நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹாபிட் (HABIT) ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மார்ச் 06, 2016 | , , ,

பொதுவாகவே அநேகமானோர் ஏதாவது ஒரு வகையில் ஹாபிட் [HABIT] என்கின்ற பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது எதில் ஒருவர் அதிக கவனம் செலுத்தி அதிக நாட்டம் கொண்டு நடந்து கொள்கிறார்களோ அதுவே நாளடைவில் அவர்களுக்கு ஹாபிட் என்று சொல்லக்கூடிய பழக்கமாகி விடுகிறது.

ஹாபிட் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று குட் ஹாபிட் மற்றொன்று பேட் ஹாபிட் என்பதாகும். குட் ஹாபிட்டானாலும் , பேட் ஹாபிட்டானாலும் இரண்டுமே மனிதனை குறிப்பிட்ட சிலவைகளுக்காக மட்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி அதற்காக மட்டுமே அடிமைப்படுத்தி வைத்துவிடும். ஒருமனிதனுக்கு நல்ல பழக்கங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். தீய பழக்கம் முற்றிலும் இருக்கக் கூடாது. அப்படியே தீய பழக்கங்கள் ஹாபிட் என்கிற போர்வையில் ஒளிந்திருந்தாலும் அதை விரட்டியடிக்கவே முடிந்தவரை முயற்ச்சிக்க வேண்டும்.

சிலர் சிலவிளையாட்டில் தீவிரமாக கவனம் செலுத்துவார்கள். அந்த குறிப்பிட்ட விளையாட்டுதான் தனது ஹாபிட் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். அதுபோல சிலர் சாப்பிடும் உணவில் கூட இதுதான் எனது விருப்பமான உணவு என்று பெருமையாக சொல்லிக் கொண்டு அந்த உணவையே விரும்பி சாப்பிடுவார்கள்.இன்னும் சிலர் வார்த்தை உச்சரிப்பில் கூட ஹாபிட் என்று சில அர்த்தமில்லாத வார்த்தைகளை பேச்சோடு உச்சரிப்பார்கள்.இது போன்ற ஒருதரப்பு பழக்கமான ஹாபிட்டை தவிர்த்துக் கொள்வதே நல்லதாகும். 

முக்கியமாக நாம் உண்ணும் உணவில் விருப்பமானவை என ரகம்பிரித்து சாப்பிடக் கூடாது.ஒவ்வொருவகை உணவிலும் வெவ்வேறான புரதச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அனைத்து உணவுவகையிலும் உடலுக்குத் தேவையான பலசத்துக்களும் நிறைந்து உள்ளன. குறிப்பிட்ட ஒருவகை உணவைமட்டுமே சாப்பிட்டு வந்தால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்காது.பின்விளைவுகள்தான் ஏற்ப்படும்.அதுபோலத்தான் நாம் எல்லா விசயங்களிலும் ஒருதரப்பாக ஆக்கிக் கொள்ள கூடாது.

அடுத்ததாகச் சொல்லப்போனால் ஹாபிட்டை கடைப்பிடித்து நடப்பவர்களை அதைத்தாண்டி மேற்கொண்டு எதையும் அறியவிடாமல் யோசிக்கவிடாமல் குறுகிய வட்டத்திற்குள் முடங்கச் செய்து விடுகிறது.நாம் ஒருபழக்கத்தில் ஹாபிட் ஆகிவிட்டால் அதைவிடச் சிறந்ததை அறிந்து கொள்ள ஹாபிட்டே தடைக்கல்லாக இருக்கிறது.

எல்லா விஷயங்களும் எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.சிலருக்கு அறிந்த விஷயங்கள் சிலருக்கு அறியாது இருக்கும். சிலர் அறிந்திடாத விஷயம் மற்றவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். இதுதான் உலக இயல்பு..அதை விடுத்து ஹாபிட் என்கிற பெயரில் நமக்கு நாமே ஒரு பழக்கத்தை வரையறுத்துக் கொண்டு அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் பிற பழக்கவழக்கங்களும் பிற விசயங்களும் அறிந்திடாமல் போய்விடும்.

அது மட்டுமல்லாது சிலர் தவறான பழக்கங்கள்,மற்றும் முகம் சுளிக்கும்படியான வார்த்தைகளைக் கூட ஹாபிட் என்கிற பெயரில் பிரயோகித்து வருகிறார்கள். இதன் தவறை உணர்ந்து இதிலிருந்து மீண்டுவர முயற்சிக்க வேண்டும்.

ஒரு நல்ல விஷயத்தில் கவனம் செலுத்தி ஆர்வமாக இருப்பது தப்பில்லை.. அதேசமயம் ஹாபிட் என்கிற பெயரில் ஒரேவிஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பதால் எந்தப் பயனும் பலனும் இல்லை. எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பது தான் வாழ்க்கைக்கு பலம் சேர்க்கும். 

ஆகவே எந்த ஒரு பழக்கத்தையும் ஹாபிட் என்கிற பெயரில் நிலையாக வைத்துக் கொள்ளாமல் அதற்க்கு மாறாக நல்லவைகளை எடுத்துக் கொண்டு கெட்டவைகளை தூக்கியெறியும் பழக்கத்தைக் கொண்டிருப்பதே எல்லாவற்றையும் விட சிறந்த [ HABIT ] பழக்கமாக இருக்கிறது. எனவே ஹாபிட் என்கிற பெயரில் எந்த ஒரு பழக்கத்தையும் நிரந்தரமாக ஆக்கிக்கொண்டு ஒரே ரீதியில் ஒரே விசயத்தில் கவனம் செலுத்தி முடங்கி விடாமல் அனைத்து நல்ல விசயங்களையும் அறிந்து கவனம் செலுத்துபவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோமாக...!!!

அதிரை மெய்சா 

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…

நம்ஊரில்ஒருவர் இருந்தார். அவர்ஏதேனும் ஒருசெய்தியே சொல்வதானால் அதைசொல்லிவிட்டுதாய் பற்றிய கொச்சையான ஒருவார்த்தையையும் கூடவேசேர்த்து சொல்வார். அதோடுவிடுவாராஎன்றால்விடமாட்டார்.''இப்போ நான்ன என்ன சொன்னேன்?''என்று நம்மிடமே திருப்பிகேட்ட்ப்பார். சென்னையில் ஒருமுறைநான்இவரிடம் மாட்டினேன். இரண்டரைமணிநேரம் ஒரே அறுவை.வொவ்வொரு வாசகம்முடிவிலும் அம்மாவைப்பற்றிய அசிங்கமான வார்த்தையைசொல்லிசொல்லி ''என்னசொன்னேன்? நான்என்னசொன்னேன்'' என்றார். தாங்கமுடியாதஅவஸ்தை. நான்அவர் சொன்னசெய்தியை சொல்லிஅவர்சொன்னஅந்த கொச்சை வார்த்தையயும் அப்படியை உச்சரித்தேன்.இதைகேட்டஅவர் என்னை ஒருபார்வை பார்த்துவிட்டு போனவர்தான். அடுத்த முறை கண்டபோது முகத்தை திருப்பிகொண்டார்.விட்டது தொல்லை.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

சிலர் தவறான பழக்கங்கள்,மற்றும் முகம் சுளிக்கும்படியான வார்த்தைகளைக் கூட ஹாபிட் என்கிற பெயரில் பிரயோகித்து வருகிறார்கள்//

இது போன்ற விசயங்கள் சில நபர்களுக்கு ஹாபிட் டாக மட்டுமில்லை ஹாட் பிட்டாகவும் இருக்கின்றன.

Shameed சொன்னது…

ஹாபிட் பற்றிய உணவு உதாரணம் நல்ல ருசியா இருந்தது

sabeer.abushahruk சொன்னது…

//ஹாபிட் என்கிற பெயரில் ஒரேவிஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பதால் எந்தப் பயனும் பலனும் இல்லை. எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அறிந்து வைத்திருப்பது தான் வாழ்க்கைக்கு பலம் சேர்க்கும்.//

மிகச்சரியான அறிவுரை.

நன்றி மெய்சா.

அதிரை.மெய்சா சொன்னது…

கருத்துக்கள் பதிந்து இக்கட்டுரைக்கு ஆதரவு அளித்த சேக்தாவூத் பாரூக் காக்கா சகோ. முகமது அபூபக்கர் சகோ. சமீத் நண்பன் சபீர் மற்றும் இத்தளத்திற்கு வந்து வாசித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

Good cholesterol
Bad cholesterol

Likewise

Good habit
Bad habit

-----------
Nice work

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+