Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் காணாமற்போன பையன்கள் மக்காவில் கண்டெடுப்பு ! 10

அதிரைநிருபர் | April 08, 2011 | , , ,

பள்ளிப் பருவத்திலே மனதில் எந்த கவலையும்- கிலேசமும் அற்ற அந்த அற்புதமான பிராயத்தில் காலத்தின் கடப்பாட்டின் நிமித்தம் பிரிந்து கடல் கடந்து வேறு வேறு பாகங்களுக்கு தூக்கி எறியப்பட்ட 3 இளைஞர்கள் (Three 'I's) சற்றேறக்குறைய 25- 30 வருடங்களுக்குப்பின் கண்டு கொள்ளப் படுகிறார்கள். அதுவும் மனிதனை புனிதனாக்கும் சங்கை கொண்ட மக்கா மாநகரில் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாஃபர் ஷேக்-ஹாஜா அமீன்-முகம்மது ரஃபி ஆகியோர் ஹரம் ஷரிஃப் எதிரில் ஹாஜியார்ர்ர்ர்ர்... என்று நீட்டி, நீங்ங்ங்க.... என மரியாதைப் படுத்தி, பின் குரலை விளங்கிய பின் மாப்ளே.... என்றும் டேய் என்றும் வந்திறங்கி மரியாதை தேய்ந்து- மகிழ்ச்சி தோய்ந்து, அன்பு பரிமாறப் பட்டது. குசலங்கள் விசாரிக்கப்பட்டது. "உன் கல்யாணத்துக்கு முன்னால் பார்த்தது, இப்போது எனக்கு கல்யான வயதில் பிள்ளைகள் உள்ளனர்" என அறிமுகப் படுத்தப்பட்டனர்.


குடும்பம்- உத்தியோகம்- பள்ளி வாழ்க்கை- நாடகத்தில் நடித்தது- அடிதடியில் தடித்தது- குருப் ஃபோட்டோ குளறுபடி என்று எல்லாம் அலசிவிட்டு உனக்கு சுகர் செக் பண்ணியா? BP எத்தனை? கொலஸட்ரால் அதிகமா இருக்குமே...? கலரிச்காப்பாட்டுக்கு ஊறுகா பாக்கெட்டோடு போறவனாச்சே...?! என்று நல்லெண்ண கூட்டணி சேர்த்து மஞ்ச  சோத்தயும் சுட்ட கோழியும் உள்ளே தள்ளினோம்.


Of-course கனாப்போன புள்ளைங்க கிடைக்கையில் கொஞசம் வயசு கூடவாச்சு! ஆனாலும் பக்கத்து அரபு நாட்டிலிருந்து கொண்டு ஹரம் விஜயம் செய்ய இத்தனை நாள் சுனக்கியது கொங்சம் ஓவர்.



OK. past is past!!!

இருப்பிடம் திரும்புகையில் ஹஜ்ஜிக்கு பலமாக நிய்யத் வைக்கவும், நம்மவர்களுக்கு ஹஜ்- உம்ராஆர்வத்தை ஏற்படுத்தி அதிக அதிகமான அதிரையினரையும், சார்ந்தோர்களையும் அனுப்பி வைக்கும் படியும் நேசிக்கும் நண்பர்களை கேட்டுக்கு கொண்டோம்.

இதை வாசிக்கும் உங்களையும் தான்...!!!

வாழ்க வளமுடன்!

- MSM ரஃபியா

10 Responses So Far:

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நட்பை புதுப்பித்துக்கொள்ளும் விதமாக இந்த அருமையான ஆக்கத்தை நம் அதிரைநிருபருக்கு அனுப்பிவைத்த அன்பு சகோதரர் ரஃபியா அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த பதிவில் நீங்கள் தொலைத்த சிறுவயது நட்புகளை லிஸ்ட் போட்டு ஞாபகப்படுத்தி பெயர் குறிப்பிட்டு எழுதி கண்டுபிடிக்கலாமே. மறந்த உறவுகளையும், நட்புகளையும் புதுப்பித்துக்கொள்ளலாமே. இந்த பதிவு அதற்கான ஒரு வழி என்று சொன்னாலும் சரியே.

தொடர்ந்து இணைதிருங்கள் அன்பானவர்களே....

crown said...

அதுவும் மனிதனை புனிதனாக்கும் சங்கை கொண்ட மக்கா மாநகரில் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜாஃபர் ஷேக்-ஹாஜா அமீன்-முகம்மது ரஃபி ஆகியோர் ஹரம் ஷரிஃப் எதிரில் ஹாஜியார்ர்ர்ர்ர்... என்று நீட்டி, நீங்ங்ங்க.... என மரியாதைப் படுத்தி, பின் குரலை விளங்கிய பின் மாப்ளே.... என்றும் டேய் என்றும் வந்திறங்கி மரியாதை தேய்ந்து- மகிழ்ச்சி தோய்ந்து, அன்பு பரிமாறப் பட்டது. குசலங்கள் விசாரிக்கப்பட்டது. "உன் கல்யாணத்துக்கு முன்னால் பார்த்தது, இப்போது எனக்கு கல்யான வயதில் பிள்ளைகள் உள்ளனர்" என அறிமுகப் படுத்தப்பட்டனர்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இப்படி காணாப்போனவர்கள் கலந்தார்கள் தொலைந்துவிடாத நட்பில்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! நட்பின் வேர்கள் இங்கே ஆழமாக தளைத்திருக்கிறது... ஏற்கனவே ஒரு பதிவில் NASஐயா அவர்கள் நினைவுகூர்ந்த நட்பு இணைய வாசிப்பில் ஆர்வத்தை தூண்டுகிறது மேலும் அவர்களிடம் கேட்டிட.

இங்கே சகோ.MSM-ரஃபியா அவர்கள் காணாமலிருந்து கிடைக்கபெற்ற அவர்களின் வயதையோடு ஒட்டிய குழந்தை நட்புகளை காணக் கண்கோடி வேண்டி நிற்குமிடத்தில் தேடியெடுத்ததோ சிலிர்ப்புதான்.

நிறைவாகச் சொன்னதுதான் இதன் ஹைலைட் !

N.A.Shahul Hameed said...

Dear Brother Abu Ibrahim,
It is indeed a pleasure to cherish the memories of our old friends when we meet after a fairly long time. When we happened to meet them first we fail to recognize sometimes, after identifying each other we start giving respect to each other and when we come to normal mood we throw all the formal means and start sharing all our loving, momories.
Sure inshya allah I will recollect my days with the great simple and humble personality Umar Thambi in the way I knew him
Wassalam
N.A.Shahul Hameed

Abu Khadijah said...

ASSALAMU ALAIKKUM,

really its a good article from Mr.Rafiya...I feel very happy to see the comments of My great Aasaan Mr.N.A.Shahul Hameed, even i also was searching him when i was in vacation last july...

Ahmed Mansoor(2000-2003)Batch

sabeer.abushahruk said...

மீண்ட நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum,
I earnestly express my profound sense of thanks and gratitude from the bottom of my heart to AN for providing an opportunity and means for getting back my old students. I was elated to note that Thajudeen is my student and Mujeeb also shared that right. Now I am able to connect to Mr.Ahmed Mansoor also. But for AN I think it could not have happened.
For a retired person who is spending his time in memory of the good old hay days, it is indeed a boon for me to get in touch with you all.
Alhamdhu Lillah.
Wassalam
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...

காணாமல் போய் கிடைப்பது அல்லது வெகுநாட்களாக பார்க்காமல் இருக்கும் நண்பர்களை பார்ப்பதின் மகிழ்ச்சியே தனிதான்...அதை எழுத்தில் கொண்டுவருவதும் தனித்தன்மையே...சகோதரர் ரஃபியாவுக்கு வாழ்த்துக்கள்.

இப்படி கணக்கு எடுத்தால் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு 5 பேராவது தேறும் [ காணாமல் போன ஆட்கள்தான் ]

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்திப்பது ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி அதை வார்த்தைகளாக வடித்து இருப்பது அழகு

தலைப்புத்தான் கொஞ்சம் என்னை தடுமாற வைத்துவிட்டது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

S.ஹமீத் காக்காஅ : இப்போ இருக்கும் அன்றைய சிறுசுகள் பையன்கள் என்றுதான் சொல்லுவாங்களோ !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு