நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 88 4

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, செப்டம்பர் 26, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

''உங்கள் பெற்றோர்களின் பெயரால் நீங்கள் சத்தியம் செய்திட, அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யட்டும்!  அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1707 )

"நியாயமின்றி ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க, ஒருவர் சத்தியம் செய்தால், அவர் மீது கோபம் உள்ள நிலையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இதற்குச் சான்றாக எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் (பின்வரும்) வசனத்தை ஓதினார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும், தங்களின் சத்தியங்களுக்கும் பதிலாக (உலகில்) அற்பப் பொருளை வாங்குகின்றவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்கும் கிடையாது. மேலும்  அவர்களிடம் அல்லாஹ்  பேசவும் மாட்டான். மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (பாவங்களை விட்டும்) அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் : 3:77)  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1712 )

"தன் சத்தியத்தின் மூலம் ஒருவர் ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை அவசியமாக்கி விட்டான். மேலும் அவருக்கு சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று  நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! (அந்த உரிமை) சிறிய அளவிலாக இருந்தால்...? என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ''அராக்'' எனும் கருவேல மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஃதஹ்லபா அல்ஹாரிஸி  (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1713 )

"பெரும் பாவங்கள் என்பது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது. ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து

''இறைத்தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் என்ன?'' என்று கேட்டார். 

''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்'' என்று நபி   ( ஸல் )  கூறினார்கள். 

''பின்பு எது?'' என்று கேட்டார் 

''பொய் சத்தியம் செய்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

''பொய் சத்தியம் செய்வது என்றால் என்ன?'' என்று நான் கேட்டேன். 

''ஒரு முஸ்லிமின் சொத்தை பொய் சத்தியம் செய்து அபகரித்தல்'' 

என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1714 )

"வியாபாரத்தில் அதிக அளவில் சத்தியம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏன் எனில், பொருளை (விற்பனை) செல்லுபடியாக்கும். பின்பு அதனை அழித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூகதாதா  (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1721)

"அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் பாதுகாப்புக் கோரினால், அவருக்கு பாதுகாப்புக் கொடுங்கள். அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் கேட்டால், அவருக்குக் கொடுங்கள். உங்களை ஒருவர் அழைத்தால், அவருக்கு பதில் கூறுங்கள். உங்களுக்கு நல்லதை ஒருவர் செய்தால் அவருக்கு (நன்றி கூறும் முகமாக) பகரம் காட்டுங்கள். அவருக்கு நீங்கள் பகரம் செய்வதற்கு எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவருக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என, நீங்கள் கருதும் வரை அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (அபூதாவூது, நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1723 )

"உம்மு ஸாயிப் (ரலி) (அல்லது உம்முல் முஸய்யிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத் செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப்(ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1726)

காற்று அல்லாஹ்வின் கருணையில் உள்ளதாகும். அது நல்லதையும் தரும். (சில சமயம்) வேதனையையும் தரும். அதை (காற்று வீசுவதை) நீங்கள் கண்டால் அதை ஏசாதீர்கள். அல்லாஹ்விடம் அதில் நல்லதைக் கேளுங்கள். அதன் தீயதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1728 )

"காற்று வீசினால், ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஃகய்ரஹா வஃகய்ரமா ஃபீஹா, வஃகய்ர மா உர்ஸிலத் பிஹி, வஊது பிக மின் ஷர்ரிஹா, வஷர்ரி மா ஃபீஹா, வஷர்ர மா உர்ஸிலத் பிஹி'' என்று நபி(ஸல்) கூறுவார்கள்.

பொருள் : இறைவா! இதில் நல்லதையும், இதில் ஏற்படும் நல்லதையும், இது அனுப்பட்டதின் நல்லதையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும் இதில் தீயதையும், இதில் ஏற்படும் தீயதையும், இது அனுப்பப்பட்டதின் தீயதையும் விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1729 )

"காபிரே!" என ஒருவர் தன் சகோதரனைக் கூறினால், இது அவர்களில் ஒருவரிடம் வந்து சேரும். இவர் கூறியது போல் அவர் இருந்தால் (அவரிடம் போய் சேரும்). இல்லையென்றால், கூறியவரிடமே திரும்பி விடும்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1732)

"காபிர் என ஒருவரை அழைத்தால், அல்லது 'அல்லாஹ்வின் பகைவரே! என்று கூறினால், (கூறப்பட்டவர் அவ்வாறு இல்லை எனில்) கூறியவரிடமே அது திரும்பாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1733 )

"குத்திக் காட்டுபவனாக, சபிப்பவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக, தீய சொல் கூறுபவனாக ஒரு மூஃமின் இருக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1734 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் .S

4 Responses So Far:

mahaboob Ali சொன்னது…

நபி(ஸல்) கியாமத்வரை, நமக்கு துவா செய்துள்ளார்கள் இப்படி :// நான் சொல்வதை ஒருவர் கேட்டார், அதை மனதில் பதிய வைத்தார், அதன்படி,அமல் செய்தார்,அதனை அடுத்தவருக்கு எடுத்து சொன்னார்,அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்வானாக // இந்த பட்டியலில் நம் அனைவரையும் அல்லாஹ் சேர்பானாக ஆமீன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்... காக்கா !

தங்களின் தொடர் வெள்ளிதோரும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது....

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

மனத்தை அமைதிப் படுத்தி வாரந்தோறும் வந்து ஒளி வீசுகிறது.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.இன்ஷா அல்லாஹ் இதை புத்தகமாக அதிரை நிருபர் வெளியிட வேண்டும்.

sabeer.abushahruk சொன்னது…

பெரும்பாவங்களைப் மகாப் பெரியவன் அல்லாஹ் மன்னிப்பானாக!

நன்றி அலாவுதீன்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+