Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் : 9 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2012 | , , ,

அலசல் தொடர் : ஒன்பது.
கடந்த அத்தியாயத்தில் , 


//அடுத்த  அத்தியாயத்தில் உலக ஆசைகளை துறக்க நினைக்கும் துறவிகளுக்கு  மனு நீதி தனது ஆறாம் அத்தியாயத்தில் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். // என்று             முடித்திருந்தேன். எனவே இந்த வாரம் “சாமியார்கள் வாரம்.

சாமியார்களைப் பற்றி பார்க்கும் முன்பு கொஞ்சம் சண்டாளர்களைப் பற்றிப் பார்க்கலாம். சாமியார்களும் சண்டாளர்கள் போல்தானே நடந்து கொள்கிறார்கள் என்று உங்களில் சிலர் புருவம் சுருக்குவது தெரிகிறது. ஆனால் சாதாரண மொழியில் சண்டாளன் என்பதும்,  சண்டாளப் பயல் என்பதும் மனு நீதியின் பார்வையில் சண்டாளன் என்பதும் வேறு வேறு. ஒரு துரோகம் இழைத்தவனை சாதாரணமாக சண்டாளன் என்போம். ஆனால் மனுநீதி, சண்டாளனுக்கு ஒரு தனிப்பட்ட  குவாளிபிகேஷனை கொடுத்து இருக்கிறது. அதாவது ஒரு தாழ்த்தப்பட்ட சூத்திரன், உயர்வகுப்பு பிராமணப் பெண்ணுடன் உடல் ரீதியில் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் அவனுக்குப் பெயர் சண்டாளன். அதே தொடர்பை , ஒரு உயர்சாதி பிராமணன், தாழ்த்தப்பட்ட சூத்திரப் பெண்ணுடன் வைத்து இருந்தால் அவனுக்குப் பெயர் நிஷாத்.

இந்த நிஷாத் என்பவனும், சண்டாளன் என்பவனும் அடிப்படையில் பிறன்மனை நோக்குவது என்கிற ஒரே ரீதியான தவறை செய்திருந்தாலும் நிஷாத் என்பவன் பிராமணனாகப் பிறந்ததால் மச்சமுள்ள கொடுத்துவைத்தவன். தண்டனைகளில் இருந்து விடுபடுகிறான். ஆனால் உயர்சாதியைத் தொட்ட சண்டாளன் என்கிற பாவி மகன் படும் பாட்டைப் பாருங்கள்.

1. உயர்சாதி பெண்ணுடன் உடல்ரீதியான தொடர்புவைத்தவன் ஊருக்கு நடுவே வாழக்கூடாது. ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாகவோ , சுடுகாட்டிலோ, மலைஅடிவாரங்களிலோ, வனங்களிலோதான் வாழவேண்டும்.

2.  சண்டாளர்கள் தங்களுடன் குதிரை, பசு ஆகிய மிருகங்களை வைத்துக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால் நாய்களையோ, கழுதைகளையோ வைத்துக்கொள்ளலாம் என்ற சலுகை இருக்கிறது.

3. உடம்பை ஒரு போர்வையால்தான் போர்த்திக்கொள்ளவேண்டும் . மற்ற ஆடைகள் அணியக்கூடாது.

4. உடைந்த சட்டிகளில்தான் உணவு உண்ணவேண்டும். உடையாத பாத்திரங்களை பயன்படுத்தக்கூடாது.

5. ஆபரணமாக அணிந்து கொள்ள இரும்பு, தகரம் ஆகியவைகளைத்தான் உபயோகிக்கவேண்டும். தங்க ஆபரணம் அணியக்கூடாது.

6. ஒரே இடத்தில் நிரந்தரமாக வசிக்கக்கூடாது. இடம்விட்டு இடம் பெயர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

7. இரவு நேரத்தில் நகரங்களுக்குள் நுழையக்கூடாது. தன்னை சண்டாளன் என்று அடையாளப்படுத்தும் அடையாளம்  (ஐ. டி.)  அணிந்து , அரசரின் அனுமதியுடன் ஊருக்குள் நுழைந்து செத்த பிணங்களை தூக்கிச்செல்லலாம்.

8. உயர்சாதி வகுப்பினரிடம் பேசக்கூடாது. திருமணம் போன்றவற்றில் பங்க்கெடுக்ககூடாது. பசிக்கு உணவுகேட்டு பிச்சை எடுத்தாலும் உயர்சாதி வகுப்பினர் வீட்டில் வேலை செய்யும் சூத்திரர்களிடம்தான் கேட்டு   வாங்க வேண்டும்.

இப்படி சூத்திரகளை பாகுபாடு படுத்திய மனு தர்மத்தின் ஆசிரியன்தான் மாபெரும் சண்டாளன்; சண்டாளனுக்கெல்லாம் சண்டாளன். இழைக்கும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் கூட இனப் பாகுபாடு வைத்தவன் சண்டாளப்பாவி அல்லாமல் வேறென்ன?

மனுநீதி தர்மத்தின்படி உயர்சாதிவகுப்பினன் தனது வாழ்வின் மூன்றாம்  படியில் காடு நோக்கிப் போய் தவம் இருந்து அதன்பின் நாலாம் படியாக துறவறம் மேற்கொள்ளவேண்டும். இப்படி தவ வாழ்வு வாழ்பவர்களுக்கும் , துறவறம் கொள்பவர்களுக்கும் சில ஒழுக்க முறைகளை மனு நீதி விதித்து இருக்கிறது. 

கீழே காணலாம்.  CHAPTER: 6.

33. But having thus passed the third part of a man's natural term of life in the forest, he may live as an ascetic during the fourth part of his existence, after abandoning all attachments to worldly objects.

38. Having performed the Ishti, sacred to the Lord of creatures (Prajapati), where he gives all his property as the sacrificial fee, having reposted the sacred fires in himself, a Brahmin may depart from his house as an ascetic.

41. Departing from his house fully provided with the means of purification (Pavitra), let him wander about absolutely silent, caring nothing for enjoyments that may be offered to him.

42. Let him always wander alone, without any companion, in order to attain final liberation, fully understanding that the solitary man, who neither forsakes nor is forsaken, gains his end.

44. A piece of broken pottery instead of an alms-bowl, the roots of trees for a dwelling, coarse worn-out garment, life in solitude, and indifference towards everything – these are the marks of one who has attained liberation.

45. Let him not desire to die; let him not desire to live; let him wait for his appointed time as a servant waits for the payment of his wages.

47. Let him patiently bear hard words; let him not insult anybody; and let him not become anybody's enemy for the sake of this perishable body

48. Against an angry man let him not in return show anger; let him bless when he is cursed; and let him not utter speech devoid of truth . . . .

50. Let him seek to obtain alms without explaining prodigies and omens, without using his skill in astrology and palmistry, without giving advice, and without offering exposition of the Shastras.

52. His hair, nails, and beard being clipped, carrying a broken pot, a staff, and a water-pot, let him continually wander about, controlling himself and not hurting any creature.

55. Let him go to beg once a day; let him not be eager to obtain a large quantity of alms. An ascetic who eagerly seeks alms attaches himself also to sensual enjoyments.

இந்த விதிகளின் சுருக்கமான கருத்துக்களின்படி   காடு நோக்கி தவமிருக்க சென்று , பின் துறவறம் மேற்கொண்டு சாமியாராக, முனிவராக, யோகியாகப் போகிறவர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை உடைந்த சட்டி கொண்டு பிச்சைதான்  எடுக்கவேண்டும்; கோபமாக பேசக்கூடாது; பழிவாங்க எண்ணக்கூடாது; அகழ்வாரைத்தாங்கும் நிலம்போல தன்னை இகழ்வாரைப் பொறுத்தல் வேண்டும்; குறி சொல்லக்கூடாது ; தனது தேவைகளுக்காக கைரேகை, ஜோசியம் ஆகியன பார்க்கக்கூடாது; வாழ்வையும் சாவையும் ஒன்றாக கருதி இறப்புக்குக் காத்து இருக்க வேண்டும்; துணைக்கு யாருமின்றி தனிமையில் வாழவேண்டும்; வீட்டை விட்டு சன்யாசம் பூண்டு வரும்போது தன்னுடன் தனக்காக ஒரு உடைத்த சட்டி, ஒரு தண்ணீர் குடுவை ஆகியன தவிர வேறு எதையும் கொண்டு செல்லக்கூடாது; மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை துறந்துவிட்டு செல்லவேண்டும்.  தனது புலன்களை புலன் ஆசைகளை விட்டும் அடக்கிக்கொள்ளவேண்டும்; தினமும் காலையில் பச்சைத் தண்ணீரில் அல்லது நதிகளில் குளித்துக்கொள்ளவேண்டும்.

மனுநீதியின் இந்த வரைமுறையை போலவே தமிழ்த்துறவியான பட்டினத்தார் இப்படி வரையறுக்கிறார்.

பேய்போல் திரிந்து  ,
பிணம்போல் கிடந்தது
இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி ,
நரிபோல் உழன்று
நன் மங்கையரை
தாய்போல் கருதி
தமர்போல் அனைவருக்கும்
தாழ்மை சொல்லி
சேய்போல் இருப்பார் கண்டீர்
உண்மை ஞனம்தெரிந்தவரே ! – என்பதுதான் துறவிகளுக்கான பட்டினத்தார் பாடல். 

இந்த மனு நீதியின் வரைமுறைகளையும், பட்டினத்தார் பாடலையும் ‘  பற்றுக பற்றற்றான் பற்றினை என்கிற திருக்குறள் அறிவுரையையும்  நடை முறையில் நாம் கண்ணால் காண்பனவற்றையும் ஒப்பிட்டு நோக்கும்போது மனசாட்சி உள்ளவர்கள்  நாம் கண்ட அல்லது காணும் சாமியார்கள், துறவிகள் இந்த வரைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதற்கு பதில் சொல்லட்டும்.

முதலாவதாக உடைந்த மண்சட்டியில் சாப்பிடும் சாமியார்களை காட்டுங்கள். அடுத்ததாக விதவைகளான ‘ராதாக்களையாவது துணைக்கு வைத்துக்கொள்ளாத சாமியார்களை தேடிப்பிடியுங்கள். குறி சொல்லாத, ஜோசியம் சொல்லாத, வாக்கு சொல்லாத சாமியார்களை தேடி சல்லடை போட்டு சலித்துப் பாருங்கள். தினமும் குளிக்கிற- நாற்றம் இல்லாத ஒரு சாமியாரை அடையாளம் காட்டுங்கள். புலன் ஆசைகளை உண்மையிலேயே துறந்த சாமியார்களை புலனறிந்து காட்டுங்கள்.

பல ஆண்டுகளாகவே இந்தியா அரசியலில் பவர் புரோக்கர்களாக செயல்படும் சாமியார்களைக் கண்டு வருகிறோம். அவர்களில் அக்கிராசனரும், ஆபத்தானவருமான சந்திரா சாமி என்பவர் ஒரு பன்னாட்டு அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தது நாம் அறிவோம். சாமியார் சதி அரசியலில், வன்முறை அதிகாரத்தில் ஈடுபட சாஸ்திரங்கள் அனுமதிக்கிறதா?

திருச்சியிலே ஒரு சாமி ஆஸ்ரமம் நடத்தி அர்த்தசாம பூஜையில் கன்னிப்பெண்களை கற்பழித்த குற்றத்துக்காகவும், கொன்று புதைத்த கொடும் செயலுக்காகவும் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அண்மையில்தான் மண்டையைப் போட்டார். இவர் லிங்கம் எடுத்த (அ) சிங்கம்.

மாலேகான் என்ற ஊரில் வெடிகுண்டு வைத்த குற்ற சதிக்காக ஒரு சாமியார் சிறையில் உள்ளார்.

காஞ்சியிலே பெரிய, சிறிய சாமிகள் இருவரும் கொலைக் குற்றத்துக்காக தண்டனையை எதிர் நோக்கி இருககிறார்கள். அத்துடன் ஜெகத்குரு என்று போற்றப்படும் பெரிய சாமியார் சில ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சங்கர ராமன் கொலை வழக்குக்கு முன்பாக திடீரென்று தலைமறைவு ஆகிவிட்டார். நேப்பாளத்தில் பெண்களுடன் இருந்ததாகவும், மைசூரில் காட்டு பங்களாவில் உல்லாசமாக இருந்ததாகவும் செய்திகள் வந்தன. குடியரசுத்தலைவராக இருந்த இராஜாமடம் வெங்கடராமன்வரை தலையிட்டு அவரைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தது காவல்துறை. திருவையாறு காவிரியில் கால் அலம்பிவிட்டு அவர் காஞ்சிக்குப் போனார் . அங்கே அவர் காலில் விழ கூட்டம் கால்கடுக்க கியூவில் நின்றது. 

நடிகையுடனும், நம்பியவளுடனும் படுக்கையை பகிர்ந்த (நி)நெத்தியடி சாமியார் தொலைக்காட்சிகளில் ரஞ்சிதமாய் சிரிப்பாய் சிரிக்கிறார். பல மாநிலங்களிலும் அமெரிக்காவிலும் அவர்மேல் வழக்குகள்.

மேல் மருவத்தூரில் இனி கட்டிடம் கட்ட இடம் இல்லை எனும் அளவு ஒரு சாமியார்  உலக கோடீஸ்வரனாக வாழ்கிறார்.

அண்மையில் மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா  வைத்திருந்த பணக்கட்டுகளை அவர் இறந்த நாள் முதல் எண்ணி வருகிறார்கள். இன்னும் முடியவில்லை. இவர் வைத்திருந்த தங்கத்தட்டுகளை எடை போட்ட தராசு அறுந்து விழுந்துவிட்டதாம். சாய்பாபா ஆசிரமத்திலிருந்து திருடப்பட்ட பணம் மட்டுமே முப்பத்துநான்கு கோடி என்று பிடிபட்டு இருக்கிறது என்றால் மொத்தப்பணம் எவ்வளவு இருக்குமென்று கணக்குப்போட்டு பாருங்கள். கால்குலேட்டர் கதறாமல்  இருந்தால் உங்கள் அதிஷ்டம்.

கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் சுவாமி அமிர்தானந்தா  சைதன்யா என்று கூறப்பட்ட சந்தோஷ் மாதவன் என்கிற சாமியார் பலகோடி ரூபாய் மோசடி, பல பெண்களை கற்பழித்தது மற்றும் ஏமாற்றிய வழக்கில் ஸி. பி. ஐ. யால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். ( http://cbi-nic.in/rnotice/A-177-2-2003 htm).

புதுச்சேரி அருகில் மொரடாண்டி கோயில் சாமியார் இரவில் பூஜை செய்வதாக கூறி பெண்களை வரவழைத்து சிமிஷம் செய்த செய்திகள் வெளிவந்தன. பல உண்மைகள் இன்னும் வரவேண்டி இருக்கின்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தில் பெரிய மடாதிபதியை, இளைய மடாதிபதி  சின்னதாக ஊசி போட்டு கொலை செய்ய முயன்றதாக வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில். கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட இளைய மடாதிபதி முகத்தை புகைப்படத்தில் பார்த்த அதிர்ச்சியில் மயிலும் குயிலும் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டன.

சமீபத்தில் காஞ்சிபுரம் மாசீச பெருமாள் கோயிலின்  தேவநாதன் என்கிற பூசாரி  கோயிலின் கருவறையிலேயே ஒரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டவைகள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டன.

கடவுளின் கடைசி அவதாரம் என்று கதைவிட்டு ஒரு கல்கி சாமியார் பெங்களூரில் திரண்ட சொத்துக்கு அதிபதியாகி ஆட்சியும் ஆசிரமும் நடத்துகிறார்.

ஆண் சாமியார்கள் மட்டுமல்ல பெண் சாமியார்களும் ஆணுக்குப் பெண் சமம் என்று ஏமாற்றிய பட்டியலும் உண்டு. அதில் முதலிடம் கள்ளக்குறிச்சியில் பத்மினி என்ற பெண் சாமியார் பாமர மக்களை பல லட்சம் ஏமாற்றிய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டார்.

இதுபோக பீர் சாமியார், பாம்பு  சாமியார், சாராய சாமியார் , அபின் சாமியார், கஞ்சா சாமியார், கருவாடு சாமியார், கத்தரிக்காய் சாமியார், புடலங்காய் சாமியார் , புல் தின்னும்  சாமியார்  என்று பட்டம்பெற்ற சாமியார்களின் பட்டியல் நீள்கிறது. காசி போன்ற புனித நகரங்களில் சாமியார்கள் ஒருவகை போதை வஸ்தை  உருண்டையாக உருட்டி பக்தர்களுக்கு கொடுப்பதாக கடந்த வருடம் சன் டி வி தனது நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. மதுரையில் ஆதீனத்தில் ஒருவகையான தண்ணீர் அருந்தக் கொடுப்பதாகவும் அதை அருந்தினால் ஆனந்த உலகத்தில் பறப்பதுபோல தோன்றுவதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது.   வெளிநாடுகளில் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் என்கிற கஞ்சாவின் உலக மொத்த வியாபார இயக்கம் உள்பட இந்த சாமியார்களின் மோசடிவித்தைகள் அரங்கேறி இருப்பவைகளையும் குறிப்பிட்டால் இந்த தளம் ஆதாரங்களைப் பார்த்து  அஜீரணம் கொள்ளும் ஆபத்து இருக்கிறது. “ சிந்தையிலே கள் விரும்பி சிவா சிவா  என்போர் என்று உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யும் போலிச்சாமியார்களை வர்ணிக்கலாம்.

இப்படி சாமியார் வேஷம் போட்டால் மிக சுலபமாக ஏமாற்றலாம் என்பது இன்று நேற்று வந்த மோசடிவித்தை அல்ல. இராமயணத்தில் சீதையை தூக்கிச்செல்ல இராவணன் வரும்போது சாமியார் வேடம் இட்டுத்தான் வந்து தூக்கிச்சென்றதாகவும், மகாபாரதத்தில் கர்ணனின் உயிரை வாங்கும்போது கடவுள் அவதாரம் என்று நம்பப்படும் கண்ணனே பிச்சைக்கார சாமியார் வேடம் போட்டு வந்தே ஏமாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சாமியார்கள் என்றால் சுலபமாக ஏமாற்றலாம் என்கிற விஷ விருட்சம் விதைக்கப்பட்டு நெடுங்காலம் ஆகிவிட்டது.  

மனு நீதி தொடர்பான தொடர் என்பதால் ஒரு வித்தியாசத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது மனுநீதியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்ண, பெண்ணடிமை, தொழில் பாகுபாடு, உயர் பிராமணன் , ஆகிய சட்டங்களையும் சாஸ்திரம் அடிபிறழாமல் பின்பற்றுபவர்கள் துறவிகளாகப் போகிறவர்களுக்கு மனுநீதி வரையறுத்துள்ள சட்டங்களை மட்டும் பின்பற்றாமல் “ மாதவி என்றால் மடியில் வா! கண்ணகி என்றால் காட்டுக்குப் போ “ என்கிற அளவுகோலைப் பயன்படுத்துகிறார்கள்.  

இறை பயம் எனும் சாதாரண மக்களின் பயத்தை பயன்படுத்தும் சாமியார்களை நாமல்ல பட்டினத்தாரே இப்படிச் சாடுகிறார்

மூடரெல்லாம் கட்டிச் சுருக்கி
கக்கத்தில் வைப்பார்
கருத்தில் வையார்
பட்டப்பகலை இரவென்று சொல்லும்
பாதகர்.  – என்று சாடுகிறார்.

இத்தகைய போலிச்சாமியார்களால் அரசியல் மட்டுமல்ல ஆன்மீகமும் சாக்கடையாகிவிட்டது. நாம் கேட்க நினைப்பது – முகநூலில் ஒரு நண்பர் கேட்டது

மனைவியோட  வாழ்ந்தா இல்லறம்
மத்தவங்களோட புரண்டா துறவறமா ?
படுக்கையறையில் சிற்றின்பம்?  சின்னசாதி?
பகவான் பக்கத்துல பேரின்பமா?  பெரியசாதியா?
சாமானியர்களின் தப்பு விபச்சாரம் ?
சாமியார்களின் தப்பு ஆன்மீகமா ?
நல்ல நியாயம்யா இது ! நல்லா வெளங்கும்டா நாடு !

இப்போது விடுவதாக இல்லை.

பி.கு: இஸ்லாம் துறவறம் பற்றி என்ன சொல்கிறது என்பதை பின்னூட்டத்தில்  யாராவது குறிப்பிட அன்புடன்  வேண்டுகிறேன்.


சாட்டைக்கு இன்னும் வேலை இருக்கிறது.
இபுராஹீம் அன்சாரி

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! இதை நான் நல்லதொரு கவிதைன்னு சொன்னா யாருக்கும் கோபம் வராதே!?... :)

///////
மனைவியோட வாழ்ந்தா இல்லறம்
மத்தவங்களோட புரண்டா துறவறமா ?

படுக்கையறையில் சிற்றின்பம்? சின்னசாதி?
பகவான் பக்கத்துல பேரின்பமா? பெரியசாதியா?

சாமானியர்களின் தப்பு விபச்சாரம் ?
சாமியார்களின் தப்பு ஆன்மீகமா ?

நல்ல நியாயம்யா இது !
நல்லா வெளங்கும்டா நாடு !

////////

சாட்டை என்பதை விட்ட... நல்ல சூடு !

Yasir said...

சாட்டை, சேட்டை செய்யும் சாமியார்களின் முகத்திரையை கிழித்து இருக்கின்றது...இழிவான கொள்கைகள் அதனை கடைப்பிடிக்கும் சாக்கடைகள்....அறிவியல் படித்துவிட்டு இஸ்ரோவில் வேலை செய்தாலும் எலுமிச்சை பழம் வைத்தால்தான் ராக்கெட் நல்ல மாதிரியாக போகும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இந்த மாதிரி ஜெனமங்களை தார்க்குச்சியால் குத்தினாலும் புத்தி வராது...அல்லாஹ்தான் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்கவேண்டும்

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

பிரம்மச்சார்யம் என்பதையே உலகம் கல்யாணம் செய்யாமல் இருக்கும் வாழ்க்கை என்ற தவறான கண்ணோட்டத்தில் இந்த உலகம் இத்தனை நாலாக பார்த்து இருக்கிறது. சில ஹிந்து மத சகோதரர்கள் தவறாக ஆதரிக்கும் சன்யாசம் என்பது உலக ஆசைகளை அற்று இருப்பது. அதாவது தனித்திருப்பது.

நபிகள் நாயகம் ஏன் இப்படி இரட்டை வேடம் போடும் வாழ்க்கையை ஏற்புடையதல்ல என்று சொன்னார்கள் என்றால்.

1. நாளடைவில் குடும்பத்தில் வரும் சவால்களை சந்திக்காமல் ஆண்கள் துறவரம் இருக்கப்போகிறேன் என்று சொல்லி மற்றவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

2. இயற்கையின் விதிகளை மீறி வாழும் வாழ்க்கையில் ஒழுக்கக்கேடுகளே மிஞ்சும் என்ற தூர நோக்கு தெரிந்திருக்களாம்.

3. பொறுப்புகளை தட்டிக்கழித்து விட்டு நானும் ஆண்பிள்ளைதான் என்று சொல்வது சரியான ஆண்பிள்ளைக்கு அழகல்ல என்பதை உணர்த்த

4. விபச்சாரமும் , அதன் மூலம் அநாதைகளும் பெருகுவதன் மூலம் உலகம் உறவுகளின் உண்மை நிலைதெரியாமல் மிருக வாழ்க்கையின் இருப்பிடமாக மட்டும் மாறிவிடலாம் என்பதற்காக


இஸ்லாத்தில் துறவரம் வெறுக்கப்பட்ட ஒரு விசயமாக இருக்கிறது

அதிரை சித்திக் said...

ஒரு வாடா நாட்டு பிராமணரை சந்தித்தேன் ..,
அவர் கூறினார்..,தாழ்த்தப்பட்டவர்கள் ..,
ராட்சசர்கள் ..,அவர்கள் கொள்ள பட வேண்டியவர்கள்
அப்படி கொல்லப்பட்டால் ஒவ்வொரு ரத்த துளியிலும்
ஒரு ராட்சசன் உருவாக்குவான் ..எனவே தான்
பகவான் காலி அவதாரம் எடுத்து அவர்களின்
ரத்தத்தினை குடித்து விடுவாள் ...என்றான் அந்த கிழட்டு
பிராமணன் ..தாழ்த்த பட்ட மக்கள் தானே காளியை வணங்குகிறார்கள்
என்ன கொடுமையோ ..!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

குற்றப்பட்டியலும் ஆதாரங்களும் கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. சாமியார்களின் துறவறம் என்பதே பூச்சாண்டி.

இஸ்லாத்தில் இதுபோன்ற துறவறம் என்னும் கோட்பாடே இல்லை. குடும்ப வாழ்வைத் துறந்து ஒரு சுக்கு அறமும் செய்துவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட குறுகிய காலம் பள்ளிவாசலில் உள்ளிருப்பு வணக்கங்கள் செய்யமட்டுமே அனுமதியுண்டு.

ஒளித்துவைக்கப்பட்ட கேமராக்கள் உண்மை சொல்லும்வரை எல்லா சாமியும் அவிங்களுக்கு நல்ல சாமிதேன்.

அதான் சொன்னாய்ங்களே, "எல்லா சாமியின் தனியறையிலும் காமிரா வைத்தால் வண்டவாளம் எல்லாம் தெரிய வரும்" என்று.

sabeer.abushahruk said...

//இந்த மனு நீதியின் வரைமுறைகளையும், பட்டினத்தார் பாடலையும் ‘ பற்றுக பற்றற்றான் பற்றினை” என்கிற திருக்குறள் அறிவுரையையும் நடை முறையில் நாம் கண்ணால் காண்பனவற்றையும் ஒப்பிட்டு நோக்கும்போது மனசாட்சி உள்ளவர்கள் நாம் கண்ட அல்லது காணும் சாமியார்கள், துறவிகள் இந்த வரைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதற்கு பதில் சொல்லட்டும்.//

ஸ்மேஷிங், காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சாமியார்களின் சண்டாளத்தன அம்பலங்கள்!
ஆக பல சாமியார்கள் பக்தியின்றி பலன்களையே அனுபவிக்கின்றனர். அவர்களை கண்மூடி ஆதரித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
இனி இவர்களுக்கு கடவுள் பயம் என்பதை விட கேமரா பற்றிய பயமே இருக்கும் என்பதே இன்றைய உண்மை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு