Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உறவே...உயிரே...! 33

அதிரைநிருபர் | April 10, 2011 | , ,

(நினைவலைகள்)
உன்னை எனக்கு
பேசுவதாக
பேச்சு!

உன்
புகைப்படம் கேட்டேன்
பூக்களின்
அஞ்சலட்டை அனுப்பி
கொஞ்சிக்கொள் என்றனர்!

உன்னைப் பற்றிக் கேட்டேன்
என்
அன்னையைப் பற்றிச் சொன்னர்!

குடும்பப் பின்னனி வினவ
குட்டிச் சுவன மென விடை!

என்னைத் தெரியுமா
என்னுடன் விருப்பமா - எனக்
கேட்கச் சொன்னேன்.

என்னை விரும்புபவரை
எனக்கும் பிடிக்கும்
பிடித்தவர் கரம்
பிடிக்கப் பிடிக்கும் - எனச்
சொன்னதாய் கேட்டேன்!

ஒற்றை அறையில்
ரெட்டை படுக்கைகள்
மூன்று இட்டிருக்க
நாலாவது படுக்கையில்
ஐந்தாவது ஆளாய்
என்னையும் சேர்த்து
ஆறு பேருக்கான
அமீரக வசிப்பில்
ஏழாவது ஆளாய்
நான்
அந்நியப்பட்டுப் போனேன்
எட்டாவதாக இணைந்த
உன் நினைவுகளோடு
ஒன்பது பத்து நாட்களாய்
ஒதுங்கிப் போனேன்!

நாவல்களிலும்
நவீனங்களிலும்
நான் விரும்பிய குணமும்...
சுவரொட்டிகளிலும்
சஞ்சிகைகளிலும்
நான் ரசித்த முகமுமாய்...
உன்னோடான
உளவியல் பரிச்சயம்
கூடிப்போனது!

முன்பின் அறியாதவர்க்கும்
முகமன் சொன்னேன்
முன்பென்றும் இல்லாதளவு
முகம் மலர்ந்திருந்தேன்!

பாலைவன பரிதவிப்பில்
காலையும் மாலையும்
கனவுகளில் கழிய...
வேலை விடுப்பில்
உனக்கு
மாலையிட்ட மாலையையும்
கைபிடித்த வேளையயும்
மறக்கமுடியுமா?

உள்ளூரில்
உன்னோடான வாழ்க்கை
உயிரை புதிப்பித்தது
உள்ளத்தை உயிர்ப்பித்தது!

பகிர்தலில்
பலம் கூடியது!

இரவு உறங்குவதற்கு...
உணவு உயிர்வாழ...
போன்ற
பொதுக் கோட்பாடுகள்
பொய்த்துப் போயின!

செலவு
இருப்பை இரட்டிப்பாக்கியது!
மொழியை மெளனமாக்கி
விழியே உரையாடியது!
நாம் பேசிய வார்த்தைகளைவிட
பேசப்படாதவையே வாழ்வியலானது!

இன்னும் கொஞ்சம்
இயற்கை வேண்டி
குறிஞ்சி தொட்டோம்...

இன்னும் கொஞ்சம்
வாய்க்கால் வரப்பிற்காக
முல்லை கண்டோம்...

இன்னும் கொஞ்சம்
நடக்க விரும்பி
நெய்தல் சென்றோம்...

இன்னும் கொஞ்சம்
களிக்க நினைத்து
மருதம் போனோம்...

இன்னும் கொஞ்சம்
செல்வம் தேடியே
பாலை வந்தேன்!

இங்கோ...
தேடிய இடமெல்லாம்
தென்றலாய் நீ -
நடக்க விளைந்தால்
சாலையாய் நீள்கிறாய்
கடக்க முனைந்தால்
நாட்களாய் நகர்கிறாய்!

ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே!

அந்த விடை...
உன்
மடி தவழும் நாள்
என்னுடன்
நிகழ வேண்டும்!
-- சபீர்
-- Sabeer.abuShahruk

33 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் , காக்கா எமக்கல்லவா இன்ப சுமை சுமத்திவிட்டீர்கள்.

ZAKIR HUSSAIN said...

வைரமுத்து, கபிலன் , நா.முத்துக்குமார், ஸ்னேகன், மற்றும் மூத்தகவி வாலி எல்லோரும் எழுதும் கவிதையை கேமராவில் மற்றும் ஒரு புது வடிவம் கொடுத்து மக்களிடம் சேர்க்கிறார்கள்...உன் கவிதைகள் மட்டும் தான் இணையம் வழி வந்து மனதுக்குள் சிம்மாசனம் போட்டுக்கொள்கிறது. நான் உன்னைப்பாராட்டினால் அது அப்படி ஒன்றும் அதிசயமில்லை என இந்த உலகம் சொல்லும் [ இது ரியாஸ்,ஹாஜா, முஹம்மது அலி யாவருக்கும் பொறுந்தும்] இருப்பினும் உன்னைப்பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கவிதை பற்றி...

பிரிவின் ஆழத்தை இவ்வளவு அழகாக சொல்லியிருக்க பிரிந்து இருக்க வேண்டும்.. ஆனால் நம்மைப்போன்ற ஆட்களை விட நமது முன்னோர்கள் பிரிந்து வாழ்ந்த வாழ்க்கை [ பிழைப்புக்காக] மிகவும் கொடுமையானது.

இப்போது பிரிந்து இருப்பவர்கள் படித்தால்...கவலைப்பட வைக்கும் கவிதை.


படம் செலக்சன் பற்றி.....

சத்தியமா ஒரு சம்பந்தமும் இல்லை [ ஏதோ சம்பளம் பாக்கிவைத்த முதலாளி கிட்ட வேலைபார்க்கும் ஆள் செய்த வேலை மாதிரி தெரிகிறது ]

adiraithunder said...

nice
by adiraithunder.blogspot.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா !

முதலில் மகிழ்ச்சி... இப்படி வாசித்ததும்

//நான் உன்னைப்பாராட்டினால் அது அப்படி ஒன்றும் அதிசயமில்லை என இந்த உலகம் சொல்லும் [ இது ரியாஸ்,ஹாஜா, முஹம்மது அலி யாவருக்கும் பொறுந்தும்] இருப்பினும் உன்னைப்பாராட்டாமல் இருக்க முடியவில்லை. //

அடுத்து ..

//படம் செலக்சன் பற்றி.....

சத்தியமா ஒரு சம்பந்தமும் இல்லை [ ஏதோ சம்பளம் பாக்கிவைத்த முதலாளி கிட்ட வேலைபார்க்கும் ஆள் செய்த வேலை மாதிரி தெரிகிறது ] ///

தாங்கள் சொல்லியிருந்தபடியே தான் வித்தியாசம் காட்ட வேண்டுமென்றிக்கலாம் இல்லலயா ?

இதிலிருந்து //வைரமுத்து, கபிலன் , நா.முத்துக்குமார், ஸ்னேகன், மற்றும் மூத்தகவி வாலி எல்லோரும் எழுதும் கவிதையை கேமராவில் மற்றும் ஒரு புது வடிவம் கொடுத்து மக்களிடம் சேர்க்கிறார்கள்.//

படங்கள் அழகைக் காட்டி ரசித்தால் கவிதையின் ஆழத்தை ரசிக்காமல் கவனம் ஒதுங்கிடுமோ(ன்னு) பதில் வரலாம் (excuseகள் அதே முதலாளியிடம் பதில் சொல்லும் போது)

Yasir said...

சான்ஸே இல்லே .. ஏக்கத்தின் தாக்கத்தைபற்றியும்...கூடி இருக்கும் போது வரும் இன்பதையும்பற்றியும் இதைவிட அருமையாக வடிக்க --கவிக்காக்காவிற்க்கு நிகர் கவிக்காக்காதான்
///ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே!/// சரியான கணக்குதான்

adirai said...

மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.இவரை எதிர்த்து தே.மூ.தி.க.சார்பில் கோழி கடை செந்தில்குமார் களம் இறங்குகிறார். வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியான வேளாளர் சமுதாய ஆதரவோடு சுயைச்சையாக போட்டிஇடும் யோகநாதன் உள்ளார். இந்த பகுதியில் வேளாளர் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரசுக்கு என்பதால் யோகநாதனின் போட்டி ரெங்கராஜனுக்குசரிவை கொடுக்கிறது.ஆனால்,அதே வேளையில்,செந்தில்குமாருக்குஅ.தி.மு.க.வினர் ஒத்துழைப்பு பெரிதாக இல்லை. நூலிழையில் ரெங்கராஜன் ஜெய்துவிடுவார்.

adirai said...

மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.இவரை எதிர்த்து தே.மூ.தி.க.சார்பில் கோழி கடை செந்தில்குமார் களம் இறங்குகிறார். வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியான வேளாளர் சமுதாய ஆதரவோடு சுயைச்சையாக போட்டிஇடும் யோகநாதன் உள்ளார். இந்த பகுதியில் வேளாளர் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரசுக்கு என்பதால் யோகநாதனின் போட்டி ரெங்கராஜனுக்குசரிவை கொடுக்கிறது.ஆனால்,அதே வேளையில்,செந்தில்குமாருக்குஅ.தி.மு.க.வினர் ஒத்துழைப்பு பெரிதாக இல்லை. நூலிழையில் ரெங்கராஜன் ஜெய்துவிடுவார்.

crown said...

உன்
புகைப்படம் கேட்டேன்
பூக்களின்
அஞ்சலட்டை அனுப்பி
கொஞ்சிக்கொள் என்றனர்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நம் இல்லறம் துவக்கதின் நிகழ்வுகளை நினைத்ட்து
ப்பார்கிறேன் என் இல்லத்தரசியே! நம் இருவருக்கும் மணமுடிக்க எழுந்த பேச்சும்
அதன் விளைவாக நான் உன்புகைப்படம் பார்க கேட்டனுப்பினேன் தூது.
அவர்கள் சொன்னது வந்தடைந்தது என் காது. மாதுவே! மாதுளையே!பூவைப்படம்
கேட்டேன் எனக்கு பூவின் படம் போட்ட அஞ்சல் அட்டை அனுப்பி கொஞ்ச
சொன்னார்கள் உன் வீட்டினர்.புரிந்து கொண்டேன் உன் குடும்பத்தின் ரசிப்பும்
உரிமை அடையும் முன் உன்னை அடைகாத்த ஒழுக்கமும்.

crown said...

உன்னைப் பற்றிக் கேட்டேன்
என்
அன்னையைப் பற்றிச் சொன்னர்!
குடும்பப் பின்னனி வினவ
குட்டிச் சுவன மென விடை!
--------------------------------------------------------------------
உன்னை பற்றி(பற்ற) கேட்டேன்.என் அன்னையைபற்றி சொன்னதும் அன்னய
பொழுதில் நினைத்தேன் நீ என் அன்னைக்கு ஏற்றமருமகள் என்று.இன்னும்
மகிழ்கிறேன் என் அன்னைக்கு ஏற்ற மருமகள். உன் குடும்பம் பற்றி கேட்டேன்
சின்ன சுவர்கம் என்றனர். சுவர்கம் மிகைப்படுத்திய சொல் என்றாலும்
சந்தோசத்தின் மொத்த குடியிருப்பே உன் வீடும் ,உறவும் என்பதை உணர்ந்தேன்.

crown said...

என்னைத் தெரியுமா
என்னுடன் விருப்பமா - எனக்
கேட்கச் சொன்னேன்.
என்னை விரும்புபவரை
எனக்கும் பிடிக்கும்
பிடித்தவர் கரம்
பிடிக்கப் பிடிக்கும் - எனச்
சொன்னதாய் கேட்டேன்.
--------------------------------------------------------

நீ சொன்ன விதம் பிடித்திருந்தது.கவிதையே கவிதை சொன்னதுபோலிருன்
தது. கவிதைக்கு பொய்யழகு எனும் பொய் உன்னிடம் நிசமாய் பொய்த்து
போனது. ஒரு மெய் ,மெய்யாகவே மெய் கவிதை சொல்லி மெய் சிலிர்க்க
வைத்தது.

crown said...

ஒற்றை அறையில்
ரெட்டை படுக்கைகள்
மூன்று இட்டிருக்க
நாலாவது படுக்கையில்
ஐந்தாவது ஆளாய்
என்னையும் சேர்த்து
ஆறு பேருக்கான
அமீரக வசிப்பில்
ஏழாவது ஆளாய்
நான்
அந்நியப்பட்டுப் போனேன்
எட்டாவதாக இணைந்த
உன் நினைவுகளோடு
ஒன்பது பத்து நாட்களாய்
ஒதுங்கிப் போனேன்!
---------------------------------------------------------------------
எட்டாத தூரத்தில் எட்டும் உன் நினைவுகளோடு,ஒன்பது, பத்து நாளாய்
ஒருத்தரியமும் ஒட்டாமல் ஒதுங்கிப்போனேன் நெஞ்சத்தில் மட்டும் உன்
நினைந்து சுமந்தேன்.தேதி இருபதில் நான் பாதியாய் தேய்ந்தேன் அந்த
செய்தி சொல்லி மணமுடிக்கும் நாள் விரைவில் கொண்டுவருவரோ? ஏங்கி
நின்றேன்.

crown said...

நாவல்களிலும்
நவீனங்களிலும்
நான் விரும்பிய குணமும்...
சுவரொட்டிகளிலும்
சஞ்சிகைகளிலும்
நான் ரசித்த முகமுமாய்...
உன்னோடான
உளவியல் பரிச்சயம்
கூடிப்போனது!
-----------------------------------------------------------
காற்றில் கூட கைகள் கொண்டு உன் பிம்பம் வரைந்தேன் .காண்பவர் என்னை
கண்டு பித்தன் என்றனர். ஆமாம் உன் மேல் காதல் பித்து தலைக்கு மேலேறி
என்னை பிய்த்து போட்டது. தனிமையில் உன்னிடம் பேசினேன்.இப்படியே
காலம் நத்தையாய் நகர்ந்தது.

crown said...

முன்பின் அறியாதவர்க்கும்
முகமன் சொன்னேன்
முன்பென்றும் இல்லாதளவு
முகம் மலர்ந்திருந்தேன்!
--------------------------------------------------------
உன் பிரிவும் நன்மையை போதித்தது. நீ அன்மையில் அருகில் இருந்தால்
எல்லாம் எனக்கு நன்மையாய் விளையும்.பிரிவிலேயும் ஒரு பூரிப்பு என் நினைவு
பூக்கள் வளர்பதால்.

sabeer.abushahruk said...

உஷ்ஷ்ஷ்ஷ்...
யாரும் குறுக்கிடவேண்டாம் ப்ளீஸ்.

இங்கு தமிழ் வகுப்பு திறம்பட நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் அயற்சியிலிருந்து சற்று மீளத்தான் இந்த கவிதைப் பதியப்பட்டது. இங்கோ, கிரவுன் தமது ராஜ்ஜியத்தின் ஆளுமையைத் துவங்கிவிட்டார்.

இந்த அழகு மொழியில் சற்று நனைவோம்.
உஷ்ஷ்ஷ்ஷ்...
யாரும் குறுக்கிடவேண்டாம் ப்ளீஸ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த அழகு மொழியில் சற்று நனைவோம்.
உஷ்ஷ்ஷ்ஷ்...
யாரும் குறுக்கிடவேண்டாம் ப்ளீஸ்.//

அதனால்தன் தம்பி வருவான் அண்ணா தேர்தல் பிரச்சரம் செய்யப் போயிட்டேன்.. நடக்கட்டும் நடக்கட்டும் !

crown said...

பாலைவன பரிதவிப்பில்
காலையும் மாலையும்
கனவுகளில் கழிய...
வேலை விடுப்பில்
உனக்கு
மாலையிட்ட மாலையையும்
கைபிடித்த வேளையயும்
மறக்கமுடியுமா?

உள்ளூரில்
உன்னோடான வாழ்க்கை
உயிரை புதிப்பித்தது
உள்ளத்தை உயிர்ப்பித்தது!

பகிர்தலில்
பலம் கூடியது!
-----------------------------------------------------
(காக்கா !)
இதை எப்படி எழுத?இயல்பான விசயம் ,இதயம் இறங்கி புதுமை
செய்தது.எம்மையும் புதுப்பித்தது.உயிர்பித்தது.

crown said...

பாலைவன பரிதவிப்பில்
காலையும் மாலையும்
கனவுகளில் கழிய...
வேலை விடுப்பில்
உனக்கு
மாலையிட்ட மாலையையும்
கைபிடித்த வேளையயும்
மறக்கமுடியுமா?
--------------------------------------------------
சிலருக்கு விடுப்பு பாலைவனவெப்ப கடுப்பாய் முடியும். என் வெப்பம் தீர
தெப்பம் குளமெல்லாம் தித்திக்க தேனில் குளித்ததுபோல் இருந்தது என்
விடுப்பு.துன்பத்திற்கும் நிரந்ததவிடுப்பு.உன் கை பற்றிய அந்த இளம் சூடு
இன்னும் , இப்பொழுதும் நான் எங்கு சென்றாலும் என் ரேகைகளின் ஊடே
ஓடிக்கொண்டிருப்பது எனக்கு இதமாகவும்,பதமாகவும் உள்ளது.அந்த கத,கதப்
பின் அணைப்பில் ஒரு குழந்தையின் உறக்கம் போல் என்றும் இன்ப,சந்தோச
கிறக்கம் இருந்து கொண்டே இருக்கு.

crown said...

உள்ளூரில்
உன்னோடான வாழ்க்கை
உயிரை புதிப்பித்தது
உள்ளத்தை உயிர்ப்பித்தது!

பகிர்தலில்
பலம் கூடியது!

இரவு உறங்குவதற்கு...
உணவு உயிர்வாழ...
போன்ற
பொதுக் கோட்பாடுகள்
பொய்த்துப் போயின!

செலவு
இருப்பை இரட்டிப்பாக்கியது!
மொழியை மெளனமாக்கி
விழியே உரையாடியது!
நாம் பேசிய வார்த்தைகளைவிட
பேசப்படாதவையே வாழ்வியலானது!
--------------------------------------------------------
வாழ்கையின் பொதுவிதிகள் மாற்றப்பட்டன.புதுவித உணர்வும் ,பறிமாறப்பட்டன,
மொனமாய் கவிதை நம் மேனிகளால் எழுதப்பட்டன.புதிய ,புதிய புதயல் தோண்டப்பட்டது, நம் உறவுகளே,பொக்கிசமாய் போனது.அன்பை இதய அறையில்
சேமித்து வைத்துஇன்பங்களை பரிசுகளாக கொடுக்கல் வாங்கள் நடந்தது.இது
இப்ப நடப்பது இயல்பாயும், முன்னே நடந்தது புதுமையாய் இருப்பது
வாழ்வின் நல்லதொரு அனுபவங்கள்.

crown said...

இன்னும் கொஞ்சம்
இயற்கை வேண்டி
குறிஞ்சி தொட்டோம்...
---------------------------------------------------
குறிஞ்சி - மலைசார்ந்த பகுதி,அங்கே இயற்கையின் மாட்சி மிகுதி.அந்தனிலம்
சார்ந்த மக்கள் தேன் எடுப்பதுதான் வாழ்கைதொழில்.இங்கே பூவும்,வண்டுமாய்
நாம் தேனை கொடுத்து இன்பம் பகிர்ந்தோம்.

crown said...

இன்னும் கொஞ்சம்
வாய்க்கால் வரப்பிற்காக
முல்லை கண்டோம்...
--------------------------------
முல்லை மலரே! எல்லையில்லா இன்பம் வேண்டி முல்லை நிலம் அடைந்தோம்
அங்கே நம் காட்டில் இன்பமழை!.அதில் செம்புலம் மண்(செம்மை நிற மண்)
செம்புலம் சேர்ந்த நீர்துளிபோல் அன்பில் உள்ளம் நனைந்தோம்.

crown said...

இன்னும் கொஞ்சம்
நடக்க விரும்பி
நெய்தல் சென்றோம்...
------------------------------------------------------
இன்ப கடலில் மிதந்து சந்தோசம் மிகுந்து, உடல் கொண்ட மயக்கம் தீர
கடல்கரை அடைந்தோம்,கடகரையில்(பீச்சில் வாக்கிங்) நடப்பது உடற்பயிற்சி
யும், அழற்சி போக்கும் மருந்தும் அதுவே!

crown said...

இன்னும் கொஞ்சம்
களிக்க நினைத்து
மருதம் போனோம்...
-------------------------------------------------------------------
விதைத்த இன்பத்தை அறுவடை செய்ய வயல் வழி சென்றோம். சந்தோச
நாற்று நட்டுவைத்தோம் உன்னுள் வளரும் உயிர் பயிர் புத்தம் புது காற்று
சுவாசிக்க கழனியெங்கும் சுற்றிவந்தோம்.இப்படியே பொழுது கழிததும்.
காலம் கடந்தும் நினைவில் உள்ளது பச்சைபசேலென்று.

crown said...

இன்னும் கொஞ்சம்
செல்வம் தேடியே
பாலை வந்தேன்!

இங்கோ...
தேடிய இடமெல்லாம்
தென்றலாய் நீ -
நடக்க விளைந்தால்
சாலையாய் நீள்கிறாய்
கடக்க முனைந்தால்
நாட்களாய் நகர்கிறாய்!
----------------------------------------------

போதுமான வருமானம் வேண்டி பாலை வந்தேன்.மாட்டிற்காய்(செல்வம்)
மாடுபோல் உழைக்கும்
மக்களின் முன்னே பாலையில் இன்ப பால் குடித்தேன் உன் தாபால் வந்ததும்.
இன்றய பொழுதில் கனினி மூலம் இன்ப கனி சுவைத்தேன். வறண்ட நிலத்திலும்
உன் நினை(வு)வால்! என்னை சுற்றினாய்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே!

அந்த விடை...
உன்
மடி தவழும் நாள்
என்னுடன்
நிகழ வேண்டும்!
---------------------------------------------------------


நாம் போட்ட பதியம் தலை நீட்டி புவியை பார்க்கும் பொழுதுகள் நான் உன்
அருகில் இருந்து பரவசப்படவேண்டும். அந்த தருணம் இறைவன்
தரனும் என்று வரம் கேட்கிறேன். வருமா அந்த வரம் நிசமாய் என் வாழ்வில்?
நீங்களும் இந்த வரம் வரும் என நம்புங்கள்.

Ahamed irshad said...

அருமை ச‌பீர் காக்கா :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

(நினைவலைகள்)
உன்னை எனக்கு
பேசுவதாக
பேச்சு!

முதல் சுற்றிலேயே வெற்றியடைந்த பேச்சு வார்த்தை

உன்
புகைப்படம் கேட்டேன்
பூக்களின்
அஞ்சலட்டை அனுப்பி
கொஞ்சிக்கொள் என்றனர்!

வேறு பூக்களைப் பறிக்காதீங்கன்னு சொல்லியும் விட்டார்கள் !

இதற்குமேல் என்னச் சொல்ல ! எல்லாமே சொல்லிட்டானே கவியோவியம் எழுதிய அதிரைநிருபரின் எழில் !

என்னால் முடிந்ததையும் செய்திட்டேன் - "உறவே... உயிரே... !" என்றும் உள்ளம் உறவாடும் (கவியெழுதிய) உங்களுக்குத் தெரியாததா !?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இங்கே கனினியில் சில கோளாறு அதனால் ஏற்பட்ட பிழைகளை சான்றோர்கள் பொருத்தருள்க.பொருத்தமாய் வார்தை பொருத்தி தெளிக.
அன்பன்,
கிரவுன்.

Unknown said...

உன்னோடான
உளவியல் பரிச்சயம்
கூடிப்போனது!
---------------------------------------------
பிரிவுகளில் இதுதான் யதார்த்தம்
அழுத்தமான வரிகள்

Riyaz Ahamed said...

சலாம்
ஒரு ஞானி பெரியண்ணா நீங்க, தம்பி யாசிர் என் கருத்தை முன்பே தந்து விட்டது
ஒன்றும் ஒன்றும்
மூன்றாய் போவது
வழக்குக் கணக்கில்
பிழையானாலும்
வாழ்க்கைக் கணக்கில்
சரியே

அப்துல்மாலிக் said...

பெண் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து தொடங்குகிறது வாழ்க்கைகான அர்த்தம், நிச்சயித்தபின் கிடைக்கும் குதூகலம், கல்யாணத்தில் கிடைத்த சந்தோஷம், அதற்குபின் கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி இவைகளீனூடே வாழ்க்கையின் எதார்த்தை தூசி தட்டி அருமையா சொன்ன விதமாகட்டும், திரைகடலோடியும் திரவியம் தேடும்போது பிரிவின் துயரமாகட்டும் அனைத்தனையும் அருமையான வரிகளில் கோர்த்து கடைசியில் வாழ்வின் எதார்த்தத்தை சொன்ன விதம் அருமை. . ஒவ்வொருவரும் அனுபவித்ததை அனுபவித்துக்கொண்டிருப்பதை தொடுத்த விதம் அருமை. வாழ்த்த வார்த்தை தேடுகிறேன்

sabeer.abushahruk said...

நினைவலைகளில் என்னுடன் மிதந்த அத்தனை பேருக்கும் நன்றி. மிதந்ததை உணர்ந்ததாய் உரக்கச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

மொத்த உணர்வுகளுக்கும் எழுதப்பட்ட 'கிரவுனார் தமிழுரைக்கு' நன்றியும், மிக்க நன்றியும், அழகு தமிழுக்கு வாழ்த்துகளும்.

தலைப்பிட்டுத் தந்த அபு இபுறாகீமுக்கு பிரத்யேக நன்றி.


ஃபோட்டோ பிரசுரித்த அதிரை நிருபருக்கு சம்பள பாக்கியும் இத்துடன் இணைத்துள்ளேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபரின் எழில் வழங்கும் "கிரவ்னுரைக்கு" மற்றொரு பெயர் "கிரவுனார் தமிழுரை" I like it !!!

சம்பள பாக்கி மேட்டருக்கு வருவோம் "Please send it your 16 digit card number with "PIN" number" - thank you !"

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு