நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

cc: Sabeer appa ! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மார்ச் 03, 2016 | , , , ,

It was
almost same period
when
I became father
and
she was born to call me
'Sabeer Appa'

my grandy...
Mahdhiya Iqbal!

she was the
most beautiful girl
in our family
and very much close
to all of us
brilliant
religious
and beloved

left me now
with
rolling tears

death is something
painful at once
to the one died
but
more painful
to the those
left with memories

she was
always in touch with me.
kept me informed
of whatever she achieved
in her school
whatever happened
in her family

she was like a
blossom in our hall

like a
sunshine at our backyard

like a
drizzle in our summers

death stormed
to rip us all off

she closed her eyes
to leave us in dark

yes...
He
to Whom we all return!
Yet
simple human
takes it cool
when happens in a queue
but suffers
when on random

death was
too quick on her
makes us feel
why, too slow on us?

it hurts
it really does
when i realize
that i wouldn't receive
anymore mails:
"copied to Sabeer Appa"!

May she enters heaven
ya Allah

and
give us strength
to bear this, ya Allah!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

35 Responses So Far:

crown சொன்னது…

Assalamualaikum.May Allah bless her with jannathul firdouse
Aameen

Shameed சொன்னது…

May Allah bless her with jannathul firdouse
Aameen

Ahamed Ameen சொன்னது…

My heartfelt condolences. May Allah provide you with patience to bear the loss of your beloved grand daughter.

Yasir சொன்னது…

My heartfelt condolences. May Allah provide you with patience to bear the loss of your beloved grand daughter.

Ebrahim Ansari சொன்னது…

இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன் .

தம்பி இக்பால்,

அல்லாஹ் உங்களுக்கும் நமது குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த இழப்பைத் தங்கும் வலிமையைத் தருவானாக!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

மீண்டும் ஒரு முறை கண்கலங்க வைத்துவிட்டிர்கள் சபீர் காக்கா..

சகோதரி மஹதியாவின் மரணச் செய்தி கேட்டு பின் ஜமீல் காக்கா, சபிர் காக்கா, இக்பால் காக்கா ஆகியோரிடம் பேசிய பின்பு கண்கள் கசிந்தது.

அல்லாஹ்.. சகோதரி மஹதியாவுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பானாக. அன்னவரின் குடும்பத்தவர் அனைவருக்கும் பொருமையை கொடுப்பானாக.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

நாம் அனைவரும் செல்லவிருக்கிறோம். நமக்கு முன் சென்ற சகோதரியின் கப்ரை விசாலமக்கி ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுப்பானக.

பெற்றோர்களுக்கு பொறுமையை கொடுப்பானாக.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

நாம் அனைவரும் செல்லவிருக்கிறோம். நமக்கு முன் சென்ற சகோதரியின் கப்ரை விசாலமக்கி ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் என்னும் சுவனத்தை கொடுப்பானக.

பெற்றோர்களுக்கு பொறுமையை கொடுப்பானாக.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்...

அதிர்ச்சி தகவல் கிடைத்ததிலிருந்து உரைந்து போயிருக்கிறேன்... என்ன ஆறுதலைக் கொண்டு தேற்றுவதென்று...

அழகிய பொறுமையையும் மனத்திடத்தையும் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும் இழப்பில் கசிந்துருகும் நண்பர்களுக்கும் வல்லமை நிறைந்த அல்லாஹ் வழங்குவானாக !

அதிரைக்காரன் சொன்னது…

இப்பேரிழப்பைத் தாங்கும் சக்தியை பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ் அருளட்டும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அதிரைக்காரன் சொன்னது…

இப்பேரிழப்பைத் தாங்கும் சக்தியை பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ் அருளட்டும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Iqbal M. Salih சொன்னது…

உம்மாவுக்குச் செல்லமகன் நான்!

உருவத்தில் என் உம்மாவாகவே

உருவாகிப் பிறந்தாள் அவள்.

ஆமாம்!

என் தாயையே

மகளாகத் தந்தான் இறைவன்.

மாஷா அல்லாஹ்!என்ன ஒன்று!

அவளைத் தூக்கிச் சுமந்த,

அதே கரங்களால், மகளை

மண்ணறையில்

இறக்கி வைக்க நேர்ந்து விட்டது!

எனக்குப் பின் வாரிசாக இருந்து

கடமையாற்ற வேண்டியவளுக்கு,

நானே வாரிசாகப் போனேன்!அதிர்ந்து பேசாத அற்புதப் புதல்வி!

அவளுக்கு வந்தது,

தலைவலியோ கால்வலியோ அல்ல!

அது உயிர்வலி!எல்லோரும் மூச்சை

இழுத்து விடுவார்கள். என் மூத்த மகளோ

ஒவ்வொரு மூச்சையும் வெளியே

விட்டுக் கொண்டே இருந்தாள்.

இழுக்க இயலவில்லை!எனவே,

அமெரிக்க மருத்துவன் அவள் மூச்சை

ஆக்ஸிஜன் சிலிண்டரில்

அடைத்துத் தந்தான்.

இரண்டாண்டுகளாக அதை அவளுடன்

எங்கு சென்றாலும்

இழுத்துத் திரிந்தேன்.எங்களை வேடிக்கை பார்ப்பது

மனிதரின் வாடிக்கையானது!எதைஎதையோ மாற்றும்

மருத்துவர்கள் இங்கே,

நுரையீரல் மாற்றுச்

சிகிச்சைக்கு மட்டும்,

அவளுக்கு உடல்பலம்

போதாது என்றனர், அவள் மனபலம்

அறியாத மடையர்கள்!எல்லோருக்கும் ஒரு நொடியில்

போகும் உயிர், மஹ்தியாவுக்கு மட்டும்

பதினாறு நாட்கள் பயணமானதை

பக்கத்திலேயே நின்று, பார்க்க நேர்ந்தது!அந்த நாட்கள் சாதாரணமானதல்ல

சகோதரர்களே!

ஏகத்துவத்திலேயே பிறந்தவள்,

எல்லாம் வல்லவனை திக்ர்

செய்தவளாகவே பயணமானாள்!இப்போது வேதனையின் விரக்தியில்

என் மொத்தக் குடும்பமும்!

நான் ஒரு தந்தை! எனினும்,

நான் ஒரு தந்தை மட்டுமே!அந்த இரட்சகனே ஒவ்வோர்

உயிருக்கும் உரிமையாளன்!

அவன் முடிவுக்குத் தலைவணங்குவது

ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்!இன்ஷா அல்லாஹ்,பொறுமையின் வெகுமதி

பெற்ற மகளின் கையால்

சுவனச் சோலையில்,

விருந்து உபசரிப்பல்லவா! உண்மையாகவே

அது உன்னதமானது!வாருங்கள், எல்லோரும் சொல்வோம்,

"அல்ஹம்துலில்லாஹி அலா குள்லி ஹால்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//எல்லோரும் மூச்சை
இழுத்து விடுவார்கள். என் மூத்த மகளோ
ஒவ்வொரு மூச்சையும் வெளியே
விட்டுக் கொண்டே இருந்தாள்.
இழுக்க இயலவில்லை!
//

அன்பு காக்கா, இந்தச் சூழலை ஒவ்வொரு முறையும் என்னோடு சபீர் காக்கா தங்கள் மகளைப் பற்றி பேசிகொள்ளும்போது தொண்டை குழி அடைக்கும் எனக்கு அதைச் சொல்லும் அவர்களின் வலி அப்போது உணர்த்தான் செய்வேன்...

ஆனால்,

தங்களின் ஒவ்வொரு வினாடிப் பொழுதையும் நினைத்து கரைகிறேன்...

பொறுமையைக் கொண்டு தாங்களும் மஹ்தியின் குருதி பந்தங்களும் அல்லாஹ்வுக்காக பொருந்திக் கொள்ள வேண்டும்...

நிச்சயம், மகளார் சுவனச்சோலையில் தங்களுக்காக காத்திருப்பார் இன்ஷா அல்லாஹ் !

..
வாருங்கள், எல்லோரும் சொல்வோம்,
"அல்ஹம்துலில்லாஹி அலா குள்லி ஹால்"
..

ஆமினா சொன்னது…

சகோதரர் கருத்துரையை வாசிக்க முடியவில்லை. சகோதரனுக்கு ஏற்பட்ட துன்பம் போலவே உணர்ந்தேன்.

இவ்விழப்பிலிருந்து விரைவில் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.

அல்ஹம்துலில்லாஹி அலா குள்லி ஹால்

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

I deeply sorry and my heartfelt condolences for the loss of your beloved daughter.

//அந்த இரட்சகனே ஒவ்வோர்

உயிருக்கும் உரிமையாளன்!

அவன் முடிவுக்குத் தலைவணங்குவது

ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்!//

Yes. It is an ultimate consolation which can stabilize your heart and mind. May Allah provide you and your family with strength and patience.

Innalillahi wa inna ilaihi rajioon!!!

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

I deeply sorry and my heartfelt condolences for the loss of your beloved daughter.

//அந்த இரட்சகனே ஒவ்வோர்

உயிருக்கும் உரிமையாளன்!

அவன் முடிவுக்குத் தலைவணங்குவது

ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்!//

Yes. It is an ultimate consolation which can stabilize your heart and mind. May Allah provide you and your family with strength and patience.

Innalillahi wa inna ilaihi rajioon!!!

Dr.Abu Muhammadh | டாக்டர் அபூ முஹம்மத் சொன்னது…

'Inna lillaahi maa 'akhatha, wa lahu maa 'a'taa, wa kullu shay'in 'indahu bi'ajalin musamman . . . faltasbir waltahtasib .

Surely , Allah takes what is His , and what He gives is His , and to all things He has appointed a time ... so have patience and be rewarded.

'A'dhamallaahu 'ajraka, wa 'ahsana 'azaa'aka wa ghafara limayyitika.

May Allah magnify your reward, and make perfect your bereavement, and forgive your departed.

sabeer.abushahruk சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sabeer.abushahruk சொன்னது…

இக்பால்

இந்த நொடிகள் ஒவ்வொன்றும்
யுகங்களாகக் கனக்கின்றனவே
நினைவுகள்
இத்தனை கனமானவையா?

நிமிடங்களைக் கடத்த முடியாத நாம்
நாட்களை நகர்த்தப்ப்போவது எங்ஙனம்?

போனவள் தன்
பூமுக பிம்பத்தினையும்
பொங்கியெழும் நினைவுகளையும்
நம் இதயங்களிலிருந்து
பிய்த்தெடுத்துப் போகாமல்
தடுத்தது எது?

இது
இப்பொழுதிற்கான நிலை
இப்படியே நெஞ்சில்
தங்கி விடுமோ?
பயமாயிருக்கிறதடா!

என் பேத்திகளை
சின்னஞ்சிறுசுகளாக
அதிரையில்
வீட்டு மொட்டை மாடியில்
சப்போட்டா மரக்கிளைகளின் பின்னணியில்
புகைப்படம் எடுத்த காலம் முதல்

அமெரிக்காவிலிருந்து
உன்னோடு வந்த என் பேத்தியை
அமீரக விமான நிலையத்தில்
காத்திருந்து வரவேற்ற கணங்கள் வரை
என
வந்து வந்துபோகும்
நினைவுகளையே
என்னால்
கடத்திச் செல்ல முடியவில்லையே

உன்னால் எப்படியடா

யா அல்லாஹ்
இவனுக்கும்
எங்களுக்கும்
இதயங்களைச் சற்றே வலிமையாக்கு.

அல்ஹம்துலில்லாஹ் அலா குள்லி ஹால்

அதிரை.மெய்சா சொன்னது…

அன்பின் சகோதரர் இக்பாலின் அன்பு மகளார் மஹ்தியா பூரண நலம் பெற இறைவனிடம் மன்றாடி அல்லும் பகலும் துவா கேட்டேன் ஏனே என் துவாவை இறைவன் ஏற்க்கவில்லை.


நான் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அன்பு மகளை இழந்து மனம் தவிக்கும் பெற்றோர்களுக்கு தாங்கிக்கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுப்பானாக.

அல்லாஹ் மஹ்தியாவுக்கு ஜென்னத்துல் ஃபிர்தௌஸை வழங்கி நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக. ஆமீன்.

அதிரை.மெய்சா சொன்னது…

எனதன்பு நண்பன் சபீரின் கவிவார்த்தைகள் வாசித்து கண்கள் குளமாகிவிட்டன.

மென்மையான அனுகுமுறை அடக்கமான அமைதியான சுபாவம் அடுத்தவர்களின் சூழ்நிலைபுரிந்து தானாக முன்வந்து உதவிசெய்யும் குணம் இத்தனையும் நான் நேரில் பார்த்தேன்.

நான் கலிஃபோ.ர்னியா வரக்காரணமும் இந்த வேலைவாய்ப்பும் எனது உடன்பிறவா அன்புச்சகோதரர் இக்பால்தான் ஏற்படுத்திக்கொடுத்தார். அதைநான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.

இவ்வளவு நல்லெண்ணம் படைத்த சகோதரருக்கா இப்படியொரு இழப்பு என்பதை நினைத்து என்னால் மனம் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அல்லாஹ் இந்த பேரிழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெற்றோர்களுக்கு கொடுப்பானாக. ஆமீன்.

Iqbal M. Salih சொன்னது…

அன்பு மெய்சா,

"யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவரைச் சோதனைக்குள்ளாக்குகின்றான்" (புஹாரி:5645) என்ற நபிமொழி தாங்கள் அறிந்ததுதானே மெய்சா! என் மகளுக்காக நீங்கள் துஆச் செய்யுங்கள். அது போதுமானது!

மற்றபடி, உதவிசெய்வது என் கடமை. அதையெல்லாம் இங்கே நீங்கள் பதியவேண்டியதில்லை! அல்லாஹ் தூயவனுக்கே எல்லாப் புகழும்!

Iqbal M. Salih சொன்னது…

சபீர்,

என்னை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, நீதான் உடைந்துபோய் நிற்கின்றாய்!

உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி) அவர்கள், "இரவலாகப் பெற்றோம். திரும்பக் கேட்டதும் கொடுத்துவிடவேண்டும்தானே?" என்றதைச் சிலாகித்தவனுக்கு, அந்த தைரியம் இப்போது எங்கே போனது?

"நிச்சயமாக அல்லாஹ்(ஜல்)விற்கே அவன் எடுத்துக் கொண்டது உரியதாகும். அவன் அளித்ததும் அவனுக்கே உரியதாகும்; ஒவ்வொரு பொருளும் அவனிடம் தவணை குறிக்கப்பட்டதாகும். ஆகவே பொறுமையோடு இரு! நன்மையை எண்ணிக்கொள்!" (முஸ்லிம்:2/636).

Iqbal M. Salih சொன்னது…


என் மகள் மஹ்திய்யாவிற்காக உளப்பூர்வமாக பிரார்த்தனை செய்த, மதிப்பிற்குரிய சகோதரி ஆமினா அவர்கட்கும்,

டாக்டர் அபுமுஹம்மத், சகோதரர்கள் அர.அல., தஸ்தகிர், சாவண்ணா, அஹ்மத் அமீன், யாசிர் அபுஸாஜித், தாஜுத்தீன் அபுமஹ்மூத், நெய்னா அபுஇப்ராஹிம், மெய்சா, எல்லெம்மெஸ் அபுபக்ரு, அதிரைக்காரன் ஆகியோருக்கும்

மரியாதைக்குரிய ஃபாரூக் காக்கா, அறிஞர் இ.அன்சாரி காக்கா அவர்கட்கும்

அதிரை நியுஸ், அதிரை எக்ஸ்ப்ரஸ் பார்த்து துஆச் செய்தவர்கட்கும் மேலும், எனக்கு ஃபோன் செய்து விசாரித்து துஆச் செய்த நண்பர்களுக்கும், ஜனாஸாவில் கலந்து கொண்ட அருமை நண்பர்களுக்கும், இன்று வரை கூட்டங்கூட்டமாக என் வீடு வந்து துஆச் செய்து செல்லும் நம் சமூகத்தினருக்கும், யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் துஆச் செய்தவர்கட்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவரின் மற்றும் என் குடும்பத்தாரின் பிரார்த்தனைகளையும் ஏற்றுகொண்டு, என் மகளுக்கு மன்னிப்பு வழங்கி சுவனத்தின் உயர்ந்த 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை' வழங்கிடுமாறு அகிலங்களின் இரட்சகனைப் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன். ஆமீன்!
Jazaakumullaahu Khairan.

ஜமீல் சொன்னது…

இருபத்தைந்து ஆண்டு கால உயிர்வலியிலிருந்து விடுதலை பெற்று நிம்மதி அடைந்துவிட்டாய் என்பது உண்மைதானே?
எனில்,
உம்மா,
உன் இழப்பை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.

Ahamed Ameen சொன்னது…

பூ ,
பூக்காமலேயே
உதிர்ந்தது
குழந்தையின் மரணம்:

பொறுமை காக்கவும்:

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

இப்பதிவை இப்பொழுது தான் படித்தேன், அழுதேன். சென்ற வெள்ளிக்கிழமை கஃபாவில் உம்ரா செய்து கொண்டிருக்கும் பொழுது இக்பால் சாலிஹ் காக்காவின் மகளாருக்கு ஆஹிர மஹ்ஃபிரத்திற்காக சஃபா மர்வாவுக்கிடையே ஞாபகம் வந்து துஆச்செய்தேன்.

Iqbal M. Salih சொன்னது…


அஸ்ஸலாமு அலைக்கும் அருமைத்தம்பி எம்மெஸ்ஸெம் நைனா.

வெள்ளிக்கிழமை உம்ராவில், என் மூத்த மகளின் மறுவுலக வெற்றிக்காக தாங்கள்
துஆச் செய்தது அறிந்து, மிகவும் ஆறுதல் அடைந்தேன். என் உளப்பூர்வமான நன்றியையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

என் மகளுக்கு 'உம்ரா' செய்ய வேண்டும் என்று நிய்யத் இருந்து, அதை என்னிடமும் சொல்லிக்காட்டியதால், அதை நான் செய்யவேண்டியது கடமையாக இருக்கின்றது. மகளுக்கான உம்ராவை நான் விரைவில் செய்து முடிக்கவும் தாங்கள் துஆச் செய்ய வேண்டுகின்றேன். வஸ்ஸலாம்.

N. Fath huddeen சொன்னது…

அன்று அ.எக்ஸ்., அ. நி. தளங்களில் செய்தி படித்துவிட்டு அதிர்ந்துபோய் உங்களுக்கு ஈமெயில் அனுப்பி "மகளின் இறப்பிற்கு காரணம் என்ன" என்று கேட்டேன், நீங்களும் இந்த கவியின் லிங்க் அனுப்பினீர்கள். நான் முன்பே படித்துவிட்டேன் என்று உங்களுக்கு பதில் தந்தேன். மீண்டும் சகோ. சபீருக்கு ஈமெயில் மூலம் பதில் பெற்றுத்தான் மஹ்திய்யாவிற் இருந்த பிரச்சினை தெரிந்தது. இப்போது தான் இந்த பதிவின் முழுமை படித்தேன் உங்களின் இரங்கல் கவி, இறப்பின் காரணம் எல்லாம் தெரிந்தது. அல்ஹம்துலில்லாஹ் அலா குள்ளி ஹால்.

உத்தமப் பெண்மணி உம்முசுலைம் (ரலி) அவர்களின் அர்த்தமுள்ள வரிகளை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மேலும் ஜமீல் காக்காவின்:
//இருபத்தைந்து ஆண்டு கால உயிர்வலியிலிருந்து விடுதலை பெற்று நிம்மதி அடைந்துவிட்டாய் என்பது உண்மைதானே?
எனில்,
உம்மா,
உன் இழப்பை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.//

வரிகளில் "உம்மா" இடம் பெற்று இருந்தது. அன்பு, பாசத்தின் வெளிப்பாடு என்று இருந்தேன். பிறகு தான், உங்களின் இரங்கல் செய்தியில் படிக்கும்போது உங்கள் உம்மாவையே மகளாகப் பெற்றது தெரிந்தது. அல்ஹம்துலில்லாஹ் அலா குள்ளி ஹால்.

அல்லாஹும்மக்ஃபிர்லி ஜமீயி மௌதல் முஸ்லிமீன்.

Iqbal M. Salih சொன்னது…


தம்பி ஃபத்ஹுத்தீன் அபுஹாமித் அவர்களின் புரிதலுக்கும் துஆவுக்கும் மிக்க நன்றி.

ஜஸாக்கல்லாஹு ஹைரன்!

Shameed சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இப்பேரிழப்பைத் தாங்கும் சக்தியை பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ் அருளட்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இப்பேரிழப்பைத் தாங்கும் சக்தியை பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அல்லாஹ் அருளட்டும்.

Iqbal M. Salih சொன்னது…


"வல்லாஹி, குல்லு நஃப்ஸுன் தாயிகத்துல் மவுத்."

பிரார்த்தனைக்கு நன்றி சாவண்ணா, தம்பி ஜஃபர் ஸாதிக்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+