Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குளிருதுங்கோ...! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 05, 2016 | , , ,

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!

கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!

ஜட்டி யணியா பசங்களுக்கு
வேட்டி தானே போர்வை...
தலைக்குமேலே இழுத்துப் போர்த்த
தகிடுதத்தோம் குளிர்!

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!

அரைவேக்காட்டு முட்டையும்
அப்பதான் போட்ட டீயும்...
அறைக்குள் கொணர்வதற்குள்
'ஆறி அலர்ந்து' போகும்!

விரட்டவந்த கதிரவனை
மிரட்டிப் பார்க்கும் குளிர்...
விடியற்காலையிலே
வீதியெலாம் ஜிலீர்!
குளத்துமேட்டு டீக்கடையில்
கூரைமேலே புகை...
'ஆத்தாத' டீயிலேயும்
தாத்தாவின் வாயிலேயும்
ஆவி வரவழைக்கும்
அதிகாலை குளிர்!

தேங்காய் எண்ணெய்க்குள்
உறைந்திருக்கும் குளிர்!
தீண்டும் விரல்களிலும்
மறைந்திருக்கும் குளிர்!

முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!

பஸ் ஸ்டான்ட் கதகதப்பில்
அசைபோடும் பசு...
பால் வண்டி மணி...
தலையை சுற்றிய ம்ஃப்ளருக்குள்
சவரம் துறந்த முகம்...
கைகட்டி வாய் நடுங்கும்
குளிருக்கு மரியாதை!

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!

சபீர் (நன்றி: ஜாகிர்)
இது ஒரு குளிர்கால ஸ்பெஷல் ! மீள்பதிவு..

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//மண்ணெண்ணெய் புகையினிலும் மல்லிகைப்பூவாசம்// அற்ப்புதமான வரிகள்.ஒருசிறந்தகவிஞன் மருமகனுக்குள்ளே 'கரு'வாகிறான் . .ஒருகாவியம்புனையதொடங்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

குளிருதுங்கோ... (கருக்கால எழுது வேலைக்கு போகு எங்களைப் போன்றோருக்கு... பழகிவிட்டது இங்கே...)

crown said...

ஊரில் பனிக்காலம்
உடலுதறும் குளிர்காலம்...
உல்லங் கையுரச
உதிரத்தில் உஷ்ணமேறும்!
--------------------------
உள்ளங்கள் இனைய உதிரம் சூடேறும்!காதுகடிக்கும் காரியம் ஈடேறும்!

crown said...

குழல் விளக்கின் வெளிச்சம்கூட
குளிர் அணுக்கள் சுமக்க...
ஒன்பது மணிக்கெல்லாம்
ஊர் அடங்கிப்போகும்!
-------------------------
இரு உயிர் ஜீவனின் அணுக்கலெல்லாம் விழிக்கும்!

crown said...


கம்பளிப் போர்வைக்குள்
கால் மடக்கி உறங்க...
சுவர்க்கோழி சப்தம்கூட
சுரத்தின்றி கேட்கும்!
------------------------
சேவல் கூவும் வரை தொடரும்!அதன் பின்னும் ஆவல் ஆறாது ,ஆசையின் மிச்சம் தீராது!இது தேராது என தோழர்கள் நகைக்ககூடும்!மனம் மட்டும் போறாது என உள்ளே துள்ளும்!

crown said...

கரன்ட் போன காலத்திலே
கதவிடுக்கில் குளிர்...
திரியை சற்று தூண்டி வைக்க
திக்கித் திணறும் குளிர்!
---------------------------------
குளிரையே நடுங்கவைக்கும் சுளிர் சுடர்!

crown said...

குத்துவிளக்கு வெளிச்சத்திலே
பத்து விளக்காய் அவள்...
மண்ணெண்ணெய் புகையினிலும்
மல்லிகைப்பூ மணம்!
---------------------------------
மனதை சுண்டி இழுக்கும் வரிகள்! காட்சியாய் கண்முன்னே!இளமை வற்றாமல் பார்த்துக்கொள்ளும் இந்த வரிகள்!பிரகாசம்!

crown said...

வீட்டார் அனைவரும்
விடிந்தும்கூட உறங்க...
ஹீட்டர் போட்டு குளிப்பர்
புத்தம்புது மாப்பிள்ளைகள்!
----------------------------
இது மேட்டர்!!!!

crown said...


முருக்கு வத்தல் பொறியல்
மொறுமொறென்ற பப்படம்...
துணைக்கறியாய் இல்லையெனில்
சவசவக்கும் சாப்பாடு!
-------------------------
சவ(ம்)=பிணம்),சவக்கும் சாப்பாடு பின்னே நாக்கு செத்து போகும்!

crown said...

அமெரிக்கப் பனியும்
அரபு நாட்டுக் குளிரும்
உடல் வதைக்கும் உபாதை!
அதிரைப்பட்டினத்து
அளவான குளிரோ...
அனுபவிக்க உடல் ஏங்கும்
அசைபோட மனம் இனிக்கும்!
--------------------------------

கவிஞரே! உங்களுக்கெல்லம் ரொம்ப குளிர்விட்டு போச்சு! அஹஹஹ்ஹஹஹஹ்!ஆனாலும் அங்கே நடக்கும் குளிருக்கு ஆசை துளிர்விடுது! மூச்சு தினறுது ,பேச்சு வராமல் நாவு குழறுது! வெயிலோ,மழையோ,பனியோ,புயலோ சொந்த மண்!சுகம்தான்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.