பூதங் காத்தப் பொதையலு
புழுப் புழுத்துப் புகைஞ்சி போகும்
போற எடம் வேற யாகும்
சேர்த்து வச்ச சிந்தனையும்
காத்து வச்ச காசுபணம்செல்லரிச்சி சிதஞ்சு போகும்
செலவழிச்சா சிறப்புச் சேரும்
கற்ற கல்வி பெற்ற ஞானம்
கற்றுக் கொடுத்தா வளர்ந்திடும்
கஞ்சி சோறு கழனி காடு
கலந்து உண்டா பெருகிடும்
தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே முடக்கி வச்சு
தூங்கிநின்னா மதி கெட்டுடும்
பூமிக்குள்ளே பொதைச்சு வச்ச
பொக்கிஷந் தான் விதைகளும்
தரைபிளந்து தலைநிமிர்ந்தால்
தழைக்கும் இந்த உலகமும்
தாவரங்கள் காட்டித் தரும்
தியாகத்தை நாம் கற்கனும்
ஞானத்தோடு தணங்களையும்
ஞாலத்துக்கே வழங்கனும்
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கிடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமுமில்லே
கற்றதெல்லாம் கற்றுக்கொடு
பெற்றதெல்லாம் பிரித்துக்கொடு
முற்றுப்பெறும் வாழ்க்கையிலே
முதல் பகுதி வெற்றி பெறு
அத்தனையும் அறியப்படும்
கணக்கு வழக்கில் பதியப்படும்
கேள்வி கணக்கு நாளினிலே
கெடைக்கும் அந்த சொர்க்கம் பெறு!
-- சபீர்
--Sabeer abuShahruk
47 Responses So Far:
பகிர் - அவசியமான அருமையான பகிர் !
//கற்றதெல்லாம் கற்றுக்கொடு
பெற்றதெல்லாம் பிரித்துக்கொடு
முற்றுப்பெறும் வாழ்க்கையிலே
முதல் பகுதி வெற்றி பெறு//
இப்படியும் வரியெடுத்து வாரி வழங்கும் உங்களின் பகிர்வும் எங்கள் மனம் பெரும் தன்னிறைவே !
இரைக்க இரைக்க ஊறும் மணற்கேணியைப்போல் தன் கற்றதை ,சம்பாத்தித்ததை பலருக்கும் பயனுள்ள வகையில் அள்ளி கொடுக்க கொடுக்க நாம் செல்வமும் அறிவும் பெருகும் என்பதை அழகாக வாரி எடுத்து வலிமையான வார்த்தைகளால் வரிகளால் வார்த்து எடுத்து இருக்கிறீர்கள் கவி காக்கா...அனைத்து வரிகளும் ஒன்ஸ் மோர் சொல்லி படிக்க வேண்டிய வரிகள் இல்லை இல்லை பாடம்...சூப்பர் காக்கா
நான் மிகவும் ரசித்து படித்து வரிகள்
//
தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே முடக்கி வச்சு
தூங்கிநின்னா மதி கெட்டுடும்
பூமிக்குள்ளே பொதைச்சு வச்ச
பொக்கிஷந் தான் விதைகளும்
தரைபிளந்து தலைநிமிர்ந்தால்
தழைக்கும் இந்த உலகமும்
கொண்டு வந்ததொன்றுமில்லே
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கிடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமுமில்லே///
”கிரவுனார்” பதவுரைக்காக வெயிட்டிங்
"கொண்டு வந்ததொன்றுமில்லே
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கிடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமுமில்லே".
நறுக்கான வரிகள்.இன்றைக்காவது அதிரை கவியின் கவிதை வராதா என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புதான்.(வாலிபம், விளிம்பில்!கவிதை ரொம்ப சூப்பர்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
கவிகாக்கா, பகிர் ஆக்கத்தை எங்கள் அனைவருடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
//தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே முடக்கி வச்சு
தூங்கிநின்னா மதி கெட்டுடும்//
நாம் பெற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதை அழகான உதாரணத்துடன் சொன்னவிதம் அருமை.
அதிரை கவியின் கவிதை இன்றைக்காவது வராதா என்று எங்கும் அபுஆதில் காக்காவை போல் நானும் ஒருவன்.
கவிகாக்காவின் கவிதை படிக்கும் போது ஒரு விறுவிறுப்பு நாவில்.
கிரவுன்(னு):
//சேர்த்து வச்ச சிந்தனையும் //
செலவழிச்சா சிறப்புச் சேரும்//
கிரவுனுரை எழுதிட வா சீக்கிரம் !!
பரீட்சைக்கு நேரமாச்சு !
இந்த பாட்டுக்கு ஒரு ட்யூன் போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்...
பூட்டி வச்சப் பொட்டிகளோ
பூதங் காத்தப் பொதையலு
புழுப் புழுத்துப் புகைஞ்சி போகும்
போற எடம் வேற யாகும்
சேர்த்து வச்ச சிந்தனையும்
காத்து வச்ச காசுபணம்
செல்லரிச்சி சிதஞ்சு போகும்
செலவழிச்சா சிறப்புச் சேரும்.
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.வழகம் போல் மிகச்சிறந்த ஆக்கம். உவமானம் தூக்கள்,அத்தனையும் இனித்திடும் பாக்கள்.பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்(செங்கபடுத்தான் காடு)திரைக்கு பாடல் எழுதியவன் என்றாலும் அந்த கவியின் வரிகளிலே பொது உடமை தத்துவம் தாங்கிருக்கும். அது போலவே அதிரைகவியின் கவிதைகள் , நல் சிந்தனைவிதைகள்.
பரம்பரையா பாத்து,பாத்து சேத்து வச்சாலும் தானம் கொடுக்காவிட்டால் அந்த தனம் என்பது மடியில் கணமே! மரணம் வரும் கணம் போகும் வழியில் பயமே!
கற்ற கல்வி பெற்ற ஞானம்
கற்றுக் கொடுத்தா வளர்ந்திடும்
கஞ்சி சோறு கழனி காடு
கலந்து உண்டா பெருகிடும்.
-------------
பூமிக்குள்ளே பொதைச்சு வச்ச
பொக்கிஷந் தான் விதைகளும்
தரைபிளந்து தலைநிமிர்ந்தால்
தழைக்கும் இந்த உலகமும்.
-----------------------------------------------------
கவிஞர் அய்யா! மன்னிக்கவும் என் வசதிக்காக வரிகளின் வருசையை மாற்றி போட்டுள்ளேன் என்னை தயவு கூர்ந்து பொருத்தருள்க! கவிஞர் மேலே சொல்லி உள்ள முதல் நாலு வரிகளிலும் பின் நாலு வரிகளுக்காக பதில் அதிலேயே பதியம் போட்டால் பயிர் வளர்ந்து இந்த உலகெல்லாம் பயன் பெரும் என்பதை அழகாக சொல்லியுள்ளார்கள். மேலும் பெற்ற கல்வியை கற்று கொடுப்பதால் அது ஒரு திரியிலிருந்து, மறுதிரிக்கி பத்தவைக்கும் நெருப்பு போல சிறு வெளிச்ச புள்ளி பெருவெளிச்சவெள்ளமாகும்.பின் வரும் சந்ததிகள் பயன் பெரும் அதன் நூடே நம் அறிவும் விரிந்து,பரந்து அந்த பயிர் போல வளர்ந்து பலர் அறிவு பசிக்கும் உணவாகும். நல்ல ஒரு உவமானம். அதுபோலவே தானம் என்பதும், கல்வியும் பிறருக்கு கொடுத்து தம் நன்மையை வளர்கும் சுயனலமிக்க நல்ல செயல்.
தெளிஞ்சி வந்த நீரானாலும்
தேங்கி நின்னா குட்டையாகும்
மூளைக்குள்ளே முடக்கி வச்சு
தூங்கிநின்னா மதி கெட்டுடும்
-------------------------------------
தெளிந்த நீரானாலும் ஓட்டமின்றி குட்டையாகும். ஓடும் நீரில் கல்லெரிந்தாலும் கலங்காது.அதன் தன்மை மங்காது.தெளிந்த நீரானாலும் குட்டையில் கல்லெரிந்தால் கலங்கி மங்கிய நிறம் கொண்டு தன்னிலைத்திரிந்து மாசுபெரும்.அதுபோலவே
கற்றதை பகிர்ந்து கொள்ளாதவன் அறிவும் மாசுபடும். மட்டுபடும். நின் மதியும்(மூளையை உபயோகிக்காதவன்) கெடும் , சுற்றம் நிம்மதியும் கெடும். அப்பாடா.....................என்ன என்ன உவமானம்தான் இவர் சொல்வார்??? நம் மனதை இப்படியே கொய்வார்??? வாழ்துக்கள் கவிஞரே!அல்லாஹ்வை வணங்கி ,உம்மை பாரட்டுவதில் என் சிந்தை சிறிது சோம்பல் முறித்துகொள்கிறது.
படித்தவன் தவறான செயல் செய்தால் என்ன இவனுக்கு மூளை(கீளை???) கலங்கிடுச்சா என சொல்வழக்கில் சொல்வதும் உண்டு.
(அஃறினைகள்)தாவரங்கள் காட்டித் தரும்
தியாகத்தை நாம் கற்கனும்
ஞானத்தோடு தணங்களையும்
ஞாலத்துக்கே வழங்கனும்
கொண்டு வந்ததொன்றுமில்லே
கொண்டுபோக வழியுமில்லே
கட்டிக்கொண்டு கிடந்திடவோ
கடுங் குழிக்குள் எடமுமில்லே.
--------------------------------
கற்றதெல்லாம் கற்றுக்கொடு
பெற்றதெல்லாம் பிரித்துக்கொடு
முற்றுப்பெறும் வாழ்க்கையிலே
முதல் பகுதி வெற்றி பெறு
அத்தனையும் அறியப்படும்
கணக்கு வழக்கில் பதியப்படும்
கேள்வி கணக்கு நாளினிலே
கெடைக்கும் அந்த சொர்க்கம் பெறு!
--------------------------------
மறுபடியும் மன்னிக்கவும் என் வசதிக்காக அங்கே அஃறினைன்னு வார்தை சேர்தேன். அவைகளில் செயல் பாடு தியாகம் . ஆனால் ஆறறிவு மனிதனுக்கு அது கடமை. நாம் கொன்டு போக ஈமானைத்தவிர ஏதும் இல்லை.அங்கே மற்றதை வைத்து தூங்க எட்டடிக்கு மேலே இடமில்லை.அந்த எட்டியைவிட்டு ஒரு எட்டும் எட்டமுடியாது.ஆகவே ஆகுமான வழியில் பொருள் சேர்த்து நம்மை ஆகும் படி செலவு செய்தால் அதில் வரும் அருள் என்கிற வருமானம் நம்மை நல்வழி சுவனம் சேர்க்கும் கவனம் கொள்வோம்.
அதுதான் நாம் உலகில் பெரும் முதல் வெற்றி! அந்த முதல் வெற்றிக்கு உன் முதலை முதலீடு... நல்வழியில் செலவிடு!அவ்வாறு செய்தால்கேள்வி கணக்கு நாளினிலே
கெடைக்கும் "அந்த சொர்க்கம்(பேரு") பெறு!
பகிர் என்றது பகீர் என்றிருந்திருக்குமோ !? பூட்டியிருக்கும் மனங்களுக்கு ! :)
ஆகவே ஆகுமான வழியில் பொருள் சேர்த்து நம்மை ஆகும் படி செலவு செய்தால் அதில் வரும் அருள் என்கிற வருமானம் நம்மை நல்வழி சுவனம் சேர்க்கும் கவனம் கொள்வோம்.
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆகுமான வழியில் பொருள் சேர்த்து (நம்மை) நன்மை(யென வரனும்) பிழைக்களுக்கு பொருத்தருள்க!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
*************************************************
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:265)
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன் : 49:15)
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்.(அல்குர்ஆன் : 63:10)
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். (அல்குர்ஆன் : 22:1)
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். (அல்குர்ஆன் : 17:13)
************************************************************
பகிர்! - நல்லதொரு பதிவு – சபீர் வாழ்த்துக்கள்!
பகிர்வைப் படித்த அதிரை நிருபர் வாசகர்களுக்கு என் நன்றி.
தத்தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட சகோதரர்களுக்கும் என் நன்றி.
கிரவுனார் தமிழுரைக்கு என் நன்றிகலந்த கடப்பாடு (obliged).
கிரவுன்,
ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்.
நீங்கள் விமரிசிக்கும்வரை மனசு திக் திக்கென்றே இருக்கிறது. அதனால், நேரம் இருந்தால் இதுபோல் விரிவாகவோ நேரம் இல்லாவிடில் சுருக்கமாகவாவது விமரிசித்துவிடுங்கள்.
உங்கள் விமரிசனம் எதிர்பார்ப்பது ஒரு அடிக்க்ஷன் போலாகிவிட்டதற்கு நீங்கள் பொருப்பல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் தமிழ் சக்தி வாய்ந்தது.
அபு ஆதில்: உங்கள் பாராட்டுக்கு நன்றி (வாலிபம், விளிம்பில்)
விபத்துநேர தீர்மாணங்கள்!
சட்டென
வேகம் குறைத்தன
வாகனங்கள்...
நெடுஞ்சாலை
கடக்க
கடுஞ்சாலையானது!
ஓட்டம் ஓய்ந்து
ஊர்திகளின்
ஊர்தல் துவங்கியது!
மற்றொரு சூவிங்கம்
மெல்லத் துவங்கி
மெல்ல நகர்ந்தேன்...
ஐந்து தடங்களிலும்
அணியணியாய் வாகனங்கள்
சில தடங்கள்
ஊர்வதும்
சில ஸ்தம்பித்தும்...
ஊர்தலினூடே
காரணம் கணிக்கையில்
வாகன சோதனை
சாரதி சோதனை
சாலை சீரமைப்பு
என
எல்லாம் போக
விபத்தோவென
நினைத்த மட்டில்
வேக
எல்லை மீறுவோர்மீது
கோபம் வந்தது!
குடுவைக் கழுத்தென
குறுகிய சாலையில்
சாத்தியப்படாத கோணத்தில்
முட்டிநின்ற வாகனங்கள்
விடுத்து
கீழே
ரத்தச் சகதியில்
உடல்கள் கண்டு
உலுக்கியது நெஞ்சு!
வேகம் வேண்டாமென
தீர்மாணித்தது
விபத்துகண்ட மனது.
மூன்றாம்நாள்...
பள்ளீக்கூடத்தில்
பிள்ளைகளின்
காத்திருப்பு
கவலைதர -
பரிச்சயமான
சாலையின்
வேக
உளவுக் காமிராக்களின்
ஒளிப்பிடங்கள் தவிர்த்து
அனிச்சையாய்
வேக வரம்பைக்
கடந்து
பறந்த
என்
வாகனத்துள்
முடங்கிக் கிடந்தன
தீர்மாணங்கள்!
-sabeer
thanks: www.thinnai.com
கவிதைக்குள் கவிதை பகிர்(ந்திடும்) பிரிணி(ஸ்வீட் ஞாபகமிருந்தாச் சரி) சாப்பிட்ட உணர்வு...
-------------------
அப்படியே கண்முன்னால் நிறுத்திய சாலை கரும்பலகயில் எழுதப்பட வேண்டிய உணர்வுகள் !
அருமையான வர்ணனை அன்றாடம் அத்துமீறும் நம் உணர்வுகள் ஓட்டுனர் இறுக்கையில் அமர்ந்த்துமே !
துபாய் ஆர்.டி.ஏ.வுக்கு மொழியாக்கம் செய்து அனுப்ப வேண்டும் !
காக்கா இங்கேயும் "நால்லாருக்கு - 'ண = ன' ன்னு வர வாய்ப்பிருக்கோ ! :))
ZAKIR HUSSAIN சொன்னது…
//இந்த பாட்டுக்கு ஒரு ட்யூன் போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்//
பாட்டு எழுதியவரே அருமையாக ட்யூன் போடுவாரே
அடடா மாற்ற மறந்தாச்சு. அத்துடன், "பகிர்" கவிதையை பழுதுபார்த்துத் தந்த ஜமீல் காக்காவுக்கு நன்றி சொல்லவும் மறந்துட்டேன்.
//பாட்டு எழுதியவரே அருமையாக ட்யூன் போடுவாரே//
உஷ்ஷ்ஷ்...அலாவுதீன் புழங்குற இடம்.
ஹமீது, அதெல்லாம் சரி, பொவுந்து (பகிர்ந்து) முடிச்சிட்டு காரிமியப்பாவே போயிட்டாரே ஏன் இவ்வளவு லேட்டு?
//உஷ்ஷ்ஷ்...அலாவுதீன் புழங்குற இடம்.....
ஆமாப்பா....ஆ ஊ ன்னா ஒடனே கொத்பா மெடெ ஏறிர்ராப்லெ...அலாவுதீன் எழுத்த படிக்கும் போது பள்ளியிலெ ஒஸ்தார்ட்டெ அடிவாங்கினதெல்லாம் வலையம் வலையமா வருதுப்பா....
அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவசனங்களை பின்னூட்டமாக பதிந்த அலாவுதீன் காக்காவுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான்.(அல்குர்ஆன் : 63:10)
இவ்வசனத்தை படிக்கும் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் செய்யும் சில தவறுகளிலிருந்து விலகிக்கொள்ள தூண்டும்.
அலாவுதீன் காக்கா பகிர்வுக்கு மிக்க நன்றி.
கவிக் காக்காவின் பகிர் (வரிகள்) மட்டுமல்ல எந்தக் கவிதையும் என்றுமே தடம் விலகிடாது என்பதைச் அழகுற இறை வசனங்களை இடமறிந்து பலம் சேர்த்த அலாவுதீன் காக்காவின் சமயோசிதம் பாராட்டத்தக்கதே ! என்றும் நாங்கள் இதனன தொடர்ந்து ஞாபகப் படுத்திக் கொண்டிருங்கள் இன்ஷா அல்லாஹ் !
// என்றும் நாங்கள் இதனன ///
என்பதனை "என்றும் எங்களுக்கு இதனை" ன்னு வாசிச்சுடுங்களேன்..
அசத்தல் காக்கா அதென்னா "வலையம் வலையமா வருவது !?
குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி எங்கள் எண்ணங்களை செம்மைபடுத்தி & சேவை செய்ய தூண்டிய அலாவுதீன் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் தந்தருள்வானக...
sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது, அதெல்லாம் சரி, பொவுந்து (பகிர்ந்து) முடிச்சிட்டு காரிமியப்பாவே போயிட்டாரே ஏன் இவ்வளவு லேட்டு//
சமிப காலமா நம்ம ரியாஸ் காகா கூட சிநேகம் கூடுதல் ஆச்சு
அதனால் தான் சூப்பர் ஸ்லொவ் மோஷன் ஆச்சு !!
sabeer.abushahruk சொன்னது…
//ஹமீது, அதெல்லாம் சரி, பொவுந்து (பகிர்ந்து) முடிச்சிட்டு காரிமியப்பாவே போயிட்டாரே ஏன் இவ்வளவு லேட்டு? //
மேனேஜர் J.J.சவானா நார்சவை நமக்காக ஒதிக்கி வைத்து விடுவார் என்ற தன்னபிக்கைதான்
அருமையான பேச்சு வழக்கு(கள்) :)) பின்னூட்டத்தில் பின்றீங்களே காக்கா மார்'ஸ் :))
// அருமையான பேச்சு வழக்கு(கள்) :)) பின்னூட்டத்தில் பின்றீங்களே காக்கா மார்'ஸ் :)) //
pinனூட்டங்கள் யாவும் சீக்ரெட் ஆஃப் our(களின்) எனர்ஜி(யாமே) !
Its a nice rhythemic poem....sabir kaka
i wished to give a comment earlier..
me and mariama Thameem kaka were reading your poem together..
i showed your previous poem to him ...
Thameem kaka conveys his Salam to you..
iam in hurry thatswhy my comments in PETER
ஹார்மி...பீட்ட்ராக இருந்தாலும் பெட்டர்
அபு இப்ராஹிம்...வலையம் வலையமாக வருவதெல்லாம் ஃபிளாஸ் பேக்' கில் தான் எனும் உண்மையை மறைக்குமளவுக்கு துபாயில் அங்கு உங்களை பிழிந்து எடுப்பது தெரிகிறது...
முக்கிய அறிவுப்பு : பீட்டர்ஸ் பற்றியெல்லாம் பேசப்படுவதால், NAS ஐயா எங்கே !? யாராவது தேடிப் பிடித்து இங்கே கொண்டுவந்திடவும் !
வ அலைக்க அலைக்குமுஸ்ஸலாம். தமீமை நான் நலம் விசாரித்தாதாகச் சொல்லுங்கள். அதிரை என்றாலும் எங்களின் பரிச்சயம் வலுப்பெற்றது அல்கோபரில்தான். பிறகு, ஒத்த எண்ணம் கொண்டோர் நண்பர்களாவது சுலபம்தானே?! என்றாலும், தமீமின் திறமைகளை ஒருமித்துக் குவித்திருந்தால் 'இவ்வுலகிலும்' பெரும் செல்வந்தராகியிருப்பார் என்பது எப் அபிப்பிராயம்.
பீட்டரோ ஃப்ரெஞ்சோ நீங்கள் கவிதையை வாசிச்சாச்சு என்பதன் ஒரே அடையாளம் உங்கள் அட்டென்டென்ஸ்தான்.
அபு இபுறாகீம்,
என் ஏ எஸ் சாரை வரவழைக்க ...
i
feel you
in
my breath...
will
feel you
till
my death!
என்று பீட்டரில் எழுதனுமோ. (மேற்சொன்னது எவனுக்காக எந்த ஹாஸ்டலில் எழுதி எந்த கப் போர்டின் மேல் ஒட்டி வைத்திருந்தேன் என்பது அந்த அவனுக்குப் புரியும்)
மேற்சொன்னதில் - அங்கே "ன்" வருமா அல்லது "ள்" வருமான்னு புரிந்தவங்கதான் சொல்லனும் கவிக் காக்கா !
ஆமாம் காக்கா வியட்நாமி மொழி தெரியுமா அதுல கொஞ்சம் எழுதிப் பாருங்களேன்... அட்டெண்டஸ் கிடடக்கும் !
அபு இபுறாகிம்,
அங்கு 'ன' தான் வரும் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்லிவிடுகிறேன். மற்றதை ஒங்க அசத்தல் காக்காதான் சொல்லனும்.
"தமக்குத்தாமே ஆப்பு வைக்கும்" திட்டத்தின்மூலம் வியட்னாமிலிருந்து சார் புலம்பெயர்ந்து அநியாயத்திற்கு சுத்தமாயிருக்கும் சிங்கப்பூரில் தஞ்சம் பெற்றது தெரியாமல் இன்னும் 'ஃபர்ஸ்ட் ப்லெட்' காலத்திலேயே இருந்தால் எப்படி? அதற்குப்பிறகு 'ராம்போ' ஒன்னு ரென்டு மூனெல்லாம் வந்துடுச்சு அப்பு.
கவிக் காக்கா நட்பின் உயிரோட்டம்(தான்) அலமாரிக் கதவில் எழுதி ஒட்டிய ஏணிப் படி வரிகள் என்பது சொல்லித்தான் தெரியனுமா !? அங்கே தும்மினால் இங்கே "அல்ஹம்துலில்லாஹ்" சொல்வதும் எங்களுக்கு தெரிந்தே... இருப்பினும் ! அதற்காக அடித்துதான் சொல்லனுமா அசத்தல் காக்கா வந்தால் (எங்களை) அரவனைத்தே சொல்லிடப் போறாங்க !
மைகிரேஷன் அப்புரம் முதல் இரத்தலிருந்து மூன்றாவது ரம்போ வரையும் பக்கம் அதிகம் பார்வையைச் செலுத்தவில்லை அதனால் அந்தக் காலத்திலே இருந்திட்டேன் (உபயம் அசத்தல் காக்கா வியட்நாம் முதல் வாசம் என்ற தகவலுக்கு) :))
நான் கேள்விப்பட்ட வரை அண்ணன் N.A.S இப்போது வியட்நாமில்,
சிங்கப்பூரில் இப்போது தேர்தல் [ நடப்பதும் தெரியாது / ஆட்சிக்கு வருவதும் தெரியாது ] அப்படி கமுக்கமா நடக்கும் தேர்தல் சிங்கப்பூரில் தான்.
நிரந்தரமில்லா உலகிலே
எதுவுமிங்கே நிரந்தரமில்லை என்பதை
எடுத்துச்சொல்லும் கவியிது
சேர்த்துவைத்து காத்துவைத்த போதிலும்
செல்லரித்து போகுமே செல்லாக்காசு ஆகுமேன்னு
புத்திமதி சொல்லிதந்து அறிவுரைக்கும் வரிகளிது..
வாழ்த்துக்கள் சபீர்க்காக்கா.
எனக்குத் தெரியாம, கள்ளத் தனமாச் சேத்த
தாவரங்கள் காட்டித் தரும்
தியாகத்தை நாம் கற்கனும்
ஞானத்தோடு தணங்களையும்
ஞாலத்துக்கே வழங்கனும்
எனும் நான்கு வரிகள்
தாவரங்கள் காட்டித் தரும்
தியாகப் பாடம் படிக்கனும்
ஞானம் பெற்றுத் தானங்களை
ஞாலத்துக்கே வழங்கனும்
என்று இருக்கனும்.
ரொம்ப நன்றி காக்கா.
சட்டெனத் தோன்றியதைப் பட்டெனெ சேர்த்து அனுப்பிட்டேன். ரொம்ப பிஸியா வேற இருந்திய...அதான் ஊடால சேர்த்து அனுப்பிட்டேன்.
//தியாகத்தை நாம் கற்கனும்//
என்பது மொத்தத் தொணியிலிருந்து சற்று விலகி இலக்க்கியத்துவமாக ஒலிப்பதாகவே எனக்கும் படுகிறது.
அதே சமயம்
//தியாகப் பாடம் படிக்கனும்//
பாடல் தொணியுடனும் ஸ்லங்கோடும் (slung) ஒத்துப்போவதையும் உணர்கிறேன். (பிழைகளோடு எழுதப்பட்ட ஏதோ ஒரு யாப்பிலக்கணத்தோடு ஒத்துப்போகிறமாதிரியும் தோனுது)
ஹெட் மாஸ்டரே க்ளாஸ் எடுத்த மகிழ்ச்சி காக்கா.
மதிப்பிற்குரிய தங்கை மலிக்கா அவர்களுக்கும் நன்றி.
Post a Comment