அதிரைநிருபரில் பேசும் படங்களோடு உறவாடிய தருணங்களை மீட்டெடுக்க அவ்வப்போது நினைவலைகளோடு அசைபோடவும் வேண்டியிருக்கிறது, வலைப்பூக்களின் வாசம் முகநூல் ஒப்பனைத் தோற்றத்திலும் அதன் வாசத்திலும் மயங்கிக் கிடக்கும் இளைய பழைய பழகிய சகோதரர்களை தூண்டில் போட்டு இழுக்க இன்னும் உழைக்கத்தான் வேண்டும்.
இருப்பினும், வேலைப் பளு கால ஓட்டங்களில் அன்றாட நிகழ்வுகளின் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கும் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் பொழுதுகளோடு நாட்களும் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது....
அதனால் என்ன !? எடுத்த பணியும் இணைந்த கூட்டணியும் சந்தர்ப்பவாதம் பேசாத சமயச் சூழலுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைத்து களமாடும் கம்பீரமான கூட்டணி இருப்பதால்... (தேர்தல் நேரமாதலால் பொருத்தருள்க).
சரி வாங்க நாம பேசுவோம் படங்களோடு!
பூங்காவில் பூத்திருப்பது பூக்கள் மட்டும் அல்ல மனிதர்களும்தான்
கலர் பார்க்க கண்ணாடி போடுவோம் இங்கே கண்ணாடியோ கலர்கலராக
கையில் சிக்காத இந்த கானகத்து மேகம் கேமராவில் சிக்கியது
பார்வையில் ரசனை இருந்தால் பார்ப்பது எல்லாம் அழகாய் தெரியும் (படம் கடற்க்கரை மணல் சிப்பிக்கள் சிதறிக்கிடப்பது)
முல்லைப்பெரியார் பார்ப்பதற்கு கொள்ளைப்பிரியமாய் இருக்கும்
இப்படி எல்லாம் இயற்கையை ரசிப்பதற்கு "குடுப்பினை" வேண்டும்
Sஹமீது
16 Responses So Far:
குடுப்பினை அல்ல குடைப் பிணை.
அது என்ன குடை மறைத்து குசுகுசு பேச்சு?
அந்தப் பூங்கா!
புலி
பசுத்தோல் போத்துவது
ஏமாற்ற;
புவி
பசுமைத்தோல் போத்தியுள்ளது
எழிலேற்ற!
மலர்க் கூட்டத்தின் நடுவே
கண்டிப்பாக
மனிதம் கூடும்!
படம் பிடித்தவர் -நெஞ்சில்
இடம் பிடிக்கிறார்!
அவை
கண்ண்னாடிகள் மட்டுமல்ல
கலர் ஆடிகள்!
படத்தில்
பிடித்து நிறுத்தி
பாதி அழகையே பதியலாம்...
மீதி அழகு
அதன்
கொஞ்சும்
'டிங் டாங்'கிலல்லவா உள்ளது?
மழை முகிழ்!
முகிழ்த் துளிகளை
முயங்கிய
வெயில் நழுவி
வீதியில் விழுமுன்
மடியேந்துகிறது
மயக்கும் காடு
கண்டிப்பாகக்
கருவுற்ற ஆகாயம்
ஈன்றெடுத்த
வானவில்லை காணவில்லை!
மணலில்
சிதறிக் கிடக்கின்றன
சிப்பிகள்;
முத்துகளோ
மாலைகளாக மகளிரிடம்
பெருக்கி அவற்றைக்
குப்பையாக்குமுன்
யாராவது
பொறுக்கியெடுத்தால் பொக்கிஷமாகும்
பெரியாறு பிரமாண்டம்
சிறியோரின் அரசியலால்
சிறுமைப்பட்டிருக்கிறது
பெண்ணின் மனத்தைவிட
அதிகமதிகம் ஆராயப்பட்டது
இதன்
அணையில் ஆழத்தைத்தான்
விடை யுண்டோ?
சடை வளர்த்தவள்
கடை விழிப் பார்வையால்
இடை வளைத்தவன்
குடை விரித்தான்
அடை மழைக்கால
அடையாள வானிலையால்
நடை தளர்ந்தே -புல்மேல்
கடை விரித்தமர்ந்தனரோ?
புகைப்படங்களை விட கவிதையும் பின்னுடங்களும் தூக்களாய் இருக்கு
சின்ன சின்னதாய் ஹைக்கூ:
குடை பிடித்தாலும்
அடம் பிடிக்குதே மனம்
மழையில் நனைய:
சின்ன சின்னதாய் ஹைக்கூ:
குடை பிடித்தாலும்
அடம் பிடிக்குதே மனம்
மழையில் நனைய:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
மலை மகளின்
முகத்துக்கு
முக்காடிட்டது
மூடுபனி:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
மலை மகளின்
முகத்துக்கு
முக்காடிட்டது
மூடுபனி:
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
இடை இறுக்கி
இடைவெளி குறைத்து
குடை பிடித்து
கடைவிரித்து
காத்திர்ப்பதேனோ? :
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
இடை இறுக்கி
இடைவெளி குறைத்து
குடை பிடித்து
கடைவிரித்து
காத்திர்ப்பதேனோ? :
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
அற்ப ஆயுசு
வாழட்டும் கொஞ்சம் நாள்
பூக்களை பறிக்காதீர்:
Post a Comment