அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும், அன்பிற்கினிய சகோதரர்களுக்கு ! பத்ரு களம் என்ற இந்த பதிவு கடந்த வருடங்களின் ரமளான் மாதத்தில் நம் அதிரைநிருபரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பதிவை இன்று மீள்பதிவு செய்கிறோம்.
-நெறியாளர்
ரமளான் மாதம் பிறை 17ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம்.
பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.
எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பதுர் யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களும் முஸ்லிம்களின் எதிரிகளும் கி.பி. 623 ம் ஆண்டு ஹிஜ்ரி 2 ம் வருடம் யுத்த களத்திற்குச் சென்று யுத்த ஆயத்தங்கள் செய்து கொண்டனர். இவ்யுத்தத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை 313 பேர் என்றும் எதிரிகளின் தொகை ஏறக்குறைய 1000 என்றும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...
மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.
பத்ரு களம் கண்ட வீரத் தியாகிகள் (ஷுஹதாக்கள்)
01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
02. ஸஃப்வான் இப்னு வஹப்(ரலி)
03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர்(ரலி)
04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்(ரலி)
05.ஆகில் இப்னுல் பக்ரு(ரலி)
06.உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப்(ரலி)
07.உமைர் இப்னுல் ஹம்மாம்(ரலி)
08 .யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ்(ரலி)
09 .அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)
11 .மஸ்அத் இப்னு ஹத்மா(ரலி)
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்(ரலி)
13 .ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)
பத்ருப் போர் பற்றிய இந்த சொற்ப்பொழிவை கேட்டுப் பாருங்கள், கண்ணிர் வராதவருக்கும் வந்துவிடும்.
பகுதி 1 http://www.islamkalvi.com/media/iyub41/audio1.mp3
பகுதி 2 http://www.islamkalvi.com/media/iyub41/audio2.mp3
8 Responses So Far:
நினைவூட்டலுக்கு நன்றி.. உண்மையான உள்ளச்சத்தை எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தருவானாகவும். ஆமீன்.
மாஷா அல்லாஹ்..இந்த இடத்தை நேரில் பார்க்கும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கும், என் குடும்பத்தார்க்கும் கொடுத்திருக்கின்றான்..
நேரில் பார்கையில் மெய் சிலிர்த்தது.
இயன்றால் படியுங்கள்.
http://www.islamicity.com/Articles/articles.asp?ref=IC0211-1786
இரண்டு வருடத்திற்கு முன் ஹஜ்ஜுக்கு சென்றபோது இந்த இடத்தைப்பார்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பார்க்கும் போது உண்மையிலேயே கண்ணீர் வந்தது!!!
யன்பஃஅ எனும் ஊரில் பணியாற்றும் பொழுது வாரந்தோறும் மதினாவுக்குச் செல்லுவதும் வழியில் இந்த பத்ரு களத்தினைப் பார்வையிடவும் அல்லாஹ் எனக்கு வாய்ப்பளித்திருந்தான்; அல்ஹம்துலில்லாஹ்!
ஆயிரம் எதிரிகள் அங்கே
.....ஆயுதம் அற்றவர் இங்கே
ஆயினும் இணங்கினர் அல்லாஹ்(வின்)
...ஆணையைத் தயக்கமும் இன்றி!
சொற்பமாய் இருப்பினும் வெற்றிச்
....சோபனம் தருவதே அல்லாஹ்(வின்)
அற்புதம் என்பதை அங்கே
.... அனைவரும் உணர்ந்திடச் செய்தான்!
வானவர்க் கூட்டமும் வந்து
.....வாளினால் வெட்டிட உதவ
ஆணவக் கூட்டம் ஒழிந்து
...அக்களம் வென்றனர் காணீர்!
"இச்சிறு கூட்டமும் வெற்றி
....இன்றியே அழியுமே யானால்
அச்சமாய் உன்னையும் அல்லாஹ்(என்று)
....அழைத்திட எவருமே உண்டோ”
நெற்றியைத் தரையினில் வைத்து
....நெகிழ்வுடன் நபிகளார்(ஸல்) வேண்ட
வெற்றியைத் தருவதை அல்லாஹ்
....வேகமாய் நிறைவுற செய்தான்!
தீனெனும் செடியினைக் காத்த
...தியாகிகள் இலையெனில் நாமும்
தீன்குல பிறப்பினில் இல்லை
...தியாகிகள் நினைவுகள் வேண்டும்
...
அல்ஹம்துலில்லஹ்...............
Post a Comment