அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
அல்லாஹ் கூறுகிறான்:
(முஹம்மதே!) தமது
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை
கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை
அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 24:30)
உமக்கு அறிவு
இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே
விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் : 17:36)
கண்களின் (சாடைகள்
மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான். (அல்குர்ஆன் : 40:19)
உமது இறைவன்
கண்காணித்துக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் : 89:14)
"பாதைகளில் உட்காருவதை உங்களிடம் எச்சரிக்கிறேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே!
எங்களின் பேச்சுக்களை நாங்கள் அங்கே பேசிடும் அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறேதே? என்று கேட்டார்கள்.
அந்த இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியது ஏற்பட்டால், பாதைக்குரிய உரிமையை கொடுங்கள்'' என்று நபி (ஸல்)
கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்ன?''
என்று கேட்டார்கள். ''பார்வையைத்
தாழ்த்துவது, நோவினையை கைவிடுவது, பதில் ஸலாம் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதைத் தடுப்பது''
என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1623 )
(அந்நியப்
பெண் மீது) திடீரென பார்வை படுவது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘’உம் பார்வையைத் திருப்பிக் கொள்வீராக!’’
என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1625 )
''உங்களில் ஒருவர், ஒரு அந்நியப் பெண்ணிடம் (அவளுடன்) அவளுடைய (தந்தை, சகோதரர், மகன் போன்ற)
உறவினர்கள் உடன் இல்லாமல் தனித்திருக்க வேண்டாம்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1629 )
''உங்களில் ஒருவர் தனது இடது கையால் சாப்பிடவேண்டாம்.
குடிக்க வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான்தான், தனது இடது கையால்
சாப்பிடுவான். குடிப்பான் ''. என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1635 )
''ஒருவர் ஒரு செருப்பில் நடக்க வேண்டாம். இரண்டையும்
சேர்த்தே அணியட்டும்! அல்லது இரண்டையும் சேர்த்தே கழட்டி விடட்டும் என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1649 )
''ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதை சரி செய்யும்வரை, ஒரு செருப்புடன்
நடக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1650 )
''கன்னங்களில் அடித்துக் கொள்பவரும், சட்டைகளைக்
கிழித்துக் கொள்பவரும், அறியாமைக் கால வார்த்தைகளால் பிரார்த்தனை
செய்பவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்
(ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1658 )
''மக்களிடம் இரண்டு காரியங்கள் உள்ளன. அந்த இரண்டுமே
அவர்களிடம் இறைமறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். 1)
பாரம்பரியத்தை குறை கூறிக்
குத்திக் காட்டுவது 2) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பது என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1667 )
''படம் வரையும் அனைவரும் நரகில் புகுவர். அவர் வரைந்த
அனைத்துப் படத்திற்கும் உயிர் தரப்படும், அவரை அது நரகில் வேதனை செய்யும்'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறக்கேட்டேன். நீ அவசியம் வரைந்தாக வேண்டும் என்றிருந்தால், மரத்தையோ, உயிரற்றவையோ
வரைந்திடு! (என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்). (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1680)
''எந்த வீட்டில் நாயும், உருவப்படமும் உள்ளதோ, அந்த வீட்டில் வானவர் நுழைய மாட்டார்கள்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1684 )
''என்னிடம் அலீ(ரலி) அவர்கள், ''அறிந்து கொள்க!
நபி(ஸல்) அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன். எந்த
உருவச்சிலையையும் அதை அழிக்காமல் விட்டு விடக் கூடாது. அத்துடன் உயரமாகக்
கட்டப்பட்ட கப்ரையும் அதை சமப்படுத்தாமல் விடக்கூடாது என்பதே அப்பணியாகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் (என்ற) ஹய்யான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1687
)
''வேட்டைக்காக அல்லது கால்நடை பாதுகாப்பிற்காக தவிர
நாயை ஒருவர் வளர்த்தால், ஒவ்வொரு நாளும் அவரது கூலியில் இரண்டு 'கீராத்' குறைந்துவிடும்'' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறக் கேட்டேன். - மற்றொரு அறிவிப்பில் ''ஒரு கீராத்''
என்று உள்ளது. (குறிப்பு : ஒரு 'கீராத்' என்பது, ஒரு மலையளவு நன்மையாகும்.) (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1688 )
''நாயையும், சலங்கையையும் வைத்துள்ள பயணத்தில் மலக்குகள் தோழமை
கொள்ள மாட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1690
)
''வெங்காயம் அல்லது பூண்டை ஒருவர் சாப்பிட்டால், நம்மிடம் அவர் விலகி
இருக்கட்டும். அல்லது நம் பள்ளிவாசலை
விட்டும் விலகி இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது.
''வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நம்
பள்ளிவாசலை அவர் நெருங்க வேண்டாம். நிச்சயமாக
(துர்வாடையால்) வானவர்கள், மனிதர்கள் நோவினை பெறுவது போல் நோவினை
பெறுகின்றார்கள்.'' (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1703 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன்
S.
5 Responses So Far:
"பாதைகளில் உட்காருவதை உங்களிடம் எச்சரிக்கிறேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! எங்களின் பேச்சுக்களை நாங்கள் அங்கே பேசிடும் அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறேதே? என்று கேட்டார்கள். அந்த இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியது ஏற்பட்டால், பாதைக்குரிய உரிமையை கொடுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். ''பார்வையைத் தாழ்த்துவது, நோவினையை கைவிடுவது, பதில் ஸலாம் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதைத் தடுப்பது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1623 )
அருமருந்து சுட்டும் வாழ்வியல் சட்ட சரத்துக்கள்...
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..!
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
Well said Kakka
பாதையை இழுத்து அடைத்துக் கொள்ளும் தற்கால மனிதர்களுக்கு அவசியம் இந்த நபி மொழி:
//"பாதைகளில் உட்காருவதை உங்களிடம் எச்சரிக்கிறேன்" என்று நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! எங்களின் பேச்சுக்களை நாங்கள் அங்கே பேசிடும் அவசியம் எங்களுக்கு ஏற்படுகிறேதே? என்று கேட்டார்கள். அந்த இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியது ஏற்பட்டால், பாதைக்குரிய உரிமையை கொடுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். ''பார்வையைத் தாழ்த்துவது, நோவினையை கைவிடுவது, பதில் ஸலாம் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதைத் தடுப்பது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1623 )//
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.
வெள்ளிக் கிழமை வெளியாகும் இந்த அருமருந்து பல மன நோய்களைத் தீர்க்கும் அருமருந்துதான்.
ஜசாக் அல்லாஹ் ஹைரன் சகோதரர் அலாவுதீன் அவர்களே!
Post a Comment