
ஈந்துவக் கும்திரு நாளாம் இகமதில் ஈத்பெருநாள்
நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை
ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்
சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே
புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்
எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்
மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்
கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே
இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்
சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே
-----
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) அலை
பேசி: 00971-50-8351499 / 056 7822844 வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com





 

 
 
 

 

 
 
 
 

10 Responses So Far:
உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்......... Eid al fitr al Mubarak to all.....
உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்
" SELAMAT HARI RAYA " To ALL OUR BROTHERS & SISTERS
May Allah Bless you with more prosperity and good health in this occasion and always.
From
Zakir Hussain & Family
Kuala Lumpur
Malaysia
KulluAam WaAnthum BiKhair
குல்லுஆம் வஅன்தும் பிஹைர் !
அட டா !
வடை போச்சே.... (பதி பெருநாள் ஓடிடுச்சுங்க... ரொம்பதான் தூங்கிட்டேனோ?)
அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் அனைவருக்கும் இந்த இனிய இப் பெருநாளின் இனிய நல் வாழ்த்துக்கள்.
KulluAam WaAnthum BiKhair
அல்லாஹ் நமக்கலித்த
ஆனந்தபெருனால்
இன்பம் பொங்கட்டும்
ஈருலகம் செலிக்கட்டும் ( நம் வாழ்வில்)
உலகம் போற்றட்டும்
ஊரெல்லாம் கொண்டாட
எமதிறைவன் நமக்களித்த
ஏற்றமிகு திருனால்
ஐக்கியப்படுவோம்
ஒற்றுமையுடன்
ஓங்கி ஒளிக்கட்டும் அல்லஹுஅக்பர் அல்லாஹுஅக்பர்
KulluAam WaAnthum BiKhair
அதிரை நிருபரின் வாசகர்களுக்கும்,மற்றும் நம் அதிரையின் சொந்தங்களுக்கும் என் உளம்கனிந்த பெருநாள் வாழ்துக்கள்..
அஸ்ஸலாமுஅலைக்கும். உலக முஸ்லிம்களுக்கும் அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கும் என்னுடைய ஈகைபெரு நாள் வாழ்த்துக்கள்
Post a Comment