- வளர்ந்த பிள்ளைகள் அதிகம் பெற்றோரிடம் பேசுவது "இவ்வளவு பணம் தேவைப்படும்" என்ற ஒரே வார்த்தை தான்.
- வீட்டில் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சம்பாத்யம் போதவில்லை என்று குற்றம் சாட்டுமுன் ஒருமாதம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வந்து புத்திமதி சொல்லட்டும்.
- வளைத்தளம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அறிஞர்கள் அல்ல.
- எல்லா விசயத்திலும் விதியை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. நீங்கள் தான் அதை எழுதியது என்பது மற்றவர்களுக்கும் ஈசியாக தெரியும் இந்த காலத்தில்.
- காலத்தால் மறக்கக்கூடாதது சமயம் அறிந்து செய்யப்பட்ட உதவி.
- ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு கணவன் மீதான கவனம் குறைந்து பிள்ளைகள் மீதான கவனம் அதிகம் ஆகும்போது கணவன் மனைவியிடையே எல்லா விசயத்துக்கும் ஈகோ உருவாகும். 'கணவன்' நொய்யல் பார்ட்டியாகவும் ' மனைவி ' சனியாக ' தெரிவதும் இந்த கால கட்டத்தில்தான்.
- காலக்கட்டாயத்தால் தூரமாய்ப் போன உறவுகள் அதே அன்புடன் மறுபடியும் கிடைத்தால் அதுவே சந்தோசம். எதிர்பார்த்தால் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.
- எதையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வதால் மற்ற விசயங்களை மறைத்துவிடும்..உண்மையையும் சேர்த்துதான்.
- Financial Independence என்பது பணம் சம்பாதிக்க பொறுப்பு எடுத்துக் கொள்வது.
- ஒரே நதியில் எப்போதும் குளிக்க முடியாது – ZEN தத்துவம்.
- வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
- சின்ன வயதில் ரொம்ப நாள் சம்பாதிக்காமல் இருப்பவர்களுக்கு சூடு சொரணை இவைகளை எந்த லேப் ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிக்க முடியாது.
- வயதான காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அதிகம் சார்ந்திருப்பது இந்த கால கட்டத்தில் அவ்வளவுக்கு சரியல்ல. பிள்ளைகள் வயதான காலத்தில் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட தவறு.
- உங்களை அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனம்.
- தாய்ப்பாசம் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு தந்தை பாசத்தைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.
- பொழுதுபோக்குக்கு அதிகம் நேரம் ஒதுக்கிய இளமை, முதுமையில் பொழுது போகாமல் யோசிக்க வைக்கப்படலாம்.
- பணம் , பெண் இரண்டு விசயத்திலும் எந்த ஒருவனும் நிரந்தரமாக நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை.
- மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.
- உங்களின் முயற்சியில் எப்போதும் அவநம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள் நரபலி சாமியார்களைவிட கொடுமையானவர்கள்.
- எப்போது பார்த்தாலும் ' உங்க வீட்டு ஆட்கள்' என்று பிரித்துப்பேசும் தம்பதியினரிடம் அவ்வளவு அன்யோன்யம் இருக்காது. அப்படி இருந்தால் அது ஒரு பிசினஸ், தாம்பத்யம் அல்ல.
- தரமற்றவர்களிடம் செய்யும் விவாதம் ஒரு வீண்வேலை
- எப்போதோ செய்யப்போகும் வேலைக்கு இப்போதைக்கு டென்சன் வேண்டாம்.
- நமக்கு பிரியாணி கிடக்கவில்லை என்று கவலைப்படும் வேலையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.
- நாம் வாங்கி வந்த இந்த உடம்பே இரவல்தான் என்ற நிலையில் ஏன் நிறந்தரமில்லாத பல விசயத்தில் அனியாயத்துக்கு கவலை கொள்கிறோம்?
- தேவையற்றவைகளை வாங்கி சேர்ப்பவன், தேவையான பொருளை விற்க நேரிடும்.
- வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது வெற்றியடைகிறோம்..தோல்வியடைய வில்லை.
4 Responses So Far:
//தாய்ப்பாசம் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு தந்தை பாசத்தைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.//
பல நேரங்களில் தந்தையின் பாசத்துக்கு தடுப்புச் சுவராக தாயே நிற்பதும் அந்தப் பாசத்தை மகன்களுக்கு எதிராக மகள்களுக்கு ஆதரவாக தாயே திருப்பிவிடுவதும் நடக்கத்தான் செய்கிறது
//தரமற்றவர்களிடம் செய்யும் விவாதம் ஒரு வீண்வேலை//
ஆம். அண்மை காலத்தின் அனுபவம். தரமற்றவர்கள் அல்ல ஆனால் புரிந்துணர்வு இல்லாதவர்கள்.
//மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.// பலரும் உணர்ந்து சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய விஷயம்.
ஒவ்வொன்றையும் விலாவாரியாக விளக்கினால் படிக்கட்டுகள் பச்கம் 2 தயார்.
ஒவ்வொன்றும் வாழ்க்கையின் படிக்கட்டுகள்
இதற்கு - இந்த ஆய்வுக்கு - மூவர்தாமா கருத்திட்டனர்!? இதோ, நான்காவதாக நான்: லேட்டா வந்ததுக்குக் கையில் கம்பு ஒரு போடு போடட்டும். சரியான காரணம், Broadband வேலை செய்யவில்லை; அதே.
//கால கட்டாயத்தால் தூரமாய்ப் போன உறவுகள் அதே அன்புடன் மறுபடியும் கிடைத்தால், அதுவே சந்தோசம். எதிர்பார்த்தால் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.//
//எதையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வதால் மற்ற விசயங்களை மறைத்துவிடும்..உண்மையையும் சேர்த்துதான்.//
//மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.//
//வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.//
//வயதான காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அதிகம் சார்ந்திருப்பது, இந்தக் கால கட்டத்தில் அவ்வளவுக்கு சரியல்ல. பிள்ளைகள் வயதான காலத்தில் பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிடத் தவறு.//
//உங்களின் முயற்சியில் எப்போதும் அவநம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள், நரபலி சாமியார்களைவிடக் கொடுமையானவர்கள்.//
//தரமற்றவர்களிடம் செய்யும் விவாதம் ஒரு வீண்வேலை.//
//நமக்கு பிரியாணி கிடைக்கவில்லை என்று கவலைப்படும் வேளையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.//
//வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கற்றுக் கொள்கிறோம்; அல்லது வெற்றியடைகிறோம். தோல்வியடையவில்லை!//
அனுபவ ரேகைகள்!
Like a Sermon from the Mountain top!
Post a Comment