அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அவசரமான உலகம்! தனிமையில் இனிமை தேடும் தலைமுறை! அறிவுரைகளை அதிகம் விரும்பாத இளைஞர்கள்! என்று உலகம் எங்கோ போய்க்கொன்டிருக்க "திரும்பிப் பார்க்கிறேன்" என்று நம் கடந்த கால களியாட்டங்களை, இன்று வாழும் குழந்தைகளுக்குக் கிடைக்காத இயற்கையின் இன்பங்களை, சுதந்திரமாய்ச் சுற்றித் திறிந்து பெற்ற மகிழ்ச்சியை நினைவு கூறும் இவ்வேலையில் இவை அனைத்தையும் இத் தலைமுறையினருக்குக் கேள்விக் குறியாக்கிய நம் செயல்களைச் சற்று சீர்தூக்கிப் பார்த்து நாம் செம்மை படுத்திக்கொள்ளாவிட்டால், நம் இளமைப் பருவத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த அந்த இயற்கையின் சுவடு கூட இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் தன்னுடைய சந்ததிகளை பெற்றெடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். அவர்களின் மூலம் தாய் என்றும் தந்தை என்றும் தன்னுடைய நிலை உயர்வதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறான். இவ்வுலகின் அனைத்தைவிடவும் ஏன் தன்னைவிடவும் அதிகமாக அவர்களை அவன் நேசிக்கின்றான். அவர்களுக்கு காலில் முள் குத்தினால் தன் இதயத்தில் குத்தியதாய் இன்னல்படுகிறான். தான் உண்ணாமல் உடுத்தாமல் ஒறுத்தாவது அவர்களுக்கு உண்ணவும் உடுத்தவும் கொடுக்கிறான். இரவு பகல் பாராமல் உழைத்து கஞ்சன் என்ற பட்டத்தை மாத்திரம் தனதாக்கி மீதமுள்ள அனைத்தையும் தன் பிள்ளைகளுக்காக சேமித்தும் வைக்கிறான்.
இப்படி தன் பிள்ளைகளின் நலனையே சுவாசிக்கும் அவன் சிந்திக்கத் தவறியதன் காரனமாக எந்த பூமியில் தான் வாழ்கின்றானோ, எந்த பூமியில் தன் சந்ததிகளை விட்டுச் செல்ல இருக்கின்றானோ, எந்த பூமியை தவிர்த்து வேறு ஒரு வாழுமிடத்தை இந்த மனித இணத்தால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதோ அந்த பூமியை வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருப்பதை அறியாதவனாக இருக்கின்றான்!
இவ்வாறு இவ்வுலகை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் வீண் விரயத்திற்கு முக்கியப் பங்குண்டு. பேராசிரியர். N A S அவர்கள் மேற்கோல் காட்டியதைப் போல தேவை இவ்வுலகை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லவில்லை மாறாக பேராசை தான் இவ்வுலை அழிவின் பக்கம் இழுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீன் விரயம் சம்பந்தமான நமது அனுகுமுறை வேறுபடுவதும் வீன் விரயத்திற்கு ஒரு முக்கிய காரனமாக அமைகிறது. வீன் விரயம் சம்பந்தமாக ஒரு தனிப் பதிவை இறைவன் நாடினால் விரைவில் பதிகிறேன் (சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்)
தவிர, இவ்வுலகை மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் புற்று நோய், காச நோய், ஆண்மைக் குறைவு, குடல் புண், வாய் துர்நாற்றம் போன்ற ஏராளமான நோய்களை ஏற்படுத்தி அழிவின் பக்கம் கொண்டுச் செல்வதில் புகைப் பிடித்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. முஸ்லிம்களிடத்திலேயும் இத்தீய பழக்கம் பரவலாகக் காணப்படுவதால் அதைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை இங்கே பதிகிறேன்.
இவ்வுலகில் காணப்படுகிற எந்த ஒரு தீமையை எடுத்துக் கொன்டாலும் அது முஸ்லிம்களிடத்திலே மிக மிகக் குறைவான அளவே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறு மிகக் குறைவான குற்றப் பின்னனி கொன்ட முஸ்லிம்களிடத்தில் புகைப் பிடித்தல் பரவலாகக் காணப்படுவதற்கும், மேலும் எந்த உறுத்தலும் இல்லாமல் பொது இடங்களிலும் புகை பிடித்துத் திரிவதற்கும் முஸ்லிம்கள் இதை ஒரு தீமையாக உணராததே காரனம்.
எந்த ஒன்றையும் நாம் ஐயமற, தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நாம் சிந்தித்து உணர வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீய பழக்கமாகிய புகைப் பிடித்தலையும் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் அதை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அல்லாஹ் அருள் புரிவானாக!.
பொதுவாக மக்களிடத்தில் காணப்படுகிற குடி, சூதாட்டம், விபச்சாரம், என்று எதை எடுத்துக்கொன்டாலும் அது அத்தீமையில் யாரெல்லாம் நேரடியாக ஈடுபடுகிறார்களோ அவர்களையே பாதிப்பதைப் பார்க்கின்றோம். உதாரனத்திற்கு மது அருந்துவதினால் ஏற்படுகிற உடல் நலக் குறைபாடுகள் அதை அருந்துபவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் புகை பிடிப்பதனால் ஏற்படுகிற உடல் நலக் கோளாறுகள் புகை பிடிப்பவருக்கு மட்டுமல்லாது அப்புகையை சுவாசிக்க நேரிடுகிற மற்றவரையும் பாதிக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. பொது இடங்களில் புகை பிடிப்பதனால் பெண்கள், குழந்தைகள், புகைப் பழக்கமில்லாத ஆண்கள் என பொதுமக்கள் படும் இன்னல்களை வார்த்தையால் வடிக்க முடியாது. அதுவும் வீடு, அலுவலகம், உணவகம், வாகனம் போன்ற நாலா புறமும் அடைக்கப்பட்ட இடமாக இருந்தால் பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகவே இருக்கும்.
எந்த வித நன்மையும் இல்லாமல் அதே சமயம் அதிகமான அளவு தனக்கும், மற்றவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது புகைப் பழக்கமாகும். 50 காசுக்கும், ஒரு ரூபாய்க்கும் புகையிலைப் பொருள்கள் கிடைப்பதாலோ என்னவோ ஏழைகளிடத்திலும் இப்பழக்கம் தாராளமாக இருப்பதைக் காண முடிகிறது.
புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ? புகை உனக்குப் பகை என்றும், புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் என்றும் எச்சரிக்கை செய்து புகைப் பிடிப்பவர்களைப் பாதுகாக்க(?) எடுத்த சிறு முயற்சியைக் கூட அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது.
புகை பிடிப்பவர்கள் தாங்களுக்கு மட்டும் தீங்கு இழைத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர்கள் அதிகமாய் நேசிக்கும் அவர்களுடைய குழந்தைகள், மனைவி, பெற்றோர்கள், குடும்பத்தார், அவர்கள் வாழுகிற சமூகம், மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதன் மூலம் மனித இணத்திற்கு மட்டுமல்லாது இவ்வுலகிற்கும் அதில் இருக்கிற அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தாவது இத் தீமையிலிருந்து அவர்கள் விலகி வாழ வேண்டும்.
பணம் சம்பாதிப்பதற்காக புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவர்களிடத்தில் லஞ்சம் வாங்கிக்கொன்டு அதற்கான அனுமதி வழங்குகிற ஆட்சியாளர்கள், அதற்கு உடந்தையாய் இருக்கிற அதிகாரிகள், மேலும் அதை விற்பனை செய்கிற வியாபாரிகள் ஆகியோரின் செயலை தன்னுடைய மனைவி, தான் பெற்ற பிள்ளைகள், தனது பெற்றோர்கள், தான் ஈட்டிய செல்வம் ஆகிய அனைத்தையும் வீட்டினுல் வைத்து தானும் உள்ளே இருந்துகொன்டு வீட்டை தீயிட்டு எரிப்பவனில் செயலுக்கு ஒப்பாகவே கருத முடிகிறது.
மேலும் புகை பிடிப்பது ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று ஏராலமான உலமாக்கள் மார்க்கத் தீர்ப்பு வளங்கியுள்ளனர். ஹராம் என்ற நிலையில் இருக்கின்ற ஒன்றை வாங்குவதும், விற்பதும், அதற்காக கடைகளை வாடகைக்குக் கொடுப்பதும், அது தொடர்பான எந்த ஒரு செயலில் ஈடுபடுவதும் ஹராம்.
பல இலட்சங்களை முதலீடு செய்து நடத்துகிற வியாபாரத்தில் சில ஆயிரங்களுக்காக விற்கப்படுகிற புகையிலைப் பொருட்களால் இலாபத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை என்பதையும், ஹலாலான வியாபரத்தோடு புகையிலைப் பொருட்களையும் சேர்த்து விறபதனால் அதில் ஹராம் கலக்கின்ற ஆபத்து இருப்பதையும் வியாபரிகள் உணர வேண்டும்.
பொதுவாக சில நிலைகளிலே இருப்பவருடைய பிராத்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை, அவர்கள் பிராத்தித்தால் அல்லாஹ் அதை உடனே அங்கீகரிக்கிறான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. அதில் பிரயானியும் ஒருவர். ஒருமுறை மக்காவை நோக்கிப் புனிதப் பயனம் மேற்கொன்டிருந்த ஒருவரின் பிராத்தனையை அல்லாஹ் நிராகரித்துவிட்டான்! காரனம் "ஒருவருடைய உணவு, உடை, வீடு ஆகிய ஏதேனும் ஒன்று ஹராமாக இருந்தாலும் அவருடைய பிராத்தனையை அல்லாஹ் ஏற்க மாட்டான்" என்று அல்லாஹ்-வின் தூதர் தனது தோழர்களுக்கு எச்சரிக்கை செய்ததை ஹதீஸ்களிலே கானமுடிகிறது.
எனவே புகை பிடிப்பது தீமை என்பதையும், அத் தீமையில் ஏதேனும் ஒரு வகையில் சம்மந்தப்பட்டவரையும் நாளை மறுமையில் அல்லாஹ் அத் தீமையில் சம்மந்தப்பட்டதற்காகவும் அதன் மூலம் பிறருக்கு தீங்கிழைத்ததற்காகவும் விசாரிப்பான் என்பதை அஞ்சி இத் தீமையிலிருந்து விலகி வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! மேலும் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
ம'அஸ்ஸலாம்
அபு ஈஸா
18 Responses So Far:
அருமையான பதிவு - யாவரும் சிந்திக்க வேண்டியதே !
//எந்த ஒன்றையும் நாம் ஐயமற, தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நாம் சிந்தித்து உணர வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீய பழக்கமாகிய புகைப் பிடித்தலையும் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் அதை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அல்லாஹ் அருள் புரிவானாக!. //
நச் !
சகோ. அபு ஈஸா: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// வீன் விரயம் சம்பந்தமாக ஒரு தனிப் பதிவை இறைவன் நாடினால் விரைவில் பதிகிறேன் (சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்)///
சகோதரரே! அவசியம் வீண் விரயம் சம்பந்தமாக கட்டுரையை எழுதுங்கள். நான் கடன் கட்டுரையில் நிறையவே எழுதி விட்டேன். தாங்கள் பார்த்த, கேட்ட, நடந்து கொண்டு இருக்கும் வீண் விரயங்களைப்பற்றி அனுபவத்தின் அடிப்படையில் அவசியம் எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன்.
நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!
***************************************************************************
புகை பிடிப்பவர்களின் மூலம் நான் பட்ட சிரமங்களை ஒரு கட்டுரையாக எழுதி முடிவுறாமல் பாதியிலேயே நிற்கிறது. இன்ஷாஅல்லாஹ் முடித்து விடுவேன்.
"புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ? புகை உனக்குப் பகை என்றும், புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் என்றும் எச்சரிக்கை செய்து புகைப் பிடிப்பவர்களைப் பாதுகாக்க(?) எடுத்த சிறு முயற்சியைக் கூட அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது."
ஐந்து அறிவு பெற்ற விலங்கினங்கள் கூட தனக்கு வேண்டாத உணவென்றால் வெறுத்து ஒதுக்குவதை பார்க்கிறோம்.ஆனால் மனிதனோ தனக்கும்,தன் சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை அறிந்தே செய்கிறான்.
அருமையான ஆக்கம் தந்த சகோ.அபு ஈஸா வுக்கு வாழ்த்துக்கள்.
மின் அஞ்சல் வழி பெறப்பட்ட கருத்து :-
----------------------------------------
இறைவன் நமக்களித்த அற்புதமான ஒரு அங்கம் நுரையீரல் என்றால் அது மிகையல்ல, அது செய்யும் வேலையினை அறிவியல் உதவியுடன் செய்ய ஒருவன் முற்பட்டான் எனில், 20 வயதில் உழைக்கத்தொடங்கி, 80 வயது வரை அவன் சேர்த்துவைத்த சொத்துக்கள் அனைத்தும் பற்றாது.. கோடிக்கணக்கில் கடன்வாங்கிய கடனாளியாக இருப்பான். அந்த அற்புதமான வேலையினைச் செய்கிறது நுரையீரல். இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் 10 பக்க கட்டுரை எழுத வேண்டும். விலைமதிக்க முடியாத நுரையீரல் இன்று புகையினால் புகைக்கப்படுகிறது.
சாதாரணமாக சாலையில் செல்லும்போது, வாகனம் விடும் புகையினைக் கண்டவுடன், மூளை கைகளுக்கு கட்டளையிடுகிறது, அந்தப் புகை மூக்கினுள் நுழைந்துவிடாதபடி தடுத்துவிடும்படி; அப்படி இந்த system அமைக்கப்பட்டிருக்கும் போது, மனிதன், தானாகவே 3000க்கும் அதிகமான நச்சுப்பொருட்களைக் கொண்ட புகையினை தன் உடலுக்குள் அனுப்புவதனை என்ன சொல்வது? ”மனிதன் தன் கரங்களினால் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான்” வேறென்ன சொல்ல????
----------
Regards,
Rafeeq
==========
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அபுஈசா அவர்களுக்கு முதலில் மிக்க நன்றி.
மிக அருமையான தெளிவான ஆக்கம்.
தனக்கு தீங்கு விளைவித்தாலும் அடுத்தவருக்கு தீங்கு தரும் எந்த ஒரு செயலிலும் ஓர் முஃமீன் ஈடுபடமாட்டார். ஆனால் இன்று புகைப்பிடித்தல் விசயத்தில் ஏனோ பெருமாளானவர்கள் அடுத்தவருக்கும் தீங்கு என்று அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
புகைப்படித்தால் கொஞ்சம் டென்சன் குறையுதாம், புகையத்தவிர வேறு வழியே இல்லை.
புகைப்பிடிக்காதவர்கள் எல்லாம் டென்சன் இல்லாவர்களா?
//மேலும் புகை பிடிப்பது ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று ஏராலமான உலமாக்கள் மார்க்கத் தீர்ப்பு வளங்கியுள்ளனர். ஹராம் என்ற நிலையில் இருக்கின்ற ஒன்றை வாங்குவதும், விற்பதும், அதற்காக கடைகளை வாடகைக்குக் கொடுப்பதும், அது தொடர்பான எந்த ஒரு செயலில் ஈடுபடுவதும் ஹராம். //
எனக்கு தெரிந்து நம்மூரில் ஒரு சில கடைகள் பீடி சிகரெட் வியாபாரம் செய்வது கிடையாது, இன்னும் தொடர்கிறது.
//புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ?//
ஹமீது காக்கா நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்களேன்
புகைபிடிப்பவர்கள் சொல்லும் சில "ஜல்லியடிகள்'
1. அப்பதான் மூலை நல்லா வேலை செய்யுது...[ அப்படியெல்லாம் வேலை செய்து என்ன கண்டுபிடித்தது...ஒரு பென்சிலின், ஒரு ரயில் எஞ்சின், அல்லது மின்சார பல்ப்...[கொசுறுக்கேள்வி...தாமஸ் ஆல்வா எடிசனுக்கு யாருப்பா பீடி வாங்கி கொடுத்தது ]
2. வேலை அப்பதான் சீக்கிரம் ஒடும்....[ ஒடி ...எனக்கு என்ன கவலை தெரியுமா...இந்த நாற்றத்தில் உன் சுற்றமும் ஒடி ஒழிந்துவிடும்...]
3. ஒரு தம் போட்டாத்தான் சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும்..[ இது எப்ப...என்னடா இது புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க..அப்டீனா வயற்றில் சுரக்கும் அமிலம் எல்லாம் எதோ தேவையில்லாமெ ஆண்டவன் படைச்சதுன்னு சொல்றீங்களா????]
அப்படியே ஒரு எட்டு இந்த இமேஜை பார்த்துட்டு பத்த வைக்கிறதெ பற்றி யோசிக்கவும்....
http://www.google.com.my/images?hl=en&source=hp&biw=1366&bih=547&q=lungs+of+a+smoker&gbv=2&aq=3&aqi=g10&aql=&oq=lungs
அசத்தல் காக்கா : ஒரே ஒரு கேள்வி : அதென்னா விஷயமில்லாம புகையாது ?
அப்படின்னா ? புகைப்பவங்களெல்லாம் விஷயமுள்ளங்கதானே !?
//விஷயமில்லாம புகையாது//
நெருப்பு இல்லாமெ புகையாது"....இதுவெ ' ஊர் பலாய் ' பேச விசயமில்லாமெ பொகையாது ஆனது என நினைக்கிறேன்.
ஜாஹிர் காக்கா,
தங்களின் 3 சொல்லடிகளை படித்தவுடன், வேலையில் இன்று ரொம்ப வெறுப்பேத்துன என் மேலாளரின் (புகைக்கு அடிமையானவர்) மூக்கில் 3 குத்து குத்துன உணர்வு.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எந்த ஒரு நன்மையை செய்ய வேண்டுமென்றாலும், அல்லது தீமையை விட்டு விலக வேண்டுமென்றாலும் அதற்கு நிச்சயமாக அல்லாஹ்வின் நாட்டம் தேவைப்படுகிறது. நம்மை இத்தீமையிலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
மேலும் இத்தீமையில் ஈடுபட்டிருக்கிற மக்களுக்கு இது தீமை என்பதை விளங்கிக்கொள்வதற்கும், அதிலிருந்து விலகி வாழ்வதற்கும் அந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! அவர்களுக்காக நாமும் பிராத்திப்போமாக...
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
புண்பட்ட மனதை புகைவிட்டு ஆத்து என்பான் நம்மாளு......புகைவிட்டால்தான் நுரையீரலும் தாமரங்காயும் (அப்படின என்னங்க ),உடம்பும், மனமும் புண்ணாகி போகும் என்று ஏன் அந்த மனிதர்களுக்கு தெரியவில்லை...வித்தியாசமான கோணத்தில் ஒரு தடுக்கப்பட்ட விசயத்தை மார்க்க டச் கொடுத்து அழகாக எழுதப்பட்ட ஆக்கம்...வாழ்த்துக்கள் சகோ.அபு ஈஸா..உங்களின் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
அருமையான கட்டுரை. தெளிவாக எடுத்துரைத்திருக்கும் விதம் மிகவும் பாரட்டத்தக்கது.அபு ஈசாவுக்கு நல்லா பேசமட்டும்தான் வரும் என்று 2007ல் எண்ணியிருந்தேன்.
வாழ்க!
ஆமா இவ்ளோவ் பேரோட திட்டும் வதுவாப்பேரும் என்னைப்போல திருந்தி புகைப்பதை விட்டுட்டவங்களையும் பாதிக்குமா? ஏதும் பரிகாரமிருந்தா சொல்லுங்கப்பா செய்திடலாம்:)
///ஆமா இவ்ளோவ் பேரோட திட்டும் வதுவாப்பேரும் என்னைப்போல திருந்தி புகைப்பதை விட்டுட்டவங்களையும் பாதிக்குமா? //// புகைப்பிடிப்பதை நிறுத்திட்டீங்களா...வாவ் எப்ப காக்கா...ரொம்ப சந்தோசமாக இருக்கு....பரிகாரம் எதுவும் தேவையில்லை காக்கா....வெள்ளிக்கிழமை குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டுக்கு வாருங்கள் பார்டி கொண்டாடி விடுவோம்...வல்லரசின் உத்தரவு இது மறுக்க முடியாது
தாஜுதீன் சொன்னது…
//புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ?//
ஹமீது காக்கா நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்களேன்
புகை விட்ட வண்டிகள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு விட்டன அது போல் புகைபவர்களையும் ஓரம் கட்ட வேண்டும் அல்லது நாம் ஒதிங்கி கொள்ளவேண்டும்
தம்பி யாசிர், அன்பிற்கு நன்றி. ஷாருக்கை அல் ஐன் அல்லது ராஸ் அல் கைமா தீம் பார்க் அழைத்துச் செல்வதாய் ப்ராமிஸ் பண்ணியாச்சு.
காலைலயே எழுந்து "ஆல் ஆஃப் யு ஸ்டேன்ட் அப்" சொல்லிடுவான். (எல்லோரும் எழுந்திரிக்கவாம்)
தாஜுதீனிடம் நாம எல்லோரும் ஒரு டெஸெர்ட் சஃபாரி போக அரேஞ்ச் பண்ண சொல்லியிருக்கேன் (இன்க்லூடிங் பெல்லி டான்ஸ்) போலாம்ல?
மம்னூ அத் தத்ஹீன் என்று ஒரு போர்ட் கொண்டு போய்டுவோம். ( எப்படியும் பதிவுக்குள்ளே வந்துடுவோம்ல)
இத வுட்டுதான் தொலையுங்களேன், சேமிப்பும் ஆச்சு, புள்ளங்க பொஞ்சாதி சந்தோஷப்படும், ஒடம்பு ஆரோக்கியமா இருக்கும்
Post a Comment