Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அலுமினி"யமான தங்கங்கள் 13

அதிரைநிருபர் | April 13, 2011 | , ,

நேற்று ஒரு சுவையான சம்பவம். அமெரிக்காவில் நான் தங்கி இருக்கும் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கு ஒரு நண்பர் புதிதாக குடி வந்தார். அவர் பெயர் சுஷில்குமார். எதேச்சையாக சந்திக்க நேர்ந்தபோது ஒரு 'ஹாய்' சொல்லிக் கொண்டோம். கை குலுக்கும்போது அவரவர் பெயர் சொல்வது முறை என்பதால் 'Hi.. This is Safath ' என்றேன்.

பதிலுக்கு அவரும் "Hello.. This is Sushil'' என்றார்.

பிறகு பேசத் தொடங்கினோம்.

'' Where are you from ?"-இது நான்.
"I'm from Chennai. "

'ஓ அப்படியா.. நானும் தமிழ்நாடு தான்'- தமிழுக்கு மாறியாச்சு....

'நெஜமாவா? பார்த்தா அப்படி தெரியலையே.'- இதே போல் என்னிடம் சொன்ன மூணு லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்றி ஒன்றாம் நபர் இவர். எண்ணிக்கையை அவரிடம் சொல்லாமல், சின்ன புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன்.

பிறகு அவர் தொடர்ந்தார்.

"தமிழ்நாட்டுல எங்கே?"

"தஞ்சாவூர்-ங்க."

"தஞ்சாவூர் ல எங்கே?"

"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர், அங்கே தான்".

"ஓ அப்படியா? பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரி தெரியுமா"- இது அவர்.

என்னடா இது... நம்ம ஊரைப் பத்தி நம்ம கிட்டயேவா?

"அதிராம்பட்டினம் காதிர் மொஹைதீன் கல்லூரில தான் நான் M.C.A படிச்சேன், நாங்க தான் முதல் Set. ஜெயவீரன் சார் தெரியுமா? அப்துல் காதர் சார் தெரியுமா? NAS சார் தெரியுமா?"னு பட்டியலும் பேச்சும் நீண்டது. பின், கல்லூரி நாட்கள், நம்மூரில் அவர் இருந்த மூன்றாண்டு கால வாழ்க்கை, நாயக்கர் கடை சாப்பாடு-னு பேசினார்.

இதே மாதிரி எனக்கு இதுக்கும் முன்பே ஒரு அனுபவம். நம்மூர் கல்லூரியில் இளங்கலை முடித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர்ந்த சமயத்தில் என்னுடைய ஆசிரியரில் ஒருவரும் இப்படி கேட்டார்.

"நீ எந்த ஊருப்பா?"

"தஞ்சாவூர் சார்"

"தஞ்சாவூர் ல எங்கேப்பா?"

"தஞ்சாவூர் பக்கத்துல பட்டுக்கோட்டை-னு ஒரு ஊர் சார்,"

"அப்படியா.. எதுக்கு கேக்குறேன்னா.. அதிராம்பட்டினம்னு ஒரு ஊர்ல காதிர் மொஹிதீன் காலேஜ்-னு ஒரு காலேஜ் இருக்கு, அங்கே இருந்து வருஷத்துக்கு ஒரு மாணவரையாவது இந்த கல்லூரிக்கு மேல்படிப்புக்கு அனுப்பிடுறாங்க. ஒரு வேளை நீயும் அங்கே இருந்து தான் வர்றியோ-னு தான் கேட்டேன்"

"சார், நான் அந்த காலேஜ்-ல இருந்து தான் சார் வர்றேன், உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ-ன்னு தான் தஞ்சாவூர்-னு சொன்னேன் சார்".

ஆக மொத்தத்துல நான் எடுத்திருக்கிற முடிவு என்னான்னா... யாராவது தமிழ் ஆட்கள் நம்ம கிட்ட, எங்கே இருந்து வர்றீங்க?-னு கேட்டால், அதிராம்பட்டினத்துல இருந்து வர்றேன்னு முதல்-ல சொல்லனும். "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா மட்டும் "என்னங்க நீங்க. G.Kல இவ்ளோ கம்மியா இருக்கீங்க.. பட்டுக்கோட்டைக்கு பக்கத்துல தான்". இதையும் தாண்டி "அது எங்கே இருக்கு?"-னு கேட்டாங்கன்னா... "அது தஞ்சாவூருக்கு பக்கத்துல இருக்கு-னு சொன்னா மட்டும் உங்களுக்கு புரியவா போகுது?"-னு கேட்கனும்!!!

ஓ.கே. On a serious note......இந்த கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்ட சுஷில்குமார் போன்று, நமதூர் கல்லூரியில் பயின்று, இன்று நல்ல பொருளாதார வசதியோடு, நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவோர் நிறைய பேர் இருக்கின்றார்கள். என்னுடைய சக நண்பர்களாக இருக்கட்டும், இதை வாசிக்கும் நீங்கள் ஒரு வேளை காதிர் மொஹைதீன் கல்லூரியில் பயின்றவராக இருந்தீர்களானால் உங்க வயது ஒத்தவர்களில் கூட நிறைய பேர் நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதை, கண்டிப்பாக ஒத்துக்கொள்வீர்கள். ஆனால், நம் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? என்ற ஒரு தகவலும் இது வரையிலும் கல்லூரிக்கு தெரியாது. பழைய மாணவர்களோடு இருந்திருக்க வேண்டிய தொடர்பு, இறந்திருக்கின்றது. "பழைய மாணவர்கள் சங்கம்" என்ற ஒரு அமைப்பு கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்களது மூன்றாடு கால கல்வியோடு, அவர்களுக்கும் கல்லூரிக்குமான தொடர்பு அறுந்துபோய் விடுகின்றது. இந்த நிலை மாற வேண்டும். நமதூர் கல்லூரியில் பழைய மாணவர்கள் பற்றிய தகவல் திரட்டப்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

சரி. இதனால் என்ன நன்மை ?

நிகழ்கால மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழி காட்டல்.

பழைய மாணவர்களின் உதவியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

கல்வி முறைகளில் செய்யப்படவேண்டிய முன்னேற்றம் பற்றிய முன்னாள் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவற்றை செயல் படுத்துதல்.

இது போன்ற அரும்பெரும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு நிகழ்கால உதாரணம் தேடுவோர் 'திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி'யின் அலும்னி-அமைப்பைப் பற்றி விசாரித்து அறியலாம். அவர்கள் செய்வது போன்று, வருடத்திற்கு ஒருமுறை சென்னையில் 'முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள்' நடத்தலாம். சிந்திப்போம், செயல்படுத்துவோம்.

STUDENT ALUMNI நம்மூர் பள்ளிகளில் உள்ளதா?  என்ற தலைப்பில் சகோதரர் தாஜுதீன் அவர்கள் அதிரைநிருபரில் சில மாதங்களுக்கும் முன்பு எழுதி நல்ல வரவேற்பை பெற்ற கட்டுரையையும் படித்துப்பாருங்கள்.

 

அன்புடன்,

-- அதிரை என்.ஷஃபாத்

13 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், தம்பி ஷஃபாத்

நீண்ட இடைவேலைக்கு பிறகு மீண்டும் நல்ல பதிவுடன் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

உரையாடலை நீங்கள் சொன்ன விதம் அருமை.

மாணவர் அமைப்பு நம்மூர் கல்லூரிக்கு அவசியம் தேவை என்பதை மீண்டும் வழியுறுத்தியுள்ளீர்கள்.

மீண்டும் சொல்கிறேன், அதிரையில் உள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் குடும்ப ஆதிக்கத்திலிருந்து வெளிவந்து, பொது நல நோக்குடன் நல்ல நிலையில் உள்ள பழைய மாணவர்களை அனுகி அவர்களையும் நிர்வாகத்தில் பங்குபெற செய்ய முயல வேண்டும் என்பது என்னைப்போன்ற வர்களின் நீண்ட கனவு.

இது என்று நிறைவேறும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! நானும் சென்னை தாங்க ! - அங்கே எங்கே ?

ம்ம்ம் தஞ்சைப் பக்கமுங்க ! - அட அங்கே எங்கேங்க !

கடற்கரையோரம் தானுங்க ! - ஓ.. பீச்சுப் பக்கமா ? எந்த ஊருங்க ?

அதிரைப்பட்டினமுங்கோ !

இப்படித்தனுங்க இதுநாள் வரை பிறந்து வளர்ந்து ஊருக்கு வழிச் சொல்லி கொண்டிருந்தோம்...

தம்பி ஷஃபாத்தின் பதிவு புதிய கோணத்தை காட்டி தருகிறது !

இனிமேல் காதிர் முஹைதீன் கல்லூரி இருக்கும் ஊர் அதிரைப்பட்டினம்(தானுங்கோ) !

அருமையான பதிவு

அலாவுதீன்.S. said...

அஸ்ஸஸலாமு அலைக்கும்(வரஹ்) காதிர் காதிர் முஹைதீன் கல்லூரி

மாணவர்களை சிந்திக்க வைக்கும் நல்லதொரு பதிவு. சகோதரர் ஷஃபாத்திற்கு வாழத்துக்கள்!

Yasir said...

சகோதரர் ஷஃபாத்... ஊர் பெயர் இனிமேல் எங்களிடம் கேட்கப்ப்பட்டால் நீங்கள் சொன்னதை போல்தான் சொல்லனும்...நல்ல ஆக்கம்

நான் முன்னாள் ஜமால் முகமது மாணவன் என்ற வகையில் சொல்கிறேன்...ஜமாலின் 80% கட்டிடங்கள் மற்றும் இதர வசதிகள் முன்னாள் மாணவர்களால்தான் செய்பப்படுகிறது...நாங்கள் படித்து கொண்டு இருக்கும்போது கூத்தாநல்லூரை சேர்ந்த முன்னாள் மாணவர் தன் தகப்பனார் பெயரில் 1.5 கோடிக்கு ஒரு முழு கட்டிடத்தையும் தன் செலவில் கட்டிகொடுத்தார்...நானும் எதோ ஒவ்வொரு வருடமும் என்னால் முடிந்ததை செய்து வருகிறேன்...இதைப்போன்ற ஆர்வம் படிக்கும் காலத்திலே ஊட்டப்பட வேண்டும்...”காதிர் முகைதீன் அலுமினி” அமையும் காலத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

Unknown said...

உலகின் எந்த மூலையிலும் புதிதாகத் தமிழ்நாட்டுக்காரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்து, அவர், "எந்த ஊர்?" என்று கேட்டால், எடுத்த எடுப்பில், தைரியமாக, "அதிராம்பட்டினம்" என்று சொல்லிவிடும் பழக்கம் எப்போதும் எனக்குண்டு. "அது எங்கே இருக்கிறது" என்ற கேள்வி அவரிடத்திலிருந்து வந்தால்தான், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் என்று விளக்கம் விரியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு சில பழைய கதைகளால் நம்மூரை பற்றி தவறான எண்ணம் மற்ற ஊர்காரர்களிடம் உள்ளதாலே என்னமே, நம்மவர்கள் நம் ஊரை முதலில் தெரிவிப்பதில் பயப்படுகிறோம்.

நம்மூரில் கல்வி பயின்ற மற்ற ஊர் சகோதரர்கள் நம்மூரை மறக்கவில்லை என்பது நமக்கு ஆறுதலே.

அப்துல்மாலிக் said...

சீக்கிரம் யாராவது முயற்சி எடுக்கலாமே, மதிப்பிற்குரிய சாகுல் சாரும் இதில் அங்கமாக உள்ளதால் இன்னும் சுலபமாக இருக்கும்.

/நிகழ்கால மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழி காட்டல். /

இதுக்காகவேண்டியாவது இந்த முயற்சி முக்கியம், என்னையும் சேர்த்துக்கோங்க, நானும் பழைய மாணவந்தான்

sabeer.abushahruk said...

நல்ல இடுகை. வாழ்துகள் ஷஃபாத்!

அபு இபுறாகீம், நம்ம காலேஜுக்கு ஏதாவது இப்பிடி இருக்கா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நம்ம காலேஜுக்கு ஏதாவது இப்பிடி இருக்கா?//

கவிக் காக்கா : அந்தப்பக்கம் போயி நீண்ட நாட்களாகிவிட்டது 2000ம் வருஷம் இங்கே ஒரு மீட்டிங் நடந்தது அதற்கு பின்னர் தொடர்புகள் சிறுக சிறிக குறந்து விட்டது, இருப்பினும் குழு குழுவாக வைத்திருக்கிறார்கள் இன்னும் நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்..

ஒரு வேளை நம்மை விட சீனியர்கள் (I mean Juniors) இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப செய்துகிட்டு இருக்கலாம்... கையை தூக்குங்களப்பா !!!

N.A.Shahul Hameed said...

Assalamu alaikkum Brother Shafath!
Actually when I returned back after my five years leave without pay in 2005, I insisted the need for organizing the alumni association for our college.
All our beloved members of the staff appreciated it and they never charted out a concrete plan for establishing and orienting the association.
But officially the KMC alumni association is in EXISTENCE. If you visit our college web site you can see that.(Please ignore the English mistakes that are abundant in the website).
Any concept should have a noble cause but if it has any ulterior cause it will meet its own end.
When I was in service, I have been asked to request my (G)old students to contribute some computers to our computer lab. Accordingly I sent an appeal to my students in Singapore and USA. My students from Singapore were kind enough to contribute three computers. But my old students from USA paid a deaf ear. Later they sent me a message that "Sir we are prepare to contribute any amount if you ask for any poor student. But we never pay anything to our college; because we have been humiliated and squeezed when we got admission into our college. They also said we love our teachers and the department".
I cannot say anything to this because what they said is true to some extent.
Whatever it may be,but for KMC there wont be so many poor students who would not have the opportunity to enter into a college. The noble gentleman SMS used to say that or college is for the poor and downtrodden people of this area.
I wish you all should have the awareness of what is happening in the college. It is OUR college and it is the pride of our village.
I do remember an interesting incident in 1979. It was the time when we college teachers went on a mass strike throughout Tamil Nadu and courted arrest. We all went to Trichy Central prison.
When we fell in the queue for our food in the prison, the superintendent of Prison asked one of our colleagues which college he is from. When he replied that he is from KMC, he was indeed excited and shook his hands and said that he was also an alumni of KMC. He enquired about our dedicated professors. He also added that but for KMC I would have been doing agriculture in our farms or would have been insignificant.
This true for many poor, rural, deprived students.
I can tell you a lot of stories of our students who are very well placed and still gratefully acknowledging the services of KMC.
For anything and everything there should be a driving force without any expectations.
I pray Allah to shower his blessings upon the founders of the trust and the noble institutions.
Whether you all acknowledge and remember the service of KMC or not the institution will go on for ever.
If you all really cherish your memories of KMC please try to strengthen the alumni of KMC and contribute your well wishes to it.
Men may come and men may go but KMC will go on for ever.
Wassalam
N.A.Shahul Hameed

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

NAS சார் நீங்கள் சொல்வது உண்மையே. எத்தனையோ கிராமப்புரங்களிலிருந்து வந்து நம்மூர் KM கல்லூரியில் பயின்றவர்கள் அன்றும் இன்றும் நல்ல நிலையில் உள்ளார்கள்.

மற்ற ஊர்களுக்கு எட்டாத கல்லூரி கல்வியை நம் ஊருக்கு சமூக நலனுடன் எல்லாதரப்பட்ட மக்களும் பயன் பெரும் வகையில் உருவாக்கிய அந்த பெரியவர்களை இங்கு நினைவுகூறுவது பொருத்தம்.

பழைய மாணவர்கள் அமைப்பை வலுப்படுத்துவது, கல்லூரியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என்பது மட்டும் ஏன் இன்னும் கல்லூரி நிர்வாகத்துக்கு புரியவில்லை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வலுவான alumniயை உருவாக்கினால் மட்டுமே ஏழை மாணவர்களுக்கு முறையாக உதவ முடியும். இதற்கு சரியான நல்ல தொடக்கம் உருவக்க யாராவது முன்வரவேண்டும்.

நம்மூர் KM கல்லூரி பல்கலைகழகமாக மாறும் நிலை எப்போது வரும்? NAS சார் நீங்கள் சொல்லுங்களேன்.

Meerashah Rafia said...

மச்சான் சஃபாத்..நீண்ட நாளைக்கு பிறகு இப்பத்தான் உன்னை எழுத்தில் பார்க்கமுடிகிறது !?! இருந்தாலும் நீ எழுதிய விஷயத்தை மட்டும்(old student assoc.) நிஜ வாழ்க்கையில் பார்க்கமுடியவில்லை..இங்கு(ஜித்தாவில்) கூட ஜமால் முஹம்மது பழைய மாணவர் சங்கம் நடைபெறுகிறது. நம் அதிரைவாசிகள் அதிகம் வசிக்கும் இங்கு காதர் முகைதீன் சங்கம் இல்லை.

msm(mr)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு