Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓதுகிறோமா? [காணொளி] 6

அதிரைநிருபர் | September 24, 2014 | ,

தொடர் - 6
அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் மனனம் செய்து உணர்ந்து ஓதுகிறோமா?

திருக்குர்ஆனில்  முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும், இதன் சிறப்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் உணர்ந்து ஓதியிருக்கிறோம்? 

சூரத்துல் ஃபாத்திஹாவின் முழுமையான அர்த்தத்தை மனனம் செய்திருக்கிறோமா? 

நாம் ஒவ்வொரு தொழுகையின் ரக்காத்துகளில் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா சூராவை அழகிய உச்சரிப்புடனும் பிழையின்றியும் ஒதுகிறோமா? இதோ இந்த காணொளியை பாருங்கள்.

காணொளியை கேட்ட உச்சரிப்புகளுடனும் பிழையின்றியும் நாம் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா உள்ளதா? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். இதன் அர்த்தத்தை முழுமையாக மனனம் செய்து, அதன் பொருள் உணர்ந்து இவ்வுலகை விட்டு மரணிக்கும் வரை அதனை மறக்காமல் இருக்க வல்லமை நிறைந்தன அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்களின் நடைமுறைகள், அவர்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

6 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அவசியமான பதிவு.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

Unknown said...

wonderful. collections,பெண்களுக்கும் தனி இடம் ஓதிக்கிடு,. அடுத்த பதிவில் எங்களையும்( ஆண் குழந்தை) சேர்க்க முயல அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக ஆமீன். கியாமத் நாளில் அனைவரும் எழுப்பப்படுவர்,சத்திய சஹாபாக்கள் கைகள், கால்கள், தலை வெட்டப்பட்ட அடையாளங்களோடு வருவார்கள் குறைந்தது நாம் (நான்) தொழுகைஇன் அடிப்படை சூராக்களாவது தவறுகள் இல்லாமல் ஓதி மரணிக்க அல்லாஹ் உதவிபுரிவானாக ஆமீன்

sabeer.abushahruk said...

சூரத்துல் ஃபாத்திஹாவைப் பொருளுணர்ந்து ஓதினாலே உச்சரிப்புகள் சரியாக வரும். குறைந்தபட்ச தஜ்வீத்களையாவது கற்றுக் கொள்வது நல்லது.

(காசுக்காகவும் கடமையே என்றும் ஓதப்படும்போது ஃபாத்திஹாக்கள் வெகு வேகமாக ஓதப்படுவதால் அர்த்தம் மாறிப்போகும் அபாயம் உண்டு)

நல்ல அறிவுரை, தாஜுதீன்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear Tajudeen,

Thanks a lot for sharing these thoughts of Sura Fatiha.
Sura Fatiha is an ultimate prayer method to pray to God Almighty Who is The Creator of the universe. When we speak to Him in the prayer, it is common sense to know what we speak to Him. And we need to express our feeling of each sentence spoken. Example when we say "Alhamdu Lillahi Rabbil Alameen" we need to express our feeling of gratitude and establish such attitude in core self.

Islam is not set of rituals, but practicing of God given noble principles in moment by moment living in this world.

Jazak Allah Khairan

B. Ahamed Ameen from Dubai

Unknown said...

அவசியமான பதிவு.
‘எங்கள் இறைவா! உனது அருட்பெரும் கொடையை எங்களுக்கு வழங்கி, எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!”

umar fareesh said...

மாஷா அல்லாஹ்!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு