போன வாரத்தில் எழுதிய Time Managementல் சில விசயங்களும் சேர்த்திருக்கலாம் எனும் அளவுக்கு முக்கியமான விசயம்;
அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் சரியாக இருக்க வேண்டும். டிராபிக் ஜாம் எதுவும் தடையாக இருந்தால் எவ்வளவு நேரம் தாமதமாகலாம் என சொல்வதுடன் ஒரு Sorry சொல்லி விடுங்கள். உங்கள் மீது நிச்சயம் மதிப்பு கூடும்.
ஆனால் எப்போது பார்த்தாலும் தாமதமாக போகும் ஆளாக இருந்தால் ஒரு காமெடிபீசுக்கு உள்ள மதிப்புதான் நமக்கு கிடைக்கும். “வருதப்படுவான்பா” என நினைத்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். எதிர்த்தார்போல் உட்கார்ந்து கேட்பதும் மனிதன் தானே. அவனுக்கு பொய் என்றால் எதுவும் தெரியாதா என்ன?
ஒருவர் உங்களுக்கு அலுவல் மற்றும் முக்கிய விஷயங்களுக்கு SMS செய்தால் அது உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதற்கு Reply SMS “OK” என அனுப்பிப்பாருங்கள். உங்கள் மீது ஒரு மதிப்பு அவருக்கு இருக்கும்.
The Mask
முகமூடிக்கும் மனித மனத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. வெளியில் தான் எப்படி ஆகப்போகிறேன் என்பதை சத்தம்போட்டு சொல்வார்கள். ஆனால் மனதுக்குள் அவர்களிடம் அந்த தீர்க்கம் இருக்காது. இது இவர்கள் செய்யும் தொழில் / படிப்பு இதில் அப்படியே பிரதிபலிக்கும். தீர்மானத்துடன் வேலை செய்பவர்களிடம் ரிசல்ட் எப்போதும் உருப்படியாக இருக்கும்.
அப்படியானால் நாம் போட்டிருக்கும் முகமூடி என்ன என்பதை அறிவது முக்கியம். தன்னை ஒரு பயில்வான் மாதிரியும் , டெர்ரர் பார்ட்டி மாதிரி காண்பித்துக் கொள்பவர்கள் மனதுக்குள் சரியான பயந்தாங்கொள்ளியாக இருப்பார்கள். தாயத்து பார்ட்டிகளும் இதில் அடங்கும். நம்மில் சிலர் கொஞ்சம் அளப்பரை பார்ட்டியாக இருந்து 'நான் போனவுடனேயே தடுமாறிட்டான், கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலெ. எப்படி சார் இவ்வளவு விசயம் தெரிந்து வச்சிருக்கீங்க'னு கேட்டான் என்று எப்போது பார்த்தாலும் தன்னுடைய பராக்கிரமங்களை அடிக்கடி அளந்து தள்ளுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையிலும் எதுவும் ஈசியாக முடியாது.
ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?. அது அவனுடைய personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.
ஒரு நியூஸ்பேப்பர் வாங்கப்போனாலும் அதில் கூட கடைக்காரன் அவனிடம் பிரச்சினை செய்வான். காரணம் என்ன தெரியுமா?. அது அவனுடைய personal creation அவன் எனர்ஜி பிரச்சினைகளை எதிர்பார்த்தே இருக்கும். அவனுடைய ஈகோவை குளிர்விக்க இது போல் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். தன் எனர்ஜி எதில் இயங்குகிறது எனத்தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்து ஜெயிக்க நினைப்பார்கள். ஒன்று இதில் சுத்தமாக மறந்து விடுகிறோம் நம் கஸ்டமருக்கும் ஈகோ இருக்கிறது. தன்னை தோற்கடித்தவனிடம் எந்த மனிதனும் அன்புடன் திரும்பி வருவதில்லை. அப்படி வந்தால் அவன் மகான் / அல்லது ஞாபக மறதிக்காரன்.
செய்யும் வேலையில் / தொழிலில் பயத்துடன் அணுகும் ஒவ்வொரு விசயமும் உங்களுக்கு இன்னும் தேவையில்லாத பயத்தைத்தரும் [OR சொந்த ஆப்பை நீங்கள் கூர்சீவுகிறீர்கள் என அர்த்தம்.]. நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் எனும் எண்ணம் அடிக்கடி வந்து போகலாம். ஆனால் உங்கள் வேலையில் எத்தனை பேர் பயன் அடையப்போகிறார்கள் என நீங்கள் ஒருமுறை சிந்தித்தால் அந்த வேலை ஒரு கலை போல் உங்களிடமிருந்து வெளிப்படும்.
உதாரணம்: நீங்கள் கம்ப்யூட்டர் விற்பனையில் இருக்கிறீர்கள், அந்த கம்ப்யூட்டரின் டெக்னிக்கல் விசயங்கள் சொல்வதுடன் அது உங்கள் கஸ்டமரின் அன்றாட வாழ்க்கையில் அவரது வேலைகளை எப்படி எளிதாக்கும் என நீங்கள் தெளிவாக்கினால் உங்கள் மீது ஒரு தனி மரியாதை உங்கள் கஸ்டமருக்கு ஏற்படும்.. அதை விட்டு எடுத்த உடன் அதன் விலை எவ்வளவு என சொல்வது முறையில்லாத சேல்ஸ் டெக்னிக். ஒரு கஸ்டமர் தனக்கு என்ன Benefit என மட்டும்தான் பார்ப்பார். திருப்தியிருந்தால் விலை ஒரு தடையில்லை.
ட்ராவல் லைனிலும் அப்படித்தான், நீங்கள் சொல்லும் ட்ராவல் பேக்கேஜ் எப்படி அவர்களின் அன்றாட அவசர உலகத்திலிருந்து ஒரு அமைதியான ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என சொல்லிப்பாருங்கள் the deal can be closed much easily.
Third Party Sales referralsம் முக்கியம். மற்றவர்கள் எப்படி பயன் அடைந்தார்கள். அவர்கள் உங்களின் சேவையில் எப்படி திருப்தியடைந்தார்கள் என்று சொல்வது ஒன்றும் தம்பட்டம் அல்ல. Sometime third party referral helps customer to make decision.
The Empty Glass; [OR The Empty Bowl]
இந்த காலிக்கோப்பை தத்துவம் படித்திருப்பீர்கள். ஒரு ஞானியிடம் தனக்கு பல விசயம் தெரிந்து இருக்கிறது என சொல்லி உங்கள் அறிவை கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் என சொன்ன சீடனிடம். உன் கோப்பை காலியாக இருந்தால்தான் நான் நீர் நிரப்ப முடியும் என ஞானி சொன்னதாக: இதில் தெளிவு என்ன. அறிவுப்பசி இல்லாமல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் "எனக்குத்தான் தெரியுமே" என்று இருந்து விட்டால் புதிய முன்னேற்றம் என்பது கனவில் கூட கைவசப்படாது.
தொழிலில் அப்டேட் ஆகாமல் இருந்தால் எப்படி வாழ்கை மட்டும் அப்டேட் ஆக இருக்கும்?.
உங்கள் எண்ணமும் எனர்ஜியும் எதில் நிலைத்திருக்கிறதோ அதில் அதாக நீங்கள் மாற முடியும்.உங்கள் இன்றைய சூழ்நிலையை நிர்ணயிப்பது முன்பு உங்களிடம் இருந்த Law Of attraction தான். உங்களைப்பற்றிய எண்ணம் என்ன என நான் உங்களை எழுதச்சொன்னால் பெரும்பாலும் எல்லோரும் நான் சிம்பிளானவன், இந்த நிறத்தில் உடை உடுத்துவேன் , இப்படித்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். ஆனால் தன் கனவுகளை சாதித்தவர்களாக அவர்களாலேயே எழுத கை வருவதில்லை. இது உங்களின் Prosperity Consciousnessக்கு மிகவும் முக்கியம். எதையும் நெகடிவ் ஆக சிந்தித்துவிட்டு, முன்னேறுவதை பற்றி பேசினால் 300 தடை சொல்லி, அதற்கு காரணம் "யார் சொல்லு பேச்சு கேட்கிறா! எல்லாம் தலை படிக்கிறானுக" என சொல்லும் பெரும்பாலானவர்கள் grounded in “Energy of Poverty”. ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பாதுகாப்பானது என நினைப்பார்கள். கடைசியில் அவர்களை பாதுகாக்க ஆள் தேவைப்படும் சூழல்தான்.
தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”
தன்னை ஒரு பணக்காரன், ஆரோக்கியமானவன் , சாதிப்பவன் இப்படி சொல்வதையோ / எழுதுவதையோ ஏதோ தேசத்துரோகம் மாதிரி நினைக்க பழகிவிட்டோம். கொஞ்சம் சத்தம் போட்டு சிரித்தாலே திட்டு வாங்கும் முன்னோர்கள் வழி.தானாக ஏற்படுத்திக்கொண்ட வெட்டித் தத்துவங்கள். இதில் சில பேர் சொல்வது இன்னும் அதிசயம். ஏனெனில் இவர்களுக்கு முன்னேர ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தானாக ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து இவர்கள் வெளிவரத்தயாராக இல்லை. All are “Mental Prisons”
நம் ஆட்களின் வெட்டித்தத்துவங்கள் சில.
# பணம் ஒரு பேய்
# பணம் வந்தால் நிம்மதி போயிடும்
# பணக்காரன் என்றாலே "எங்கோயோ லவட்டிட்டு வந்துட்டான்யா"
# பணம் உறவை முறிக்கும்.
# பணம் நிறைந்தால் பிள்ளைங்க எல்லாம் கெட்டுடுவாங்க
# பணம் மனிதர்களை பணத்துக்கு அடிமையாக்கும்…
என்னுடைய கேள்வி இதுதான்..
இவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படிப்பா பணத்தை சம்பாதிக்க போறே??
தொழில் தர்மம் தாண்டி தொடர்ந்து வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு தொழிலும் ஒரு ‘DEMAND” உங்கள் மீது வைத்திருக்கும். காலை பேப்பர் வியாபாரம் செய்ய கடை ஆரம்பித்து காலையில் எனக்கு 8 மணிக்கு மேல்தான் எழுந்திருக்கமுடியும் என சொன்னால் எப்படி?. வொர்க்சாப்பில் மெக்கானிக் வேலைக்கு வந்து எனக்கு ஸ்பானர், எண்ணெய், கிரீஸ் என்றால் அலர்ஜி என்றால் என்ன சொல்வது.
நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையை திட்டிக் கொண்டே செய்தால் எதுவும் சிந்தனைக்கு வராது. கடைசியில் மிஞ்சுவது நோய்தான், தேவையில்லாத டென்ஷன். டென்ஷனில் உங்கள் சுவாசம் குறையும். சுவாச அளவு குறைந்தால் உங்கள் ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவில் குறைவு இருக்கும், ஆக்ஸிஜன் உங்கள் ஆர்கனுக்கு போதாமல் போகும்போது நோய் ஆரம்பிக்கும்.
இப்போது நன்றாக மூச்சு இழுத்து விடுங்கள் ஒரு 3 முறை......
தொடரும்...
We will see more detail in Next Episode…
ZAKIR HUSSAIN
8 Responses So Far:
//அப்பாயன்ட்டைநிறைவேற்றமுடியவில்லைஎன்றால்ஒருsorryசொல்லி விடுங்கள் உங்கள் மதிப்புகூடும் //365மொழிகளைகொண்டஇந்தியாவில்எந்தமொழியிலும்அந்தsorryஇல்லை.இல்லாதவார்த்தைக்குஅர்த்தம்உண்டா?பூனம்ஸாரி, சாமுத்திரிகாஸாரி காஞ்சிபுரம்பட்டுஸாரிமட்டுமேஉண்டு.I'am very sorry to say நீசொன்ன அந்தஸாரி எந்தஜவுளிகடையிலுமேஇல்லை.[தொடரும்]
இந்த தொடரை முழுவதுமாக மீள்பதிவு செய்தால் நல்ல நினைவூட்டலாக இருக்கமே.
ஜாஹிர் காக்கா பதிவுகளை என்று வாசித்தாலும், விருவிருப்பாக இருக்கும்..
//இந்த தொடரை முழுவதுமாக மீள்பதிவு செய்தால் நல்ல நினைவூட்டலாக இருக்கமே.//
I second the above opinion.
//.’தன்எனர்ஜிஎதில்இயங்குகிறது?’என தெரியாமல் சிலர் கஸ்டமர்களிடம் விவாதித்துஜெயிக்கநினைப்பார்கள்// சுமார்35ஆண்டுகளுக்குமுன்புவீடுகட்டஇரும்புகம்பிமுதலானசாமான்கள்வாங்ககொத்தனாருடன்பட்டுகோட்டைசென்றேன்.கொத்தனார்ஒருகடைக்குகூட்டி சென்றுதேவையானசாமான்களின்பட்டியலைகொடுத்தார்.பட்டியல் கைமாறியதும்இரண்டுகிளாஸ்டீவந்தது. கிளச்சும் சுட்டதுடீயும்சுட்டது. கொஞ்சநேரத்தில் பில் கைக்கு வந்தது. பில்லை கொத்தனாரிடம் கொடுத்துசாமான்சரிபார்த்தபின்பில்லின்தொகை7326வந்தது.’’இந்ததொகையில் ஏதெனும்கொஞ்சம்கழித்துகொள்ளுங்களேன்!’’என்றேன்.’’இதுதான் எல்லோருக்கும்போடும்விலை!’’உங்களுக்குஎந்தஊர்?’’என்றார். கேள்வியில் கிண்டலும் நையாண்டியும் கலந்திருந்தது. ’’உங்கள்ஊரைவிடபெரியஊர்தான் எங்கள்ஊர்! ஊருக்குதக்கவாறு விலையில்கழிவுகொடுப்பீர்களா? சொல்லுங்கள் எந்தஎந்த ஊருக்கு எவ்வளவுகழிவு?’’என்றேன்.கொத்தனார்வந்து’’தெரியாமல்கேட்டுவிட்டார். இதுசரியானவிலைதான்.எல்லாக்கடையிலும்இதேவிலைதான்குறைக்கமாட்டார்கள்’’என்றார்.பிள்ளுக்குகாசைகொடுத்துவிட்டுவீடுதிரும்பினோம். அடுத்தபர்ச்சஸ்வேறுகடையில்! நம்மூரிலும்பக்கத்துக்குகிராமத்துகார்கள்கால்சேர்இறைச்சீகேட்டால் ’’புனுகுபூனையாவளர்க்கிறா?கால்சேர்இறைச்சிகடவாய்பல்லுக்கேபத்தாதே! மற்றபல்லுக்குஎதைகொடுப்பே?’’என்பார்கள்.ஜவுளிகடையுளும்இப்படியான கிண்டல்.’’அந்தபிடவையேஎடுத்துகாட்டுங்கள்!பார்க்கலாம்’’என்றால்’’அதுவெளேகூடவுள்ளபிடவை!அதைவாங்கஉன்னட்டேகாஸுஇருக்கா?’’என்பார்கள்.சொன்னவிலையில்குறைதுக்கேட்டால்’’நீவாங்குறஆளாதெரியலே!எடத்தைகாலிபண்ணு’’என்பார்கள்.இப்படியாகசொல்லிசொல்லிதுளுக்காபள்ளிகடைதெருவைபுகைய வைத்தார்கள்.பட்டுக்கோட்டைபணக்கோட்டையாகியது.முன்பெல்லாம்எல்லா புகைவண்டிநிலையங்களிலும்//வாய்நல்லதானால்ஊர்நல்லது//என்றவரிகளைகோட்டைஎழுத்தில்எழுதிஇருந்தார்கள்.செட்டியார்கள்சொல்வார்கள்//’’கைபதனம்.வாய்பதனம்’’//நான்மலேசியாவுக்குமுதல்முதலில்சென்றபோதுஒருகட்டுபுரத்தில்இருந்தஒரு மளிகைகடையில் வேலைக்குசேர்ந்தேன். எப்பொழுதும்அழுகிப்போனபொடிபொடி மீனையே ஆக்குவார்கள் .சாப்பிட்டு முடிந்ததும் ’’தம்பிமீனுநல்லாஈந்துச்சா? இந்தமாதிரிமீனுஉங்கூருலேதிண்டுஈக்கிரியலா?’’ என்றகிண்டலான கேள்விகளையே சமையல்காரர்கேட்பார்! நானும்பொருமையுடன்’’நல்லாஈந்துஅண்ணே!’’யென்றேசொல்லிசொல்லி பொழுதைஓட்டினேன்.போகப்போககிண்டல், தொல்லைகள் கோள்மூட்டல்அதிகரித்தேவந்தது.விலகிக்கொள்ளும்முடிவுஎடுத்தேன். ஒருநாள்சாப்பிட்டுஎழுந்ததவுடன்’’தம்பி!மீனுநல்லாஈந்துச்சா?உங்கூருலேஇந்தமாதிரிமீனுசாப்புட்டுஈக்கிறியளா?’’என்றார்.’’இல்லேஅண்ணே!இந்தமாதிரிமட்டமான மீனை யெல்லாம் நாங்க சாப்பிட்டா எங்க்கூருளே பொண்ணு குடுக்கமாட்டாங்க!. அப்புறம்பொண்ணுதேடிஉங்கூருக்குநாங்கவரணும்! இந்தமீனைஎங்கூருகாக்கைகூடதூக்காது.அதுஉங்கூருகாரனுக்கேஅல்லா படைச்சமீனு.அதைநீயேதிண்டுட்டுநாக்கைசப்பிக்கிட்டுஇருடா!’’என்றேன். அப்புறமென்னஅடுத்தநாள்கணக்கைபார்த்துகாசைவாங்கிகொண்டுபினாங்கு வந்துசேர்ந்தேன்.//அந்தஊர்காரன் வாய்நல்லாஇல்லே: அதனாலேஅந்தஊர்காரன்கெட்டவன்.என்வாய்நல்லாஇல்லேஅதனாலே அவனுக்குநம்மஊர்கெட்டஊர்.//
//துளுக்காபள்ளிகடைதெருஎன்பதைதக்வாபள்ளிகடைதெரு//என்றுதயவுசெய்துதிருத்திவாசித்துக்கொள்ளவும்.
இந்த பதிவை நான் மீண்டும் படித்துப்பார்த்தேன். இதை எழுதும்போது எனக்கு கிடைத்த ஓய்வு நேரம் இப்போது கிடைக்காமல் இருப்பதால்தான் அடிக்கடி எழுத முடிவதில்லை.
முஹம்மது ஃபாரூக் மாமா சொன்னதுபோல்....சாரி / தேங்ஸ் சொல்ல மறந்துபோன ஊர் நம் பகுதியில்தான்.
கடைகளில் பில் கொடுக்கும்போது அதற்கு கேஷ்கவுன்டரில் பணம் செலுத்தும்போது இன்னொருவன் வந்து ஏறக்குறைய நமது முதுகில் ஏறி பணம் கொடுக்கும் 'பண்பாடு" நமது பகுதியில்தான்
எல்லா பொதுச்சொத்துக்களையும் அது ஏதோ எதிரி மாதிரி நடத்தும் " பஸ்ஸுக்கு தீ வைத்தல் / ரயிலுக்கு தீ வைத்தல் / சுற்றுலாத்தளங்களில் இந்த பன்னாடைகள் வந்ததை 'பதிவு" செய்தல் / ஏழைகளுக்கு தரும் வசதியை பணக்காரன் பெற்றுக்கொள்தல் ....போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் ஏற்படுத்தாத வரை இதுபோல் 'எருமை மாடுகள்' அதிகம் பிறக்கும்...இன்னும் வளரும்.
//நம்ஆட்களின்வெட்டிதத்துவங்கள்சில//நம்மஆட்கள்கண்டுபிடித்ததத்துவங்களிலேயேஇதுதான்நோபல்பரிசுபெறும் தத்துவம்.நீமலேசியாசூழலில்சிந்திக்கிறாய்!இந்தியசூசலில்சிந்தித்து பார்க்கவேண்டும்.சுமார்அறுபதுஆண்டுகாலத்தைபினோக்கிநான்பார்த்த போதுஅந்ததத்துவம்சரியே!பரிச்சித்துபார்க்கவேண்டுமானால்அஞ்சாறு கோடியோடுஊருக்குவா.அதன்பின்உன்னிலமையின்அயன்தொகைகணக்கைபஸ்ஸ்டாண்டில் கூலிதூக்கு பாவன் புட்டுபுட்டு வைப்பான் .முன்யோசனையாகபாஸ்போட்டைகரண்டில்வைத்துக்கொள்.என் அட்வைஸ் விசப்பரிச்சைவேண்டாம்.
Post a Comment