Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவர்களும் அதிரைநிருபர்களே - கிரவ்னுரை [பழசுதான் இருந்தாலும் இதற்கு மவுசுதான்...] 55

அதிரைநிருபர் பதிப்பகம் | January 07, 2016 | , ,

"நம் யாவராலும் நன்கு அறியப்பட்ட கவிக்கு விளக்கவுரை கொடுத்திடும் "வார்த்தை விளையாட்டின் எழில்" பதிந்திருக்கும் கிரவ்னுரை சிறப்புப் பதிவு :"

அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாபுகழும் அல்லாஹுக்கு மட்டுமே!அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக..இவர்களும் அதிரை நிருபர்களே! ஒவ்வொருவரின் குணாதிசயங்களை அவர்களின் பங்களிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டதட்ட நெருங்கி பழகியதைப் போல் மிக சரியான அளவுகோலில் அளந்த சகோ.சபீர் அவர்களை கண்டு வியக்கிறேன். ஏதோ நம் நிழல் போல் வந்து நம்மை அறிந்து , நம் குணங்கள் தெரிந்து பின் கருத்திட்டது போல் ஒவ்வொருவரைப்பற்றியும் உள்ளங்கையில் நெல்லி கனி போல் சொன்னவிதம் அல்ஹம்துலில்லாஹ் அருமையிலும் அருமை. சிலரிடம் அவர்கள் பல காலம் கூடஇருந்து பழகி எழுதி இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்ட நபர்களை பற்றி செவிவழி கேட்டதும், தீர ஆராய்ந்தும், அவர்களின் படைப்பான எழுத்தின் தன்மையை வைத்து கனித்ததும் வியத்தகு சாதனை.அல்ஹம்துலில்லாஹ்.


இவர்கள்

அதிரை அஹ்மது காக்கா:

தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

மிக நேர்த்தியான சரியான கணிப்பும்,விளக்கமும்.இந்த அதிரை ஈன்ற "கோ"மகனை பற்றி இன்னும் சொல்லலாம். ஆனாலும் சபைக்கு போதுமான அளவில் பறிமாற பட்ட செவிக்குணவு இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதம்.பலவிதம்.
-------------------------------------------------------------------------------------

ஆசான் ஜமீல் காக்கா:

புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

இவர்களைப்பற்றி பார்த்து பழகியதை சொன்னதால் அப்படியே சொல்லிவிட்டார்கள். மேலும் நான் பார்த்தவரை இவரின் வார்தையை நான் வழி மொழிவதுதான் சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------

சகோ. ஷாஃபி:

வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

இவர் வார்தெடுக்கும் மொழியும், ஆதாரங்களை தோன்டி எடுக்கும் லாவகமும். தொல் பொருள் ஆராட்சியாளார் தோற்பார் இவரிடம். உண்மை வரும் வரை எந்த ராசா ஆனாலும் விடாப்பிடியாய் வழிக்கு கொண்டுவரும் விடாகண்டன் அன்பு சகோதரன். சி.பி.ஐ அலுவலர்கள் இவரிடம் பணி நிமித்தம் பயிற்சி எடுத்தால் ஸ்பெக்ட்ரம் எல்லாம் வெளியில் வந்துவிடும். இவரிடம் அந்த கேசு போய் இருந்தால் ராசாவுக்கும்,அவன் ராசா(கருணாநிதி)க்கும் களிதான் போங்க.
-------------------------------------------------------------------------------------

என் ஜாகிர்:

இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்....
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

கவியோடு சேர்ந்த நால்வர் படையில் ஒரு சேனை.கவி நண்பனுக்கும் சிலனேரம் இடுவார் ஆனை! நம் கவியால் படிக்கப்பட்ட ,கவியையும் நன்கு படித்த நகமும் சதையும்.இவரின் குணம் கான இவரின் எழுத்தே கண்ணாடி. இவரின் முன்னாடி நிற்றாலே நோய் ஓடிப்போய்விடும் என்பது திண்ணம் சரிதானே கவிஞரே உங்கள் நண்பரைப்பற்றிய என் எண்ணம்!!!!
-------------------------------------------------------------------------------------

சகோ. ஹாலித்:

பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

மிகச்சரியான கணிப்பு. முகஸ்துதியை விரும்பாதவர். விருந்து வைத்து கவனித்தாலும் செய்த தவரை சுட்டிகாட்டும் நேர்மையிம் முகம் கொண்டவர்.சிக்கனமானவர் நேரத்தை கடை பிடிப்பதில். கெட்டிக்காரர். அநீதிக்கு அக்னி முகம் காட்டுபவர். நல்ல எழுத்தாளர்.

-------------------------------------------------------------------------------------

அலாவுதீன்:

அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

நல்ல வாத்தியார். நல்லொழுக்கம் போதிக்கும் மார்க்க சிந்தனையாளர். வாழ்வில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுபவர்.
-------------------------------------------------------------------------------------

ஹமீது!

வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

சமூக அக்கறையாளார்.. நற்சிந்தைக்கு சொந்தகாரர்.விகடகவி.சொல்லில் நகைச்சுவை குழைத்துத்தருபவர். விஞ்ஞானத்தில் மேல் காதல் கொண்டவர்.மெஞ்ஞானம் இஸ்லாமே எல்லாத்திற்கும் என்பதை அழுத்த பதிபவர். நல்ல நண்பராய் இருப்பவர்.
-------------------------------------------------------------------------------------

அபு இபுறாஹீம்:

கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்....
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

சரியா நாடி பிடித்திருக்கிறீர்கள். இவரை நாடி வருபவருக்கு நல்லதேயே செய்யக்கூடியவர்.. குணம் நாடி, எல்லாரும் வருவர் இவரிடம் ஓடி! என் காக்காவின் நண்பன்,எனக்கும் நண்பன், என் தம்பிகளுக்கும் நண்பன்(fun,fun,fun).எப்படி இவரால் மட்டுமே அப்படி எல்லாருக்கும் நண்பனாய், சகோதரனாய் இருக்க முடிகிறது?. யாரிடமும் சிண்டு முடியாத சிந்தனை வாதி.இவரை பாரட்டுவது என்னை நானே முதுகில் தட்டி கொடுப்பது போல்.உதவிக்கு நாம் இவரிடம் சென்று கேட்க வேண்டாம் . நமக்கு உதவி தேவை என்பதை இவரே அறிந்து கொள்வார் அந்த உதவியை நம் தேவை கருதி முழுதும் அற்பனிப்போடு செய்வார். வால் முளைக்காத வால் இவர். என்றும் திரிந்து விடாத பால் இவர். இவரின் மேல் கொண்ட அன்பால் சொல்கிறேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இவரின் பண்பால் அப்படி சொன்னேன். இவரின் உள்ளம் பாலை போல் வெண்மை அதில் நிறைந்திருப்பதெல்லாம் நன்மை.
------------------------------------------------------------------------------------

கிரவுன் தஸ்தகீர்:

தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

நன்றி! என்னை பற்றிய செய்தி மிகையா? அன்பின் வெளிப்படா? ஆகினும் மீண்டும் நன்றி.என்னை முழுமையாய் அறிய மேலே உள்ளவரை கேட்டால் சொல்வார்(அபு இபுறாகிம் காக்கா).
-------------------------------------------------------------------------------------

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:

மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

இனியவர். நகைச்சுவைமன்னன், சமூதாய அக்கரையாளன்,சமாதான புறா.மண்ணை வர்னிப்பதில் மற்றொரு வைர முத்து,இவரின் ஒவ்வொரு வார்தையும் முத்தில் பதிந்த வைரம்.
-------------------------------------------------------------------------------------

சகோதரி அன்புடன் மலிக்கா:

தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

மல்லிகைச்சரமாய் வார்தை கோர்பவர். இனிய சகோதரி.மார்கம் வகுத்த கோட்டை தாண்டாதவர், கற்பனை கோட்டையை தாண்டியவர். நடமாடும் கவிக்குயில்.சாதனை பெண்.சளிக்காமல் கவிதை தருபவர்.மற்ற கலைகளிலும் தேர்ந்தவர். நம்மை சார்ந்தவர்.
---------------------------------------------------------------------------------

யாசிர்:

யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

மிகச்சரியாக சொல்லியுள்ளீர். கருவில் குழந்தை தாங்கி பின் பெற்றெடுப்பவள் தாயார்.இவரின் கருத்துக்கு பத்து மாதம் கூட காத்திருக்க தயார். வாழைப்பழத்தில் ஊசி ஏத்து"பவர்.ஊசி பட்டாசும் இவரே! அணுகுண்டும் இவரே. எளிய பண்பாளர். இவர் கருத்து எழுதுவார் என்றே கவனித்து எழுத வேண்டியுள்ளது.பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்ஸன் வரும் அதிகாரி போல இவரின் வரவு.
-------------------------------------------------------------------------------------

அப்துர்ரஹ்மான்:

கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

என் பால்ய நண்பன்.என் முதல் வாசகன்,படிப்பாளி.பள்ளியில் படித்ததைவிட அனுபவ பாடம் அதிகம்.அறிவாளி.கற்று கொள்வதில் தாகம்மிக்கவன். கணவு கான்பவன்.கற்பனையின் உச்சம் காண்பவன்.ஒரு மரத்தை பற்றி எழுதும் முன் அந்த மரத்தின் மரபை படிப்பவன் பின் படைப்பவன். ஆணிவேரையும், சல்லிவேரையும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதுபவன். நல்லவிமர்சகன்.இன்னும் கவனம் செலுத்தினால் நம் ஊரின் நாளைய மற்றொரு அதிரை கவி.
------------------------------------------------------------------------------------

ஹிதாயத்துல்லாஹ்:

உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

என் இளவல்.உடன் பிறந்தவர்களில் என் அன்பை அதிகம் பெற்றவன். எத்தனை வயதானாலும் என் செல்லம்.அதிகாரம் மிக்கவன்,ரோசக்காரன்,பல நேரம் எனக்கு அண்ணன், ஆலோசனை சொல்லும் மந்திரி. நேர்மைக்கு எதிராக யார்வந்தாலும் விடான்.இவன் வளரும் வயதில் இவன் வயதை ஒத்தவர்கள் வண்ண கோழி குஞ்சு வளர்த்து வந்தனர்.இவனோ சமுதாயதின் மேலும், ஊடகத்துறைமேலும் எண்ணங்களை வளர்த்தான். பள்ளி படிப்பு படிக்கும் போதே பத்திரிக்கைத்துறையில் உயர்பதவியில் இருந்தவன். இவன் தேடிய பயணம் நான் அறிந்தவை வேறு. புரட்சியாளனால் வார்க்கபட்டவன்(காலம் கருதி சொல்லவில்லை-அபு இபுறாகிம் காக்கா போன்றோர் அறிவர்) சமுதாயத்தின் மேல் நிசமாய் கணவு கான்பவன்.உலக விசயம் விரல் நுனியில் வைத்திருக்கும் அன்பு தம்பி எனக்கும் பல விசயத்தில் ஆசான்.(அல்லாஹ் போதுமானவன். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே).
-----------------------------------------------------------------------------------

அதிரை முஜீப்:

இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

சமுதாயத்துக்கு எதிரான சமரில்(போர்களம்) இவர் அக்க போரல்ல ஆக்கபோர்! அமர்(வீரன்).இவரை பார்போரையும் ஈர்பாராய் இருப்பவர்.வேள்வி தீயை எரியவிட்டுகொன்டே அந்த தழல் தாழ்ந்துவிடாமல் கொழுந்துவிட்டு எரியச்செய்து சமுதாயத்துக்கு வெளிச்சம் தேடுபவர். கல்வி கண்ணை என்றும் மணக்கண்னாய் சுமந்து நல்ல நல்ல மாணாக்கன் வரவேண்டும் என்று பாடுபடுபவர். நாளை சமுதாயத்தூனனை நிறுவத்துடிக்கும் சிற்பி! மற்றவருக்கு பாடம் கற்பி,கற்பி என்று கதருபவர். சமுதாய ஊழியன் இவரின் அன்புக்கும், எண்ணத்துக்கும் இப்போதைக்கு அன்பு முத்தங்கள்.
-------------------------------------------------------------------------------------

ஷரபுதீன் நூஹு:

படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

படிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கலாகாது என்று எண்ணும் மற்றோரு அபுல் கலாம்.கணவு கான்பவர் கணவிலும் நம் சமுதாயம் படித்ததாய் கான கணவு கான்பவர்.இவரின் ஆதாங்கம் சமுதாயத்துக்கு ஆதாயம்.
------------------------------------------------------------------------------------

அதிரை மீரா:

மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

மீரா! சமுதாய எண்ணம் மீறாத வீரா!உனக்குள்(உங்களுக்குள்) உள்ளபொறி! சமுதாயம் முன்னேற வேண்டும் என்கிற குறி! அது நன்மை பயக்கும் வெறி!வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------

அப்துல் மாலிக்:

சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்.

சமுதாயத்தின் நன்மைக்கு அறக்கூவலிடுவதில் தலைமை ஏற்பவன். இணையத்தின் வழியாக கருத்தாகவும்,மடலாகவும் சமுதாயதிற்கு தேவையான வழிமுறைகளை எல்லாருக்கும் கொண்டு சேர்ப்பவன்.சக சகோதரனின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாய் பார்பவன்.
------------------------------------------------------------------------------------

அபு ஆதில்:

இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறேன்.. இந்த சகோதரரை பற்றி அதிகம் தெரியாததால் .விபரமாக எழுதமுடியவில்லை. இவரிடம் இருந்து வந்த சில கருத்துகளை வைத்து.இவரின் எண்ணத்திலும் சமூதாயத்தின் அக்கரை சந்தனமாய் மணம்வீச காண்கிறேன்.
-------------------------------------------------------------------------------------

சின்னக் காக்கா:

சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

அன்பு நண்பன் அழகிய எண்ணங்களுக்குச்சொந்தகாரன். இன்னும் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.மருந்துபோலும்,விருந்துபோலும் வராமல் தொடர்ந்து வந்து கருத்து சொல்லிவிட்டும். ஆக்கங்கள் அனுப்பியும் தொடர்பில் இருக்கவும்.
-------------------------------------------------------------------------------------

மீராஷாஹ் (எம் எஸ் எம்):

ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை.

இவரின் தகப்பனார் வித்தகர் என்றால் இவரோ மொழிவிற்பனர்.வார்தை செரிவும்,அடர்தியும் இவரின் எழுத்தில் தெரியும் முதிர்ச்சி.இவரிடம் கற்றுகொள்ளனும் ஊடக பயிற்சி.இவரைபோன்ற இளைஞர்களின் முயற்சி. நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி.
-------------------------------------------------------------------------------------

அபு ஈஸா:

திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்.

அப்பப்ப லேசா வந்துட்டுபோனாலும் கணமாய் தந்துட்டுபோகும் சிந்தனையாளர். இவரின்ஆராய்ச்சி பாணி ரொம்ப மனதை ஈர்க்கக்கூடியது. வாழ்துக்கள் இன்னும் எழுதவும்.
-------------------------------------------------------------------------

அதிரை ஷஃபாத்:

செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தம்பியை பார்த்து பல வருடம் ஆகிவிட்டன. நல்ல படிப்பாளி.பார்பதற்கு நேப்பாளி.இவரின் அன்னாளய மேடைப்பேச்சு கேட்டு சந்தோச பட்டவன் நான். இன்னும் மழையின் சாரல் தலைக்கு மேலே! சில்லென்ற காற்று கண்ணத்தை வருடிச்செல்கிறது.('சி'ல்கிறது)வண்டின் ஓசையும் ,இடியின் மிரட்டல் தொனியும் இன்னும் கேட்டுகொண்டிருக்கின்றன.மின்னல் பளிச்சென்றுமின்னிச்செல்கையில் கண் இமைகள் அனிச்சையாய் மூடிக்கொள்கிறது. என்று வரும் அன்று பேய்ந்து விட்டு போன மழை மருபடியும். கவிதைத்தாகம் தீர்க்க வருமா>மேகம் வந்தால் வரும்.MAY COME?
---------------------------------------------------------------------------------

தாஜுதீன்:

யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

இளையவர்,இனியவர்,கிரிக்கெட்விளையாட்டில் நல்ல கேப்டனாய் செயல்பட்டவர். இங்கே சீரியஸாய் தலைமை பொறுப்பில் பார்க்கவே சந்தோசமாய் இருக்கிறது. காலம் இவ்வளவு பக்குவத்தை தமக்கு தந்திருக்கிறதா? சந்தோசத்திலும்,ஆச்சரியத்திலும் மனம் திண்டாடிபோகிறது.எத்தனை பொறுப்பு?பல நேரம் பணியின் நெருப்பு.இத்துடன் பொன்சிரிப்பு,அத்தனையும் தாண்டி இதை நடத்தும் பாங்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் அனால் இங்கு பெயரில் தம்பி தாங்கிய அண்ணன் உடையான் நீர் எதையும் தாங்குவீர்.
---------------------------------------------------------------------------------

அதிரை நிருபரின் ஆஸ்தான கவி

இவரைபற்றி தனியே இந்த ஆக்கம் வரும்பொழுது கருத்து சொல்கிறேன். மாலுமி இவரை பற்றி காலனிலை ஆராய்ந்துதான் வடிக்க முடியும் இல்லையென்றால் எப்படி இருவரியில் முடியும்??

-------------------------------------------------------------------------------------

CROWN

55 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பதிவு என்னவோ அன்றையச் சூழலைச் சொல்கிறது... ஆனால் இன்றையச் சூழலில் இவர்கள் இங்கே அன்றுபோல் தடம் பதித்து தொடர ஆசையாகத்தான் இருக்கு... நிறைவேறுமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவர்களுக்குப் பின்னால் மூத்தோர் பலரும் இங்கே இன்னும் எழுத்தோவியங்களின் ஆளுமையில் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களையும் கவிக் காக்கா... அடுத்ததொரு பதிவில் அசைபோட வேண்டும்..

crown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இவர்களுக்குப் பின்னால் மூத்தோர் பலரும் இங்கே இன்னும் எழுத்தோவியங்களின் ஆளுமையில் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களையும் கவிக் காக்கா... அடுத்ததொரு பதிவில் அசைபோட வேண்டும்..
Reply
வியாழன், ஜனவரி 07, 2016 9:53:00 முற்பகல்
sabeer.abushahruk சொன்னது…

Insha Allah, Abu Ibu
--------------------------------
வலைக்குமுஸ்ஸலாம்!waiting

அப்துல்மாலிக் said...

வாழ்க்கையே அவசரகதியில் போய்க்கொண்டிருப்பதால் நீண்ட..... கட்டுரைகளை படிப்பதற்கு மக்களுக்கு தயக்கம் என்பதுதான் உண்மை...

sheikdawoodmohamedfarook said...

இது நல்லபதிவு. இதில்வந்தபெரும்பாலோர் எனக்குபுதியவர்கள். இப்போ அவர்கள் எல்லாம் எங்கேபோனார்கள். அவர்களின் போட்டோவையும் போட்டிருந்தால்இன்னும்சிறப்புடன்இருக்கும்.நன்றி.

sabeer.abushahruk said...

இவர்கள் எழுத்து -ஒரு
ஹலாலான போதை!
இயம்பும் கருத்தில்
இயல்பான மேதை!

அரசியல் அமைப்போ
ஆன்மீக அழைப்போ
அலசி ஆராய்வதில்
அயராத அறிஞர்

ஓய்வு காலத்திலும்
ஆய்வு காணும்
சமூக ஆர்வலர்
சாட்டையடி எழுத்தாளர்

மதீனத்து அன்சாரிகள்
மாநபியைப் போற்றினர்
இப்றாகீம் அன்சாரியை*
வரவேற்று வாழ்த்துவோம்!

*அவர்களை




crown said...

sabeer.abushahruk சொன்னது…

இவர்கள் எழுத்து -ஒரு
ஹலாலான போதை!
இயம்பும் கருத்தில்
இயல்பான மேதை!

அரசியல் அமைப்போ
ஆன்மீக அழைப்போ
அலசி ஆராய்வதில்
அயராத அறிஞர்

ஓய்வு காலத்திலும்
ஆய்வு காணும்
சமூக ஆர்வலர்
சாட்டையடி எழுத்தாளர்

மதீனத்து அன்சாரிகள்
மாநபியைப் போற்றினர்
இப்றாகீம் அன்சாரியை*
வரவேற்று வாழ்த்துவோம்!

*அவர்களை
-----------------------------------------
உன்மை,உன்மை,உன்மை முற்றிலும் உன்மை!
குறிப்பு:கவிகாக்கா அஸ்ஸலாமுஅலைக்கும். மரியாதை நிமித்தமாக அவர்கள்"சொல்லியிருக்கீங்க! சொல்லாமல் விட்டாலும் அந்த மேதைக்கு விளங்கும்!உங்களின் மரியாதை எங்களுக்கும் தெரியும்!

Yasir said...

காலச் சுழலின் சுழற்ச்சியால் முன்னிருந்ததுபோல் இப்போது அதிரை நிருபரில் ஆக்கங்கள் எழுத முடிவதில்லை..ஆனால் மனதிற்க்குள் ஆர்வம் அணையா தீயாய் உள்ளது மீண்டும் சந்திப்போம்....

crown said...

மொத்த உருவம்!
மெச்ச தக்க மேதை!
மொத்தென்று பஞ்சுபோல் தேகம்!
மலர் போல் மனது!
சில்லறை இறைத்தார் போல் சிரிப்பொலி!
கருத்து பெட்டகம்!
ஓய்வையை ஆய்வுக்கு அர்பணிக்கும் வெள்ளுடை தரித்த சமூக அக்கறையாளர்!
தேடலுக்கு கூகுள்!
இவரோ நாம் தேடும் பொருளுக்கு விடை சொல்லும் நடமாடும் கூகுள்!
அன்பிற்குரிய இ.அ. காக்கா!

crown said...

Yasir சொன்னது…

காலச் சுழலின் சுழற்ச்சியால் முன்னிருந்ததுபோல் இப்போது அதிரை நிருபரில் ஆக்கங்கள் எழுத முடிவதில்லை..ஆனால் மனதிற்க்குள் ஆர்வம் அணையா தீயாய் உள்ளது மீண்டும் சந்திப்போம்....
----------------------
INSHALLAH waiting

crown said...

பாருக்"காக்கா!
குதூகலத்தின் மூத்த இளைஞர்!
எழுத்து காந்தம்!
தன்மையில் சாந்தம்!
எதிரியையும் கவரும் கருத்தில் பாந்தம்!
இங்கே வந்தோம், போனோம் என்றில்லாமல்
வந்தோம் அனுபவ பாடம் தந்தோம் என தந்து
சொந்தம் என கொண்டாட வைத்த
மாமனிதர்!இவர்களின் ஆக்கத்தில்
அசந்தோம்,மகிழ்ந்தோம்!
(குசும்ப்பில் தமிழ் குஷ்வன் சிங்!)

sabeer.abushahruk said...

அனுபவக் குதிரையில்
அழகிய ஆசான்
எங்களையும் ஏற்றி
எழில் காணும் நேசன்*

கருப்பு வெள்ளைக் காலங்களை
கலரடித்துத் தருபவர்**
கைத்தடித் தமிழெடுத்துக்
கதை பல சொல்பவர்**

மலேசிய மண்ணில்
மயக்கம் இருந்தாலும்
தாய்நாட்டின் அலங்கோலம்
தாங்கிகொள்ளா இந்தியர்

முதுகினில் கத்தி
முடக்கிப்போட்டாலும்
உழைப்பால் மீண்டு
ஊர்மானம் காத்தவர்**

உரைநடை தமிழில்
இளைஞரின் ஈர்ப்பு
தளர்நடை வயதிலும்
தரமான மூப்பு

நையாண்டித் தமிழும்
நேர்படப் பேச்சும்
ஃபாரூக் மாமாவின்
நெற்றியடி எழுத்தில்



*நேசர்
**கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா...

ஒரு பதிவுக்கு சுழி போட்டேன்... இங்கே... பந்தியே நடக்கிறது.... ஆவணப்படுத்தனும்... அங்கேயும் அனுப்பி வையுங்கள் இன்ஷா அல்லாஹ் ! :)

Shameed said...

//பதிவு என்னவோ அன்றையச் சூழலைச் சொல்கிறது... ஆனால் இன்றையச் சூழலில் இவர்கள் இங்கே அன்றுபோல் தடம் பதித்து தொடர ஆசையாகத்தான் இருக்கு... நிறைவேறுமா ?//கண்டிப்பாக நிறைவேறும்

sheikdawoodmohamedfarook said...

அன்பிற்குரிய தம்பி Crown!அழகுதமிழில் கொம்புத்தேன்யென இனிக்கும்கவிதையால் என்னை பாராட்டி உள்ளீர்கள். நன்றி!அஸ்ஸலாமுஅலைக்கும்.

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகன்சபீருக்கு!அஸ்ஸலாமுஅலைக்கும்! நான் மலேசிய மண்ணின் மேல் கொண்ட மயக்கதை விட தமதுகவிதைபாராட்டு என்னைமதுஉண்டவண்டாக மாற்றியது.பாராட்டுக்குநன்றி!

ZAKIR HUSSAIN said...

ஊருக்கு ரயிலில் வந்து , ரயில்வே ஸ்டேசனிலிருந்து வீட்டுக்கு நடந்து வரும்போது ஒரு ஆர்வம் வரும் ....எல்லோரையும் ஆவலுடன் முகம் பார்த்து வரும்போது / நலம் விசாரித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவுடன், பார்க்காமல் விட்டுபோனவர்களை உடனே போய் பார்க்க வேண்டும் எனும் உணர்வு......

அது இந்த பதிவில் என்னால் உணர முடிந்த உணர்வு.

Ebrahim Ansari said...

அனைவருக்கும் அன்பான சலாம்.

நான் இதுவரை காணாத பலரை அறிமுகப்படுத்தி இருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

இதுவரை காணாத அவர்களை அவர்களின் பதிவுகள் மூலம் இனியாவது காண இயலுமா என்று ஏங்குது நெஞ்சம்.

தம்பி கிரவுன் அவர்களின் பின்தொடர் வர்ணனைகள் வலுவூட்டுகின்றன.

அனைவரின் அன்புக்கும் நன்றி.

அதிரைக்காரன் said...

கிரவ்னு தஸ்தகீர் உட்பட இங்கு குறிப்பிட்டுள்ள சமவயதுடையோர் அனைவரும் என் நண்பர்கள். மூத்தோர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் எனக்கு குருநாதர்கள்.

இவர்களின் தொடர்பிலும், நட்பிலும் இருப்பதால் கிட்டத்தட்ட நானும் பட்டியலில் இருப்பதுபோன்றுதான்.

வாழ்த்துகளும் துஆவும்.

அன்புடன்
ஜமாலுதீன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உண்மையில் வருந்துகிறேன்....ஆம் ஒரு நேரம் முழு மாத கர்ப்பிணி பிரசவத்திற்கு பரவசமாய் பரபரப்புடன் காத்திருப்பது போல் அ.நி.க்கு கட்டுரை எழுதியனுப்பி காத்திருந்த நாட்களை எண்ணி. எப்படி இருந்த நாம் ஏன் இன்று இப்படி ஆகித்தொலைந்தோம் என அவ்வப்பொழுது நினைக்காமல் இருப்பதில்லை. முகப்புத்தகம் வந்து நம்மை முகம்குப்புற சாய்த்து விட்டதோ? என எண்ண வேண்டியுள்ளது. இந்த சான்றோர்களின் வரிசையில் இந்த சாதரன நெய்னா பயலுக்கும் ஓரிடம் கொடுத்து உட்கார வைத்து அழகு பார்க்கும் அதிரை நிருபர் குழுமத்திற்கும், சான்றோர்கள், சக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சலாத்துடன் கூடிய ரொம்ப,ரொம்ப தேங்க்ஸ். அந்த ஆனந்தம் தரும் பழசுகளை புதுப்பிக்க வழி தெறியாமல் விழித்துக்கொண்டிருக்கிறேன். வரும் காலங்களிலாவது முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ்.

crown said...

சகோ.மெய்சார்
சில விசயம் ஐசா(சில்லுனு) எழுதவும்,
சில விசயம் ஸ்பைசா(காரமா) எழுதவும்,
பல சாய்சில் எழுதும் இவர் எழுத்து!
புதுசும்,பழசும் எழுத தெரிந்த பதுவிசு(அதிரை,அதிரை) எழுத்தர்!
நெய்சா பழக தெரிந்தவர் என அவர் வயசுகாரர்கள் சொல்வதுண்டு!
இவர் நீண்ட ஆயுசு பெற்று,
நம்மூர் சொல்படி தினுசு,தினுசா எழுத வாழ்த்து!

crown said...

அதிரைக்காரன் சொன்னது…

கிரவ்னு தஸ்தகீர் உட்பட இங்கு குறிப்பிட்டுள்ள சமவயதுடையோர் அனைவரும் என் நண்பர்கள். மூத்தோர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் எனக்கு குருநாதர்கள்.

இவர்களின் தொடர்பிலும், நட்பிலும் இருப்பதால் கிட்டத்தட்ட நானும் பட்டியலில் இருப்பதுபோன்றுதான்.

வாழ்த்துகளும் துஆவும்.

அன்புடன்
ஜமாலுதீன்
---------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் . டேய்! நீ என் நண்பன் என்பதாலும் ஏதாவது வகையில் தொடர்பில் இருப்பதாலுமே நான் எல்லாம் எதாவது சுமார எழுத முடிகிறது!என்றும் உன் வாசக நண்பன்!மீண்டும் இதன் மூலம் வேண்டுகோள்விடுப்பது தொடர்ந்து இங்கேயும் எழுது!

crown said...

புதுசும்,பழசும் எழுத தெரிந்த பதுவிசு
-----------------------------------------
இதே பதவிசு வெளியூர் சிலதில் பவிசு என அழைக்கபடுவதுண்டு!எப்படி சடவு"என்பது நம்மூரில் சடப்பு என வந்ததோ அதுபோல்.சடவு=பிணம் போல் நகராமல்,சடப்பு=சோம்பல் கொள்ளுதல்>!

crown said...

sheikdawoodmohamedfarook சொன்னது…

அன்பிற்குரிய தம்பி Crown!அழகுதமிழில் கொம்புத்தேன்யென இனிக்கும்கவிதையால் என்னை பாராட்டி உள்ளீர்கள். நன்றி!அஸ்ஸலாமுஅலைக்கும்.
----------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம்!இப்பத்தா(தே)ன் நிம்மதியா இருக்கு!மூத்தோர் சொல் வார்த்தை முன்னேயும் இனிக்கும்,பின்னேயும் இனிக்கும்(எனக்கு).

Ebrahim Ansari said...

தம்பி ஜமாலுதீன் அவர்களும் முசெமு நெய்னா அவர்களும் இங்கு எழுதவேண்டுமென்ற எனது தனிப்பட்ட ஆசையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் உங்களைப் போன்ற சிந்தனையாளர்களின் கருத்திடுதலும் பதிவாளர்களைப் பட்டை தீட்ட உதவும்.
அதிரை மன்சூர் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. அவரும் மீண்டும் வருகை தர வேண்டும்.

Ebrahim Ansari said...

அப்துல் காதர் என்ற ஒரு தம்பி அடிக்கடி வருவாரே அவர் ஏன் வருவதில்லை? அப்புறம் அதிரை சித்தீக்?

crown said...

சகோ.இக்பால்!
அல்லாமா இக்பாலுக்கு பின்
அதிரை இக்பால்!
சமயோகிதத்தில் முஸ்லிம் பீர்பால்!
இன்பத்து பால் எழுத்தின் மூலம்
நபிகளாரின்(ஸல்) நகைச்சுவை சொன்னவர்!
அதி-அழகின் மீதி அழகு!
குறும்பார்வையும்,குறும்பு பார்வையும் கொண்டவர்!
நறுமுகை பூக்கும் முகம்!எடுத்த முடிவில்
உறுதி(தீ)ஆனவர்!மார்க்க ஞானம் அதிகம்!
அறிவு கூட்டத்தில் இவரும் ஒரு சிகரம்!

crown said...

காதர் மாமா!
(மதர்வழியிலும்,பாதர் வழியிலும்
பல முறைகளில் ஒருமுறை)
ஈயம் ஹனிபாவுக்கு நிகராக
ஐயம் இல்லாமல் தங்க குரலோன்!
விகட கவி!
நையாண்டி தர்பாரின் தலைமையாசிரியர்!
மார்க்கத்தில் தீர்க்கமானவர்!
சிந்திக்கும் சுய சிந்தனையாளர்!
சுற்றம் போற்றும் உரிமையாளர்!
சபையை தன் செயலால் கட்டி போடும் கெட்டிகாரர்!

crown said...

மன்சூர் மச்சான்!
மன்னா(ன)ரின் மருமகன்
ஆனால்
இன்னார் என சுய அடையாளம் கொண்டவர்!
கரிங்கல் உருதியும்,
அதில் பூத்த மலராய் இதயமும்
பெற்றவர்!
சாதுபுலி
மூட நம்பிக்கைக்கு எதிராய் வெகுண்டெழும் வெடி குண்டு!
பார்வையைப் பற்றி பல கோணத்தில் பார்த்தவர்!
அதன் பின் இங்கே பார்க்க முடியாததேனோ?

crown said...

சகோ.புது சுரபி!
புதிய கானம் பாடிய குருவி!
ஊடக பறவை!
சமூகத்தின் சின்னதொரு நம்பிக்கை வாசல்!
மேல் நோக்கி பாயும் அருவி( நீரூற்று)!!
இருட்டு இனம் கண்டு கொண்ட வெளிச்ச பிஞ்சு!
வரும்தலைமுறையை அடுத்த நிலைக்கு
இட்டு செல்லும் சமரன் !
இவரின் வருகை இல்லாத இத்தளம்
கொஞ்சம் பொலிவிழந்து போய் உள்ளதென்பது
என் அபிப்பிராயம்!

crown said...

சகோ.சித்திக்!
எத்திக்கும் ,தித்திக்கும் படி
செய்தி சொன்னவர்!
பத்திரிக்கை துறையில் இவர் சின்ன துரை!
பலர் சிந்திக்க ஆக்கம் தரும் ஊக்கமிக்கவர்!
சிரித்த முகவும்,சிந்திக்கும் பாவமும்
இவர் அடையாளம்!
மீண்டும் வரணும்! மேலும் தரணும்!

sabeer.abushahruk said...

க்ரவ்ன்,

அருமை, அருமை!

நினைவுகூர்தல் மனம் சார்ந்தது மட்டுமல்ல; தமிழும் சேர்ந்தது என்று நிரூபித்துள்ளீர்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொடிகட்டிப் பறக்கின்றது இந்தப் பதிவு.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

க்ரவ்ன்,

அருமை, அருமை!

நினைவுகூர்தல் மனம் சார்ந்தது மட்டுமல்ல; தமிழும் சேர்ந்தது என்று நிரூபித்துள்ளீர்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கொடிகட்டிப் பறக்கின்றது இந்தப் பதிவு.
-----------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.எழுவது இயல்பாய் வரும் என்றாலும் நேரிடையாகவோ,மறைமுகமாகவோ மெறுகேற்றியவர்களில் உங்கள் பணி அதிகம் அதனால்தான் இப்படி எல்லாம் எழுத முடிகிறது. நீங்களும் நானும் இது வரை உட்கார்ந்து யோசித்து ஏதும் படைத்ததில்லை!இது அல்லாஹ்வின் வரம்!வரும் வரை யாரலும் தடுக்கவோ,கெடுக்கவோ முடியாது!அல்லாஹ் அக்பர்!

sabeer.abushahruk said...

Alaikkumussalam Crown,

காட்டாற்றுக் கற்பனையில்
கரைபுறளும் உள்ளம்
மார்க்க மரபு நெறிகளுக்குள்
மகாநதி வெள்ளம்

வாசகரை வசீகரிக்க
கவிபுனைவோர் தன்னில்
கவிஞர்களையே கவர்ந்திழுக்கும்
கவிதருவார் கவியன்பன் கலாம்

crown said...

கலாம் காக்கா!
என்னை தன்னை போல் ஒருவன் என்று பெருந்தன்மையாக அழைத்த பெருமகன்!
தாள் கொண்டு எழுதும் காலம் முதல்
எழுத்தில் காதல் கொண்டு எழுது(ம்)பவர்!
அக்காலத்தில் கவிகளத்தில்
கலம்(பேனா)வில் தேனா ஊற்றி எழுதியவர்!
இவரை பார்ப்போரை ஈர்க்கும் புன்னகை!
எல்லாரையும் பாராட்டி சீறாட்டும் தாராள குணம்!
இவரிடம் பேசி பழகி பார்ப்போர்,
கவிதை வார்ப்பர்
வார்த்தை போர் தவிப்பார்!மீறினால் பூ மாலையாய் தொடுப்பார்!
சினம் என்பதை சீனதேசத்துக்கு புறமுதுகிட செய்வார்!
அனாலும்....
அலுச்சாட்டியம் செய்வாரிடமும்,செய்யார்war!
கவிதை வார்ப்போரை விரும்பும் இவர் ,war,போரை விரும்பார்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு !

கவிதை அட்டகாசம்...
இதுவெல்லம் உன்னோட சாகசம்...
இதுதான் உன் சுவாசம்...

பதிந்திருப்பதோ நல்ல கோஷம்
விதைத்தாயே அருமையான நேசம்...
உள்ளம் குளிருதப்பா கனிந்திருக்கும் விசுவாசம்...

காத்திருக்கலாம் இங்கிட்டவர்கள் வருகை தென்றலாக வீசும்

என்று(ம்)

அதிரை.மெய்சா said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இக்குழுமத்தின் பட்டியலில் நானும் இடம் பெற்றிருப்பது பெறும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் இடம்பெற்றிறுப்பவர்கள் அவரவர் பங்குக்கு ஒவ்வொருவரும திறமையானவர்களே. மக்களுக்கு விழிப்புணர்வையும் நல்ல கருத்துக்களையும் நாம் எழுத்தின் மூலமாக சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அந்த வகையில் எலலா பதிவுகளுக்கும் பொருத்தமான விளக்க உரை பதிந்து வியப்பில் ஆழ்த்திவருகிறார் சகோதரர் க்ரவுன்.Crown.

KALAM SHAICK ABDUL KADER said...

உள்ளக் கிணற்றிலே ஊறிய வார்த்தைகள்
வெள்ளம் எழும்பி வெளியாகும் கோர்வைகள்
சொல்லும் விதத்தில் சுவையூட்டும் பார்வைகள்
வெல்லம் இனிக்கும் விருந்து

crown said...

வெல்லம் இனிக்கும் விருந்து
------------------------------
மெல்ல செரித்தால் அதுவே மருந்து!இது இருந்து மெல்ல மெல்ல அருந்தும் உணவு!

crown said...

வாவன்னா சார்!
---------------
வா வென்னா(றா)
வரமுடியாத இடம்
விரைந்து .....
போவென்னா நாங்கள் நினைத்தோம்?!
சாவென்றா மீண்டும் வரும் வரம்
அல்லாஹ் தரவில்லையே!
இன்று நீர் நாளை நாங்கள்
இதுவே சமாதான வார்த்தை!
செல்லும் முன் செதுக்கிய சிலையாய்
சமூகத்துக்கு சில செய்திகள்
செய்து விட்டு சென்ற கோமகனே!
தூரிகை கொண்டு ஓவியம் வரைந்து
தமிழ் கொண்டு காவியம் வரைந்தவரே!
உங்கள் நற்செயலுக்கு அல்லாஹ் சுவனம் தர
என்றும் இறைஞ்சு நிற்போம்.

sheikdawoodmohamedfarook said...

ஏறத்தாழஎல்லோரு வந்துவிட்டார்கள்..இன்னும்ஒருசிலர் மட்டும் வராமல்அடம்பிடிக்கிறார்களே!ஏன்?கோபமா?

crown said...

ஹாஜாமொய்தீன் சார்!
-------------------
எனக்கு H.M.ஆக இருந்தவர்!
அச்சம் தவிர் என்றவர்!
சகலகலா வல்லவர்!
சகலமும் தெரிந்த நல்லவர்!
படித்தபின் வெரும் கையில்
சிலர் முழம் போடுவர் !ஆனால்
இவர்களோ படிப்பித்த ஆசான்களுக்கெல்லாம்
பின் தலைமை ஆசானாய் இருந்தவர்!
பெரும் தவர் செய்பவரையும்,
மெல்லிய புன்னகையில்
திருத்தும் திறமிக்கவர்!
மதங்களைத்தாண்டி மனங்களை வென்றவர்!
கணக்கும் ,கணக்கு பாடத்தையும் எளிதாக்கியவர்!
விளையாட்டிலும் மாணவர் வெல்ல சூத்திரம் கற்றவர்!இவரிடம் நான் படிக்கும் காலம்,இவருக்கு
நான் வைத்த பட்ட பெயர்'சூப்பர் மேன்"
அது என்றும் பொருந்தும் தானே?

Ebrahim Ansari said...

வீட்டில் ஒரு சுவையான தின்பண்டத்தை உம்மா சுட்டு வைத்து இருந்தார்களானால் திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கித் தின்னத் தோன்றும். அவ்வாறே இப்பதிவைத் திரும்பத் திரும்ப படிக்க படிக்க சுவையூட்டுகிறது.
வாவன்னா சார் அவர்களைப் பற்றி என்னால் தன்னந்தனியே படிக்க முடியவில்லை. எனது இருகண்களில் இருந்து மழையும் துணைக்கு வந்து மறைத்தது.

கவியன்பன் அவர்களின் வருகை இல்லாதது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாக நான் உணர்வதை சொல்லாமல் இருக்க இயலாது. பல இடங்களில் அங்கீகாரம் பெறும் அவரது கவிதைகள், தாய்வீடான அதிரைத் தளங்களில் காணப்படாததற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறேன். எனக்கும் அவரை அழைக்க உரிமை உண்டு என்று கருதி அழைக்கிறேன்.
குறைகள் இருந்தால் அவற்றை தள்ளிவிட்டு மீண்டும் வருகை தரவேண்டும் என்றும் அனைவரும் மீண்டும் ஒன்று கூட வேண்டுமென்றும் விரும்புகிறேன்.

தம்பி ஜமாலுதீன் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை வைக்கிறேன். அதேபோல் அதிரை அமீன் , இளைய அமீன் அதாவது இங்க்லீஷ் அமீன் ஆகியோரும் தனிப்பதிவுகளைத்தரவேண்டுமென்று அன்புடன் கோருகிறேன்.
அன்வர் என்று ஒரு தம்பி முகநூலில் சில முக்கிய பதிவுகளைத் தருகிறார்.அவரும் இங்கு வருகை தரவேண்டுமென்று கோருகிறேன்.

உங்களுக்கெல்லாம் எங்களின் ஆஸ்தான கவி சபீர் அவர்களின் கவிதை வேண்டுமானால் - எங்களுடைய வார்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் அவர்களின் மேல்பூச்சு அலங்காரம் தேவைஎன்றால் எனது கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு : எனது இளவலும் தலைமை ஆசிரியருமாகிய மகபூப் அலிசார் அறிவியல் பற்றிய சில பதிவுகளைத் தருவதற்கு சம்மதித்து இருக்கிறார்.

தம்பி அபு இபு ! நான் சரியாப் பேசுறேனா?

crown said...

Ebrahim Ansari சொன்னது…

வீட்டில் ஒரு சுவையான தின்பண்டத்தை உம்மா சுட்டு வைத்து இருந்தார்களானால் திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கித் தின்னத் தோன்றும். அவ்வாறே இப்பதிவைத் திரும்பத் திரும்ப படிக்க படிக்க சுவையூட்டுகிறது.
வாவன்னா சார் அவர்களைப் பற்றி என்னால் தன்னந்தனியே படிக்க முடியவில்லை. எனது இருகண்களில் இருந்து மழையும் துணைக்கு வந்து மறைத்தது.
-------------------------------------------------------
அவர்களைப்பற்றி எழுதும் போது எனக்கும் இதயம் கணத்துதான் எழுதினேன்!

crown said...

சகோ. பகுருதீன்!
---------------------
அம்மா ஆனாலும்
அரசியல் ஆனாலும்
சும்மா பின்னி எழுதுபவர்!
தனி ராஜாங்கம் நடத்தும் (எழுத்து)கோல் கொண்டவர்!
கூட்டாச்சி தத்துவமும் (இ.அ.காக்காவுடன்)ஏற்பவர்!
பவர்களில் இருப்பவரையும் தாக்கும் மின்சாரம்!
எழுத்தில் எழுச்சியும்,இனிமையும் சேர்ப்பவர்!
அரசியல்,விஞ்ஞானம்,வரலாறு தேர்ந்தவர்!
நம் முத்துபேட்டையை சேர்ந்தவர் எனவே நமக்குள் கெமிஸ்ட்ரியும் ஒத்தே போகுது!
மீண்டும் வரவேண்டும் என வேண்டும் பலரில் நானும்
அவ்வண்ணமே கோருகிறேன்.!

crown said...

Ebrahim Ansari சொன்னது…
இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு : எனது இளவலும் தலைமை ஆசிரியருமாகிய மகபூப் அலிசார் அறிவியல் பற்றிய சில பதிவுகளைத் தருவதற்கு சம்மதித்து இருக்கிறார்.
-------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இளம் தலைமையாசிரியர் அவர்களே!வருக!வருக! இங்கே வருகை பதிவேட்டிலும்,அ. நி ஏட்டிலும் பதிவு தருக!தலைமையாசிரியர் வருகை அப்சென்ட் ஆகாது என்பதை உண்மை படுத்துக!

crown said...

அ. நி ஏட்டிலும் பதிவு தருக!தலைமையாசிரியர் வருகை அப்சென்ட் ஆகாது என்பதை உண்மை படுத்துக!
--------------------
ஆப் சென்ட் என படிகவும்!அப்செட் ஆகவேண்டாம்!இந்த அழைப்பை பூச்செண்டு! என எடுத்துக்கொண்டு! வரவும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு : எனது இளவலும் தலைமை ஆசிரியருமாகிய மகபூப் அலிசார் அறிவியல் பற்றிய சில பதிவுகளைத் தருவதற்கு சம்மதித்து இருக்கிறார்.

தம்பி அபு இபு ! நான் சரியாப் பேசுறேனா? //

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

படி`த்தவர்களின் படித்துறை இது என அவர்களின் பங்களிப்பை அரவணைக்க காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

Iqbal M. Salih said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.

தம்பி தஸ்தகீரின் கணிப்பு வியக்கவைக்கின்றது!

குறிப்பாக, அறிஞர் இ.அன்சாரி காக்காவைப் பற்றிய கருத்துரை துல்லியமானது!

Unknown said...

மீண்டு(ம் )வருவோம் இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.