Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேர்தல் பிரச்சார மேடை ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | April 09, 2011 | ,

அன்பிற்கினிய வாசக நேசங்களே .. !

இதுவரையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி கடை நிலைத் தொண்டர்கள் வரை செய்து வரும் தேர்தல் பிரச்சாரங்களை காதால் கேட்டும் கண்களால் கண்டும் வந்திருப்பீர்கள் சிலர் நேரிலும் சந்தித்தும் இருந்திருப்பீர்கள்.

இதோ உங்களுக்காக தேர்தல் பிரச்சார மேடை இங்கு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது நீங்களும் விரும்பிய வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு
தேர்தல் பிரச்சாரம் செய்யலாம், யாருக்கு மக்கள் வாக்குகளை அளிப்பது என்று உங்களின் சுய விருப்புக்குட்பட்டு நளினமான தோரணையில் வரம்புக்குட்பட்டு பிரச்சாரம் அனல் பரக்கச் செய்திடலாம்.

இந்தத் தேர்தல் பிரச்சாரம் முடியும் நாள் தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் கடைசி நாள் அன்று இந்திய நேரப்படி மாலை 5:00மணி வரை மட்டுமே...

முக்கியமாக பிரச்சாரங்களை பதியும் வாசக நேசங்களுக்கிடையே தனிமனித தாக்குதல்களோ தரக்குறைவான வாத்தை தடிமனோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதனையும் மீறி பதியப்பட்டிருந்தால் நெறியாளர் பிரச்சார மேடையை விட்டு இறக்கி விட்டு விடுவார்.

ஜமாய்ங்களேன் !

- அதிரைநிருபர்-குழு

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமை கழகக் கண்மனிகளே... பிரச்சார மேடைக்கு தலைவர்கள் வந்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே குழுமியிருக்கும் வாக்காளப் பெருமக்கள் மேடையருகில் வந்து அமருமாறு கேட்டுக் கொள்கிறோம் இப்படிக்கு - கொசு வளர்ப்பு எதிர்ப்பு வாரியம்.

sabeer.abushahruk said...

அன்புப் பெரியோர்களே, அருமை தாய்மார்களே, உங்களனைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இன்னும் சில தினங்களே இருக்கின்றன நம்மை ஆளப்போகிறவர்களைப் பற்றி நாமே தீர்மாணிக்க. என்ன செய்யப் போகிறோம் சகோதரர்களே?

தற்போது நமது தொகுதியில் நாம் விரும்பி தேர்ந்தெடுக்க யாருமில்லாத நிலையில் உள்ளவர்களில் யார் வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

காரண காரியங்களைப்ப் பற்றி ஏற்கனவே நமது புரட்சி எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் நமக்கெல்லாம் வகுப்பெடுத்துவிட்ட நிலையில் தே தி மு காவுக்கு எக்காரணம் கொண்டும் ஓட்டுப் போடக்கூடது என்று அன்புடன் கேட்டுக்கொள்கொறேன். 

அப்படி அவன் கட்சி வென்று வந்தால் நம்மூரை பாகிஸ்தானுடன் தொடர்பு படுத்த தயங்கமாட்டான் என்பதயும் நினைவில் நிறுத்தி காங்கிரஸுக்கு ஓட்டுப்போடச் சொல்லி அன்புடன் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றிகூறி அமர்கிறேன். நன்றி.


உறுதியாய் இருப்போம்
உதயமாய் எழுவோம்
உள்ளக் கிடக்கைதனை
உலக மய மாக்குவோம்!

இயக்க போதையின்
மயக்கம் தெளிவோம்
பிரித்தாளும்  யுக்தியை
பகுத்தறிந்து தெளிவோம்

ஒட்டுமொத்தக் கூட்டமும்
ஓட்டு யுத்தம் மூட்டுவோம்
மாக்களின் மந்தையல்ல
மக்கள் சக்தியெனக் காட்டுவோம்!

தலைவர்கள் கூட்டத்தை
தள்ளி வைத்துக் கொள்வோம்
நமக்கு நாம்தா னென
சொல்லிவைத்து வெல்வோம்!

இயக்கமும் தயக்கமும்
இம்மையில் போக்குவோம்
மறுமையை குறிவைத்தே
மாற்றங்கள் கொணர்வோம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பிற்கு பெருமைக்கும் உரிய் வாக்கு வங்கியின் உரிமையாளர்களே !

இதோ உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களோடு ஒன்றாக இருப்பவன் கேட்டுக் கொள்வதெனில் தமிழகத்தில் என்னன்ன கூத்துக்கள் நடக்கிறது என்பதை உங்கள் வீட்டின் வரவேற்பரையிலேயே காட்சிகளாக காட்டிட ஆயிரமாயிரம் தொலைக் காட்சி அலைவரிசைகள் இருக்கிறது ஆனால் காற்றலை அலைவரிசைன்னு ஒன்றைச் சொல்லு பூச்சாண்டி காட்டுவதும் அதற்கு பயப்படாவதவர்க்ளோல் பாவ்லா செய்வதையும் கண்டு கழித்து வருவீர்கள். இதற்குத்தானே கொடுத்தார்கள் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் !

ஆதலால், அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் செல்லாமல் உங்களுக்காக மாதிரி தேர்தல் அறிக்கை ஒன்றை தயாரித்திருக்கிறேன் அதனை வெகுவிரைவில் தேர்தல் நடக்கும் நாளுக்கு முன்னரே உங்களுக்கு அறிவிக்கிறேன் காரணம், அதனையும் காப்பியடிக்க ஒரு கூட்டம் இருப்பதாக ரகசியத்துறையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன...

இந்த இரவு நேரத்திலே சுட்டெரிக்கும் சூரியனை வெட்கப்பட வைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா ஒளிந்து கொண்டது, இரவு காலங்களில் மின் வெட்டையும் செய்திட்டு ஐந்தரை மணிக்கு சூரியன் ஒளிந்து கொள்கிறது... இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கத்தான் நமது தேர்தல் ஆணையமே முயற்சி எடுத்து நம் மக்களுக்கு இரட்டை மெழுகு வர்த்தியைக் கொடுத்து ஒளிகாட்டுங்கள் ஒளிந்து நிற்காதீர்கள் என்றும் அனுப்பியிருக்கிறது. இவர்கள் நம்து தொகுதியிலே நிற்காவிட்டாலும் அவர்களின் வெற்றிக்கா பிரார்த்திப்போம்...

யார் வரக்கூடாது எனப்தில் தெள்ளத் தெளிவாக இயக்கங்கள் இருப்பதால் அதே ஃபார்முலாவை பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு அதே இயக்கங்கள் அமுல்படுத்துமேயானால் நல்லதாக இருக்கும்...

இன்னும் எனக்குப் பின்னால் கழக கண்மனிகள் பேச இருப்பதால் இன்னும் சில மணித்துளிகள் கழித்து தேர்தல் அறிக்கையோடு வருகிறேன்.

ZAKIR HUSSAIN said...

தேர்தல் நேரத்தில் எனக்கு பிடித்தமான சில விசயங்கள்....
[ படித்தது..அல்லது ...சுட்டது ]


'"தி.மு.க" வோ "ஆ.இ.அ.தி.மு.க" வோ,இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழக மக்களின் தோல்வி மட்டும் உறுதியான ஒன்று'

""வந்தாரை வாழவைக்கும் தமிழகமாம்",வந்தவங்கலாம் வாழ்ந்துட்டாங்க சரி,what about தமிழகம் ??'

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இது தேர்தல் பிரச்சார சிந்தனை மேடை.

முஸ்லீம் இயக்கங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த தேர்தலை இட ஒதுக்கீடு என்பதை மட்டுமே முக்கிய அம்சமாக வைத்து அனுகுவது மிக மிக வேதனையாக உள்ளது. அடிமட்ட மக்களிடையே எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது, அவைகளை எல்லாம் மறந்துவிட்டார்கள். ஏனோ புரியவில்லை.

ஒரு முஸ்லீம் அல்லாத இணைவைக்கும் வேட்பாளர்களுக்கு தரும் மரியாதையில் ஒர் சதவீதம் கூடம் ஒரு கலிமா சொன்ன வேட்பாளருக்கு தரமறுக்கிறார்கள் நம் சமுதாய இயக்கங்கள்.

மக்களே தமிழக அளவில் போட்டியிடும் எந்த கட்சியாக இருந்தாலும் முஸ்லீம் வேட்பாளர்களை தேர்ந்தேடுத்து சட்டசபைக்கு நம்மவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முன்வாருங்கள்.

ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் வேட்பாளர்கள் இருப்பார்களேயானால், இவர்களில் உண்மையில் சமுதாயத்திற்காக மட்டுமே வீதிகளில் நின்று போராடக்கூடிய வேட்பாளார்களை தேர்ந்தேடுங்கள்.

அதிரையை பொருத்தவரை பணம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் கும்பல் அது யாராக இருந்தாலும் அவர்களை புரக்கணித்து, நம்மூரின் எதிர்காலத்தை மனதில் நிறுத்தி அதிரையின் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுவோம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியளிக்கும் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

மார்க்கத்தை மட்டுமே பேசும்வோம் என்று கங்கனம்கட்டிக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் நாடகமாடிவரும் போலிக்கூட்டங்களுக்கு ஏக இறைவனின் சாபம் நிச்சயம் இன்று இவ்வுலகில் இல்லாவிட்டாலும் நாளை மறுமையில் நிச்சயம் உண்டு என்பது மட்டும் உறுதி.

முஸ்லீம்களின் தனித்தன்மையுடன் தானும் ஈடுபடமாட்டேன், மற்ற முஸ்லீமையும் ஈடுபடுத்தவிடமாட்டேன் என்று மற்றானுக்கு கொடி பிடிக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் இறைவனுக்கு பயந்துக்கொள்ளுங்கள். குழப்பவாதிகளுக்கும் அரசியல் சூழ்ச்சியாளர்களுக்கும் அடிமையாகிவிடாதீர்கள்.

உண்மையில் இந்த சமுதாயத்திற்காக உழைக்க நிய்யத் வைத்து இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கலிமா சொன்ன முஸ்லீம் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மார்க்கத்தை மட்டுமே பேசுவோம் என்று ஏகத்துவத்துவத்துக்காக பலவகையில் உதவிய பல ஆயிரக்கணக்கான சகோதரர்களை ஏமாற்றிவிட்டு. இந்த கேடுகேட்ட அரசியல் சூழ்ச்சி நாடகத்தில் சக முஸ்லீம்களை மேடைக்கு மேடை திட்டித்தீர்த்துவரும் நம் சகோதரர்களின் சமீபத்திய அரசியல் தேர்தல் மேடைபேச்சுக்களால் மனம் வருந்தியிருக்கும் பலரில் நானும் ஒருவன். யா அல்லாஹ் இச்சகோதரர்களை மன்னிப்பாயாக..

மக்களே சிந்தியுங்கள்… அல்லாஹ் போதுமானவன்…

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//"தி.மு.க" வோ "ஆ.இ.அ.தி.மு.க" வோ,இருவரில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழக மக்களின் தோல்வி மட்டும் உறுதியான ஒன்று'//

உண்மை, சரியாக சொன்னீர்கள் ஜாஹிர் காக்கா..

இந்த சூழலை அறிந்திருக்கும் நம் சமுதாய இயக்கங்கள் ஒன்று பட்டாவது, தங்களின் பலத்தை காட்ட தவறுகிறதே என்பது வேதனையிலும் வேதனை.

நம் சமுதாய இயக்கங்கள் எல்லோரும் சுயநலவாதிகள் என்பது மட்டும் focus light பேடாமல் வெளிச்சமாக உலகுக்கு தெரிகிறது. யார் சொல்லுவது உண்மை என்பதில் ஆளு ஆளுக்கு மீடியாக்களில் உலரிக்கொட்டிருக்கும் இவ்வேலையில், நாங்கள் உத்தமர்கள் என்று சொல்லிக்கொள்ள எந்த ஒரு இயக்கத்திற்கும் அருகதையில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாங்க தம்பி தேர்தல் மாவட்டம் ஓட்டுபோடான் குடி "O-49" வட்டச் செயலாளராக இருக்கும் நீங்கள் அதுக்குத்தானே சப்போர்ட் பன்னுவீங்க ! இந்த தேர்தல் அறிக்கை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு முடிவு செய்யுங்களேன்...

வந்தாரை வாழவைக்கும் அதிரைப்பட்டினத்து மக்களின் மனங்களை வென்றெடுத்த எங்கள் கூட்டணி இந்தமுறையும் நடக்கின்ற தேர்தலில் போட்டியிடாத கூட்டணியாக களம் இறங்கியிருக்கிறோம் ஆகவே எங்கள் மக்களுக்காக அறிவித்து இருக்கிறோம் இது எங்கேயும் காப்பியடிக்காத, உளவுத் துறை வைத்து கண்டெடுக்காத உங்கள் யாவரின் உள்ளக்கிடைக்கையில் உள்ளவைகள்தான் எங்களின் தேர்தல் அறிக்கை.

1. இலவசம் என்றாலே முகம் சுளிக்கும் எம்மக்களுக்கு நமது சுற்று வட்டாரத்திலிருக்கும் மனைகளை அவர்கள் விரும்பிய தொகைக்கு விலை நிர்ணயம் செய்து விற்றுக் கொள்ள வாங்கிக் கொள்ள எவ்வித தடங்களும் இல்லாமல் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் செய்யப்படும்.

2. வீட்டுக்கு ஒரு இன்வெர்ட்டரும் தனித்து இயங்கும் கவுந்த சேட்டிலைட்டும் உங்களது வீட்டுக்கு வீடு தன்னிச்சையாக வைத்துக் கொள்ள முழு உரிமைகள் வழங்கப்படும். இதற்கு ஒத்துழைப்பாக தொடர்ந்து மின்சார வெட்டு தொடர்ந்திட மேலும் பாடுபடுவோம்.

3. சந்துக் சந்து கொசு வளர்ப்புக்கு தேவையான அனைத்து வகையான குப்பைகள், கூலங்கள் சேகரிக்க திறந்தவெளி சேமிப்பு கிடங்க ஆரம்பிக்கப்படும்.

4. ஆங்காங்கே தனித் தனி சங்கங்கள் வைத்து செயல் படும் அணைத்து கொசுக்களையும் ஒன்று சேர்த்து கொசு வளர்ப்பு வாரியம் வழங்கப்படும், அதோடு அவர்களின் கடுமையா உழைப்பில் சேகரிக்கப்படும் இரத்தங்களை கல்லபடமில்லாமல் சேமித்திட சேமிப்பு கிடங்குகள் வைத்துக் கொடுக்கப்படும்.

5. குப்பைகள் ஓரிடத்திலே குவிந்திருக்காமல் பரந்து விரிந்து பரவிட சுழலும் முறையில் தெருவுக்கு தெரு பரவிட தனிப்படை அமைத்து அவர்களை அதற்காகவே செயல்பட வைத்திடுவோம்.

6. அதிராம்பட்டினத்தில் மீண்டும் புதிய வகை மின்சாரம் கண்டுபிடிக்க தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு ஆய்வுக்கூடம் அமைத்து அதன் மூலம் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி அவரவர் வீட்டுக்கு அவரவர்களே மின்சாரம் தயாரித்துக் கொள்ள இலவச உரிமம் வழங்கப்படும்.

7. கதாநாயகி வேலைவாய்ய்பு திட்டத்தின் கீழ் தெருவுக்குத் தெரு குழிகள் ஆழமப்படுத்தப்படும் ஆங்காங்கே மழைநீர்த் தேக்கங்கள் தானாக ஏற்பட வழி வகை செய்யப்படும்.

8. அதிராம்பட்டினத்தின் வழியாக நீட்டப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளை இருப்புப் பாதைகள் என்று அழைப்பதை மாற்றி துரும்பு பாதைகள் என்று மற்றியமைக்கப்படும்.

9. நெருக்கமாக இருக்கும் இரயில் பாதைகளை இரண்டையும் பிரித்து அகலப் படுத்த நடக்கும் சதியை முறியடிக்க தனி இயக்கம் அமைக்கப்படும். இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படும்.

10. தேர்தல் கமிஷன் வேட்டை வசூலில் கிடைத்த தொகையில் 50 விழுக்காட்டை கமிஷனாக பெற்று தோற்ற வேட்பாளார்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் மீத முள்ள 50 விழுக்காடு கமிஷனை கூட்டணி மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

Shameed said...

காங்கிரஸ் பள்ளிவாசல் இடிப்பதை வேடிக்கை பார்ப்பார்கள் முஸ்லிகளை கொலை செய்வதையும் வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை 20 வருடம் கழித்தும் பழி தீர்த்தார்கள் அவர்களுக்கும் இல்லை என் ஓட்டு

அ தி மு க ,வெற்றி பெற்றால் கோழி ஆடு மாடு அறுப்பதில் நமக்கு தொல்லை கொடுப்பார்கள் அதனால் அவர்களுக்கும் இல்லை என் ஓட்டு

தி மு க வெற்றி பெற்றால் நமக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுத்துவிட்டு அவரின் கொள்ளுப்பேரன் வரைக்கும் தமிழ் நாட்டை பங்கு போட்டு கொடுத்து விடுவார் அதனால் அவர்களுக்கும் இல்லை என் ஓட்டு

விஜயகாந்த் இவர் வெற்றி பெற்றால் தினமும் ஆளுக்கு ஒரு குவாட்டர் இலவசம் கொடுப்பார் குவாட்டர் குடித்தவன் குப்புற விழுந்தால் பாகிஸ்தானி தள்ளிவிட்டான் என்பார் அதனால் இவருக்கும் இல்லை என் ஓட்டு

ராமதாஸ் தேர்தல் ரிசல்ட் வந்ததும் இவரின் கவுன் டவுன் தொடங்கிவிடும் கட்சி மாற ஆகையால் இவருக்கும் இல்லை என் ஓட்டு

முஸ்லிம் கட்சிகள் ஓற்றுமை என்று நம் மார்கத்தில் சொன்னதை வேற்றுமை என்று புரிந்து கொண்டு செயல் படும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இல்லை என் ஓட்டு

இந்த தேர்தலில் நேர்மையாகும் நியாயமாகவும் செயல் படும் தேர்தல் கமிசன் தேர்தலில் நின்றால் என் ஓட்டு அவர்களுக்குத்தான்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

என் உயிரினும் மேலான ரெத்தத்திதின் ரெத்தமாகிய சமுதாய சிங்கங்களே,தோழர்களே,உடன்பிறப்பே,வங்கக்கடலோரம் குடிகொண்டிருக்கும் வாக்காள உயர்பெருமக்களே!
புதனன்று சரியாக காலை மாலை என நடைபெற இருக்கும் தேர்வில் உங்கவீட்டு பிள்ளைகளில் உள்ள நல்ல ஒன்றுக்கு ஓட்டு போடுங்கோ என்று கூறி அதை வழிமொழிகிறேன், மேடை ஏற வாய்ப்பு கொடுத்த நீங்கள் வாக்கிங்காக வீடு போய் சேருங்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.வாழ்க தமிழகம்,வளர்க தண்டவாளம்,ஒழிக தனி இயக்கம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு