Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடைகால கல்வி பயிற்சி முகாம் 13

அதிரைநிருபர் | April 23, 2011 | , ,

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்.

பாடங்கள்:

· தீனியாத் பயிற்சிகள்

· இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை

· கம்ப்யூட்டர் கோர்ஸ்

· Spoken English / Arabic

· Personality Development

· உயர்கல்வி வழிகாட்டுதல்கள்..

மற்றும் பல...


வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும்.

தொடர்புக்கு: 9566716216 / 9750969302 / 9894989230

அன்புடன் அழைக்கும்,

AIM & ALM
அதிராம்பட்டினம்

தகவல்: அதிரை அஹமது


13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தொடர்ந்திடுங்கள் கைகோர்க்க நாங்களும் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

விடுமுறையில் இருக்கும் மாணவமணிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் இப்படியான கோடை விடுமுறைப் பயிற்சிகள் யாவும் உங்களின் எதிர் காலத்தை முன்னிருந்தியே அனுபவங்களைப் பெற்றவர்களால் நடத்தப் படுகிறது.

கிடைக்கின்ற வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளுங்கள் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரு மாதம் காலம் நடைப்பெற இருக்கும் இந்த கல்வி பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பயனடையுமாறு எல்லா மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்பது அவ்வளவு சுலமான காரியமல்ல, இது போன்ற வாய்ப்பு அதிரையில் கிடைப்பது மிக அரிது. குறிப்பாக spoken english, personality development and career guidance போன்றவகைக்களில் பயிற்சிகள் நடைப்பெறுகிறது.

இந்த முயற்சியில் ஈடுபட்டுவரும் AIM அமைப்பு, ALM பள்ளிக்கும் வாழ்த்துக்கள். இந்த சேவை வெற்றிபெற படைத்தவனிடம் நாம் எல்லோரும் துஆ செய்யவேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த தகவலை நம்முடன் பகிர்ந்தளித்த அதிரை அஹமது (மாமா) அவர்களுக்கு மிக்க நன்றி.

ஒரு மாத பயிற்சி முகாமில் கலந்துக்கொள்பர்களுக்கு அன்பளிப்பு பரிசுகள் அல்லாமல் participation or course complition certificate ஏதாவது கொடுக்கப்படுமா? இந்த பயிற்சி முகாம் பற்றி மேலும் தகவல்கள் பகிர்ந்துகொண்டால் மிகவும் பயனுல்லதாக இருக்கும்.

ZAKIR HUSSAIN said...

இப்போதுதான் நம் ஊர் மாணவர்களுக்கு சரியான பாதை அமைக்கப்பட்டிருக்கிறது,...வாழ்த்துக்கள்

அபு ஆதில் said...

யா அல்லாஹ் இம்மை-மறுமைக்கும் பயனுள்ள கல்வி ஞானத்தை வழங்கிடுவாயாக.
பெற்றோர்களும் ஆர்வத்தோடு தங்கள் பிள்ளைகளை அனுப்பி பயன் பெற செய்ய வேண்டும்.
இந்த முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

மிக முக்கியமானதும் பயனுள்ளதுமான இந்த முகாம் பெருவாரியான அளவில் வெற்றியடைய என் துஆ.

இந்த சேவையில் ஈடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் என் துஆ.

பாதையும் தயார் பயணமும் திட்டமிடப்பட்டுவிட்டது, பயணிகளே புறப்படுங்கள், பயன் பெறுங்கள்.

Yasir said...

மிக முக்கியமானதும் பயனுள்ளதுமான இந்த முகாம் பெருவாரியான அளவில் வெற்றியடைய என் துஆ.

இந்த சேவையில் ஈடுபடும் அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் என் துஆ

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) கோடைகால பயிற்சி முகாமில் நடக்கும்:

/// தீனியாத் பயிற்சிகள், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை, கம்ப்யூட்டர் கோர்ஸ், Spoken English / Arabic, Personality Development, உயர்கல்வி வழிகாட்டுதல்கள். ///

இவை அனைத்திலும் மாணவ மாணவியர்
கலந்து கொண்டு பயனடைய வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

அப்துல்மாலிக் said...

நல்ல முயற்சி, வெற்றியடைய வாழ்த்துக்கள்

Abu Easa said...

அல்லாஹ் பயனுல்லதாக ஆக்கித்த்ருவானாக!
மேலும், நற்காரியங்களில் உளத்தூய்மையோடு ஈடுபட்டு ஈருலக நற்பேருகளையும் பெற்றுக்கொள்ள அருள் புரிவானாக!

Shameed said...

மாணவ மாணவிகள் அனைவரும் இதை நல்ல முறையில் பயன்படுதிக்கொள்ளவேண்டும்.

Unknown said...

Dear (Adirai) expatriates,

ஊரிலுள்ள உங்கள் ஆண் - பெண் பிள்ளைகளை இப்பயிற்சி முகாமில் பங்கெடுத்துப் பயன் பெறச் செய்யுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஊரிலிருக்கும் சொந்தங்களிடம் இதனை எத்திவைப்பதில் முன்னிருப்போம் இன்ஷா அல்லாஹ் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு