Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 85 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 05, 2014 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

மோசடி செய்வது கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! (அல்குர்ஆன் : 5:1)

ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். ஒப்பந்தம் என்பது, (அல்லாஹ்விடம்) கேட்கப்படக் கூடியதாக உள்ளது. (அல்குர்ஆன் : 17:34)

''நான்கு குணங்கள், ஒருவனிடம் இருந்தால், அவன் தெளிவான நயவஞ்சகன் ஆவான். இவற்றில் ஒரு குணம் இருந்தால், அதை அவன் விடும் வரை, நயவஞ்சகத்தின் ஒரு பகுதி அவனிடம் தங்கி விடும். 1) அவனை நம்பினால் ஏமாற்றுவான்.  2) பேசினால் பொய் பேசுவான். 3) ஒப்பந்தம் செய்தால் மீறுவான் 4) வழக்காடினால் குற்றமிழைப்பான்'' என்று நான்கு குணங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1584 )

நன்கொடை கொடுத்துவிட்டு, அதை சொல்லிக் காட்டுவது கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல். உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்!  (அல்குர்ஆன் : 2:264)

''மூன்று பேர்கள் -  இவர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். இவர்களை (மன்னித்து) தூய்மைப்படுத்தவும் மாட்டான். இவர்களுக்கு நோவினையாக வேதனை  உண்டு'' என்று மூன்று தடவை நபி(ஸல்) கூறினார்கள். ''அவர்கள் அழிந்தனர். அவர்கள் கைசேதம் அடைந்தனர். இறைத்தூதர் அவர்களே! அவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். ''தன் கீழாடையை (தரையைக் கூட்டும் அளவுக்கு) கீழிறிக்கிக் கட்டியவர்: தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவர், தன் பொருளை பொய் சத்தியம் செய்து, விற்பனை செய்தவர் ஆகிய (மூவ)ர் ஆவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1588 )

பெருமையடித்தல், அநீதம் செய்தல் கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
...உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்;கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்குர்ஆன் : 53:32)

''நீங்கள் பணிவாக இருங்கள். ஒருவர், மற்றொருவருக்கு அநீதம் செய்திட வேண்டாம். ஒருவர், மற்றொருவரைப் பொறாமை கொள்ள வேண்டாம்'' என அல்லாஹ்  எனக்கு இறைச் செய்தி அனுப்பினான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாழ் இப்னு ஹிமார் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1589 )

முஸ்லிம்களிடையே மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்புணர்வு கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்லை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:10)

''ஒருவருக்கொருவர் உறவைத் துண்டித்துக் கொள்ளாதீர்;கள். ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்;கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிமுக்கு, தன் சகோதரரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க அனுமதி இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1591 )

''தன் சகோதரரை மூன்று இரவு (நாட்)களுக்கு மேல் வெறுத்திருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. இருவரும் சந்திக்கின்றனர். இவரை அவர் புறக்கணிக்கிறார். அவரை இவர் புறக்கணிக்கிறார். இவ்விருவரில் சிறந்தவர், முதலில் ஸலாம் கூறுபவரே!'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப்  (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1592 )

''ஒவ்வொரு திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காத அனைவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே பகைமை கொண்டவனைத் தவிர. இவர்கள் விஷயமாக அல்லாஹ் (கூறும்போது) 'இந்த இருவரும் சமாதானம் ஆகும் வரை இருவரையும் விட்டு விடுங்கள்'' என்று கூறுவான் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1593)

''தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது, ஒரு முஸ்லிமுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கும் மேல் ஒருவன் வெறுத்து, இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1595 )

''மூன்று நாட்களுக்கு மேல் ஒரு மூஃமினை வெறுப்பதற்கு, மற்றொரு மூஃமினுக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்கள் கழிந்து விட்டால், அவரை அவர் சந்திக்கட்டும். அவருக்கு ஸலாம் கூறட்டும். அவரின் ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் கூலி பெறுவதில் இருவரும் சமமாகி விடுவார்கள். அவருக்குப் பதில் ஸலாம் கூறாவிட்டால், அவர் பாவத்தைச் செய்தவராவார். ஸலாம் கூறியவரோ, வெறுத்தல் எனும் குற்றத்திலிருந்து நீங்கியவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1597 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

நினைவூட்டல்கள் அனைத்தும் நன்மையை நாடியே !

sabeer.abushahruk said...

கிள்ளிக் கொடுத்தாலும் அதைச் சொல்லிப் பெறுமையடிப்போருக்கு மார்க்கம் எத்தனை கடுமையாக எச்சரிக்கிறது!!!!

நன்றி அலாவுதீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு