நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தற்கொலை தீர்வாகுமா ? 9

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், செப்டம்பர் 10, 2014 | , ,

செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினமாக உலகம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகின்றது. சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒருவர் தற்கொலை செய்கின்றார். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். பால், வயது, நாடுகள் பேதமின்றி தற்கொலை எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் (15 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) ஒரு இலட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் தற்கொலை நடைபெறுகின்றது. ஆய்வறிக்கையின்படி கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தான் தன்னைத் தானே மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றது. கடந்த இருபது வருடங்களில் தற்கொலை சம்பவங்கள் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்கின்றனர். தமிழகத்திலும் தற்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் யாருக்கு தோன்றுகிறது என்று சிந்திக்கும் பொழுது, மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மது மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள், பொருளாதார பிரச்சனைகள் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் விரக்தி அடைந்தவர்கள், எய்ட்ஸ், ஆஸ்துமா போன்ற கடுமையான நோய் பீடித்தவர்கள், மிக முக்கியமாக, தனிமையில் வாடுபவர்கள் இவர்களிடமே தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான தற்கொலைகள் அற்பக் காரணங்களுக்காகவே நடைபெறுகின்றன. கணவன் – மனைவி சண்டை, ஆங்கில வழி படிப்பில் தோல்வி, தேர்வில் தோல்வி, காதல், கடன் என்று சிறிய சிறிய பிரச்சனைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும். ஆண் – பெண், இரவு – பகல், இன்பம் – துன்பம், வாழ்வு – மரணம் என்று அனைத்தையும் இரண்டிரண்டாகப் படைத்துள்ள இறைவன் பிரச்சனைகளுடன் அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே படைத்துள்ளான். ஆதலால் எந்த ஒரு பிரச்சனையானாலும், உரியவர்களிடம் கலந்தாலோசித்து அதற்கான தீர்வு காண முயல வேண்டும். பிரச்சனைகள், துன்பங்களை எதிர்கொண்டு வாழப் பழகினால்தான் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் வெற்றி காண முடியும்.

இறைவன் வானம் – பூமி, இவற்றிற்கிடையே உள்ள எண்ணற்ற வாழ்வாதாரங்கள் இவற்றை எதற்காகப் படைத்துள்ளான்? நாம் இவ்வுலகில் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண முயல வேண்டும். அப்போதுதான் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவுகள் ஏற்படாது.

பிள்ளை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே சூழ்நிலைகளுக்கேற்ப வாழுதல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், தேவை ஏற்படின் பிறருடைய உதவியை நாடுதல் போன்ற பண்புகளை குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்.

ஆன்மீக விஷயங்களில் நாட்டம், சமூகத்தில் உள்ளவர்களுடன் நெருங்கிப் பழகுதல், சரியான முறையில் உடல்நலத்தைப் பேணுதல், புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகியிருத்தல் போன்றவை மூலமும் தற்கொலை மனப்பான்மையைக் களையெடுக்க முடியும்.

தற்கொலை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், அதற்கான காரணம் மற்றும் தவிர்க்கும் காரணிகள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாக்கப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை உள்ளவர்களுக்கு தற்கொலை ஒரு சமூகக் குற்றம் என்று உணர்த்த வேண்டும்.

தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்குரிய மையங்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும். தற்கொலை எண்ணத்தைத் தூண்டக்கூடிய சமூக, கலாச்சார (சினிமா, நாடகங்கள்,etc..,) காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசுகள் தற்கொலைகளைத் தடுக்கத்  தனிப் பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.

இறைவன் படைத்த  உயிரை மாய்த்துக் கொள்வதற்கு இவ்வுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வாழ்வு இறைவன் நமக்கு அளித்த அருட்கொடையாகும். இங்கு நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும், நாளை படைத்த இறைவன் முன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். கவலைகள், தோல்விகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வதென்றால், இவ்வுலகில் யாரும் உயிருடன் வாழ முடியாது.

இறைநம்பிக்கை, கடின உழைப்பு, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல், ஒழுக்கம் இவையே இன்றைய உலகில் வாழ்வதற்குத்  தகுதியான உபகரணங்கள் ஆகும். இவற்றை ஒரு மனிதன் பெற்றிருந்தால் எத்தகைய அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும்.

ஆதலால் தற்கொலையை மக்கள் கருத்தாக மாற்றி, அதனைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்துச்  செயல்பட்டால், இந்தக் கொடிய நோயைச் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

நன்றி: R. Abul Hasan Raja & முதுவை ஹிதாயத்
பரிந்துரை : அதிரை அஹ்மது

9 Responses So Far:

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Very good article about suicide. Prevention is better than cure. Actually what we need in town like Adirampattinam is to have professional counseling centres for marriage conflicts, family conflicts, children and teenage children's behaviour problems and community conflicts etc.

The people who are having psycological problems are not aware that they have the issue and not approaching professionals for treatment. Most of the problems can be treated and cured effectively by professional.

Its everyone's social responsibility to have counseling centres in their regions.

May Allah save us from diseases and disasters.

B. Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk சொன்னது…

தற்கொலை பற்றிய புள்ளி விவரங்கள் திடுக்கிட வைக்கின்றன.

அல்லாஹ் கொடுத்த உயிரை எடுக்க அவனையன்றி உயிருக்குச் சொந்தக்காரருக்குக்கூட உரிமை இல்லை.

கொலைக்குச் சமமான பாதிப்புகள் தற்கொலையிலும் உண்டு.

விழித்துக் கொள் மானிடா.

பரிந்துரைக்கு நன்றி காக்கா.

sheikdawoodmohamedfarook சொன்னது…

மருமகன்அஹமத்அமீனின்கருத்தோடுஒத்துபோகிறேன்.இந்தகருத்துக்கள் எல்லாப்பிரச்சனைகளுக்கும்எல்லாதரப்பினருக்கும்பொருத்தமானதே!

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

In Dubai our company's client named "Dubai Community Healthcare Centre" has its motto or vision is written there as "Help them to help themselves". They do individual level and group therapy also in schools or other companies.

Why not we initiate in our regions like "Adirai Community Healthcare Centre" which help those in need to help themselves? Its high priority social service needed more than other services. A healthy community is not only disease free physically but in mentally too.

Thanks and best regards

B.Ahamed Ameen from Dubai

Shameed சொன்னது…

தற்கொலை சமாச்சாரத்தில் மனிதனைவிட மிருகங்கள் மேலானவை காரணம் மிருகங்கள் தற்கொலை செய்துகொள்வது கிடையாது

Ahamed Ameen சொன்னது…

//தற்கொலை சமாச்சாரத்தில் மனிதனைவிட மிருகங்கள் மேலானவை காரணம் மிருகங்கள் தற்கொலை செய்துகொள்வது கிடையாது//

Because human has ego and emotions which are dynamic. But animals are having predefined or preprogrammed instrincts only. Human has tendancy to reprogram his mind himself.

sheikdawoodmohamedfarook சொன்னது…

பறவைஇனங்களில்அன்றில்என்றபறவைதற்கொலைசெய்துகொள்ளும் தன்ஜோடியில்பெண்பறவைசெத்தால்ஆண்பறவைகற்களைவிழுங்கி வானத்தில்உயரேபறந்துசிறகைமடக்கிமண்ணில்விழுந்துசெத்துவிடும். அதுபோல்பெண்பறவையும்ஆண்பறவைசெத்தால்தற்கொலைசெய்யும். இந்தபறவைகள்சங்ககாலத்தில்வாழ்ந்தவை.இணைபிரியாகாதலர்களுக்குஇந்தபறவைகள்உதாரணம்.நம்காலத்தில்இதுஇல்லை.சினிமாபாடல்களில்''அன்றில்போல் இணைபிரியாது வாழ்வோமே'' யென்று [சினிமா] காதலர்கள்பாடுவார்கள். தற்கொலை செய்தே அந்தப்பறவை இனம்அழிந்தது. சங்க காலப்பாடல்களில் இந்த பறவைபற்றிய குறிப்புகளை காணலாம்.

அப்துல்மாலிக் சொன்னது…

வல்ல இறைவன் நம் அனைவரையும் இந்த எண்ணத்திலிருந்து விடுபட வைத்து தன்னம்பிக்கையையும் மன தைரியத்தையும் கொடுப்பானாகவும் ஆமீன்

தன் உயிரை மாய்த்துக்கொள்ள யாருக்கும் அதிகாரமில்லை..

Aboobakkar, Can. சொன்னது…

ஜப்பானியர்களிடம் தற்கொலை செய்யும் பழக்கம் அதிகம் உள்ளது அதற்கு காரணம் அவர்கள் இஸ்லாம் பற்றி அறியாததே மேலும் இவர்களுக்கு வாழ்வில் Target என்று சொல்லப்படும் ஒரு திட்ட குறிக்கோள் உள்ளது அதை எப்படியும் அடைய நினைகின்றனர் அது முடியாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர் .

உலகில் முன்மாதிரியான இவர்களிடம் இஸ்லாம் இல்லாததால் பேயை நம்புகின்றனர் காரணம் இவர்களில் அதிகம் பேர்கள் தற்கொலை செய்து கொள்வதால் ............

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+