Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேர்தல் விவாதக் களம் - 4 13

அதிரைநிருபர் பதிப்பகம் | April 04, 2011 | ,


அன்பிற்கினிய வாசக நேசங்களே :

மிக முக்கியமாக விவாதிப்பவர்களோடு தனிமனித தாக்குதல் இன்றி நளினமாக கருத்துக்களை எடுத்து வையுங்கள் மறுப்புகளிருப்பினும் வாதிடுங்கள். - வாசகர்கள் மத்தியில் தனிமனித அல்லது தரக்குறைவான வாதங்களோ அல்லது சாடலோ இருந்தால் அந்தக் கருத்துக்களை நெறியாளர் உடனடியாக நீக்கம் செய்திடுவாருங்க !

_________________________________________________________

தேர்தல் விவாதக் களம் - 4

இதுவரை முஸ்லீம்களுக்கு வாக்குறுதிகள் அறிவிப்பதில் முன்னனியில் இருப்பது யார் ?

காங்கிரஸ் !!! / தி.மு.க. !!! / அ.தி.மு.க. !!!

இவர்களில் அளித்த வாக்குறுதிகளில் குறைந்தபட்சமாவது நிறைவேற்றியிருப்பது யார் ?

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

திமுக - இதயத்திலிருந்து எழுதுவார் அப்புறம் இடமில்லையே என்றும் சொல்லிடுவார்

காங்கிரஸ் - வாக்குறுதிகள் எங்கே கிடைக்கும் என்று கேட்பவர்கள்

அ.தி.மு.க. - வாக்குறுதியை தண்ணீரில் எழுதிக் காட்டுவது அலைகள் அடித்து முடித்ததும் கரையைக் காட்டுவது அங்கே ஒதுங்கி விட்டதுன்னு !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாக்குறுதி மற்றும் சலுகைகள் அளிப்பதில் எல்லாமே முன்னனி தான் ஆனால் நிறைவேற்றுவதில்,நிறவேறுவதில் எல்லாருமே பின்னனி தான்.(தற்சமயம் கூட ஒரு அமைப்பு தேர்தலுக்கு முன்பே ஒரே நாளில் வாக்குறுதியை வாபஸ் வாங்கிக்கொண்டதே!அதன் பின்னனி தெரியலெ)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

.(தற்சமயம் கூட ஒரு அமைப்பு தேர்தலுக்கு முன்பே ஒரே நாளில் வாக்குறுதியை வாபஸ் வாங்கிக்கொண்டதே!அதன் பின்னனி தெரியலெ)/// - தனி மின் அஞ்சல் கிடைத்திருக்கனுமே !

தேர்தல் கமிஷனுக்கு கொடுக்க வேண்டிய கமிஷனைக் கொடுக்காததினால் வாபஸ் வாங்கிட்டாங்களாம் !

அதிரைநிருபர் said...

//.(தற்சமயம் கூட ஒரு அமைப்பு தேர்தலுக்கு முன்பே ஒரே நாளில் வாக்குறுதியை வாபஸ் வாங்கிக்கொண்டதே!அதன் பின்னனி தெரியலெ) //

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அரசியல் ஆலோசகர்களின் அறிவுரைப்படியும், சிரியஸான மேட்டர்ல காமெடி வேண்டாம் என்று நட்பு வட்டாரங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க
தேர்தல் அறிக்கை 2011 பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் வலுவான அறிக்கையுடன் வேறு ஒரு தலைப்பில் வெளிவரும். மற்றபடி வேறு எந்த காரணங்களுமில்லை.

Yasir said...

காங்கிரஸ்

கொடுத்தவாக்குறுதிகள் மலையளவு நிறைவேற்றப்போவது கடுகைவிட சிறிதளவு பெரிய மே(மை)க்ரோஸ்கோப் வச்சிதான் தேடனும் MLA க்களையும்,வாக்குறுதிகளையும்

திமுக

தேர்தலுக்குமுன் கணக்கில்லா வாக்குறுதிகள்,தேர்தலுக்குபின் அவர் இதயத்தில் சிறிது இடமும்,பாக்கியை கடலிலும் தூக்கியெறிவார்..திறமை உள்ளவர்கள் நீந்தி பிடித்து கொள்ள வேண்டியதுதான்

அ.இ.தி.மு.க

தண்ணியடித்தவன் வாக்குறுதிகள் தான்...தெளிய தெளிய மறந்து விடும் என்ன சொன்னோம் என்பது..ஆட்சி வந்தவுடன் சோவிடம் ஆசி வாங்கி நமக்கு பட்டையை போட்டுவிடுவார்....

ஆக இதனால் சகலமானவர்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முஸ்ஸிம்கள அனைத்து கட்சிகளுக்கும் கருவேப்பிலை போலதான் வாசனை போனதும் தூங்கி எறிந்து விடுவார்கள் அதன் பயன் தெரியாமல்

அபூ சுஹைமா said...

//இதுவரை முஸ்லீம்களுக்கு வாக்குறுதிகள் / சலுகைகள் அறிவிப்பதில் முன்னனியில் இருப்பது யார் ?

காங்கிரஸ் !!! / தி.மு.க. !!! / அ.தி.மு.க. !!!

இவர்களில் அளித்த வாக்குறுதிகளில் குறைந்தபட்சமாவது நிறைவேற்றியிருப்பது யார் ?//

இவைதான் கேள்வி எனில் / கேள்விக்குப் பதில்தான் தேவை; விமர்சனம் அல்ல எனில், இம்மூன்று கட்சிகளில் திமுகதான் என தாராளமாகக் கூறலாம்.

1999ஆம் ஆண்டு தமுமுகவின் வாழ்வுரிமை மாநாட்டில் "முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன்" என்று வாக்களித்த அதிமுக தலைமை, 2001ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் "தலித் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு" என்று கூறியது. தமுமுகவினர் பதறியடித்துக் கொண்டு கேட்டபோது, அச்சுப் பிழை என்றார்கள். அவர்களது பதவிக்காலத்தில் இட ஒதுக்கீடு குறித்து ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அதிமுக தலைமை வாய் திறந்து கருத்து கூறியது. ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததுதான் அந்தக் கருத்து.

அதுபோன்றே மதமாற்றத் தடைச் சட்டம் தொடர்பாகவும். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோல்வியைத் தொடர்ந்து அவசர சட்டம் மூலம் ரத்து செய்த அதிமுக தலைமை, நீண்ட காலத்திற்கு அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விரும்பவே இல்லை.

மாறாக, இட ஒதுக்கீடு குறித்தும் மதமாற்றத் தடைச் சட்டம் குறித்தும் வாக்களித்த திமுக தலைமை - நமது இயக்கங்களின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தேனும் - இரண்டையும் நிறைவேற்றியது.

குறிப்பு: 1. கேள்வியின் தொடக்கத்தில் சலுகைகள், என்று குறிப்பிட்டிருப்பதை மாற்றவும். அவர்கள் தருவது சலுகைகள் அன்று. எவரும் நமக்குச் சலுகைகள் தரவேண்டாம். நமது உரிமைகளை மறுக்காமல் இருந்தால் போதும்.

2. பார்ப்பணரைத் தலைமையாகக் கொண்ட அதிமுகவையும் மற்ற கட்சிகளையும் ஒப்பிடுவதே தவறு என்று நான் கருதுகிறேன். காரணம் பார்ப்பணர் தங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. அவர்கள் விரும்புவது போன்றுதான் நாம் மாறவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். அண்மைய வைகோவின் நிலை இதனைத் தெளிவாக வெளிக் கொணர்ந்தது. இதன் பின்னரும் அதிமுக தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இவைதான் கேள்வி எனில் / கேள்விக்குப் பதில்தான் தேவை; விமர்சனம் அல்ல //

தம்பி அபுசுமைஹா: அவைகள் விவாதத்திற்கான முன்னிருத்தும் கேள்வியே விமர்சனத்திற்கு அல்ல ! இது இவர்களின் செய்ய ம(றந்)றுத்த மன்னிக்க முடியாத துரோகத்தை இளைய சமுதாயம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

நிற்க, தாங்கள் அலசியிருக்கும் விதம் எவரும் ஏற்றுக் கொள்ளக்க் கூடியதே...

// அவர்கள் தருவது சலுகைகள் அன்று. எவரும் நமக்குச் சலுகைகள் தரவேண்டாம். நமது உரிமைகளை மறுக்காமல் இருந்தால் போதும். //

மேலே திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மன்னிக்கவும், "அபூ சுஹைமா" என்பதை "அபுசுமைஹா" என்று மேலே எழுதிவிட்டேன் சரியாக வாசிச்சுடுங்களேன் Please !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இங்கு வாக்குறுதி கொடுப்பதில் முன்னனியில் இருப்பது இந்த மூன்று கட்சிகளுமே, அவற்றை நிறைவேற்றாமல் இருப்பதில் முன்னனியில் இருப்பது காங்கிரஸும், அதிமுகவும் தான்.

திமுக சொல்லுவதையும் , சொல்லாததையும் செய்யும் கட்சியாயிற்றே. முஸ்லீம்களுக்கு நண்பன் என்று சொல்லியே திமுக முஸ்லீம்களை அரசியலில் வளர்ச்சியடையவிடவில்லை என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

மொத்தத்தில் அனைவருமே ஒரே தரம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பார்ப்பணரைத் தலைமையாகக் கொண்ட அதிமுகவையும் மற்ற கட்சிகளையும் ஒப்பிடுவதே தவறு என்று நான் கருதுகிறேன். காரணம் பார்ப்பணர் தங்களை ஒருபோதும் மாற்றிக் கொள்வதில்லை. அவர்கள் விரும்புவது போன்றுதான் நாம் மாறவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்.//

அன்பு சகோதரர் அபுசுமையா,

மிகச்சரியான வாதம், எந்த ஒரு தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியாகட்டும் ஒரு பார்பணர் அதில் வாதாடும் போது அவர் மற்றவரின் கருத்தை அமோதித்தோ, அல்லது சாதகமாகவோ பேசியதை நான் கேட்டதில்லை. பார்பண ஆதிக்கத்தில் உள்ள மீடியாக்களும் அக்கருத்தையே தீர்வாகவும் சொல்லிவிடுகிறது. இதில் NDTV நிகழ்ச்சிகள் நிறைய சான்று.

அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ள முஸ்லீம் கட்சிகள் முல்லின் மேல் நடக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவார்கள் என்றே நம்புகிறோம்.

எல்லாம் தேர்தல் முடிந்தவுடம் தெரிந்துவிடும் ஒரிஜினல் முகங்கள்

அப்துல்மாலிக் said...

இந்த அரசியல்வாதிகளால் வாக்குறுதி என்ற வார்த்தைக்கே மதிபில்லாமல் போய்டுச்சி, அப்புறம் இதபத்தி பேசி என்னாயிருக்கு

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வாக்குறுதி கொடுப்பதில்எப்போதும் முன் அணியில் இருப்பது தி மு க தான் காரணம்
பேச்சில் மக்களை ஏமாற்ற கூடிய வல்லமை கருணாநிதிக்கு "கை" வந்த கலை அது கூட "கை"யும் கூட்டு சேர்ந்து "கை"குளிக்கிகொண்டுள்ளது

sabeer.abushahruk said...

எந்த கட்சியும் நமக்கு நல்லது செய்யப் போவதில்லை. அதனால்தான், நம்மடவர் எங்கெல்லாம் நிற்கிறாரோ அவரை நாம் ஆதரிக்க வேண்டும்.

அதன்பிறகு நம் வாக்குறுதிகளை நாமே நிறைவேற்றிக் கொள்வோம்.

அதுவரை, வாக்குறுதிகளை கொஞ்சம்கூட நம்பாமல் குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி ஆதரிப்போம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு