Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அண்ணாவுக்கு கடுதாசி ! 27

அதிரைநிருபர் | April 17, 2011 | , ,

முக்கிய குறிப்பு : அடுத்தவர் கடுதாசியை வாசிப்பது தவறு என்று தெரிந்த நமக்கு கடிதம் எழுதுவதற்கே காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் தினசரி நடத்தி அங்கே அச்சிட்டு போட்டுக் காட்டியதால் இந்தக் கடுதாசியையும் வாசிக்கும் படியாகிவிட்டது.


அண்ணா!

நீங்கள் எழுதிய மடல் என்னை மகிழ்சி கடலில் அப்படியே தூக்கிப் போட்டது, ஆனாலும் தமிழ் வாழ நான் கட்டு மரம்போல் மிதந்து எதையும் தாங்கும் இதயமாக இருக்கிறேன். உடலில் ஓடும் குருதியை கண்ணால் கான முடியாது, ஆனாலும் அந்த குருதி ஓடாவிடின் நாம் வாழ முடியாது என்பது உறுதி. அதுபோலவே என் உடலில் ஓடும் உணர்வில் உங்கள் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ளும் ஆற்றலை பெற்றுள்ளவன் தான் உங்கள் தம்பி.

என் உள்ளத்தில் வீற்றிருக்கும் அண்ணாவே! உங்கள் சிந்தனைதான் என் சிந்தனையும். நம் உறவு ஊருக்கு (எல்)நகையாக இருக்கலாம். அவர்தம் சந்தேதக்கண் கொண்டு பார்க்கலாம், ஆனால் இந்த தம்பியை நன்கு அறிந்தவராயீற்ரே.

என் அண்ணாவே ! நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரத்தான் இந்த தம்பி இருக்கிறேன். தண்டவாளத்தில் தலை வைக்க வா என்றாலும், தலைமை ஏற்கவா என்றாலும் இரண்டையும் ஒன்றாக செய்பவனே என் தம்பி என நீங்கள் என்னைப்பற்றி குறிப்பிட்டதும் பார்கடலில் அமுதெடுத்து குடித்தவன் போல் உணர்ந்தேன். (இந்த மடலை தயவு செய்து அஞ்சல் செய்து அல்லது தவறவிட்டு விடாதிர்கள் அப்புறம் என் பகுத்தறிவு வேசம் கலைந்துவிடும்).

அண்ணா ! எப்படி நான் உங்களுக்கு நன்றி சொல்வேன்? நினைக்கும் போது என் கண்ணின் ஒரம் ஈரம் எட்டிப்பார்கிறது. இந்தி (எதிர்ப்பு)நெருப்பின் தகிப்பில் தமிழ் கடலே காய்ஞ்சி(காய்ந்து) போய்யிருந்த வேளையில் காஞ்சியில் முளைத்த குறிஞ்சி நீங்கள் ஆம் தமிழை உறிஞ்சி குடித்த ஹிந்தி ஓனாய்களை முரம் கொண்டு, திரம் கொண்டு, வீரம் வென்றதே அண்ணா !

அன்று தமிழச்சி புலிப்பால் புகட்டினால் இன்றோ அய்யகோ, நம் திராவிட இனத்தை குழிதோன்டிய புதைக்க ஆர்ய(மேதை) அம்மையார் புறப்பட்டு நம்மை தேர்தலில் மக்கள் வீழ்தினால் ஆடும், மாடும் கொடுப்பேன் என்று அறிவித்துள்ளதால் இனி புலிப்பாலுக்கு பதில் ஆட்டுப் பால், மாட்டுப் பால் தான் இதனால் நம் தமிழர் வீரம் மட்டுப் படுமே !!!

நானும் (எம்)மக்களின் வரிபணத்தில் பல இலவசங்கள் அறிவித்துள்ளேன். மேலும் தமிழ் நாட்டை பெரும் தொழில் அதிபர்களுக்கும் விற்றுள்ளேன். என் சந்ததினரை (கடற்)கரை(கள்) சேர்த்த கறைபடியாத "கை"க்கு சொந்தகாரனாகி உள்ளேன். சோனியாவும், கனிமொழியும் சேர்ந்து மெரினாவில் இட்லி, தோசை காலை உணவுவிடுதி திறக்க உள்ளார்கள் அதற்கு நன்றி மறவாமல் தமிழ் பெயரேயே சூட்ட உள்ளேன். என்றும் உங்கள் வழி நடப்பவனாக இறுதி மூச்சுவரை இருப்பேன் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. (தில்லை) அண்ணா !

(இது வரை தமிழீனத் தலைவன் நான்(தான்) கலைஞர் என்று சொல்லி தமிழையே ஏமாற்றியவரின் கடிதத்தை பிரித்து படிச்சுட்டேன்).

******************************************************************************

இனி வருவோம் விஷயத்திற்கு அன்றொரு நாள் தம்பிக்கு கடுதாசி எழுதிய எங்கள் அண்ணா(வே) உங்களுக்கு பதில் கடுதாசி எழுதாமல் கலிபோர்னியா கடற்கரையோரம் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை ஆதலால் இதோ என் பங்கிற்கு எழுதி அனுப்பியிருக்கிறேன் அப்படியே எம் மக்களுக்கும் வாசிச்சு காட்டிடுங்க ! வேண்டாம் வேண்டாம் அவர்களிடமே கொடுத்திடுங்கள் வாசித்துக் கொள்ளட்டும்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

இது கிரவுனாகிய நான் (நெய்னா தம்பிக்) காக்காவுக்காக எழுதிய மறு(ப்பில்லாத)மடல்.

எல்லாம் தெரிந்து தானா அண்ணா நீஙகள் துபாயில் போய் தங்கிவிட்டீர்கள்? அதனால் நானும் கலிபோர்னிய கடல் பக்கம் ஒதுங்கி, விழிபிதுங்கி தவிக்கிறேன். நாம் சென்ன்னையில் நம் தமிழ் அன்னை ம(ண்ண)டியில் வாழ்ந்த காலம் பொற்காலம். இப்பொழுது (சரியான) boreகோலம்.

அந்த சென்னை மாநகரில் நாம் மக்களோடு மக்களாக கலந்திருந்த நாட்கள் நினைவில் இன்னும் அப்படியே நிழலாடுகிறதே !

அண்ணா ! அங்கேயும் அப்படித்தானோ ? இல்லை இல்லை இருக்காது உங்களுக்கோ ! தினம் தினம் தமிழ் (கவிக்)குடிமகனார் சபிர் அவர்களின் கவிதைகள் கேட்டுக் கொண்டிருக்கும். சகோதரர் மொழி ஆர்வலர் யாசரின் முத்தான வார்தைகள் கேட்டு பொழுதுகள் எழுவதும் மறைவதும் தெரியாமல் எளிதாக இருக்கும். உங்கள் உடன் பிறப்பு தாஜுதீனின் இனிய கவனிப்பில் காலம் களிப்புடன் செல்லும் என நம்புகிறேன்.

மலேசிய நாட்டில் குடியேரிய நம் அரசவை வைத்தியர் நகைச்சுவையின் சக்கரவர்த்தி சகோ ஜாஹிரின் ஆலோசனையும் நகைச்சுவையும் முன்ட கூவியில்(அலைபேசி) கேட்டு மகிழ்ந்து வருவீர்கள்.

மேலும் நம்மையெல்லாம் பாசத்தில் கட்டிபோடும் நம் விகடகவி சகோதரர் Sஹமீத் அடிக்கடி தொடர்பில் இருப்பதால் சகல பாக்கியமும் (வெட்கிரைண்டர்) கிட்டியவனாக இருப்பீர்கள், அனால் தாங்கள் பூலோகத்தில் தொலைவில் இருப்பதால் புலம்பிதவிக்கிறேன். இந்த தம்பியின் ஆதாங்கம் புரியும் என்று நம்புகிறேன்.

இதற்கு மேல் தொடர முடியாமல் கையில் நகசுத்தி அவதியினால் இந்த அறுவை (அருசுவையின் சுருக்கம் என கொள்க).

கடிதத்தை முடிக்கிறேன்.

பதில் கடிதங்கள் போட வேண்டாம் புறாக்கள் எல்லாம் ஆளுக்கொரு ஐஃபோன் வைத்துக் கொண்டு இறக்கை கட்டிப் பறந்திடுவதால்...

என்றுமே உங்களின் யாவரின் நேசம் வந்து வருடட்டும் !

- CROWN

27 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். தலைப்பில் அன்னாவுக்கு கடுதாசி என்று இருந்திருக்கனுமே? சரியா? நான் எழுதியதை என் மனசாட்சியும் எழுதுயிருக்கிறது. நன்றி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தமிழ் மணத்துடன் ரொம்பசுவையாயிருக்கிறது அடுத்தவங்க கடுதாசி! இப்படித்தான் இருக்க வேண்டும் அண்ணந்தம்பிகள்!

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
Unknown said...

தஸ்தகீரின் பின் கடுதாசி படிக்க சுவராசியம் ...................

இன்னும் நீட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Yasir said...

இது கடுதாசி இல்லை...பால் போட்டு காய்சின கடற்பாசி..அந்த அளவிற்க்கு படிக்கும்போது மனதில் இறங்கும் ஒரு சுவை...சிரமமே இல்லாமல் மூளைக்குள் வார்த்தைகளை செலுத்தும் விதம்...நையாண்டி, நகைச்சுவை...இதனால்தான் தாங்கள் முடி சூடிய மன்னனாக திகழ்கிறீர்கள்....அண்ணாவிற்க்கு தம்பி எழுதி கடிதம் சூப்பர்.

sabeer.abushahruk said...

அற்புதமான கடுதாசிகள். தம்பி அண்ணாவுக்கு எழுதிய கடிதமாகட்டும் 'தபால்காரர்'அண்ணாவுக்கு எழுதிய கடுதாசியாகட்டும் ரெண்டுமே நல்ல ரசனையோடு எழுதப்பட்டிருக்கிறது.

யாசிர் சொல்வதுபோல் கடற்பாசிதான். சில இடங்களில் கடிதாசி. வழ்க்கம்போல் இருவரும் பங்குபோட்டு ஆட்சி செய்கிறீர்கள்.

வாழ்க!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சில இடங்களில் கடிதாசி.// அவன் கடித்தான் அதனால்தான் நானும் கடித்தேன்(னு) சொன்னா நம்பித்தாக் ஆகனும் ஆதலால் கடிக்கும் இடமேதுன்னு சொல்லிட்டா பத்துப் போட்டுடலாமுங்கோ !

ZAKIR HUSSAIN said...

//மலேசிய நாட்டில் குடியேரிய நம் அரசவை வைத்தியர் நகைச்சுவையின் சக்கரவர்த்தி சகோ ஜாஹிரின் ஆலோசனையும் நகைச்சுவையும் முன்ட கூவியில்(அலைபேசி) கேட்டு மகிழ்ந்து வருவீர்கள். //

எனக்கு அப்படியே தலையில் வெள்ளைத்தலைப்பாகையுடன் 8 முழ வேஷ்டி கட்டி, கையில் ஒரு சின்ன பெட்டி வைத்திருக்கும் 'கெட் அப்' க்கு மாத்தும் அளவுக்கு நான் என்ன செய்தேன்????

sabeer.abushahruk said...

ஹலோ மிஸ்டர் ஜாகிர்,

நீர் ஒன்றுமே செய்யவில்லை என்பதால்தான் தலைவரானீர். செய்திருந்தால் தியாகி ஆக்கியிருப்போம். இதுதான் எங்கள் நாடு கற்றுத்தந்த அரசியல்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//செய்திருந்தால் தியாகி ஆக்கியிருப்போம். //

ஒரு சிறு திருத்தம் - தியாகின்னு சொல்லுவோம் ஆனால் மறந்தேயிருந்திருபோம் ! இதுவும் எங்கள் நாடு கற்றுத்தந்த அரசியலே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா இன்னும் பாக்கியிருக்கு ? "கடிதாசி"யானது எங்கேன்னு சொல்லிடுங்களேன்.. தூக்கம் வரலைன்னு கிரவ்னு கனவுல வந்து சொல்லிட்டுப்போறான் !

sabeer.abushahruk said...

//பொற்காலம். இப்பொழுது (சரியான) பொரெகோலம்.// போன்ற சுவாரஸ்யமான செல்லக் கடிகளைத்தான் சொன்னேனாக்கும்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…
அற்புதமான கடுதாசிகள். தம்பி அண்ணாவுக்கு எழுதிய கடிதமாகட்டும் 'தபால்காரர்'அண்ணாவுக்கு எழுதிய கடுதாசியாகட்டும் ரெண்டுமே நல்ல ரசனையோடு எழுதப்பட்டிருக்கிறது.

யாசிர் சொல்வதுபோல் கடற்பாசிதான். சில இடங்களில் கடிதாசி. வழ்க்கம்போல் இருவரும் பங்குபோட்டு ஆட்சி செய்கிறீர்கள்.

வாழ்க!
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அய்யா! இரு கடிதமும் என் எழுத்தோவியமே! இடை ,இடையே வரும் கடிகளுக்கு சொல்லின் வித்தகர் தம்பிகாக்காதான் பொருப்பு.என் எழுத்தில் அவர்தான் சில கடிகளை போட்டார். உதா: நான் எழுதியது அப்பொழுது பொற்காலம் ,தற்பொழுது போர்காலம்.அதை அவர் மாற்றினார் இப்படிBore காலம்னு.

sabeer.abushahruk said...

கிரவுனும் அபு இபுறாகீம் சேர்ந்தா லூட்டியிலே வேறாரும் குறுக்க கெலிக்க முடியுமா என்ன?

அதிரைநிலா said...

ஒன்னுமே புரியலே இந்த தமயன்களின் கடுதாசி

crown said...

அதிரைநிலா சொன்னது…
ஒன்னுமே புரியலே இந்த தமயன்களின் கடுதாசி!
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்னடா ரொம்ப நாளா அதிரை நிலா வந்து காயல( நம்மை காயப்போடல)ன்னு இருந்தேன். இது உம்மை போல அறிஞருக்கு புரியும் படி எழுதவில்லை. நாங்கள் எங்களைப்போல் சாமானியர்களை குறிவைத்துதான் எழுதுகிறோம் அப்படித்தான் எழுத கூடிய அளவிலேயே என் சிற்றரிவு இருப்பதற்கு நான் என்ன செய்வேன்?????????( நெய்னா தம்பிகாக்கா எல்லாருக்கும் எழுதும் ஆற்றல் பெற்றவர்).

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலை நேரம் அதிகம், அதான் உடன் கருத்திட முடியவில்லை.

தோழர் யாசிர் சொல்லியது போல் இது கடுதாசி இல்லை...பால் போட்டு காய்சின கடற்பாசி..

ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.

கடிதம் எழுதி கண்ணாம்பூச்சி காட்டும் நம்ம பெருசு 2ஜி விவகாரத்திற்கு மட்டும் இன்னும் கடிதம் எழுதவில்லையே ஏன்?

சகோதரர் கிரவுன் நீங்கள் ரகசியமாக படித்த கடிதத்தில் இது பற்றி இல்லையா?

crown said...
This comment has been removed by the author.
crown said...

தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும், வேலை நேரம் அதிகம், அதான் உடன் கருத்திட முடியவில்லை. தோழர் யாசிர் சொல்லியது போல் இது கடுதாசி இல்லை...பால் போட்டு காய்சின கடற்பாசி..
ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.கடிதம் எழுதி கண்ணாம்பூச்சி காட்டும் நம்ம பெருசு 2ஜி விவகாரத்திற்கு மட்டும் இன்னும் கடிதம் எழுதவில்லையே ஏன்?சகோதரர் கிரவுன் நீங்கள் ரகசியமாக படித்த கடிதத்தில் இது பற்றி இல்லையா?
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
(முரசொலியில் இன்று ஒரு கடிதம் பகுதியில் வந்த செய்தி இது):
அன்னா! இன்று அதிரை நிருபரில் தாஜுதீன் என்ற
காம்ரேடு கேட்ட கேள்வி(அவர் சகோ,யாசரை தோழர் என்று விளித்துக்கூறிய
தால் அவ்வாறு சந்தேதம் கொள்ளச்சொல்கிறது) என் கடிதத்தில் ஏன் 2ஜி-
யைப்பற்றி இல்லை என்று கேட்டிருக்கிறார்.இது எதிர்கட்சிகளின் தூண்டுதல்தான்
அந்த அம்மையாரின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படியெல்லாம் என் வாயை
கிளறி நான் உலரி கொட்டுகிறேனா? என பார்கத்தான்இப்படியெல்லாம் கேட்கிறார்கள். .அவர்கள் தான் சி.பி.எம்,
சி.பி.ஐ(ம்) என கட்சி நடத்துகிறார்கள் அதற்காக சி.ஐ.டி வேலை பார்கத்துடிப்பதை என் எழுவது ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் அறியாதவனா?
மேலும் ஒரு வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது அதைப்பற்றி எழுதுவதோ,பேசுவதோ கருத்து பறிமாறிக்கொள்வதோ ஜனனாயக மரபல்ல என்பது இந்த காம்ராடுகளுக்கும் ஆரிய அம்மையாருக்கும் தெரியாமலா இருக்கு? இது எல்லாம் யோரோ சொல்லி கொடுத்து நடாத்தும் நாடக அரங்கேற்றமே. அன்னா! நான் அதிகாலை நம்(என்)அறிவாலயத்தில் செல்லும் நடைப்பயிற்ச்சியை தொடரவேண்டும் என்பதால் இந்த எழுத்து நடைக்கு தற்போழுது முற்று புள்ளி வைக்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுனு இப்படி இருந்திருக்கனும்(ப்பா) !

- முரசொலியில் இன்று ஒரு கடிதம் பகுதியில் வந்த செய்தி இது(வாக இருக்குமோ ?):

அண்ணா !

இன்று அதிரை நிருபரில் உன் கடிதத்தை வைத்து கடிகளாகவும் கடல்பாசியாகவும் உஜால செய்வதால் இன்று தாஜுதீன் என்ற காம்ரேடு கேட்ட கேள்வி (அவர் சகோ,யாசரை தோழர் என்று விளித்துக் கூறியதால் அவ்வாறு சந்தேதம் கொள்ளச்சொல்கிறது) என் கடிதத்தில் ஏன் 2ஜி-யைப் பற்றி இல்லை என்று கேட்டிருக்கிறார்.

இது எதிர்கட்சிகளின் தூண்டுதல்தான் அந்த அம்மையாரின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படியெல்லாம் என் வாயை கிளறி நான் உளரி கொட்டுகிறேனா? என பார்கத்தான் இப்படியெல்லாம் கேட்கிறார்கள். அவர்கள் தான் சி.பி.எம், சி.பி.ஐ(ம்) என கட்சி நடத்துகிறார்கள் அதற்காக சி.ஐ.டி வேலை பார்க்கத் துடிப்பதை என் எழுவது ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் அறியாதவனா?

மேலும் ஒரு வழக்கு நீதி மன்றத்தில் இருக்கும் போது அதைப்பற்றி எழுதுவதோ,பேசுவதோ கருத்து பறிமாறிக் கொள்வதோ ஜனனாயக மரபல்ல என்பது இந்த காம்ராடுகளுக்கும் ஆரிய அம்மையாருக்கும் தெரியாமலா இருக்கு? இது எல்லாம் யோரோ சொல்லி கொடுத்து நடாத்தும் நாடக அரங்கேற்றமே.

அண்ணா ! நான் அதிகாலை நம்(என்) அறிவாலயத்தில் (??) செல்லும் நடை(ச் சக்கரவண்டி)ப்பயிற்ச்சியை தொடரவேண்டும் என்பதால் இந்த எழுத்து நடைக்கு தற்போழுது முற்று புள்ளி வைக்கிறேன்.

எனக்கு மொழி மீதிருக்கும் பற்றை இவர்கள் அப்படியே அலைக் கற்றையாக மாற்றி கனி(வுடன்)மொழி (கை)யாடல் செய்யததாக வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் அண்ணா ! உத்தவரவு ஒன்றை இட்டிடு நாளையே வருகிறேன் உன் கல்லறைக்கு உன்னோடு உறங்கிடத்தானே !

-- குறிப்பு --
இவர்கள் (கழகத்தனின் தலை) எழுதும் கடிதங்களை அச்சிட்டு புல்காங்கிதம் கண்ட காலத்திலிருப்பதால் இப்படியாக எழுத வைத்து விட்டது ! - கிரவுனுடைய வரிகளோடு நானும் வாரிப் போட்டு இருக்கிறேன் ("வ"க்குப் பக்கத்தில் கால் போட்டதால் பொறுத்தருள்க மக்களே !)

crown said...

On Apr 18 அபுஇபுறாஹீம் commented on blog post_17: “கிரவுனு இப்படி இருந்திருக்கனும்(ப்பா) !- முரசொலியில் இன்று ஒரு கடிதம் பகுதியில் வந்த செய்தி இது(வாக…”............................................
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்(விசில் சப்தம் கேட்டதா?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்(விசில் சப்தம் கேட்டதா?) ///

அட டா ! வாக்குப் பதிவுகால் முடிந்து விட்டதே... ஒரு ஒட்டு விழுந்திருக்குமே ! (இதனாலே தோல்வின்னு வந்திடாதே !? அண்ணாவுக்கு எழுதிக் கேட்டுடலாம்)

sabeer.abushahruk said...

குசும்பு மன்னர்காள்!

கலக்குறீங்கப்பா. தமிழ் என்கிற ஆயுதம் கொண்டு என்னமா தாக்குறீங்க?

ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க!

crown said...

sabeer.abushahruk சொன்னது…
குசும்பு மன்னர்காள்!
கலக்குறீங்கப்பா. தமிழ் என்கிற ஆயுதம் கொண்டு என்னமா தாக்குறீங்க?
ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க!
------
அஸ்ஸலமுஅலைக்கும். தமிழின் தென்றலே! மொட்டாகிய என்னையும், வளர்ந்த செடியாகி மேலும் வளரும் மரமாகிய அபுஇபுறாகிம் காக்காவையும் சமமாய் பாவித்து தாலாட்டுவது மேலும் எங்களை தமிழ் காற்று வீச தூண்டுகிறது. இங்கு தென்றல் வந்ததால் நாங்கள் அசைந்தோம்.
காற்றையும் வீசுகிறோம்.எங்களை தூண்டும் தென்றலே மெல்ல தீண்டினாலே போதும் எப்போதும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு