Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடையில் குளிர வைக்கும் பழவர்க்கங்களும், கிழங்கு வகைகளும் -‍‍ பழைய நினைவுகளிலிருந்து.... 53

அதிரைநிருபர் | April 25, 2011 | ,

1. நொங்கு:

ந‌ம‌தூர் சுற்று வ‌ட்டார‌ கிராம‌ப்புற‌ங்க‌ளிலிருந்து கோடைகால‌த்தை வ‌ர‌வேற்கும் முக‌மாக‌ ஊரின் முக்கிய‌ ச‌ந்து, முச்ச‌ந்திக‌ளில் வ‌ந்திறங்கி குவிந்து கிடக்கும். அதை அழ‌காக‌ சீவி அத‌னுள் இருக்கும் க‌ண்க‌ளை தோண்டி எடுத்து ப‌னைம‌ட்டையில் வைத்து விற்ப‌ர். அதை பார்ப்ப‌வ‌ர்க‌ளெல்லாம் ஆர்வ‌த்துட‌ன் வாங்கிச்சென்று வீட்டின் பெண்க‌ளிட‌ம் கொண்டு வ‌ந்து ஒப்ப‌டைப்ப‌ர். அவ‌ர்க‌ளும் அதை செவ்வ‌னே சுத்த‌ம் செய்து அவ‌ற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து பால் ம‌ற்றும் ப‌ன்னீருட‌ன் கொஞ்ச‌ம் சீனியும் சேர்த்து அப்ப‌டியே குளிர் சாத‌ன்ப்பெட்டியில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்து கிளாஸில் கொடுக்க‌ நாம் குடித்த‌ பின் உள்ளே சென்ற‌ நுங்கு கோடை உஸ்ன‌த்தையும், தாகத்தையும் எங்கே? என‌ கேட்க‌ வைத்து விடும். (அத‌ன் பின் நொங்கு வ‌ண்டி மூல‌ம் தொங்கு,தொங்கு என்று தெருவில் ஓடி விளையாண்டது மீதி).

2. விளாம்ப‌ழம்:

இப்பொழுதெல்லாம் க‌ண்மாசியாக் காணாம‌ல் போய் விட்டது சிறு வயதில் சகோ. தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது.

ஆமை போன்று க‌டின‌ மேல் தோலை உடைய‌ இந்த‌ ப‌ழ‌ம் அதை உடைத்து ச‌ர்க்க‌ரை/வெல்லம் (க‌ச்சாக்க‌டையில் வாங்கிய) வேறு கடையில் வாங்கினால் சர்க்கரை செல்லாதா? என யாரோ முணுமுணுப்பது போல் தெரிகிறது)பக்குவமாக‌ சேர்த்து சாப்பிட்டால் ந‌ன்கு வ‌யிறும் நிறையும் உள்ள‌மும் குளிரும் இனிமையாய்.

3. எல‌ந்தைப்ப‌ழம்:

இது ந‌ன்கு ப‌ழுத்து புழுவுட‌ன் வ‌ந்தாலும் ச‌ரி அல்ல‌து இன்னும் ச‌ரி வ‌ர‌ ப‌ழுக்காம‌ல் செங்காயாக‌ வ‌ந்தாலும் ச‌ரி ஒரு க‌ட்டு க‌ட்டாம‌ல் விடுவ‌தில்லை. உப்பு போட்டு அல்ல‌து பொடி சேர்த்து சாப்பிட்டாலும் சும்மா வெறும‌னே சாப்பிட்டாலும் ந‌ன்றாக‌ சுவை த‌ரும். வயது வித்தியாசமின்றி வாயில் எச்சிலை ஊற்றெடுக்க‌ வைக்கும். (இத‌ன் ம‌றுபிற‌வி தான் க‌டையில் விற்கும் எல‌ந்த‌வ‌டை பார்க்க‌ க‌ண்ண‌ங்க‌ரே என்று இருந்தாலும் அத‌ன் சுத்த‌ம்,ப‌த்த‌ம் பார்க்காம‌ல் திண்டால் தான் அன்றைய‌ பொழுதே இனிமையாக‌ க‌ழியும் என்ப‌து அறிவிக்க‌ப்ப‌டாத ஊர் வ‌ழ‌க்க‌மாக‌ இருந்த‌து அந்த‌ கால‌த்தில்)

4. வெள்ள‌ரிப்ப‌ழ‌ம்:

ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் ப‌னை ம‌ட்டையை போர்வையாய் போர்த்தி வ‌ந்திற‌ங்கும். அவற்றை வாங்கி சிறு துண்டுகளாகவோ அல்லது மிக்ஸ்யில் நன்கு அரைத்து ஜூஸ் செய்து குளிரூட்டி அருந்தினாலும் மிகவும் இனிமையாகவும் தாகம் தீர்க்கும் தாரக மந்திரமாகத்திகழும். உள்ளிருக்கும் சிறு கொட்டைக‌ளை எடுத்து வெயிலில் காய‌ வைப்ப‌ர் வீட்டுப்பெண்க‌ள். அத‌ன் ப‌ருப்பு தான் இன்றைய‌ இனிப்பு ப‌ண்ட‌ங்க‌ளுக்கு மேருகூட்ட மேல்பூச்சாக‌ ஃபெர் அண்ட் ல‌வ்லி கிரீம் போல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

5. நாவ‌ப்ப‌ழ‌ம்:
ந‌ன்கு ப‌ழுத்த‌ப்ப‌ழ‌ம் இனிப்பிட்டு சாப்பிட்டாலும் அல்ல‌து உப்பிட்டு சாப்பிட்டாலும் சாப்பிடுப‌வ‌ரின் எதிர்பார்ப்பிற்கேற்ற‌ சுவையைத்தாராள‌மாகத்த‌ரும். இத‌ன் க‌ச‌ப்பு மிகுந்த‌ கொட்டையை அரைத்து உட்கொள்வது ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ருந்தாக‌ சொல்வ‌ர்.

6. ப‌ன‌ம்ப‌ழ‌ம்:

இள‌ நுங்கின் முதுமை கால‌ம் தான் இந்த‌ ப‌ன‌ம் ப‌ழ‌ம். இதை அடுப்பில் சுட்டு இனிப்பான அத‌ன் நார் நாவின் சுவைக்கு தார் ரோடு போடும். இதை உடைக‌ளில் ப‌டாம‌ல் சாப்பிட்டால் அது ஒரு சாத‌னையாக‌த்தான் க‌ருத‌ப்ப‌டும் அக்கால‌த்தில். சாப்பிடும் பொழுது வாயை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ல் வ‌ர்ண‌ம் பூசி (ஒலப்பி) விட்டு விடும்.

7. மாங்காய்/மாம்ப‌ழ‌ம்:

ஒட்டு அல்ல‌து நாட்டு மாங்காய்க‌ள் வ‌யோதிக‌ம் அடைந்து ந‌ம‌க்கு ந‌ல்ல‌ சுவை த‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளாய் வகை, வ‌கையான‌ ர‌க‌ங்க‌ளில் குவிந்து கிடைக்கும். விலையும் அப்ப‌டித்தான். ஒரு கால‌த்தில் தெருவுக்கு வ‌ரும் மாம்ப‌ழ‌ங்க‌ளை அப்ப‌டியே வெட்டாம‌ல் ந‌ன்றாக் கையில் வைத்து ப‌க்குவ‌மாக‌ அமுக்கி அத‌ன் சாரு (ப‌ய‌ப்ப‌டாதீர்க‌ள் ப‌ள்ளிக்கூட‌ சார் இல்லை) வெளியில் வ‌ராம‌ல் சாப்பிடும் பொழுது சில‌ர் அத‌ன் கொட்டையைக்கூட‌ விட்டு வைக்காம‌ல் ச‌ப்பி சாப்பிடும் பொழுது அத‌ற்குள் என்றோ சென்று செட்டிலான‌ புழுவும் சேர்ந்தே வாயிக்குள் சென்று விடும். (அப்புற‌ம் என்ன? வ‌யிற்று வ‌லி என்று மீராசா டாக்ட‌ரிட‌ம் செல்ல வேண்டியது தான். தஸ்தகீர் ஒரு காலத்தில் செட்டித்தோப்பில் கல்லால் மாங்காய் அடித்து தின்ற பழக்கம் ஏதும் உண்டா? இன்று கலிஃபோர்னியாவில் ஆப்பிள் அடித்து திண்க ஏதேனும் வசதி உண்டா?)

8. நெல்லிக்காய்:

காலமெல்லாம் காயாகத்தான் இருக்கும். இத‌ன் ப‌ழ‌ம் எங்கு கிடைக்கும் என்று தெரிய‌வில்லை.

பெரு நெல்லிக்காய், சிறு(அரு)நெல்லிக்காய் என்று இர‌ண்டு வ‌கைக‌ளாக‌ கிடைக்கும். ஊறுகாய் போடுவ‌த‌ற்கும், சும்மா உப்பு/பொடி போட்டு சாப்பிடுவ‌த‌ற்கும் சுவையாக‌ இருக்கும். யானை வ‌ரும் பின்னே ம‌ணியோசை வ‌ரும் முன்னே என்ப‌து போல் நெல்லிக்காய் என்றாலே வாயில் எச்சில் ஊறி முன்பே வ‌ந்து நிற்கும். (பெண்க‌ளுக்கு ரொம்ப‌ ஒஹ‌ப்பான‌ க‌னி)

9. ப‌ன‌ங்கிழ‌ங்கு:

(நுங்கின் தாய‌ புள்ளெ அல்ல‌து ஒக்க‌ப்பொற‌ந்த‌ ஒட‌ன் பொற‌ப்பு என்றும் சொல்லலாம்) ந‌ன்றாக அவித்த‌ கிழ‌ங்கை வாங்கி வ‌ந்து அத‌ன் நாரை நீக்கி விட்டு (குருத்து எடுத்து திண்ட‌து போக‌) சுர‌ண்டி அத்துட‌ன் கொஞ்ச‌ம் தேங்காய்ப்பூ சேர்த்து சீனியும் போட்டு சாப்பிட்டால் சுகமான சுவைக்கு சொல்ல‌வா வேண்டும்? (எல்லாத்துலையும் சீனியைப்போட்டு சாப்பிட்டா சீக்கிர‌ம் இனிப்பு நீரு வ‌ராதா? என்று யாரோ முண‌ங்குவ‌து போல் தெரிகிற‌து)

10. ம‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:

ந‌ல்ல‌ ம‌ல்லிகைப்பூ போன்ற‌ நிற‌த்தில் அவித்து எடுக்க‌ப்ப‌டும் கிழ‌ங்கு சும்மா சாப்பிட்டாலும் பொடி வைத்து சாப்பிட்டாலும் நன்றாக‌த்தான் இருக்கும். இது ப‌ரினாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்று இன்று க‌டைக‌ளில் சுவை மிகு சிஃப்ஸாக‌ கிடைக்கிற‌து.

11. கொட்டிக்கிழ‌ங்கு:

எங்கு தான் கொட்டிக்கிட‌க்குமோ இந்த‌ கிழ‌ங்கு? பார்க்க‌ க‌ருமை நிற‌மாய் ஒரு வ‌டிவ‌மே இல்லாம‌ல் இருக்கும். ஆனால் அத‌ன் மேல் தோலை சுத்த‌ம் செய்து சாப்பிட்டால் ந‌ல்ல‌ ந‌றும‌ண‌த்துட‌ன் சுவையாக‌ இருக்கும். (சில‌ நேர‌ங்க‌ளில் தோல் உறிக்க‌ மாய்ச்ச‌ல் ப‌ட்டு அப்ப‌டியே திண்டு தீர்த்த‌ நினைவுக‌ளும் உண்டு)

12. ச‌க்க‌ர‌வ‌ள்ளிக்கிழ‌ங்கு:

இத‌ன் மேல் தோல் சிவ‌ந்து மிக‌வும் மிருதுவாக‌ இருக்கும். இறைவ‌னால் இத‌ற்கு இய‌ற்கையில் இனிப்பு சேர்க்க‌ப்ப‌ட்டே வ‌ரும். ந‌ன்றாக‌ இருக்கும்.

13. பலாப்ப‌ழ‌ம்:

இதை பக்குவமாக உறித்தெடுப்ப‌து என்ப‌து ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் செல்லாம‌ல் ப‌டிக்கும் பெரும் பாட‌ம். போர்க்களம் செல்ல ஆயத்தமாகும் படை வீரன் போல் இதை வெட்டும் முன்னர் பல தயாரிப்புகள் செய்ய வேண்டும். தின்ப‌த‌ற்கு இனிமையாக‌வும் மேலும் திண்ண‌‌ தூண்டும் முக்க‌னிக‌ளில் ஒரு ந‌ல்ல‌ சுவைமிக்க‌ ப‌ழ‌ம். இத‌ன் கொட்டையை அடுப்பில் இட்டு சுட்டு சாப்பிட்டால் அதுவும் இனிமையாக‌ இருக்கும். கீரை ஆக்கும் பொழுதும் வீட்டுப்பெண்க‌ள் இதை சேர்த்துக்கொள்வ‌ர். (கூடுத‌ல் சுவைக்கு ராலு போட‌ ம‌ற‌ந்துடாதியெ...)

14. ப‌த‌னீர்:

இதுவும் நுங்கின் உட‌ன் பிற‌ப்பு தான். பனை மரத்தின் சுவை மிக்க நீர். இது இப்பொழுது வ‌ர‌த்து குறைந்து விட்ட‌து.

15. இள‌நீர்:

இது வீட்டுப்பிராணி என்று சொல்வ‌து போல் ந‌ம்மூரில் எல்லா வீடுக‌ளிலும் ப‌ரவலாக தென்னை மரங்கள் இருக்கும். உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும் இய‌ற்கைப்பான‌ம். இதையும் ம‌க்க‌ள் சுவையைக்கூட்ட‌ சில‌ எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்து ப‌ருகுவ‌ர் (அதான் ப‌ன்னீர் ம‌ற்றும் சீனி சேர்த்த‌ல்).

16. தர்பூசணிபபழம்:

சிவந்த நல்ல பழம் அப்படியே சாப்பிட்டாலும் ஐஸ் போட்டு சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும் பருக,பருக கேட்கும். இத‌னை த‌ட்டிப்பார்த்து ந‌ல்ல‌ ப‌ழ‌த்தை தெரிவு செய்யும் கலையை கற்க‌ ந‌ம் ம‌க்க‌ள் எந்த‌ கோர்ஸ் ப‌டித்தார்க‌ள்? எங்கு ப‌டித்தார்க‌ள்? என்று தெரிய‌வில்லை.

17. நில‌க்க‌டலை:

இதை அவித்து சாப்பிட்டாலும், வ‌றுத்து சாப்பிட்டாலும் ந‌ல்ல‌ சுவையைத்த‌ரும். வ‌றுத்து சாப்பிடுவ‌தை விட‌ அவித்து சாப்பிடுவ‌து ந‌ல்ல‌து என்று சொல்வ‌ர். இத‌ன் ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி தான் க‌ட‌லை மிட்டாய்.

இன்னும் ப‌ல‌ காய், க‌னிக‌ள் கோடை கால‌த்தை குளிர்விக்க‌ இறைவ‌னால் இலவசமாக இப்பாருலகிற்கு அருள‌ப்ப‌ட்ட‌வைக‌ள் ஏராள‌ம் உண்டு. இதை எண்ணி என்றும் இறைவ‌னைப்புக‌ழ்வோம்.

ப‌ழைய‌ நினைவுக‌ளிலிருந்து எதையாவ‌து எழுத‌ வேண்டும் என்று எண்ணி இதை எழுதியுள்ளேன். இதை ப‌டித்து பின்னூட்ட‌ம் இடுப‌வ‌ர்க‌ள் தான் இத‌ற்கு சரியான‌ மார்க் போட‌ வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு க‌ட்டுரையில் ச‌ந்திப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

53 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட... !

கோடையிலும் குளிரா !?

மக்களே சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்க !

MSM(n)க்கு எது ஞாபகம் இருக்கோ இல்லையோ அந்த விளாங்கா மரம் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்...

Meerashah Rafia said...

ஆஹா.. கொன்னுட்டீங்க.

தினம் பேரித்தம் பழத்தின் நிழலில் குளிர்காயும் எனக்கு

நொங்கு என்ற வார்த்தையை படித்தபோது

ஜிவ்வென்று என் தலையில் ஒருவகை கிறுகிறுப்பு..


கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை. காரணம்
கண்ணுக்கு முன் எழுத்துக்கள் தெரியவில்லை
அந்த பணை மரத்தின் பழைய நினைவுகள்தான் தெரிகிறது..


msm(mr)

sabeer.abushahruk said...

கட்டுரையும் படங்களும் கலக்கல். எம் எஸ் எம்: ஹோம்ஸிக் வரவழைப்பதில் உங்கள் பாங்கு அலாதியானது. இந்தமுறை ஹோம்ஸிக்கோடு வாயில் எச்சிலும்  வரவழைத்துவிட்டீர்கள்.

வெள்ளெரிப்பழம் குறித்துச் சொன்ன நீங்கள் வெள்ளெரிப்பிஞ்சு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்?  பஸ் பிரயாணங்களின்போது ஜன்னல்வழி நீட்டப்படும் வெள்ளெரிப்பிஞ்சு பார்க்காமல் விரல்கள் பார்த்திருப்பீர்களோவென்ற அச்சம் எழுகிறதே?:-)

மேலும் நுங்கு பற்றிச்சொல்லுகையில் சோம்பலான உண்ணும் முறை சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியே விரலைவிட்டுத் தோண்டி உண்ட சுகம் சொல்லப்படாததற்கு என்ன காரணம்?:-)

இன்னும், நீர்மோர், கீற்றுக்கொட்டகை, பனையோலை விசிறி, கயித்துக்கட்டில், பட்டம், ஹவுலுத்தண்ணி, ஜுமாப்பள்ளித் தரை, சாலியாக் கஞ்சி, பிசின் உம்மாசலிமாக்கொட்டை போட்ட சர்பத், கடப்பாசி போன்றவைக் கொண்டு அலங்கரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பழங்காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டீர் நைனா!
இப்ப அது கிடைக்காததால் காய்கிறேன்.கனியிருப்ப காய்கவர்தல் சரியாகாதுஆனாலும்
அந்த கனி இனி கிடைக்காதது எட்டிக்காயாக கசப்பது என்னவோ உண்மைதான்.
செட்டித்தோப்பில் மாங்காய் அடித்த பழக்கம் இல்லை காரணம் என் வீட்டி
கொள்ளையிலேயே மாங்காய், கொய்யா, ஆத்தாபழம், நெல்லி, பெரிய
நாவல் மரம் இன்னும் கொடுக்காபுளி, சப்போட்டா எல்லாம் இருந்தது. இப்ப
அந்த மரமெல்லாம் போய் மனைகள் வந்துவிட்டது.மனை வந்த வினை அப்புறம் இதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை. ஆனாலும் இங்கே ப(ல)ழவகைகள் உண்டு நாங்களும் உண்டு வாழ்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

Shameed said...

பழைய நினைவுகளை "நெய்" விட்டு கிளறுவதில் நெய்னா விற்கு நிகர் நெய்னாவே!

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//மேலும் நுங்கு பற்றிச்சொல்லுகையில் சோம்பலான உண்ணும் முறை சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியே விரலைவிட்டுத் தோண்டி உண்ட சுகம் சொல்லப்படாததற்கு என்ன காரணம்?:-)
//

விரலைவிட்டுத்தோண்டி நொங்கு குடிக்கும் ஆடியோ கிளிப்பை தாஜுதீன் தேடி எடுக்க சிரமப்படவேண்டி இருக்கும் என்பதால் விரல் நொங்கு மேட்டரை நெய்னா தவிர்த்து இருக்கலாம்!

Shameed said...

யார் யாருக்கு பட்டியலிட்டிருக்கும் பழ/காய் வகைகளைச் பிடிக்கும் என்று சொன்னால் அதை வைத்தே உங்கள் குணா அதிசயங்களை நம்ம அபு இப்ராகிம் புட்டு புட்டு வைத்து விடுவார் (கேரளத்து குலா புட்டு அல்ல)

எனக்கு பிடித்தது நொங்கும் கொட்டிக்கிழ‌ங்கும் (பெட்டி கிழங்கு)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"பழங்"காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டீர் ///

கனிகள் பக்கம் செல்வதில்லை காரணம் கனி"னி"யும் பக்கத்திலிருப்பதால்...

சொல்லப்பட்ட பழமோ/காயோ இதில் எந்த வகைகளையும் ருசித்ததில்லை இளநீரையும் (வருத்தக்)கடலையையும் தவிர..

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//சொல்லப்பட்ட பழமோ/காயோ இதில் எந்த வகைகளையும் ருசித்ததில்லை இளநீரையும் (வருத்தக்)கடலையையும் தவிர//


என்ன இதல்லாம் சாப்பிட்டதில்லைன்னு சொல்லி எங்களை வறுத்து எடுத்துடீங்க!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// Shameed சொன்னது…
எனக்கு பிடித்தது நொங்கும் கொட்டிக்கிழ‌ங்கும் (பெட்டி கிழங்கு) ///

நொங்கெடுப்பதில் கிங்க்(கே) இப்படிச் சொன்னா இந்தப் பெட்டி(புள்ள) என் செய்வேன் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//என்ன இதல்லாம் சாப்பிட்டதில்லைன்னு சொல்லி எங்களை வறுத்து எடுத்துடீங்க!!! ///

இதற்கென ஒரு பதிவு போடனும் ! :)))

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழமை படத்தோடு பட்டியலிட்ட பக்குவம் மிக அருமை
இதற்கு வேறெ மார்க் போட்டு மேட்டருக்கு முடிவுரை காணாமல் தொடர்ந்து பழையதை கிளருவதையே விரும்புகிறோம்.
தாஜுதீன் வீட்டு கொள்ளையில் விளாம்பழம் காய்த்து தொங்கியதோடு எழுதி விட்டு, தெரியாமெ பறித்தது பற்றி சென்சார் செய்யப்பட்டு இருக்கிறதே,
பதிப்பாளரின் சதியாக இருக்குமோ!

Yasir said...

சகோ.நெய்னா அள்ளி கொடுத்த கோடை கொடைகளை ஒருசேர உண்டு விட்டதால் கொஞ்சம் உண்ட களைப்பு உள்ளது....சிறிது நேர இடைவெளியில் சந்திப்போம்

Shameed said...

Yasir சொன்னது…

//சகோ.நெய்னா அள்ளி கொடுத்த கோடை கொடைகளை ஒருசேர உண்டு விட்டதால் கொஞ்சம் உண்ட களைப்பு உள்ளது....சிறிது நேர இடைவெளியில் சந்திப்போம் //


இடைவெளி நீண்டதாக இருந்தால் கடலை போடுதல்

இடைவெளி சிறிதாக இருதால் கடலை கொறித்தல் என்று ஒரு குறும்பு சொல் உண்டு

அப்துல்மாலிக் said...

கடந்த மாதம் ஊருலே பலாப்பழம் சாப்பிட்டேன், மற்றவையெல்லாம் நிச்சயம் மிஸ்பண்ணுகிறோம். நொங்கு ஒருபெரிய தாகத்தை தனிக்கும் அருமருந்து. அருமை நெய்னா

ZAKIR HUSSAIN said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//சொல்லப்பட்ட பழமோ/காயோ இதில் எந்த வகைகளையும் ருசித்ததில்லை இளநீரையும் (வருத்தக்)கடலையையும் தவிர//


இது அநியாயம் அடுத்து உங்கள் கமென்ட்ஸ்..' டமில் குஞ்சம் குஞ்சம் தெர்யும்னு' சொல்லிடாதீங்க

ZAKIR HUSSAIN said...

சகோதரர் நெய்னாவின் எழுத்தும் படம் செலக்ஸனும் சூப்பர்.
இந்த பெரிய நெல்லிக்காய் இங்கு [ மலேசியாவில் ] மலாக்காவில் கிடைக்கும்.
மலாக்கா எனும் ஊர் கேள்விப்பட்டதும் நமது ஊரில் பிறந்து மலாக்காவில் பிரபலமான ரெஸ்டாரன்ட் வைத்து நடத்திய " மலாக்கா மஜீது காக்கா' அவர்கள் ஞாபகம் எல்லோருக்கும் இருக்கும்.

ஒரு தகவல் இன்று மலேசியாவின் 'அரசாங்க நிர்வாக தலைநகராக இருக்கும் Administrative Capital -Putra Jaya'புத்ரா ஜயா" எனும் மாநிலத்தின் தலைமை காவல் துறை அதிகாரி மலாக்கா மஜீது காக்காவின் மகன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// இது அநியாயம் அடுத்து ///

ஆமா காக்கா, மெய்யே.... அதுக்குன்னு டமில் டெடிரியாதுன்னு சொல்லம்மாட்டேனே ! :)

Ahamed irshad said...

ஆஹா இந்த‌ மாதிரி ப‌ட‌மெல்லாம் போட்டு...ஐ.டி.ஐ'ல‌ ஃபுட்பால் பார்க்க‌ போற‌ வ‌ழில‌ ஸ்கூல் ஆச்சியிட‌ம் மாங்காய் கீத்து வாங்குன‌ ஞாப‌க‌ம் ப்ளாக்க‌ர் மேல‌ ச‌த்திய‌மா வ‌ந்தது :)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா முகம்மது.

பழைய நினைவுகளை கிளரிவிட்டுட்டியலே... வார்த்தையே வரமாட்டேங்குது... காரணம் எல்லா பழம் கிழங்கு வகைகளும் எனக்கு மிக மிக பிடித்தது. உங்கள் பதிவை படித்ததுமே எனக்குள் இருந்த பசி இன்று முழுவது பரந்துவிட்டது.

தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்.. அடிக்கடி, ஏர்டிக்கெட் இல்லாமல் அதிரைக்கு அழைத்துச்சொல்லுங்கள்... மிக்க நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தாஜுத்தீன் வீட்டுக்கொல்லையில் காய்த்துத்தொங்கியதைக்கண்ட ஞாபகம் இன்று உள்ளத்தில் கருப்பு,வெள்ளை படமாக நிழலாடுகிறது. //

உண்மை தான், எங்களுக்கும் இன்றும் ஞாபகத்தில் உள்ளது. பக்கத்தில் இருக்கும் செவ்வளநீர் மரமும், பப்பாளி மரமும் இன்னும் என் கண் முன்னே உள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சொல்லப்பட்ட பழமோ/காயோ இதில் எந்த வகைகளையும் ருசித்ததில்லை இளநீரையும் (வருத்தக்)கடலையையும் தவிர//

அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும் என்று சும்மாவா சொன்னாங்க..

எனக்கு பிடிக்காத பழ வகைகள் மற்றும் கிழங்கு வகைகள் இனி யாரவது கண்பிடிக்கனும். பூரூட்ஸ் திங்காத நாளே இல்லை.

தம்பி மீராசா, என்னா இன்னும் முழுசா படிக்கலையா? இன்னும் பணைமரத்து நினைவுலதான் இருக்குறது போல தெரியுது..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
//"பழங்"காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டீர் ///

கனிகள் பக்கம் செல்வதில்லை காரணம் கனி"னி"யும் பக்கத்திலிருப்பதால்...

சொல்லப்பட்ட பழமோ/காயோ இதில் எந்த வகைகளையும் ருசித்ததில்லை இளநீரையும் (வருத்தக்)கடலையையும் தவிர..

சகோதரர் அபுஇபுறாஹிமுக்கு...மேலே குறிப்பிட்ட பழ/காய்/கனிகளை சாப்பிட வில்லை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே? பேச்சு வாக்கில் கூட ஆச்சிப்பக்கம் செல்லாதவரோ நீங்கள்?

\\sabeer.abushahruk சொன்னது…
கட்டுரையும் படங்களும் கலக்கல். எம் எஸ் எம்: ஹோம்ஸிக் வரவழைப்பதில் உங்கள் பாங்கு அலாதியானது. இந்தமுறை ஹோம்ஸிக்கோடு வாயில் எச்சிலும் வரவழைத்துவிட்டீர்கள்.

வெள்ளெரிப்பழம் குறித்துச் சொன்ன நீங்கள் வெள்ளெரிப்பிஞ்சு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன்? பஸ் பிரயாணங்களின்போது ஜன்னல்வழி நீட்டப்படும் வெள்ளெரிப்பிஞ்சு பார்க்காமல் விரல்கள் பார்த்திருப்பீர்களோவென்ற அச்சம் எழுகிறதே?:-)

மேலும் நுங்கு பற்றிச்சொல்லுகையில் சோம்பலான உண்ணும் முறை சொல்லப்பட்டிருக்கிறதே, அப்படியே விரலைவிட்டுத் தோண்டி உண்ட சுகம் சொல்லப்படாததற்கு என்ன காரணம்?:)\\

சகோதரர் கவிக்காக்கா சபீருக்கு....

ஜன்னல் வழி நீட்டப்படும் வெள்ளரிப்பிஞ்சு கூர்மையான கத்தியுடன் (மிளகாய்ப்பொடியும் கூடவே சேர்ந்து) 'மவனே வாங்காட்டி பிச்சுபுடுவேன் பிச்சு' என்று மிரட்டுவதாக தெரிந்ததால் பயந்து போய் அதை இங்கு குறிப்பிடாமல் விட்டிருக்கலாம்.

நொங்கை விரலில் நோண்டித்திண்கும் பொழுது கண்களில் நொங்கின் இளநீர் பீறிட்டு அடித்து அதனால் சட்டை நாஸ்தியாகி இருக்கலாம். அதை கழுவி சுத்தம் செய்ய வீட்டிற்கு சென்ற பின் அதை எழுத மறந்திருக்கலாம். இல்லை கிடைத்த நொங்கு கடுக்காயாக நோண்டித்திண்க முடியாத சூழ்நிலையில் கடினமாக கூட இருந்திருக்கலாம் அல்லவா? சகோதரர் தாஜுத்தீனுக்கு ஃபோட்டோ கிளிப்பை தேட சிரமம் கொடுக்க வேண்டாம் என்று கூட நினைத்திருக்கலாம். பல காரணங்கள் இருக்கலாம்.

இது போன்ற காரணங்களை அபுல்'கலாம்'இடம் விசாரிக்'கலாம்'.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): அறிந்தோ அறியாமலோ இருந்தோ இல்லாமலோ கனியோ காயோ என்று இருந்தாகிவிட்டது ! :)

அதிருக்கட்டும் ஏன் எல்லோருக்கும் மஸ்தா !? படங்காளில்தானே காட்டியிருக்காங்க ஏதோ கைமேல்யே கிடைத்த மாதிரி எல்லோருடைய கைகள் அமைதியாக இருக்கே... தட்டி கொடுக்காமல் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Naina Mohamed சொன்னது…

நொங்கை விரலில் நோண்டித்திண்கும் பொழுது கண்களில் நொங்கின் இளநீர் பீறிட்டு அடித்து அதனால் சட்டை நாஸ்தியாகி இருக்கலாம். அதை கழுவி சுத்தம் செய்ய வீட்டிற்கு சென்ற பின் அதை எழுத மறந்திருக்கலாம். இல்லை கிடைத்த நொங்கு கடுக்காயாக நோண்டித்திண்க முடியாத சூழ்நிலையில் கடினமாக கூட இருந்திருக்கலாம் அல்லவா? சகோதரர் தாஜுத்தீனுக்கு ஃபோட்டோ கிளிப்பை தேட சிரமம் கொடுக்க வேண்டாம் என்று கூட நினைத்திருக்கலாம். பல காரணங்கள் இருக்கலாம்.//

புகைப்படங்கள் தேடிப்பார்த்தேன், நல்ல புகைப்படம் கிடைக்கவில்லை.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

அன்னாசிப்பழம்
ஆப்பிள் 
இலந்தைப்பழம்
ஈச்சம்பழம்
ஆரஞ்சு
திராட்சைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்
மாதுளை

அத்துனைப் பழங்களையும் ஐயா உங்களுக்குத் தந்தால் உரித்தும் கடித்தும் சுவைத்தும் சாப்ப்ட எவ்வளவு நேரம் பிடிக்கும். என்று எனக்கும் ஜாகிருக்கும் ஹமீதுக்கும் கிரவுனுக்கும் யாசிருக்கும் தெரிஞ்சாகனும்(ஜூஸாக்குடிக்கக் கூடாது)(

 மேட்டர் இருக்கு. வெயிட் பாய்ஸ்)

Meerashah Rafia said...

தாஜுதீன் சொன்னது…

"தம்பி மீராசா, என்னா இன்னும் முழுசா படிக்கலையா?
"

அட போங்க காக்கா.. நான் சவூதி அரேபியா வந்து பத்துமாதத்தில் என்றும் இல்லாதது இந்த கட்டுரையா படிச்சதும்தான் ஹோம் சிக்(home sick) ஆகிட்டேன்.

பனைமரத்திலிருந்து அரிவாள் கீழே விழுந்து என் மண்டையை பதம் பார்த்த அந்த நாள் இன்று பகல் கனவாக ஓடுகிறது..

msms(mr)

sabeer.abushahruk said...

//பனைமரத்திலிருந்து அரிவாள் கீழே விழுந்து என் மண்டையை பதம் பார்த்த அந்த நாள் இன்று பகல் கனவாக ஓடுகிறது..//

யுவர் ஆனர்,

பனை மரத்திலிருந்து பனம்பழமோ பனையோலையோ பனை மட்டையோ பூங்கொத்தோ, ஏன் கலைந்தவொரு குருவிக்கூடோ விழுதல் எதார்த்தம். ஆனால், அரிவாள் விழுந்ததாக சொல்வதிலிருந்தே இது ரமதான் நேரத்து குரூப் ஆட்டையைப் போல தொன்றுகிறது.

என்ன நடந்ததென்பதை விஷுவலாக பார்ப்பதைப்போல் விளக்கினால் மட்டுமே நம்ப முடியும் அது கூட்டுத்திருட்டு அல்லவென்று!

rasheed3m said...

அஸ்ஸலாமு அலைக்கும். பழங்காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டீர் நைனா!
இப்ப அது கிடைக்காததால் காய்கிறேன்.கனியிருப்ப காய்கவர்தல் சரியாகாதுஆனாலும்
அந்த கனி இனி கிடைக்காதது எட்டிக்காயாக கசப்பது என்னவோ உண்மைதான்.
செட்டித்தோப்பில் மாங்காய் அடித்த பழக்கம் அதிகம் உண்டு.அது இப்பொழுது இந்த கட்டுரையின் மூலம் மல்ர்ந்திருக்கிறது

Meerashah Rafia said...

sabeer.abushahruk சொன்னது…

//என்ன நடந்ததென்பதை விஷுவலாக பார்ப்பதைப்போல் விளக்கினால் மட்டுமே நம்ப முடியும் அது கூட்டுத்திருட்டு அல்லவென்று! //



நீதி(எங்க இருக்கு!)பதி அவர்களே,


சபீர் காக்காவின் சந்தேகத்திற்கு பதில் உரை வைக்க நான் விரும்பிகிறேன்.

அப்பொழுது நான் சரியாக மூன்றாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைகின்றேன்.

சம்பவம் நடந்தது ரமழான் மாதம் இல்லை என்றும், பனைமரத்தை சுற்றி எந்த ஒரு காம்பவுண்ட் சுவரும் இல்லை, சுற்றும் முற்றும் ஷிஃபா மருத்துவமனை விளையாட்டு மைதானம்தான் இருந்தது என்பதாலும் அதை திருட்டு என்று கூற முடியாது. அதே சமயம் பறித்தது மதியம் இரண்டு மணியளவில். சாதரணமாக நோன்பில் இரவில்தானே gang robbery நடக்கும்?நோட் திஸ் பாயின்ட் யுவர் ஹானர்.. நீதிபதி அவர்களே இன்னும் சொல்லப்போனால் நாங்கள் திருடவும் இல்லை, பறிக்கவும் இல்லை. காரணம், கீழிருந்து அரிவாளை மேலே அமீனுதீன்/கமாலுதீன் ஹாரீஸ் காக்காக்கு தூக்கி எறிந்ததும் பனைமர உச்சியில் அரிவாள் கொத்திகொண்டது..நான் மரத்தை முன்னோக்கி சென்றதும் அரிவாள் ரிவீட்டடித்து கூர்மை பகுதிக்கு பதில் கைப்புடி என் உச்சியை பதம் பார்த்தது. இறுதியில் என்னை அரிவாள் நொங்கெடுத்தால் என் காக்கா நொங்கு எடுக்காமலே இரங்கி cmp lane அடிபைப்பில் ரத்த ஆற்றை ஓற்றிவிட்டு ராஜ் டாக்டரிடம் எட்டு தையல் போட்டோம்..மருந்து சீட்டெல்லாம் ஆத்தங்கரையோடு போச்சு.



நீதிபதி அவர்களே!

'கூடுத்திருட்டா?' என்று சந்தேகப்பட்ட சபீர் காக்கவிற்கு சிறு வயது திருட்டை பற்றி ஒரு கவிதை பதிவு ஒரு மாதத்திற்குள் இந்த பிளாக்கில் சமர்பிக்க வேண்டும் என்று ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீதி(எங்க இருக்கு!)பதி அவர்களே,

சபீர் காக்காவின் சந்தேகத்திற்கு பதில் உரை வைக்க நான் விரும்பிகிறேன்.

அப்பொழுது நான் சரியாக மூன்றாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைகின்றேன்.
//


இந்த மாதிரித்தானே வக்கீலை எதிர்பார்த்து இருக்கேன்…

எங்கள் கட்சி வக்கீல் வாத்த்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாட்டமை தீர்ப்பை மாத்தனும் அதற்கு ஈடாக “ சிறு வயது கூட்டு(த் திருட்டு) விளையாட்டு” கவிதை வாசித்தே ஆகனும் ! இல்லையேல் பின்னூட்ட மறியல் நடைபெறும்…


//அன்னாசிப்பழம்
ஆப்பிள்
இலந்தைப்பழம்
ஈச்சம்பழம்
ஆரஞ்சு
திராட்சைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்
மாதுளை

அத்துனைப் பழங்களையும் ஐயா உங்களுக்குத் தந்தால் உரித்தும் கடித்தும் சுவைத்தும் சாப்ப்ட எவ்வளவு நேரம் பிடிக்கும். என்று எனக்கும் ஜாகிருக்கும் ஹமீதுக்கும் கிரவுனுக்கும் யாசிருக்கும் தெரிஞ்சாகனும்(ஜூஸாக்குடிக்கக் கூடாது)(

மேட்டர் இருக்கு. வெயிட் பாய்ஸ்)
//

ரொம்ப சிம்பிள் கவிக் காக்கா : பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான் - அப்படியே அருகில் இருக்கும் தம்பியிடம் கொடுத்திடுவேன்... அதைத்தானே அடிக்கடி எங்க எல்லோருக்கும் சொல்லுவீங்க பெற்றவைக்களையும் கையிலிருப்பதையும் பகிர் என்று... (கிரவ்னு உனக்கு பகீர்ர்ன்னுடுச்சோ ?)

sabeer.abushahruk said...

மீராஷா கவனத்திற்கு:

இதுவரை நீதிபதி நியமிக்கப்படாத காரணத்தால் நான் என் கேஸை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். (குட்டி பதினாறு அடி பாயுதுடோய். ஐ ஆம் எஸ்கேப்பிக்கா))

அபு இபுறாஹீம் கவனத்திற்கு:

பழங்களைப்பற்றிய பழங்காலக்கதையிலிருந்து மீண்டால் கணினிப்பிரியரான நீர் கனிப்பிரியராகவும் முடியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//sabeer.abushahruk சொன்னது…

பழங்களைப்பற்றிய பழங்காலக்கதையிலிருந்து மீண்டால் கணினிப்பிரியரான

நீர் கனிப்பிரியராகவும் முடியும். //


இந்த புது "கனிமொழி" sorry... இந்த புது "பழமொழி" சூப்பர் காக்கா...

Yasir said...

//பழங்களைப்பற்றிய பழங்காலக்கதையிலிருந்து மீண்டால் கணினிப்பிரியரான நீர் கனிப்பிரியராகவும் முடியும்./// எங்கே இருந்து வருது இதெல்லாம் காக்கா....உங்களிடம் இருப்பது மூளையா அமுதசுரபியா அள்ள அள்ள தித்தித்து கொண்டு வருகிறது குறையாமல்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதுவரை நீதிபதி நியமிக்கப்படாத காரணத்தால் நான் என் கேஸை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். (குட்டி பதினாறு அடி பாயுதுடோய். ஐ ஆம் எஸ்கேப்பிக்கா))///

நாட்டாமை வருகிறவரைக்கும் "அந்தக் கவிதை மேட்டருக்கு அப்புறம் வாயிதா வந்திடும் அதுக்கு முன்னே எழுதி வாசித்திடவும்"

இந்தக் கோரிக்கை பெண்டிங் "சிறு வயது திருட்டை பற்றி ஒரு கவிதை பதிவு ஒரு மாதத்திற்குள் இந்த பிளாக்கில் சமர்பிக்க வேண்டும் என்று ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறேன்..

பழங்க்கா(ல)வி(த்)தை அப்புடியே இருக்கே ! திரும்பப் போய் தர்மலிங்கம் ஐயா காலத்து கிளாசுல வேனா உட்கார்ந்திடுறேனே

Meerashah Rafia said...

சபீர் காக்காவின் வாபஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அதிரை நிரூபரின் பின்னூட்ட சதுர அடியை உரிமையோடு ஆக்கிரமித்ததற்காக "சிறுவயது அறியா திருட்டை" பற்றி ஒரு கட்டுரை அல்லது கவிதை எழுதிவிட்டு இந்த கேசை முடித்துக்கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது...இந்த தீர்ப்பில் ஊரை விட்டு தள்ளி வைக்கும் சட்டம் செல்லாது (ஏற்கனவே தள்ளிதான இருக்கின்றோம்!!).

இதற்கப்புறம் கட்/கவி வரும்வரை நாட்டாமை சகோ. அபூ இபுராஹிமிடம் இந்த கேசை(சூட் கேஸ் அல்ல) எடுத்து நடத்துவார்.

msm(mr)

sabeer.abushahruk said...

யாசிர்,

எல்லாம் கிரவுன் சகவாசம்தான் வேறென்ன?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// இதற்கப்புறம் கட்/கவி வரும்வரை நாட்டாமை சகோ. அபூ இபுராஹிமிடம் இந்த கேசை(சூட் கேஸ் அல்ல) எடுத்து நடத்துவார்.///

நமதூரில் நாட்டமை / நத்தை ஆமை மேட்டரெல்லாம் கிராமுசு மரைக்கா காலத்தோடு கப்பலேறிடுச்சு !

சரி தலைப்பை இபப்டி மாத்திக்குவோம் "அறிந்தும் அறியாமலும் அறியாத வயது நிகழ்வுகள்" அவங்க அவங்க கிட்டே இருக்கிற குதிரையை தட்டி எழுப்பிடுங்க... இல்லலன்னா MSM(mr) இன்னொரு கேஸ்கட்டோடு வந்திடப் போறார் ! :))

Meerashah Rafia said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//"அறிந்தும் அறியாமலும் அறியாத வயது நிகழ்வுகள்" அவங்க அவங்க கிட்டே இருக்கிற குதிரையை தட்டி எழுப்பிடுங்க... //


ஆஹா..அட்டகாசம்..இதை பல தொடராக பலர் சேர்ந்து எழுதலாம் போலிருக்கே!!..நீங்க முதலில் எந்திரித்தால் நாங்களும் எந்திருக்க ரெடி..

msm(mr)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சரி தம்பி MSM(மு.மீ) சுழி போட்டாச்சு வரிசையில வந்து நின்னுடுவோம் பதிவுக்குள் :)

Yasir said...

//சிறுவயது அறியா திருட்டை" பற்றி ஒரு கட்டுரை அல்லது கவிதை எழுதிவிட்டு இந்த கேசை முடித்துக்கொல்லும்படி/// வழிமொழிகிறேன் உடனடியாக செய்து தருமாறு கவிக்காக்காவை கேட்டுக்கொள்கிறோம்...என்ன சகோ.மீராசா இன்னைக்கு ஒரு முடிவோடுதான் இறங்கி இருக்கப்ல தெரியுது..உங்க இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

Meerashah Rafia said...

Yasir சொன்னது…
என்ன சகோ.மீராசா இன்னைக்கு ஒரு முடிவோடுதான் இறங்கி இருக்கப்ல தெரியுது..


நழுவிப்போகும் விலாங்கு மீனு, எங்க ஆத்தங்கரை பக்கம் சும்மா எட்டிப்பார்த்தாலே விடமாட்டோம்.
சுறா கிடைச்சிருக்கு, சும்மா விட்டுடுவோமா!?!


ருசி கிட்டும்வரை வரை பசியோடு காத்திருப்போம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர்: மீராசாவுக்கு தூண்டில் போட்டது என்னவோ கவிக் காக்கா ஆனா அப்படியே அந்தத் தூண்டிலை திருப்பிப் போட்டு இங்கே இருவரையும் சிக்க வைத்த்து விட்டார் மீராசா (பசியாரும் வரை பகிர்(வுகள்) தொடரும்).

முதல் படி நான் கட்டினால் மொத்தப் படியையை MSM(mr)தான் கட்டனும் இதுதான் தீர்ப்பு ! :)

Meerashah Rafia said...

இன்ஷா அல்லா நீங்கள் ஆரம்பித்தவுடன் சிக்கிய சகோ.சபீர், யாசர் & மீ(ராசா) ஆகியோர் மீதிப்படிய கூடிய சீக்கிரம் கட்டிடுவோம்..

crown said...
This comment has been removed by a blog administrator.
m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//crown சொன்னது…
அறிந்தும் அறியாமலும்.
----------------------//

மற்றொரு களம் வைத்து அறிந்தும் அறியாமலும் ஆளுமை செய்திடுவோம் பொருத்தருள்க !

Unknown said...

தெரிந்தும் , அறிந்தும் செய்யும் தவறே தவறாகும்.
வரதட்சனை என்னும் கொடிய செயல் செய்தல்.
வட்டி தொழில் செய்து பிழைத்தல்
விபச்சாரம் செய்து அழிதல்
பிறர் பொருளை களவாடுதல்
தொழுகையை விடுதல்
மது குடித்தல்
இப்படி இஸ்லாம் சொன்னவைகளை கடைபிடிக்காதிருத்தல்
-------------------
இதில் தவறுதலாக வாக்கியம் அமைந்திருபதாக
எனக்கு தோன்றுகிறது ......தவறு என்று தஸ்தகீருக்கும் ,குழுவுக்கும்
தோன்றினால் திருத்திகொள்ளவும் ..--------------------------------------------

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//harmys சொன்னது…
தெரிந்தும் , அறிந்தும் செய்யும் தவறே தவறாகும்.
வரதட்சனை என்னும் கொடிய செயல் செய்தல்.
வட்டி தொழில் செய்து பிழைத்தல்
விபச்சாரம் செய்து அழிதல்
பிறர் பொருளை களவாடுதல்
தொழுகையை விடுதல்
மது குடித்தல்
இப்படி இஸ்லாம் சொன்னவைகளை கடைபிடிக்காதிருத்தல்
-------------------
இதில் தவறுதலாக வாக்கியம் அமைந்திருபதாக
எனக்கு தோன்றுகிறது ......தவறு என்று தஸ்தகீருக்கும் ,குழுவுக்கும்
தோன்றினால் திருத்திகொள்ளவும் ..---------//

தம்பி அப்துர்ரஹ்மான், சொல்லியிருப்பதும் சரியே "இப்படி இஸ்லாம் தடுக்கப்பட்டதாக சொன்னவைகளை கடைபிடிக்காதிருத்தல்" என்றிருந்திருக்க வெண்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பர் அப்துற்றஹ்மான் சொன்னது சரியே! தம்பி காக்கா சொன்னபடி மாற்றவும் எல்லாருக்கும் வல்ல ரஹ்மான் கிருபை புரியட்டும்.
திருத்தம் உள்ளது என்பதை சொன்ன நண்பனே! என்ன திருத்தம் என்பதை சொல்வதற்கும் தமக்கு உரிமை உள்ளதே! பரவாயில்லை...... நன்றி!

Meerashah Rafia said...

ஆஹா. சகோ. கிரவுன் INSTANT CONTENT COFFEE MAKER போல!. .விழித்தெழுந்து பிளாகை பார்த்ததும் சட்டென்று ஒரு கவி பாடி சென்றுல்லாரே!!?!
ஹும்ம்.. தினம் தினம் அவர் வீட்டில் இவர் சூடான கவிக்குப்பின்தான் மனைவியின் ஹாயான பெட் காஃபி கிட்டும் போல.

msm(mr)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நிர்வாகத்தினருக்கு வேண்டுகோள் தவறாக தோன்றும் வரியின் பிழைகளை தயவு செய்து திருத்தவும். இது என் அன்பான வேண்டுகோள்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அன்புச் சகோதரர் கிரவுன் :

பதியப்பட்ட பின்னூட்டங்களில் இருக்கும் உள்ளடக்கத்தை திருத்தும் வசதியில்லாததால் தங்களின் கட்வுச்சொல் வழியாக பதியப்பட்ட பின்னூட்டம் மறைக்கப்பட்டு மீள்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

அன்புடன்,
நெறியாளர்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

crown சொன்னது…

அறிந்தும் அறியாமலும்.
----------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.

அறியாத வயதில் செய்த தவறுகள் சேட்டையாகும்
அங்கே கற்பனைகள் பெரிய கோட்டையாகும்.
சித்திரம் என்று வீட்டு சுவரிலெல்லாம் கிருக்கியதும்
பத்திர பேப்பரை கிழித்து காகிதகப்பல் செய்ததும்
அம்மாவின் முந்தானையை கத்திரிகோல் வைத்து நறுக்கியதும்.
அடுத்தவன் சேர்த்துவைத்த பலிங்கு(கி)களை
அவனுக்குத்தெரியாமல் பொ(ரு)றுக்கி வந்ததும்
அறியாமல் செய்த தவறென்றாலும்
அந்த வயதில் அது ஆனந்தம்.

**************************

திருட்டு தம் பிடித்ததும்
பள்ளிக்கூடத்திற்கு கட் அடித்ததும்
சினிமாவிற்கு ஒளிந்து சென்றுபார்ததும்
நூலகத்தில் புத்தகம் திருடி கதை படித்ததும்
அடுத்தவீட்டு பையன் மண்டையை கல்லால் அடித்ததும்
பரிட்சையில் பிட் அடித்ததும்
பெண்களை சைட் அடித்ததும்
இளைமை கால கலாட்டா அது தெரிந்தே செய்த தவறுகள்.

*******************

தெரிந்தும் , அறிந்தும் செய்யும் தவறே தவறாகும்.
வரதட்சனை என்னும் கொடிய செயல் செய்தல்.
வட்டி தொழில் செய்து பிழைத்தல்
விபச்சாரம் செய்து அழிதல்
பிறர் பொருளை களவாடுதல்
தொழுகையை விடுதல்
மது குடித்தல்
இப்படி இஸ்லாம் தடுக்கப்பட்டதாக சொன்னவைகளை கடைபிடிக்காதிருத்தல்
இவையாவுமே அறிந்தும் செய்தும் தவறாகும்
இதற்கு தண்டனை நரகமாகும்
தெரிந்தும்,தெரியாமல் செய்த தவறுக்கு
வல்ல நாயன் அல்லாஹ்விடம்
அழுது,தொழுது மன்னிப்புத்தேடிடுவோம்
எல்லாப்புகழும் அல்லாஹுக்கே , அவன் நம்மை காத்தருள்வானாக! ஆமீன்,ஆமீன் ,யா ரப்புல் ஆலமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு