Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை to பட்டுக்கோட்டை: புகைவண்டி (கம்பன் தோற்றான்) 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2012 | , , , , , ,


அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடமாக கடந்த பல வருடங்களாக Point to Point பேருந்து போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. கடந்த சில நட்களாக அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்த நல்ல பேருந்துகள் அனைத்தையும் பழைய பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. இதில் Point to Point பேருந்து அரசு பணிமனைகளிலிருந்து கழிக்கப்பட்ட மிகப் பழமையானதை இந்த வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

பேருந்து எதுவாக இருந்துட்டு போகட்டும், ஆனால் இந்த பேருந்திலிருந்து வெளிவரும் (கரும்)புகை அதிரை to பட்டுக்கோட்டை வழித்தடத்தில் கம்பனின்(எக்ஸ்பிரஸ்) மூதாதையர்கள் கடந்து செல்வதுபோன்ற பிரம்மை ஏற்படுத்தக்கூடிய புகைவண்டி செல்லுவது போல் உள்ளது. 

இதோ இந்த காணொளிய கொஞ்சம் உற்றுப் பாருங்கள் தார்சாலை புகை வண்டியை (உங்கள் கண்களுக்கு புகை நெருங்காது என்ற உத்திரவாதத்துடன்).


இந்த பேருந்து(கள்) செல்லும் வழித்தடங்களில் வியாபார தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகம் இருப்பதனால் மக்களின் நடமாட்டமும் அதிகமே. இவைகள் அனைத்திற்கும் slow poisonயை இலவசமாக காற்றில் கலந்து தன்னுடைய மக்கள் சேவையை செய்து வருகிறது.

அதிரையில் சுகாதாரம், சுற்றுச்சூழல் மாசு சுத்திகரிப்பு பற்றி விழிப்புணர்வோடு அதிகமதிகம் பேசப்படுகிறது, அதற்காக வெளியூர்களிலிருந்தெல்லாம் சுகாதரத்துரையும் தேவைக்கேற்றார்போல் விசிட்டும் அடிக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல முறை அங்கும் இங்கும் செல்லும் இந்த அரசு பேருந்துக்கு பின்னால் சென்று சுற்றுச் சூழல் சீர்கேட்டை கொஞ்சம் சீர் தூக்கிப் பார்த்து ஆவன செய்தால் முகத்தில் கரிபூசாமல் வைத்த புன்னியமாவது கிடைக்குமே!

இந்த பழுதடைந்த அரசு பேருந்துகளை மாற்ற அதிரையின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பேரூராட்சி நிர்வாகம் மற்ற அமைப்புகள் அரசு பேருந்து நிர்வாகத்திடம் தெரிவித்து மக்கள் நலனை காப்பாற்ற வேண்டும்.

அதிரைநிருபர் குழு

9 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கரி (PP) வண்டியை ஓட ஓட துரத்தி அதன் அம்பலம் படமாக்கப்பட்டது அதிரையின் அக்கரையில் நல்ல காட்சி.

மாடு, ஆடு. கோழி. மீன், பிளாஸ்டிக் கழிவுகளைப் போல இதுவும் சுகாதாரக்கேடு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இதை அதிரையை விட்டு அப்புறப்படுத்தி உடனே புதிய கரி கக்காத பேருந்தை விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

sabeer.abushahruk said...

அது சரி,

இத பின்னாலேயே போய் விடியோ கவர் பண்ணிய புண்ணியவானுக்கு உடம்பு நல்லாருக்கா.

அவ்ளோவ் புகையையும் சுவாஸித்தால் நுரையீரல் என்னாறது.

KALAM SHAICK ABDUL KADER said...

//அவ்ளோவ் புகையையும் சுவாஸித்தால் நுரையீரல் என்னாறது.//
சரியான கேள்வி. மருத்துவமனையின் தரமும் சரியில்லையே; இப்படம் பிடித்த அந்தப் புண்ணியவான நிலைமை என்னாச்சு?

அயல்நாடுகளில் புகை கக்காத- சாலை போக்குவரத்து விதிகளை மதிக்கும் பேருந்துகளில் பயணம் செய்துவிட்டு, தாயகத்தில் பேருந்து பயணம் என்றால் ,அஃதொரு பயணம் அல்ல; பயம்!

1)இருமல்-ஆஸ்துமா வரும் அளவுக்கு நச்சுப்புகை மண்டலம்
2) சமீபத்தில் ஏற்பட்ட விபத்துகள் போல் ஓட்டைக்குள் விழும் அபாயம்
3) “ஓவர் லோட்” ஏற்றிக்கொண்டு “சர்க்கஸ்” பண்ணிக் கொண்டு சாகசம் புரியும் ஓட்டம்
4) பேருந்து கட்டணம்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். படியில் பயணம் நொடியில் மரணம்! புகையின் நெடியில் மரணம் நம் மடியில்!
புகையுடன் ஓடும் வண்டி! நோயுடன் நம் வாழ்கை நொண்டி, நொண்டி பின் மெல்ல சாகும்.இப்படி எச்சரிகை வைப்பதுடன் அதை நடை முறை படுத்தவும் வேண்டும்.

Aboobakkar, Can. said...

டிசலில் கலப்படம் அதனால் தான் மவனெ........... புகையை ஊதி தள்ளூராரு?????????????

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இந்த கரும்புகை மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் பகையை ஏற்படுத்தி விடும் போல் தெரிகிறது. நுரையீர‌ல் என்னா வ‌ண்ணாவூட்லெ போட‌க்கூடிய‌ சாமானா? அப்ப‌டி இருந்தா அங்கு போட்டு ந‌ல்லா தொவ‌ச்சி எடுக்க‌லாம்.

பஸ்ஸா வச்சி நடத்துறானுவோ.....இந்த மாதிரி பஸ்ஸுலெ சும்மா ஏத்திக்கிட்டு போனாலும் வாணாம்ண்டு சொல்லனுங்க....இப்ப‌ உள்ள‌ ப‌ஸ்ஸுலெ ஏறுனா அடுத்த‌ வாக‌ன‌ம் ஆம்புல‌ண்ஸ் தான் என்ற‌ நெலெமெ நாட்லெ ஆகிடுச்சி.

புள்ளையல்வொலெ பஸ்ஸுலெ ஏத்திவுட்டா அதுஹ பாவம் உண்டியல்லெ காசு உழுவுறமாதிரி பஸ்ஸு ஓட்டையிலேர்ந்து பொத்துண்டு கீழே உழுந்து பஸ்ஸு ரோதையிலெ அறெஞ்சி செத்துப்போயிடுதுங்க....அப்புறம் அரசாங்கம் என்னா பண்ணுது? செத்துப்போன அந்த பிஞ்சுக்குழந்தை வீட்டிற்கு அஞ்சி லட்ச ரூவா நஷ்ட ஈடு கொடுத்து அவங்க கோவத்தை ஆஃப் பண்ணிடுது......

அந்த புள்ளெ வளந்து பெரிசா போயி நல்லா படிச்சி நல்ல உத்யோகத்துக்கு போனா அஞ்சி லட்சம் என்ன அம்பது லட்சத்தையும் தாண்டி
அந்தக்குடும்பத்துக்கு சம்பாதிச்சி குடுக்காதா?

போன‌ வ‌ருச‌ம் அமெரிக்கா அனுப்புன விண்கலத்தின் குரியாசிட்டி ரோவ‌ர் ரோபோவும் ந‌ல்ல‌ப‌டி செவ்வாய்க்கிர‌க‌த்தில் நேத்து போயி எற‌ங்கிடிச்சி. ஆனால் த‌மிழ்நாடு எக்ஸ்பிர‌ஸ் ர‌யில்பெட்டி சில நாட்களுக்கு முன் ந‌ள்ளிர‌வில் தீக்கிரையாகி சுமார் 50 பேர் கிட்ட‌ எரிஞ்சி செத்துப்போயிட்டாங்க‌. அது ஒரு விப‌த்தா? மின்க‌சிவால் ஏற்ப‌ட்ட‌தா? அல்ல‌து ஏதேனும் வெடிப்பொருட்க‌ளால் ஏற்ப‌ட்ட‌தா? ஏதேனும் ச‌தியா? என்று இதுவ‌ரை ச‌ரிவ‌ர‌ புல‌னாய்வில் க‌ண்டுபிடிக்க‌ முடிய‌லெ. உண்மையைக்கண்டறிய துப்பறியும் வேலைகளுக்கு மாச்சப்பட்டு அப்ப‌டியே ரூட்டை மாத்தி இது ஒரு (இஸ்லாமிய) தீவிர‌வாத‌ செய‌ல் என சொல்லி ஃபைலை அப்படியே க்ளோஸ் ப‌ண்ணிடாம‌ உண்மைக‌ள் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட‌ வேண்டும்ங்க‌. அந்த உண்மையை நாமெல்லாம் ஏற்றுக்கொண்டே ஆக‌ வேண்டும்.

குஜ‌ராத்லெ வரும் ச‌ட்ட‌ச‌பை எல‌க்ஸ‌னுக்காக‌வும், ம‌க்க‌ளை திசை திருப்பி மீண்டும் ஆட்சிப்பொறுப்பில் வ‌ந்த‌ம‌ர்வ‌த‌ற்காக‌வும் மீண்டும் அங்கு குண்டு வெடிப்போ அல்ல‌து ர‌யில் பெட்டி எரிப்போ திட்ட‌மிட்டு உரிய‌வ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு மீண்டும் ஒரு இன‌ப்ப‌டுகொலை அங்கு அர‌ங்கேற்ற‌ப்ப‌ட்டு விடுமோ என‌ ப‌ய‌மா ஈக்கிதுங்க‌.....

அமெரிக்காவிலும் அடிக்க‌டி ஆங்காங்கே ம‌ர்ம‌ ந‌ப‌ர்க‌ளால் துப்பாக்கி சூடு ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து. அப்பாவி ம‌க்க‌ள்க‌ள் அநியாய‌மாக‌ கொல்ல‌ப்ப‌டுகிறார்க‌ள். அதுவும் அங்கு வ‌ர‌ இருக்கும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லுக்கு பிரிப்ப‌ரேச‌னா என்னாண்டு தெரிய‌லெங்க‌.....

அஸ்ஸாமில் ப‌ழ‌ங்குடியின‌ருக்கும், அங்குள்ள‌ சிறுபான்மையின‌ருக்கும் ஏதோ கார‌ண‌த்தால் க‌லவ‌ர‌ம் ஏற்ப‌ட்டு இருதரப்பிலும் ப‌ல‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டு அங்கு ஊர‌ட‌ங்கு உத்த‌ரவு போட‌ப்ப‌ட்டு பிற‌கு நில‌மை க‌ட்டுக்குள் வ‌ந்து அது இப்பொழுது சில‌ விச‌மிக‌ளால்/குழுக்க‌ளால் மீண்டும் த‌லைதூக்கி தீப்ப‌ற்றி எரிய‌ ஆர‌ம்பித்துள்ள‌து.

இந்த‌ ஒல‌க‌த்துலெ எது, எங்கு ந‌ட‌ந்தாலும் அது ப‌ற்றி ப‌ல‌ கோண‌ங்க‌ளில் சிந்திக்க‌ வேண்டி இருக்குதுங்க‌.

உல‌கில் ப‌ர‌வ‌லாக‌ ப‌ல‌ அநியாய‌, அட்டூழிய‌ங்க‌ளும், அட‌க்குமுறைக‌ளும், அத்துமீர‌ல்க‌ளும், மனித நேயமற்ற அக்கிரமங்களும் ஆங்காங்கே அன்றாட‌ம் ந‌ட‌ந்து வ‌ருவ‌தால் திருக்குர்'ஆன் என்றோ பிர‌க‌ட‌ண‌ப்ப‌டுத்திய‌ ஈஸா (அலை) அவ‌ர்க‌ளின் வ‌ருகை ச‌மீப‌த்தில் இருக்குமோ என‌ எம்மை அச்ச‌ப்ப‌ட‌ வைத்துள்ள‌து இன்றைய‌ உல‌க அன்றாட நிக‌ழ்வுக‌ள்.

யா! அல்லாஹ்!!! உன் இஸ்லாத்தையும், அதை பின்ப‌ற்றும் முஸ்லிம்க‌ளையும் கடைசி வரை பாதுகாத்து அவ‌ர்க‌ளுக்கு உன் கிருபையால் ந‌ல்ல‌ருள் புரிவாயாக‌.....ஆமீன்....

Anonymous said...

ஏற்கனவே ஊரில் பகை மண்டிகிடப்பதால் ஒற்றுமை சுவாசம் சீர்கேட்டுக் கிடக்கிறது . இப்போது புகையும் சேர்ந்து கொள்வதால் உடல் சுவாசமும் சீர்கேடும் ஆபத்து.

கொசு ஒழிப்புப் போன்றவற்றிற்கு புகை அடித்தால் கொசுத்தொல்லை ஒழியலாம்.

இந்த போக்குவரத்துப் புகை உடல்நலத்துக்கு பெரும் கேடு. மின்சார வாரியத்துக்கு எதிராக தூக்கிய போர்க்கொடியை போக்குவரத்துத் துறைக்கு எதிராகவும் திரண்டு தூக்க வேண்டும்.

இபுராஹீம் அன்சாரி

Unknown said...

புகைபிடிக்காதீர்! போக்குவரத்து துறைக்கு நமது வேண்டுகோள்!!
http://adiraipost.blogspot.in/2012/08/blog-post_309.html

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வெட்ட வெயிலின் சூட்டையும் பொருட்படுத்தாமல் பு(ப)கையை படமெடுத்து போக்கு வரத்து துறையின் கேடு கெட்ட போக்கை தோலுரித்த விதம் அருமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு