பெற்றவளின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது.
நம் இதயம் நாள் ஒன்றுக்கு நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் அணைபோடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதயம் சுயேட்சையாக துடிப்பது இல்லை, அது துடிக்கவும் இயங்கவும் ஓர் உந்துதல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது அதோகதிதான். மின்சாரம் உற்பத்திச் செய்யும் நிலையம் இதயத்தின் மேல் வலது பக்கமிருக்கும் ஒரு சிறு அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை நமது ஜெனரேட்டராகும். இதனை ஆற்காட்டாரின் இயங்கு விதிப்படி கீழ் இயங்கவைத்தால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்கு இதயத்தின் பல பகுதிகளில் இருந்தும் மின்சாரம் கிடைக்கும். இதனால் திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரித்து, கூடுதல் மின்சாரம் பாய்ந்து மரணம் கதவைத் தட்டவும் வாய்ப்பு உண்டு!
''இதயம் என்பது மின் உற்பத்தி மூலமும், ரத்தக் குழாய்களில் ஊட்டச் சத்துகள் இதயத் தசைக்குக் கொண்டுசெல்லப்படுவதன் மூலமும் இயங்குகிறது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படும்போது, ஊட்டச் சத்து கொண்டுசெல்லப்படுவது பாதிக்கப்பட்டு, இதயம் செயல் இழக்கிறது. இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதும், மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரச்னைக்கு ஆளானாலும், இதுபற்றி போதிய விழிப்பு உணர்வு இன்னமும் ஏற்படவில்லை.
மேலேச் சொன்ன சைனஸ் நோட் எப்போதும் ஒரே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்பது மருத்துவர்களின் கருத்து. மனித உடலின் உழைப்பு அசைவுகளுக்கு ஏற்ப உற்பத்தி மாறுபடும். அதாவது தூங்கும்போது குறைவாகவும், ஓடுதல், மாடிப் படி ஏறுதல், பயம் ஏற்படும்போது என சமயங்களில் அதிகமாகவும் உற்பத்தியாகி இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்கிறது.
இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்மியா எனப்படுகிறது, இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா எனப்படுகிறது. இதயத்தின் எந்த ஒரு திசுவில் இருந்தும் தேவை இல்லாமல் மின்சாரம் வெளியாகத் தொடங்கிவிடுவது. உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், திடீர் படபடப்பு, வியத்துக்கொட்டுதல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதயக் கீழ் அறைகளில் மின் உற்பத்தி ஏற்படுமானால், உயிருக்கு ஆபத்து நேரிடும்.
இந்த பிரச்சினை கருவில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய வால்வு பிரச்னை, தைராய்டு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கும், புகையிலை, மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை ஈ.சி.ஜி. எடுப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இதில் தெரியவில்லை என்றால், எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மூலம் கண்டறியலாம்.
தேவை இல்லாத மின் சக்தி எங்கு உற்பத்தியாகிறது என்பதைக் தேடிக் கண்டறிந்து, அதனை மருத்துவர்கள் அழிப்பதன் மூலம் கூடுதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்படுகிறது (இந்த மருத்துவ தொழில் நுட்பத்தைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்).
இப்போ சொல்லுங்க மின்சாரம் ஏன் தடைபடுகிறது ? ஒரு வேளை மின்சாரம் தயாரிக்கும் ஜெனெரேட்டரோடு இதயங்கள் திருடப்படுவதலா ?
வாசித்ததும் நேசித்ததும் உங்களின் சுவாசத்தை சீராக்கத்தான் இப்பதிவு !
தொகுப்பு: அபுஇபுறாஹிம்.
8 Responses So Far:
அஸ்ஸலாமு அழைக்கும்
உங்கள் இதயம் பற்றிய கட்டுரை
எங்கள் இதயம் தொட்டு விட்டது
மருத்துவ ஆராய்ச்சிகளின் முன்னேற்றம் இது வரை சில விசயங்களை சரியாக கண்டுபிடிக்கவில்லை;
1. இதயம் துடிக்க சிறு அளவு மின்சாரம் தேவைப்படுகிறது அல்லது , இதயம் தானாகவே உற்பத்தி செய்து கொள்கிறது....ஆனால் அது எந்த இடத்தில் உற்பத்தியாகிறது என இதுவரை தெரியாது.
2. ரத்தத்தை தனித்தனியாக பிரிக்கும் லேப் டெக்னாலஜி முன்னேறினாலும் பிரித்த ரத்தத்தை ஒன்று சேர்த்தால் ரத்தம் ஆகாது.
3.ஜீன் , மற்றும் பிறப்பு சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களில் செய்யப்படும் எந்த விதமான Modifications க்கும் அந்த உயிர் இருக்கும் வரை எந்த பிரச்சினை வந்தாலும் எந்த மருத்துவமும் சரியான கியாரன்டி கிடையாது [ சைனா செட் மாதிரிதான்]
[ஆட்டமா ஆடினாலும் அடங்கப்போறது அந்த சர்வ வல்லமை படைத்த ஒருவனிடம்தான் என்பது லேசா பொறிதட்டுமே...]
still lot more to invent.........
அஸ்ஸலாமு அலைக்கும். எதையும்பற்றி இவர் எழுதினாலும் அதில் ஒரு பவர் இருக்கும்.இதயம் பற்றி எழுதினால் இல்லாமல் போய்விடுமா? நல்ல தொகுப்பாக தொகுத்து தருவதில் கில்லாடி.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல தொகுப்பு, கல் நெஞ்சுக்காரன் என்று சொல்லுகிறார்களே, இவர்களுக்கு இதயத்தில் மின்சாரம் அதிகமா? குறைவா?
ஜாஹிர் காக்கா, நீங்கள் சொல்லுவது சரியே, இன்னும் கண்டுப்பிடிக்கபடாதவைகள் நிறைய உள்ளது.
குர்ஆனை ஆராய்ந்தால் தீர்வுகள் நிச்சயமே...
அபு இபுறாகீம்,
அபுவாக ஆவதற்குமுன் இதயத்துடிப்புக்கு தேவையான மின்சாரத்தின் அளவு பார்வைக்குப்பார்வை வித்தியாசப்படும் என்றல்லவா எண்ணியிருந்தேன்? இப்பதான் உண்மை புரியுது.
நல்ல பதிவுப்பா, வாழ்க!
கவிக் காக்கா: இப்பவும் ஸ்டெப்லைசர் தேவைகள் அதிகம்தான் "அபு"வுக்கு முன்னர் நிகழ்வுகள் பேருந்துப் பயணத்தில் பின்னால் ஓடும் வெளிச்சம் போல்தான் அந்த மின்சார உற்பத்தி ஆனால் "அபு"வுக்கு பின்னர் அதிரையின் மின்சாரம் மாதிரி ஏற்றமும் இருக்கும் இறக்கமும் இருகும் இதயங்களில் கசிவுகள் ஏற்படும்போது அங்கே தான் நிற்கிறார் Mr.அபு(வானதுக்குப் பின்னால்)
///still lot more to invent.........///
அசத்தல் காக்கா : கடந்த ஒரு வாரமாக இதயங்கள் ஏன் திருட்டுப் போகின்றன என்று ஓர் ஆய்வுக்காக தேடலில் இருந்தபோது அசரவைக்கும் ஆச்சர்யங்கள் என்னுடைய தூங்கும் நேரத்தை குறைத்து வைத்து உட்காரவைத்து விட்டது அங்கிருந்து கிடைத்தவைகளில்தான் இப்பதிவும். இன்னும் நிறைய இருக்கிறது.. நீங்களும் சொல்லித் தாருங்களேன் (வழக்கமாக)
இதயம் படபடக்க படித்தேன், அருமை காக்கா தகவல் பகிர்வுக்கு நன்றி
Post a Comment