மனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.
முதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.
நடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.
ஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம் பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன் நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வளவு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது.
அப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம்??. நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.
இந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன்.
உங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers] என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ " ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.
எனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.
- இதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். ?
- பணம் [Money] என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது?
- “உறவுகள்” [ Relationships] என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.?
- சமுதாயம் [society/ community] பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது?
- வாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.
பொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இல்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]
அவநம்பிக்கையுடன் எதையும் அனுகாதீர்கள்.
இதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.
சாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான் “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி?
யாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்?.
சிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.
சிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.
இதில் ஏன் உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி? .
இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.
இதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.
வாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.
இந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.
ZAKIR HUSSAIN
20 Responses So Far:
நிறைய விஷயங்கள் லைனில் கிராஸ் ஆகுது சார் !
இந்த கிளாஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார் !
சத்துணவு போடாட்டியும் வகுப்புக்கு கரெக்டா வந்து உட்கார்ந்துடுறேன். நான்...
எல்லாமெ அப்படியே மெய்யா இருக்கே அதெப்படி !
ரொம்ப பிடிச்சிருக்கு ..
இன்னும் ரெண்டு தடவை ..
இல்ல மூன்று நான்கு தடவை படிக்கணும்
ஒரு வரியை கடை பிடித்தாலும் முன்னேற்றம் உறுதி
வாழ்வில் முன்னேற நீங்கள் தரும் விசயங்கள் ஒவ்வொன்றும்:-
*நடுங்கும் டோக்யோ குளிரில் சூடான இட்லி சாப்பிட்ட மாதிரி,
*கொதிக்கும் 'கல்ப் சூட்டுக்கு ஜில்லுன்னு காத்து வாங்குன மாதிரி,
*நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கம் மாதிரி,
*ஒருவனின் வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் அவளின் பங்கும் இருக்கும் அது மாதிரி,
*இன்னும்........
"HOW TO WIN THE PEOPLE?" , "HOW TO GET WHATEVER YOU NEED?" என்று இந்த உளவியல் பேராசிரியர் நடத்தும் பாடத்தின் அடிப்படை விதிகளை “இனியவை நாற்பது” எனும் தலைப்பில் நான் எழுதிய குறட்பாக்கள்:
1.
ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதைப்
பாழின்றி வைத்துப் பழகு. .
2.
அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு
கடுத்தலின்றி பேசுதல் நன்று.
3.
உதவிட்ட நல்லவ ருள்ளம் மகிழ
உதவிகள் செய்து விடல்.
4.
எறும்பினைப் போலவே என்றுமுன் வாழ்வில்
சுறுசுறுப்பைக் காணல் சிறப்பு.
5.
உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
நிற்காம லோடட்டும் நாள்.
6.
மகிழ்ச்சியைக் காட்டி மகிழ்ச்சியை யூட்டி
மகிழ்ச்சியைக் கண்ணாலேப் காண்.
7.
நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே
வல்லவனாய் மாற்றும் வழி.
8.
நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
நம்பி யிறங்கு களம்.
9.
வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.
10.
வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்
நோய்விட் டகலச் சிரிப்பு.
11.
உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகைதான்
கள்ளமின்றிக் காட்டு மிதழ்.
12.
உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
உன்னையே மாற்றும் மனம்.
13.
உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
உன்வாழ்வே நீயே உணர்.
14.
அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நில்லா(த)
விடாதுழைப்பு செய்து விடல்.
15.
எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்
எவருடனும் நட்புடனே பேசு.
16.
மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சிகள்
பற்றியேப் பற்றுடன் கேள்
17.
குற்றங்கள் ஏற்கும் குணம்தான் பிறரிடம்
பற்று வளர்த்திடும் பண்பு
18.
சரளமாய்ப் பேசிடும் சந்தர்ப்பம் வாய்த்தால்
கரவோசைக் கிட்டுதல் காண்.
19.
மனச்சுமைப் போக்க மனம்விட்டுப் பேச
தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.
20.
உரையாடல் கண்ணையே உற்றுநீ பார்த்தால்
திரையில்லா அன்பே தெரிவு
21.
எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
வண்ணம் செயலும் நிகழ்வு.
22.
சிரித்த முகமே சிறந்த முகமாம்
விரிந்த மலரின் மணம்.
23.
ஆபத்தை நோக்கியே ஆர்வமாய்ப் போற்றியுன்
கோபத்தை நீக்கி விடல்.
24.
தீர்வு கிடைக்கத் தெரியும் புதியவைகள்
ஆர்வம் சுரக்கப் பழகு.
25.
மனமும் செயலும் மொழியும் கலந்து
தினமும் நடத்தற் சிறப்பு.
26.
”உன்னால் முடியும்” உளமதில் சொல்லிவை
பின்னால் தெரியும் விளைவு.
27.
உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
தன்ன லமில்லாமல் தேடு
.
28.
எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
எல்லாச் செயலும் இயம்பு
29.
வெற்றிக் கனியினை வெல்லும் வரையிலே
பற்றும் வழியினைப் பார்
30.
எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
நல்ல மனமே நலம்
31.
இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
மறந்துபோயும் இற்றை நினை
32.
இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
அன்பினைப் பற்றியே வாழ்
33.
கட்டுப்பா டாலுடல் கட்டுடல் காட்டுமே
கெட்டுப்போ காதென்று காண்
34.
தேடலொன்றே வாழ்வினைத் தேடிடும் காரணம்
ஓடவோடத் தேடி உழை.
35.
வாழ்க்கைப் புயலை வரவேற்று கொண்டாலே
வாழ்க்கைப் பழகிடும் பார்.
36.
சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை
அடுத்தடுத்துப் பொங்கும் அழிவு
37.
ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.
38.
நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
என்றும் பெருகும் இனிது
39.
பாரமாய் வாழ்வை பயத்துடன் நோக்கினால்
தூரமாய் நிற்கும் உலகு
40.
எண்ண மெதுவோ இயக்கமும் அவ்வண்ணம்
திண்ணம் உளவியல் தீர்வு
TO PROF.ZAHEER HUSSAIN:
Did I write my homework very well after attending your class with my (this)class met Abu Ibrahim? We both are attending your class regularly.
To Bro Kaviyanban Abulkalam
PROF [ Professor] ...இது எனக்கு கொஞ்சம் அதிகம்தான். நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்டதை உங்கள் எல்லோருக்கும் அறியத்தருகிறேன்...அன்றி வேறொன்றுமில்லை பராபரமே!!!
ஜாகிர் காக்கா .....
முற்றும் என்று மட்டும் போட்டு விடாதிர்கள் இந்த தொடருக்கு ....!
Assalaamoo Alaikkum varahamathullah
Dear Brother,
I wonder my parents first in the morning reading your blog everyday, more than two news papers receiving at home but their interest in adirainirubar.in - why ?
Any possibility of English version of your articles to give my friends?
A.Hamdoon
Bangalore
மாஷா அல்லாஹ்..”எண்ணம் போல் வாழ்வு” என்றுதான் கேள்விப்பட்டு இருக்கின்றேன்..அது இவ்வாறாகத்தான் நடக்கின்றது என்று இப்பொழுதுதான் அறிகின்றேன்...உங்கள் படிக்கட்டுகளின் பளபளப்பு மெருகு ஏறிக்கொண்டுதான் போகின்றது...நல்ல மாற்றத்தை படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகின்றது உங்கள் ஆக்கம்
//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
வாழ்வில் முன்னேற நீங்கள் தரும் விசயங்கள் ஒவ்வொன்றும்:-//
* தண்ணியே இல்லாத “லண்டன்” டாய்லெட்டுலே அவதிப்பட்டுவிட்டு வீட்டுவந்து சுத்தம் செய்த நிம்மதிபோல
கரெக்ட்டா ??? ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்...பாட்டில் தண்ணியே கையலயே வச்சுக்கிட்டு அலையணும்டு யாரும் சொல்லிதரலயே..பாத்ரூமில ஆ****றைகளை அடுக்கி வச்சவங்க...ஒரு பைப்போட்டு வைச்ச நல்லாயிருக்கும்
//கரெக்ட்டா ??? ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்...பாட்டில் தண்ணியே கையலயே வச்சுக்கிட்டு அலையணும்டு யாரும் சொல்லிதரலயே..பாத்ரூம அழகா கட்டி வச்சவன்க ஒரு பைப்போட்டு வச்சா நல்லாயிருக்கும்//
ஆமாம் சகோ. யாசிர்
பொது இடங்களில் இந்த நிலை தான்.
உலக நாகரீகத்தையும் சுகாதாரத்தையும் பின்பற்றும் மேலை நாட்டினர் இந்த சுகாதாரத்தை மட்டும் இன்னும் கத்துக்கிடவில்லை,இது பற்றி ஏனோ புரிய வில்லை.
//இந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன்//
முதல் படியாக இருந்திருந்தால் சிரமம்தான். நீ ஆரம்பப் படிக்கட்டுகளை இலகுவாகத் தந்து எங்களைத் தயார்படுத்திவிட்டதால் எத்தனை ஹெவி டோஸையும் ஏற்கும் பக்குவம் வந்துவிட்டது.
தொடர்ந்து கட்டு ராஜா.
One of the best article I read so far,
Supper ! Supper !
please continue your good work.
I found this site while search in Google.
Good luck.
thanks / Sujatha.P.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாஹிராக்கா,
ஊர்லெ ஈக்கிறோண்டு தான் பேரு. உங்க கட்டுரையெ சரியா படிக்கவும் முடியலெ. கருத்து கொடுக்கவும் முடியலெ....எதுக்குமே நேரம் சரியா கெடக்கெ மாட்டிக்கிதுங்க....உங்க கட்டுரைகளெல்லாம் புத்தகமாக வெளியிடப்பட்டு எல்லா மக்களுக்கும் விநியோகிக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். இது முகஸ்துதி அல்ல...அல்ல...அல்ல... நெசமாத்தாங்க சொல்றேன்....
இந்த பதிவு உளவியலை கொஞ்சம் அலசிப்பார்கிறது, உடலோடு ஒன்றிய எண்ணமும் மிக முக்கியம் வாழ்வின் வெற்றிக்கு, இன்னும் நிறைய படிக்க/தெரிந்துக்க வேண்டும் என்ற ஆவல் வந்துக்கொண்டேயிருக்கு, அல்லாஹ் உங்களுக்கு தெளிவான சிந்தனையை கொடுத்திருக்கான் அல்ஹம்துலில்லஹ், அதை எம்மிடையே பகிர்ந்து பாக்கியம்பெறவும்...
To Bro Abu Ibrahim..மெய் மெய்யாகத்தானே இருக்கும்.
To Bro MHJ..இப்பதான் கொஞ்சம் அதிகமான வார்த்தைகளை போட்டு எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்.
To Bro Abulkalam..என்னுடைய இந்த சின்ன ஆக்கத்துக்கு இவ்வளவு சிரத்தை எடுத்து எழுதியதற்கு நன்றி.
Thanx ti Bro Adirai siddik for your comments.
To Bro Harmy...இல்லை ...வேறு வழியில்லை. "என்ட்கார்டு' போடாட்டி போர் அடித்து விடும். இன்னும் 5 எபிசோடுக்கு பிறகும் எழுதுவதில் வாசகர்களுக்கு அலுப்புதான் மிஞ்சும்.
To Bro A Hamdoon...Thank you so much for your encouragement. At the moment it is unable for us to translate in English. If time permits we can do that. [ But it will loose it's originality, nativity]
To Bro Yasir //நல்ல மாற்றத்தை படிப்பவர்களுக்கு ஏற்படுத்துகின்றது உங்கள் ஆக்கம் //
..எனக்கு அதில்தான் சந்தோசம் ' நன்றாக இருக்கிறது ' என்று சொல்லிவிட்டு மறந்து போய்விடும் விசயமாக என் இந்த ஆக்கம் இருக்க கூடாது என்பதே என் விருப்பம்.
To Sujatha Prabu....thanx for your comments. Hope you might have read previous episodes.
To Bro MSM Naina Mohamed,
ஊருக்கு வந்தாலும் "பிசி" யாகிவிடும் லிஸ்டில் நீங்களுமா...நான் தான் அப்படி நேரத்தை அளந்து செலவளிக்கும் துரதிஸ்டமான சூழலில் இருப்பேன். [ எல்லா சொந்தக்காரர்கள் வீட்டுக்கும் 15 நிமிடம்....வருவதே 3 நாள், 5 நாள் என்றிருந்தால் என் பொழப்பு இப்படித்தான் போகிறது. ] ரிட்டயர் ஆகும் காலத்தில் தான் நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
நன்றி சகோதரர் அப்துல் மாலிக்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
ஜஸாக்கல்லாஹ் ஹைர், சகோதரரே.
Thank you sister Ameena A.
தம்பி ! உன் வகுப்புக்கு நான் தாமதமாக வந்துவிட்டேன். காரணம் இணைய இல்லாமல் பட்ட அவதிகள்.
சென்டருக்குப் போனால் அங்கு அனைத்து இணைப்புகளிலும் சிறுவர்களின் ஆக்கிரமிப்பு. மனம்விட்டு - மூளையை கசக்கிக்கொண்டு படிக்க வேண்டிய இந்த உயர்வான ஆக்கத்துக்கு உரிய மன ஈடுபாடு செலுத்த முடியவில்லை.
பெரும் காத்திருப்புக்குப் பிறகு நேற்று இரவு முதல் இணைப்பு பெற்றுவிட்டேன்.
இன்று அதிகாலை நேரம் சுபுஹுக்குப்பின்னே ஆரஅமர இருந்து படித்தேன்.
இந்த ஆக்கம் ஒரு படித் தேன்.
உங்கள் வீட்டுக்குப் போய் உங்களின் பேறு பெற்ற பெற்றோரைக் கண்டு வந்தேன்.
Post a Comment