அல்லாஹ்வின் சாந்தி நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
அல்லாஹ்வின் அருளால் கல்வி விழிப்புணர்வுப் பயனத்தை மேற்கொன்டிருக்கிற நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தரமான கல்வியை கொடுப்பதற்காகவும், வளரும் சமுதாயத்தை வருங்கால சவால்களை சமாளித்து வெற்றியின் இலக்குகளை நோக்கி பயனிக்க தகுதியானவர்களாக உருவாக்குவதற்காகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து அவர்களை வழிநடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்த பொதுவாக எல்லோரும் மேற்கொள்கிற வழி "டியூஷன்". அன்றாடம் வகுப்பில் நடத்துகிற பாடத்தைப் மீண்டும் ஒரு முறை படித்து அதில் ஏற்படுகிற சந்தேகங்களைக் களைந்து பாடத்தை மனதில் பதிய வைத்துக்கொள்கிற பணியைத்தான் இந்த டியூஷன் செய்கிறது. வசதி உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி படிக்கவைக்கின்றனர்; ஆனால் படிப்பதற்கே வசதி இல்லாத ஏழைகளுக்கு டியூஷன் என்பதெல்லாம் எட்டாக் கனியாகவே இருக்கிறது. எனவே, நாம் பொதுவான மையங்களை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வின்றி எல்லா மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் வழி வகை செய்ய வேண்டும்.
பயிற்றுவிக்கும் முறை:
பொதுவாக டியூஷன்களில் ஆசிரியர்கள் மானவர்களுக்கு பயிற்றுவிப்பர். அவ்வாறு ஆசிரியர்களைக்கொன்டு பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொன்டே மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். அதாவது எல்லா வகுப்புகளிலும் நன்றாகப் படிக்கின்ற மாணவர்கள் இருப்பர்; அவர்களைக்கொன்டு மற்ற மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். மேலும் மேல் வகுப்பு மாணவர்களைக்கொண்டு கீழ் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை தேர்ந்த ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் நல்ல உத்யோகங்களில் உள்ளவர்களைக்கொண்டு SEMINAR எடுக்கலாம். பாடம் நடத்துகிற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கலாம்.
நன்மைகள்:
ஆசிரியர்களை வைத்து பயிற்றுவிக்காமல் மாணவர்களைக்கொண்டே மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதால் அல்லாஹ் நாடினால் கீழ்கானும் பலன்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.
1) படித்துக் கொடுக்கின்ற மாணவர்கள் பாடங்களை மேலும் தெளிவாக புரிந்துகொள்வர்.
2) சக மாணவர்களே பாடம் நடத்துவதால் படிக்கின்ற மாணவர்களுக்கும் ஒரு சகஜமான சூழ்நிலை ஏற்பட்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வழி வகுக்கும்.
3) மேல் வகுப்பு மாணவர்கள் கீழ் வகுப்பில் உள்ளவர்களுக்கு பாடம் எடுப்பதால் அவர்களுக்கு பழை பாடங்களையும் நினைவில் வைத்துக்கொள்ளும் வாய்புகள் ஏற்படும்.
4) பல மாணவர்களுக்கு முன் நின்று பாடம் நடத்திப் பழகுவதனால் அச்சம் தெளிந்து மேல் வகுப்புக்குச் செல்லும்போது SEMINAR போன்றவற்றில் சிறப்பாக செயல்பட உதவும்.
5) சராசரி மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அவர்களையும் பாடம் எடுக்க வைக்கலாம்.
6) பெண்களுக்கு டியூஷன் செல்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க இது வழிவகை செய்யும்.
7) மாணவர்கள் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சுயமாக கற்கும் ஆற்றல் அவர்களிடத்திலே வந்துவிடும்.
8) மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும்.
இவ்வாறாக அல்லாஹ்வின் உதவியால் ஏராளமான பலன்கள் கிட்ட வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.
நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
14 Responses So Far:
நல்ல யோசனை,நிச்சயம் அனைவருக்கும் பாகுபாடின்றி பலன் கிடைக்கும்,மாணவரிடையே கல்வி ஆர்வமும் பெருகும்.
ஜனவரியில் நடந்த கல்வி விழிப்புனனர்வு மாநாட்டில் சிறாப்பான உரையாற்றிய தமிழ் மாமணி பஷீர் ஹாஜியார் அவர்கள் அச்சூழலில் சொன்னதை இங்கே நினைபடுத்துவது நன்மையை நாடியே !
//இரண்டரை வயது பிள்ளையை பள்ளிக் கூடத்திலே கொண்டுபோய் விட்டு விடுகின்றோம் கேட்டால் சொல்வார்கள் எங்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது "கெட்டுப் போவான்” (தொலைக்காட்சிகள்) எத்தனையோ சீரியல்களை போட்டுக் கொண்டே இருக்கான் எதையும் பார்க்கிறதுக்கு எங்களுக்கு நேரம் இருக்க மாட்டேங்கிறது, இந்தப் பிள்ளையை எப்படி நாங்க வளர்ப்போம் என்று இந்தா ஒப்படை என்று சொல்லி மழலையர் பள்ளியில் கொண்டு போய் விடுகிறார்கள். நேரமானால் டியூசனுக்கு தனிப்படிப்பிலே கொண்டுபோய் விடுவார்கள் இவங்களுக்கு வேலையிருக்கும்போது தனிப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியருக்கு வேலையில்லையா ? அவர்களும் அப்படித்தான் படி படி என்று சொல்லி படிக்க விட்டுவிடுவார்கள் ஆக அவர்கள் கூட இவர்களுக்கு வேலையிருப்பதுபோல அவர்களுக்கும் வேலையிருக்கும் எத்தனை சீரியல்கள் வருகின்றது அதனைப் பார்த்துக் கொண்டு கடைசியில் விரட்டி விடுவார்கள் இதுதான் நடக்கிறது.
ஆக ! விழிப்புணர்ச்சி விழிப்புணர்ச்சி என்று சொல்லும்போது நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக மாற வேண்டும், நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் எனக்குத் தெரியாது என்று சொல்ல வேண்டியதில்லை ஏனென்று சொன்னால் உங்களுக்குத் தெரியாது என்ற விஷயம் அந்தக் குழந்தைக்குத் தெரியாது. எடுங்கள் புத்தகத்தை எடு என்ன எழுதினாய் படி என்று வேலை வாங்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் இப்படித்தான் நம்முடைய குழந்தைகளை மடைமாற்றம் செய்து வளர்க்க வேண்டியவர்களாக பொறுப்பிலே இருக்கின்றோம். ஆகவே இந்தக் கருத்துக்களை உங்கள் முன்னால் நான் வைப்பதனுடைய காரணம் விழிப்புணர்ச்சி உள்ளாவர்களாக நாம் மாறி விட வேண்டும் ஏமாற்றம் உள்ளவர்களாக ஆகிவிடக் கூடாது இந்த சமுதாயம் ஏலத்தால் மலிந்திருக்கக் கூடிய சமுதாயம் காலத்தால் நிறைந்திருக்கக் கூடிய சமுதாயம் ஏமாந்த சமுதாயமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாம் இத்தனை பேர்களை எடுத்துக் காட்டுகின்றேன். எத்தனை ஆலிம்களை சொல்லியிருக்கிறேன் அத்தனை ஆலிம்களும் தனித் திறமை பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.//
தம்பி அபு ஈசா, அருமையான பதிவு மட்டுமல்ல நல்ல யோசனைகள், இதைத்தான் அன்றும் நாங்களும் இரயிலடி, ஏரிக்கரை இப்படியாக சென்றோம் அங்கே சிக்கும் (நல்ல சீனியர்கள்) கணக்குப் பாட சிக்கலை அவிழ்ப்பது எப்படின்னு சொல்லியும் தருவவர்கள். (அது ஒரு பொற்காலம்)
அருமையான ஐடியா, இதன் மூலம் நிச்சயம் 4ம் 7ம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு முக்கியம், இதை இந்த யோசனை மூலம் அடிப்படையிலேயே இதை செயல்படுத்த ஏதுவாக இருக்கும். நாங்க படிக்கும்போது எங்களுக்குள்ளேயே போட்டிப்போட்டு இதை நடைமுறைப்படுத்திருக்கிறோம். இதற்கான கால /இடம் தேர்வு செய்து அல்லது பள்ளியிலேயே தலமையாசிரியரின் அனுமதியுடன் பள்ளி நேரம் போக செயல் படுத்தலாம். அல்லாஹ் போதுமானவன்
அபு ஈஸாவின் மற்றுமொரு ஆக்கபூர்வமான கட்டுரை வாசிப்பதில் மகிழ்ச்சி.
மிகச்சிறந்த யோசனை. அறுமையான முன்மாதிரி. நன்கு படிக்கும் மாணவர்களைப் பெற்றோர்கள் அனுமதிக்கும்பட்சத்தில் அதிக வெற்றிவாய்ப்புள்ள திட்டமிது.
வாழ்த்துகள் காதர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அபு ஈசா,
மிக அருமையான யோசனை, எனக்கு தெரிந்து இது போன்றவைகளை ஓர் சரியான அமைப்புரீதியாக கட்டுப்பாடுடன் செய்ய வேண்டும். நிச்சயம் பயனுல்லதாகவே இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவுவதால் நன்மையே அதிகம்.
ஒரு காலத்தில் குருப் ஸ்டடீஸ் அதிகம் இருந்தது, ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை இன்று அது குறைந்துவிட்டது. பொன்னான நேரங்களை வீண்டடிக்கும் தொலைக்காட்சிகளின் பொழுத்துப்போக்கு நிகழ்ச்சிகளும், பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பெற்றோர்களின் பொடுபோக்கும் தான் இதற்கு காரணம்.
பிள்ளைகளுக்கும் சமுதாய அக்கறை சிந்தனைகளை சிறுவயதிலிருந்து ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. இதன் மூலமே ஒருவருக்கு ஒருவர் கல்வியிலும் மற்றும் பல நற்செயல்களிலும் ஈடுபட ஆற்மூட்டும்.அறிவை பகிர்ந்துக்கொள்வதால் எல்லோருக்கும் நன்மைதானே.
//மாணவர்கள் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே தயார்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் சுயமாக கற்கும் ஆற்றல் அவர்களிடத்திலே வந்துவிடும்.//
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். நான் +1 +2 அல் அமீன் பள்ளியில் இருக்கும் போது, நாங்கள் இது போன்று செய்ததே, இன்று பல Presentation செய்வதற்கு சிரமமே இல்லை.
//பெண்களுக்கு டியூஷன் செல்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க இது வழிவகை செய்யும்.//
ஆண்களுக்கு சாத்தியம்.
அதிரைப் போன்ற ஊர்களில் பெண்களுக்கு இது போன்ற டியூசன்கள் சாத்தியமா என்பது கேள்வி குறியே. இருப்பினும் பள்ளிக் கூடங்களே இதை ஊக்கப்படுத்தினால் சாத்தியம்.
ஆஹா..அருமை.
இன்னும் சொல்லப்போனால் பொருளாதரத்தை கருதிதான் பல வாத்தியார்கள் டியுசன் எடிக்கின்ற சூழ்நிலையாக உள்ளது. மாணவர்களே எடுத்தால் பொருளாதாரம் என்ற நோக்கம் இல்லாமல் தாராளம் என்ற நோக்கம் மேலோங்கி முன்னுக்கு செல்லும்.
msm(mr)
தாஜுதீன் காக்காவைபோல் நானும் 'ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரியில் படிக்கும்போது English Seminar,Multimedia Teaching போன்றவை என் சகமானவர்களுக்கு நடத்திவந்தது என்னை பல மேடைகளில்,கிளைன்ட் மீடிங்களில் அச்சமின்றி செயல்பட உதவுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உங்களின் கருத்துகளுக்கு நன்றி
இத்திட்டம் நற்பலனலிக்குமாயின் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
நமதூரில் வெட்டிக்கூட்டம் போட பயன்படுத்தப்படும் பொது இடங்கள் இருக்கின்றதல்லவா? அங்கே கொட்டகை அமைத்து டியூஷன் நடத்தலாம். மேலும் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்படும்போது அவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி, மார்க்க சிந்தனை, சமூகப் பொறுப்பு, கூட்டு முயற்சி, கூட்டு வாழ்க்கை போன்றவற்றையும், அவற்றின் அவசியத்தையும் போதிக்கலாம்.
எண்ணதைக் கற்று
எழுத்ததை வாசித்தாலும்
நன்மை பயக்குமோ
இறையச்சமில்லாக் கல்வி...
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
தம்பி அபு ஈசாவின் பரிந்துரைகளை மாணவர்களிடையே ஒத்தக் கருத்துடையவர்களை கண்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி நிச்சயம் முதல் படி(க்க) எடுத்து வைக்கலாம் இதற்கு அதிரைநிருபர் களமிறங்கவும் தயார் அதற்கு வாசகர்களின் வலுச் சேர்க்கும் பரிந்துரைகளும் கைதூக்கிவிடவும் வேண்டும்...
கவிக் காக்கா சொன்ன "கனவு மெய்ப்பட வேண்டும்" !!!
கற்றவர்களின் அனுபவங்கள் ஆராதித்தால் தானே கற்பவர்களுக்கு அற்புதங்கள் அளுமைக்குள் வரும் !
One of the BEST idea for Adirampattinam students;
Points to remember:
1. A moderator of this entire task is needed [ better we approach Experienced Teachers in our Adirai]
2. The student who take responsible to teach not necessarily to be good in character, he may mislead in other unwanted matters in life.Therefore a supervision at teaching time also must be considered.[ If at this project take off]
3. If the girls are ready to come for tuition...extreme level of safety consideration must be the first priority [ or else we must be ready to accept the libel from parents.]
over all it is good things to do..do not focus only in negative matters..as well as do not neglect on negative matters also.
அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான யோசனை வைரங்களே வைரங்களை பட்டை(யகிளப்பும்)த்தீட்டும் அதிசயம் நடக்கும். வைராக்கியம் கூடும். சாதிக்கனும் என்னும் எண்ணம் தோன்றும். மாணவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூச்சம் ஓடிப்போகும். ஈகோ குறையும். நல்லது நிறையும். இப்படியே ஒருங்கிணைப்பும் சாத்தியப்படும்.இதில் மதம் வந்து சேராமல் பார்த்துச்செய்வது நலம்.
Post a Comment