Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மருதாணி புரளி: FLASH NEWS மீடியாக்களின் பொறுப்பற்ற போக்கு 4

அதிரைநிருபர் | August 20, 2012 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முக்கிய அறிவிப்பு.... கொன் (kone) மருதாணியிட்டவர்கள் கைகளை உடனே கழுவிக்கொள்ளுங்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த மருதாணியை கைகளில் இட்ட பெண்கள் உயிரிழந்து விட்டதாகவும், பலர் மனநிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் என்று 20.08.2012 அதிகாலை 01:45 மணியளவில் அதிரை பள்ளிவாசல்களில் திடீர்  அறிவிப்பு செய்யப்பட்டு உறங்கிக்கொண்டிருந்த ஊர் மக்களை பீதியில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து அதிரையில் உள்ள முக்கிய இயக்கத்தை சார்ந்த சகோதரர்கள் அவர்களின் பிற மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தார்கள். மருதாணியிட்டதால் கொப்பளம் மற்றும் அரிப்பு காரணமாக சென்னை மற்றும் ஒரு சில ஊர்களில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்கள் என்று உறுதி செய்யப்பட்டு, ஆட்டோவில் மீண்டும் பெண்கள் தங்களின் கைகளில்  கோன் (Kone)  மருதாணியிட்டிருந்தால் அவைகளை உடனே நீக்கி கைகளை சுத்தம் செய்யுமாறு அறிவிப்பு செய்து, இதற்காக மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவிப்பு உடனே செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த விசயத்தை flash news என்ற பெயரில் 500 மற்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு என்றும் பல பெண்கள் உயிரிழப்பு என்று ஊர்ஜிதப்படுத்தாத செய்திகள் வெளியிட்டு, முஸ்லீம்களின் பண்டிகை நாள் என்று தெரிந்திருந்தும் நம்மை நிம்மதியிழக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்  வதந்திகளை பரப்பிய  சன் நியூஸ், ராஜ் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற FLASH NEWS ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு வண்மையாக கண்டிக்கதக்கது.

இது போன்ற வதந்திகளை நம்மவர்களும் தீர விசாரிக்காமல் உடனே உயிர் பலி என்று அறிவிப்புகள் செய்து மக்கள் கொந்தளிக்கும் சூழலை உருவாக்கும் போக்கை தவிர்ப்பது நல்லது.

அல்லாஹ்  நம் எல்லோரையும் பாதுகாப்பானாக.

-அதிரைநிருபர் குழு

4 Responses So Far:

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

தோல்களில் அலர்ஜி ஏற்படலாம். உயிர் போவதற்க்கு மருதானியின் சயனைட் கலந்து அது கையில் உள்ள காயம் மூலமாக சப்-
ஆர்ட்டரியை தாக்கி...அதன் மூலம் மெயின்
ஆர்ட்டரியை கடந்து மூளைக்குள் செல்லும் ஆக்சிஜனை குறைத்து.......கேட்பதற்கே பழைய ஹிந்திப்படத்து கிளைமாக்ஸ் மாதிரி இல்லே....

"அறிவியல் படிங்கப்பா"...என்று சன் / கலைஞர் நியூசில் ஃப்ளாஸ் நியூஸ் போட எவ்வளவு செலவாகும்?

அதிரை என்.ஷஃபாத் said...

செய்தி வெளியிடுவதில் அவசரம் மட்டுமே காட்டபடுகிறது, நம்பகத்டன்மை குறித்த அக்கறை எடுக்கப் படுவதில்லை என்னும் உண்மை, அதிர்ச்சி அளிக்கின்றது.

அப்துல்மாலிக் said...

வேதனைப்பட வேண்டிய விடயம், பெருநாள் நடு ராத்திரி இப்படி ஒரு பீதியை கிளப்பிவிட்டு நிம்மதியிழந்து தவிப்பதை வேடிக்கை பார்த்த இந்த மீடியாக்களை என்ன செய்யலாம்..?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு