Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓட்டு பணம் லஞ்சம் ஹராம் 20

அதிரைநிருபர் | April 12, 2011 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகிவிட்டது. தன் அணிக்கு ஒட்டுப்பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு ஓட்டுறிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவன் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு ஓசியில் காசு கிடைக்குது இதுக்கேல்லாமா ஒரு கட்டுரை? என்ற முனுமுனுப்பு இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அனுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அனுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்..




ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

அதிரையை ஆண்டுவரும் பாரம்பரியமிக்க இரு பெரும் கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள் குர் ஆன் ஆயத்துக்கள் தெரியவில்லை. யா அல்லாஹ் ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்துவிடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடருகிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விபடும்போது போது மிக வேதனையாக உள்ளது.

சில செய்திகள் நட்புவட்டாரத்தின் மூலமாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் ஓட்டுக்காக பணம் விநியோகம் மிக துரிதமாக நடந்துவருகிறது. ஒரு சில வீடுகளின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து 5000 ரூ வரை கொடுக்கப்படுகிறதாம். தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 1000ரூபாயில் 100ரூபாய் பட்டுவாடா கமிஷன் என்று சொல்லி எடுத்துக்கொள்கிறார்  சொல்லப்படுகிறது. என்ன கேவலமோ...  இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சீமான் சொல்லுகிறார், ஜெயலலிதா சொல்லுகிறார் ஏன் நாம் இதை வாங்கிக்கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவ்விருவர் சொல்லுவதால் அது நம் பணமாகிவிடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவது லஞ்சம், அது ஹராம் என்பது மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும்,  நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உங்கள் உறவுகளிடம் எடுத்துச்சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கு நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைக்கட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவந்த நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து ஓட்டுமட்டும் மறந்திடாம உங்களுக்கு பிடித்த நல்ல வேட்பாளருக்கு போடுங்க.

அன்புடன் தாஜுதீன்

20 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

பணத்தை வாங்கி கொண்டு " பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்று சொல்லும் தத்துவஞானிகளை இப்போது நிறைய பார்க்கலாம். ஆனால் பணம் வாங்குவதற்க்கு முன் ஒரு 'கட்டு' கட்டிட்டு வந்திருப்பானுங்க..

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
பணத்தை வாங்கி கொண்டு " பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்று சொல்லும் தத்துவஞானிகளை இப்போது நிறைய பார்க்கலாம். ஆனால் பணம் வாங்குவதற்க்கு முன் ஒரு 'கட்டு' கட்டிட்டு வந்திருப்பானுங்க..
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமாம் கட்டு கட்டா பணம்
பட்டுவாடா செய்வதை பார்த்து, தான் வாடாமல் இருக்க ஒரு கட்டுபாடு இல்லாமல் கட்டு கட்டி வந்து விட்டு வியாக்கியானம் பேசும் கூட்டம் பார்க்கிறோமே

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ தாஜ் நல்ல பயனுள்ள கட்டுரை இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜும்மாவில் இப்ராஹீம் மௌலானா பணம் வாங்கக்கூடாது ஹராம் என்று சொன்னார்கள் இன்று பணம் கொடுப்பவர்களும் கேட்டு கொண்டுதான் இருந்தார்கள். இதில் என்ன நமக்கு பிரச்சினை என்று யாரும் யோசிப்பது இல்லை. இன்று அனைவரும் என்தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்புகிறார்கள் காசு கொடுத்து வென்றவர்கள் எப்படி செய்வார்கள். தொகுதிக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்.

sabeer.abushahruk said...

ஓட்டுக்காக பணமோ பொருளோ பெற்றுக்கொண்டு வீட்டுக்காக செலவு செய்பவர் நாட்டுக்கே வேட்டு வைக்கும் காட்டு மனிதர்களே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல நேரத்தில் பதியப்பட்டிருக்கும் நோக்த்தை ஊரில் இருக்கும் யாவருக்கும் எத்திவைக்க முயல வேண்டும் countdown started already !

Meerashah Rafia said...

பணம் கொடுப்பவனை முடிந்தால் எல்லாருமா/தனியாகவோ செருப்பால் அடிங்கள்.அவன் எந்த காவல் நிலையத்தில் புகார் செய்கிறான் பார்போம்.இது என் நீண்ட நாள் கனவு..

msm(mr)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

MLA வின் கடமை பணம் தந்தததோடு முடிந்து விட்டது,இனி அவரின் வாக்குறுதிகளை செய்யச் சொல்ல வாங்கிய எவருக்கும் அருகதை கிடையாது.பின் அவரின் பதிலைக் கேட்டு வாயை சப்பிக்கொள்ள வேண்டியது தான்.இனி இந்த வாக்குறுதிகளை அடுத்த ஐந்தாண்டில் காதால் மட்டுமே கேட்க முடியும்.

Yasir said...

ஹராம் எந்த வழியில் வந்தாலும் அது தடுக்கபட வேண்டியதுதான் என்பதை தெள்ளத்தெளிவாக..குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் தக்க சமயத்தில் பதியப்பட்ட அருமை ஆக்கம்...வாழ்த்துக்கள் சகோ. தாஜுதீன்..அல்லாஹ் நம்மை அனைவரையும் இப்பாவத்தில் இருந்து காப்பானக

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

பணத்தை பெற்றுகொண்டு, அவர்களுக்கு ஒட்டுப் போடுவது கேவலமான செயல்!. முன்பு இது தவறு என்று சுட்டிக்காட்டியவர்கள் எல்லாம், தற்போது பணத்தை வாங்கிகொண்டு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறும் அளவிற்கு சென்றுவிட்டதை எண்ணி மனம் வேதனை அடைகின்றது.

நம்மை யார் நிர்வகிக்க வேண்டும் என்று முடிவு செய்ய இருக்கின்றோம்!. அதனால் தகுந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு.

அதனால் யாரேனும் பணம் கொடுப்பது தெரிந்தால் உடன் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தரவேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

உண்மைக்கு குரல் கொடுப்போம். சிந்தித்து வாக்களியுங்கள். சிறந்த கட்டுரையை மார்க்க வழியில் அலசி ஆராய்ந்து தந்த சகோதரர் தாஜுதினுக்கு வாழ்த்துக்கள்.

Abu Easa said...

சகோதரர் தாஜுதீனின் கட்டுரை காலம் கறுதி எழுதப்பட்ட பயனுள்ள கட்டுரை.

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் விலக்கப்பட்டது (ஹராம் (அ) பாவம்) என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் நாம் இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும் அதாவது "பிறருடைய உரிமையைப் பறிப்பதற்காக". இன்று நம் நாட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது என்றால் "நம் உரிமையைப் பெருவதற்கே நாம் இலஞ்சம் கொடுக்க வேண்டிய இழி நிலையில் இருக்கிறோம்" இதை ஹராம் என்று வாதிட முடியாது என்பது என் கருத்து.

தேர்தலைப் பொருத்தவரை பணம் கொடுத்து ஓட்டு சேகரிப்பது, மேலும் அதற்கு உடந்தையாக இருப்பது அனைத்தும் ஹராம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பணத்தை வாங்கிக்கொன்டு தீயவர்களுக்கு ஓட்டுப் போடுவதும் எற்க முடியாததே. அதே சமயம் பணத்தை வாங்கிக்கொன்டு அதே வேட்பாளருக்கோ அல்லது வேறு வேட்பாளருக்கோ பணம் வாங்கியதற்காக ஓட்டிடாமல் சரியான நிலைபாட்டின் அடிப்படையில் ஒட்டிடுவதை இலஞ்சம் வாங்கியாதக் கருத முடியாது. மேலும் அது நம்முடை பணம்தான் என்று நியாயப்படுத்தவும் முடியாது.

எனவே யாரேனும் பணம் தந்தால் வங்கிக்கொள்ளுங்கள். அதை தாஜுதீன் சொன்ந்து போல் அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டாம், அப்பணம் நமக்கும் வேண்டாம். அதை ஏழைகளுக்கோ அல்லது சமூக அமைப்புகளிடமோ கொடுத்துவிடுங்கள்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

ம'அஸ்ஸலாம்

crown said...

எனவே யாரேனும் பணம் தந்தால் வங்கிக்கொள்ளுங்கள். அதை தாஜுதீன் சொன்ந்து போல் அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டாம், அப்பணம் நமக்கும் வேண்டாம். அதை ஏழைகளுக்கோ அல்லது சமூக அமைப்புகளிடமோ கொடுத்துவிடுங்கள்.
-------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.அபு ஈசாவின் இந்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். அதே சமயம் காலத்தில் எழுதப்பட்ட நல்ல சிந்தனைமிக்க கட்டுரை.வாழ்துக்கள்.

அபு இஸ்மாயில் said...

// எனவே யாரேனும் பணம் தந்தால் வங்கிக்கொள்ளுங்கள். அதை அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டாம், அப்பணம் நமக்கும் வேண்டாம். அதை ஏழைகளுக்கோ அல்லது சமூக அமைப்புகளிடமோ கொடுத்துவிடுங்கள்//

பணம் கொடுத்தவனுக்கு தெரியாது நீங்கள் யாருக்கு கொடுத்தீர்கள் என்று நாளைக்கு ஏதாவது பிரச்னை என்று போனால் பணத்தை வாங்கிகொண்டுதானே ஓட்டு போடீர்கள் என்ற நிலை வரும். நேற்று ஆஸ்பத்திரி தெருவில் பணம் கொடுக்க போனர்கலாம் ஹராமான காசை எல்லாம் கொண்டுவந்தால் வெலக்கமதலே அடிப்பேன் என்று விரட்டி உள்ளார் இதை போல் ஒவ்வருவரும் அடித்தால் அடுத்த முறை நல்லது செயவனுக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பின்னூட்டமிடும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அபுஈசா அவர்களுடைய கருத்தில் உடன்பாடு இல்லை. லஞ்சபணம் வாங்குவதையே முதலில் ஊக்கப்படுத்தவேண்டாம் என்ற நிலையில் இருப்பதே சிறந்தது.

ஒரு அநீதியை ஒழிக்கவேண்டும் என்பதற்காக மறைமுகமாக நாம் அதை ஊக்கப்படுத்துகிறோம் என்பதாகவே கருதுகிறோன். ஓசியில் கிடைக்கும் பணத்தை ஏழைக்களுக்கோ அல்லது சமூக அமைப்புகளுக்கோ அதை கொடுத்துவிடலாம் என்ற மனநிலை நம் மக்களிடம் குறிப்பாக அதிரை மக்கள் அனைவரிடம் இருக்கிறது என்று நம்மால் நம்பமுடியவில்லை.

முதலில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் ஹராம்.

ஹராம் என்று தெரிந்த பிறகு அவற்றை ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது என்பது முரண்படுகிறது. இது தொடர்பாக மார்க்கரீதியான விளக்கங்கள் யாராவது கொடுத்தால் மிக பயனுல்லதாக இருக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மக்கள் நலனுக்காக ஆட்சி பொருப்பில் இருந்தவர்கள் எத்தனை மெகா projectகள் முறையாக செய்தார்கள் என்பதை பட்டியிலிட முடியவில்லை.
பணம் கொடுத்து வாக்குபெறும் நிலை இன்று தமிழக அளவில் ஒரு பெரும் மெகா projectடை போல் எடுத்து செய்கிறார்கள்.

கடைசி நிமிடங்களில் பணத்திற்காக தன் ஓட்டை விற்று அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அடையப்போகும் இன்னல்களுக்கும் guaranteeயும் கொடுத்துவிடுகிறோம் என்பது தான் வேடிக்கை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அபு இஸ்மாயில் சொன்னது… நேற்று ஆஸ்பத்திரி தெருவில் பணம் கொடுக்க போனர்கலாம் ஹராமான காசை எல்லாம் கொண்டுவந்தால் வெலக்கமதலே அடிப்பேன் என்று விரட்டி உள்ளார் இதை போல் ஒவ்வருவரும் அடித்தால் அடுத்த முறை நல்லது செயவனுக.//

நல்ல செய்தியை பகிர்ந்துள்ளீர்கள்.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புச் சகோதரர்களுக்கு,

நான் இங்கே பணம் வாங்குவதை ஊக்கப்படுத்தவில்லை. அதே சமயம் சில எதார்த்தங்களை நாம் இங்கே விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் பணத்தை வேண்டாம் என்று மறுப்பதால் அது ஒன்றும் உறியவர்களிடத்தில் போய் சேரப்போவது கிடையாது, மாறாக இடைத் தரகர்களே ஆட்டயப் போட்டுவிடுவார்கள். மேலும் வேட்பாளர்கள் நாம் பணம் வாங்காவிட்டால் புத்தி படிக்க மாட்டார்கள். அதே சமயம் பணத்தையும் வாங்கிக்கொண்டு தோற்கடித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு இவர்களைப் பணம் கொடுத்து ஏமாற்ற முடியாது என்ற பாடமும் படித்துக்கொள்வார்கள்.

மேலும் அவர்கள் கொடுக்கிற பணத்தை என் பணம் என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் அது நம் பணம் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது. அதனால் தான் அதை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

அந்தப் பணம்...
ஒரு ஏழையின் கல்விக்குப் பயன்படலாம்
ஒரு ஏழையின் ஆடைக்குப் பயன்படலாம்
ஒரு ஏழையின் வீட்டுக் கூரைக்காகப் பயன்படலாம்...

இப்படி அதை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

பணம் வாங்காவிட்டால் வெற்றி பெற்றதும் தொகுதிக்கு அப்படியே நலத்திட்டங்களை வாரி வழங்கிவிவார்களா?

பணம் வாங்கிகொண்டு தீயவர்களை ஆதிரப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தோழ்வியே அவர்களுக்கு சரியான பாடமாக அமையும். பொருளதார இழப்பையும் ஏற்படுத்தி தோழ்வியையும் சன்மானமாகத் தந்தால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாற்போல் இருக்கும் என்பதே நம் எண்ணம். மேலும் பெற்ற பணம் நறபலனும் தந்தால்?...

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

ம'அஸ்ஸலாம்

அப்துல்மாலிக் said...

அதெல்லாம் நம்முடைய காசுதான் நமக்கே ஓட்டு என்ற வரையறையின் கீழ் நமக்கே திரும்ப வருதுனு சப்பக்கட்டுறவங்களும் இருக்கதான் செய்றாங்க, அதை நாம வாங்காட்டி எப்படியும் திரும்ப அரசாங்க கஜானாவுக்கு திரும்ப போவது இல்லை, அதற்கான தரகரே முழுங்கிடுவானுங்க. நம் மக்க பெரிய குழப்பத்துலே இருந்திருக்காங்க, சகோதரர்கள் சொல்வது போல் வாங்கி கல்வி ஊக்கத்தொகையாகவோ, குமர் காரியத்துக்கோ கொடுத்துவிடலாம் என்பதை நானும் ஆமோதிக்கிறேன்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸஸலாமு அலைக்கும்(வரஹ்) ஒரு நபருக்கு 100ரூபாய் வீதம் வீட்டில் ஓட்டு போடும் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு பணம் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். 100யும் 200யும் வாங்கி எந்த காரியத்திற்கு கொடுப்பீர்கள். ஆயிரங்கள் யாருக்கும் கொடுப்பதில்லையாம். நமது வீடுகளில் செலவழிக்கும் பணத்திற்கு ஈடாகுமா இந்த 100ரூபாய் இதை எதற்கு வாங்க வேண்டும்.

பணம் என்றால் பிணம் கூட வாய் பிளக்கும் என்பது பழமொழி. 100ரூபாயையும் கை நீட்டி எந்த சிந்தனையும் இல்லாமல் வாங்கச்சொல்கிறது மக்களை.

தீங்கில் எந்த தீங்கு குறைவாக இருக்கிறது என்பதை யோசிக்கும் காலத்தில் இருக்கிறோம்.

ஓட்டுக்கு பணம் வாங்குவது லஞ்சம் ஹராம் என்பதை குர்ஆன் , ஹதீஸ் ஒளியில் தெளிவாக விளக்கிய சகோதரர் தாஜூதீனுக்கு வாழ்த்துக்கள்!

Ahamed Arif said...

பசிக்காகத் திருடுபவனைப் பிடித்தால் மட்டும் பள்ளிவாயிலில் மரத்தில் கட்டி அடிக்கிறோமே? (ஒரு முறை அதிரையில் உள்ள புதுப்பள்ளியில் இவ்வாறு ஒருவரைப் பிடித்து அடித்ததை நேரடியாகக் கண்டுள்ளேன்)இந்தச் தேசியத் திருடர்களைப் பிடித்துக் கட்டிவைத்து அடித்துக் காவல் நிலையத்தில் கொடுக்கும் காலம் வந்தால் நாடு நலம் பெறும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு