணம்: ஜனாப் SKMH அவர்கள் தங்களின் சொந்தத் துறையான கணிதப்பாடம் அல்லாமல் ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கண வகுப்புகள் நடாத்தி எங்கட்கு உரம் இட்டது யாம் பெற்ற வரம்!
என் ஆசான்பால் உள்ள அன்பால் இவ்வெண்பா:
கண்ணியம் மிக்க கடமைத் தவறாத
புண்ணியம் சேர்த்துப் புகழுடன் வாழ்கின்ற
விந்தையாம் பற்பல வித்தைகள் கற்பித்துச்
சிந்தையில் வாழ்வார் சிறந்து.
-
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் (பிறப்பிடம்), அபுதபி(இருப்பிடம்)
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல மனதின் தேடலே இந்த நல்ல மனிதரின் உரையாடல்
//(அபு இபுறாஹீம்)
சாரிடம் சொல்லுங்கள் - நம் மாணவ சமுதாயம் பயன் பெறும் வகையில் ஒரு சிறந்த முன் மாதிரி தொடர் எழுதுவதற்கு - ///
அன்பின் மீரா : முயற்சிக்கிறேன், அவர்களோடு உரையாடினாலே நிறைய தகவல்கள் அருவிபோல் கொட்டும் அதனை வாரி அள்ளியெடுத்து பகிர்ந்திட முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அழைக்கும்
1981ல் நான் மலேசியா சென்றிருந்தபோது மர்ஹும் தாஜுதீன் சார் ஜனாப் ஹனிபா சார் மற்றும் ஹாஜி ஹாஜா முஹைதீன் சார் ஆகியோர் அங்கு வந்திருந்தார்கள் அப்போது அவர்கள்கூட ஒரு நீண்ட கார் பயணம் கோலாலம்பூர் TOபினாங் மேற்கொண்டேன் அப்போது மர்ஹும் ஹாஜி (சார) பாரூக் மாமா அவர்கள் கேட்டார்கள் உலகில் சிறந்த மொழி எது சார் என்று இந்த கேள்விக்கு என் மாணவன் ஷாகுல் பதில் சொல்லிவிடுவான் என்று சொல்லி நீ சொல்லுப்பா என்றார்கள் நான் சென்னேன் உலகில் சிறந்த மொழி அவரவர் தாய் மொழி என்று இதை நான் சொன்னதும் ஹாஜி ஹாஜா முஹைதீன் சார் அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் இன்றளவும் எங்கு பார்த்தாலும் எனக்கு முன் அவர்கள் என்னை நலன் விசாரித்து விடுவார்கள்.சார் அவர்களின் உடல் நலனுக்கும் நீண்ட ஆயுளுக்கும் நாம் அவர்களுக்காக துவா செய்ய என்றும் கடமைப்பட்டுள்ளோம்
//இந்த பின்னூட்டத்தில் நான் எவ்விதத்தில் கலந்து கொள்வது என்று தெரியல்லை.//
தம்பி MSM(mr) அங்கே ஜெய்லானியிடம் கேட்டு எழுதலாமே... பள்ளி நாட்களில் சுள்ளான்கள் (!!)
அஸ்ஸலாமு அழைக்கும்.
நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்வி போர்னா வார் வார்ன்னா போர் இன்றைக்கும் அது மனதில் நினைவு இருந்துகொண்டே உள்ளது
அருமையான பசுமை நினைவுகள்,
மரியாதைக்குரிய ஹாஜி. ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம் நான் வியந்தது, ஒரு முறை பாடம் நடத்திக்கொண்டிருக்கும்பொழுது, பொதுவாக அவர்களுக்கு எழுதுவதில் இடது கை பழக்கமுள்ளவர், போர்டில் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது போர்டின் நடுவில் எழுத்து வரும்போது உடனே தான் நகர்ந்து செல்லாமல் சாக்பீஸை வலது கைக்கு மாற்றி எனக்கு வலதுகய்யாலும் எந்த தங்கு தடையுமின்றி எழுத தெரியம் என்று நிரூபித்தவர்,
பல கலை வேந்தரான சார் அவர்கள் நமதூரின் வியப்பின் அடையாளங்களில் ஒன்று.
நினைவுகளை அசைபோட வைத்த சகோ. ஜாகிர் அவர்களுக்கு நன்றி
விடுமுறையில் ஊர் சென்றிருந்த நான் சமீபத்தில் தான் ஜித்தா திரும்பினேன், நண்பர் அபூ அசீலா சொன்னதுபோல நமக்கு பயிற்றுவித்த ஆசான்களை பேட்டி காணும் ஆவல் எனக்கும் இருந்தது, ஆனால் சொந்த வேலை பளு, மேலும் ஆசிரியர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நேரமாதளாலும் பரஸ்பரம் நலம் விசாரிக்க மட்டுமே நேரம் இருந்தது.
பள்ளி கல்லூரி ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இம்முறை எனக்கு கிட்டியது
இணைய தளங்களில் நம்மை இணைய வைத்ததில் நமக்கு கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு.
அவர்களுக்கு நீண்ட ஆரோக்யமான வாழ்வை எல்லாம் வல்ல அருள்வானாக ஆமீன்
ஜபருல்லாஹ் .
ஜித்தா
அஸ்ஸலாமு அலைக்கும்,
பின்னூட்டமிட்ட அனைத்து சகோதரர்களுக்கு SKM ஹாஜா முகைதீன் சார் அவர்கள் தன் நன்றி தெரிவித்துள்ளார்கள், இந்த பதிவு தொடர்பாக தன் கருத்தை நம் அதிரைநிருபருக்கு எழுதியனுப்புவதாக சொல்லியுள்ளார்கள்.
இந்த அற்புதமான பதிவை நம் அதிரைநிருபரில் வெளியிட்டு எல்லோருடைய பள்ளிக்கூட பசுமை நினைவுகளை தட்டிவிட்ட சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்களுக்கு அதிரைநிருபர் குழு சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் காதிர் முஹைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாத்தியார்மார்களில் மிகவும் எளிமையாக இருந்து வந்தவர்கள் தான் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T அவர்கள்.. 'பத்தாவது படிக்கிற பையனே பல்சர் வாங்கி கேட்கும் இக்காலத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பொழுது கூட சைக்கிளில் தான் வருவார்கள்'.
அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவு ஆரம்பிக்கும் பொழுதும் வல்ல இறைவனை இப்படித்தான் புகழ்ந்து ஆரம்பம் செய்வார்கள் "அளவிலா அருளும், அலகிலா அன்பும்...." அவர்கள் தன் ஆசிரியர் பணிக்காலத்தில் யாருடனும் கடினமாக நடந்து கொண்டதை நான் அறியேன். மாணவர்கள் மட்டுமின்றி சக ஆசிரியர்களுடனும் நண்மதிப்பை பெற்றிருந்த அன்னாருக்கு அல்லாஹ் சரீர சுகத்தை தந்து மேலும் ஹயாத்தை நீளமாக்கி அவர்களின் பணி தொடர வாழ்த்தி து'ஆச்செய்கின்றேன்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
இப்பொழுது எல்லாம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மற்ற பாடங்களில் அதிகம் ஆர்வமும், அறிவும் இருப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் "மல்டி பெர்ஸ்னாலிட்டி" என்பது போல் ஒரு ஆசிரியர் எல்லாப்பாடங்களிலும் திறமையும், அறிவும் பெற்றிருந்தனர். ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை எனில் அவர் பாடத்தை மற்றொரு ஆசிரியர் நடத்தும் திறமையைப் பெற்றிருந்தனர் என்பது ஹாஜா முஹைதீன் சாரின் நினைவூட்டலிருந்து நாம் அறியலாம்.
'முன்பெல்லாம் ஆசிரியர் சைக்கிளில் வந்தால் எதிரே நாம் சைக்கிளில் சென்றாலும் அவர்கள் வருவதை அறிந்து சைக்கிளிலிருந்து மரியாதை செலுத்தும் வண்ணம் இறங்கி விட வேண்டும்/ இறங்கினோம். ஆனால் இன்றெல்லாம் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எங்கனம் மரியாதை செலுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை'.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
SKM HAJAMOHIDEEN சாரோடு பள்ளியில் எனக்கு அதிகம் அனுபவம் இல்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்களே. என் தகப்பனாரின் நெருங்கிய தோழர். அவர்களுடைய மகனும் நானும் நெருங்கிய தோழர்கள். இவ்வாறு தலைமுறை தாண்டி தொடரும் நட்பில் சார் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர்களையும் பிறருக்கு தீங்கிழைக்காத சான்றோர்களாகவே நான் கண்டதுண்டு.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் அவன் பொருந்திக்கொன்ட நல்லடியார்களாக ஆக்கி ஈருலக வெற்றியையும், ஆரோக்கியத்தையும், நின்மதியான வாழ்க்கையையும் வழங்குவானாக!
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
அன்பிற்கினியவர்களே !
முன்னாள் ஆசிரியர்ளோடு உரையாடல் வரிசையில் 86ம் வருடத்திற்கு பின்னர் படித்த மாணவர்களின் விருப்பமாக அவர்கள் சுட்டிக்காட்டிய ஆசிரியர்களோடு நிச்சயம் உரையாடி அதனையும் பதிவுக்குள் கொண்டு வந்திடுவோம்...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) - ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் M.A. B.Sc. B.T m அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஆயுளை நீளமாக்கி, நல்ல ஆரோக்கியத்தை தந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் பரக்கத்தை தாராளமாக வழங்கி நல்லருள் புரியட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நண்பர்களே!
எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர் ஆசிரியர் எஸ். கே. எம் அவர்கள் . நான் அவர்கள் நடத்திய வகுப்புகளில் மாணவனாக இருந்ததில்லை,
ஆனால் அன்றைய நாட்களில் அதிரையின்' பாலசந்தர்' என்று அழைக்கப்பட்ட அவர்கள் எழுதி இயக்கிய "" தீரன் திப்பு சுல்த்தான்"" என்ற ஒரு வானொலி நாடகத்திலும், (மாவீரன் திப்பு சுல்த்தான் அல்ல தலைப்பு S K M அவர்களுக்கே மறந்து போய் இருக்கிறது) "திறக்கட்டும் சிறைக்கதவு?" இலட்சமா? இலச்சியமா? ஆகிய மேடை நாடகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறேன்.!!
என்னுடைய முகம் அவர்களுக்கு, மறந்து போய் இருக்கலாம், S K M அவர்களின் பழைய இளமையான் முகம் இன்றும் என் கண் முன்னாள் நிற்கிறது
நாடக ஒத்திகையின் போது "என்னடா அவன் M .G .R போல் நடிக்கிறான்? சிவாஜி போல் நடிக்கணும் என்று சொல்வார்கள், ஆனால் வானொலி நாடகத்தில் நடிப்பதற்காக நாங்கள் திருச்சிராப்பள்ளி சென்ற போது எங்களை இரவில் அழைத்து சென்றது M .G .R நடித்த சினிமாவிற்குதான் படத்தின் பெயர் சிரித்து வாழவேண்டும் இதை நினைத்தால் எனக்கு இன்றும் சிரிப்புதான் வருகிறது.
அவர்கள் இயக்கிய நாடகங்களில் முன்பு எனது அண்ணனும், பிறகு நானும், அதன்பின் எனது தம்பியும் நடித்து இருக்கிறோம்
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.
அல். ஜுபைல் சிட்டி , சவுதி அரேபியா
(பழைய நினைவுகளை அசைபோட வைத்த நண்பன் ஜாகிருக்கு எனது நன்றிகள் )
அஸ்ஸலாமு அலைக்கும். நான் கருத்து சொல்ல தாமதம் நானே ஏற்படுத்திக்கொண்டது. காரணம் என்னுடையதுதான் கடைசியாக இருக்க ஆசைப்பட்டேன். விரும்பும் மனிதர்களைப் பற்றி முதன்மையாக அல்லவா கருத்து சொல்லனும் என வினவலாம். ஆனாலும் இந்த நல்ல மனிதரை,அன்பானவரை திறமைமிக்க ஆசானை எல்லாரும் சொல்வதை கேட்டு கேட்டு பூரித்துப்போய் இப்ப எழுத ஆரம்பிக்கிறேன். நான் அவருகளிடம் பயின்றகாலம் அவர் கணக்கு வாத்தியாரும், பள்ளியின் தலைமையாசிரியரும் ஆவார்கள் . எனக்கு அவர்கள் செய்த உதவிகளை எளிதில் மறக்கவியலாது. எனக்கு வக்காலத்து என் தகப்பனாரின் நண்பரும் அவார்கள். ஒரு உண்மையானவரைப்பற்றி சொல்ல தயங்கவேண்டியதில்லை.இங்கே யாரும் முகஸ்துதி செய்யாத நேர்மையான அன்பர்கள் அவர்களின் வார்தைகள் சொல்லும் ஹாஜாமொகைதீன் ஆசானின் குண, நலன்களை. நான் சொல்லவருவது ஒன்றுதான் அவர்கள் எத்தனையோ நல்லது செய்திருந்தாலும், பல திரமையை தன்னகத்தே கொண்டிருந்தாலும் அவர்கள் சொன்னபடி"நான் படித்தது நாடிமுத்து சார், ரெங்கராஜ் சார், நாகரத்தினம் சார்..இந்த மூவரிடமும். பின் அவர்களோடு சேர்ந்து ஒன்றாக பணியாற்றியது, பிறகு நான் தலைமை ஆசிரியர் ஆகும்போது அவர்களும் என்னுடன் பணியாற்றியது. இது இன்னால் வரை எனக்கு அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. இது நாலுவரியில் அடங்கும் சாதாரன வார்தையல்ல அது ஒரு வாழ் நாள் சாதனை. இது நம் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு நல் முன் உதாரணம். முயன்றால் இயலாமை,இல்லாமை செய்து அந்த இல்லாமையும் வெற்றியாய் மாறும் ஆமை, முயல் கதைபோல். முயல் ஆமையிடம் தோற்றது முயலாமையைனால்.முயன்றால் எல்லாம் கூடிவரும் என்பதை இந்த சாதனை நாயகன் மூலம் அறிந்து கொள்ளலாம்.அல்லாஹ் அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்து நீண்டனாள் வாழ அருள் புரியனும்.
பல (திரமையை )திறமை என படிக்கவும். பிழைகளுக்கு வெக்கப்படுகிறேன்.காரணம் நல் ஆசானை பற்றி எழுதும் போது ஏற்படும் பிழையாவும் . மலையே!
//பல (திரமையை )திறமை என படிக்கவும். பிழைகளுக்கு வெக்கப்படுகிறேன்.காரணம் நல் ஆசானை பற்றி எழுதும் போது ஏற்படும் பிழையாவும் . மலையே!///
அட(க்) கிரவுன்(னு): நீ வழக்கமா வருகிறமாதிரியே வா !
பின்னூட்டமென்பது பதிவுகளைத் தொடர்ந்து இடுகையில் இடுவது எல்லோருக்கும் பின்னால் வந்து இடுவது பின்னால் ஓடிவருவது !
காக்கா சொல்லிட்டேன்ல இனிமே சீக்கிரம் எழுந்திருப்பியயம், சீக்கிரமே பதிவுகளை வாசிப்பியாம், அப்படியே பட படக்கும் கைகொண்டு பட்டைய கிளப்புவியாம் என்ன சரியா !?
அதுக்காக கருணாநிதி கடுதாசி எழுதிதான் வருவேன்னு அடம் பிடிக்காதே... அவய்ங்க எல்லோரும் நம்ம ஊருக்கு வர்ராய்ங்களாம்
சலாம்
SKM - H சார் என் பள்ளி பருவத்தில் எல்லா மாணவர்களாலும் மதிக்கபடுபவர் என்றால் மிகையல்ல.பள்ளி வகுப்பறை பக்கமே வராத மாணவன் கூட சாருடைய வகுப்புக்கு வருவது ஆச்சரியம் - என்ன மந்திரமோ? ஆசிரியர் எவளவு படித்திருக்கிறார் எவளவு தெரிந்திருக்கிறார் என்பதை விட மாணவன் புரிந்து கொள்ளும் படி சொல்லி தரும் அழகே தனி அழகு தான்.சார் வீட்டு நிக்காவில் சாரை பார்த்தேன்.ஜாகிரின் பேட்டியின் மூலம் மீண்டும் பார்க்க ஆசை.இன்ஷா அல்லாஹ் விரைவில் பார்பேன்
Post a Comment