Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்க முதலாளி !? தங்க முதலாளி !? 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 20, 2016 | , ,

முதலாளி என்ற வார்த்தையை கேட்கும் போதே ஒரு தொழிலாளியின் மனதில் தனி மரியாதை, பயம், பதஸ்ட்டம், படபடப்பு எல்லாம் ஏற்படும். காரணம் அரசு வேலைக்கு விண்ணப்பித்து அலையாய் அலைந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல்,ஏங்குபவர்களுக்கும், கல்வியறிவில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் நடுத்தர,ஏழைகளுக்கும் தனியார் நடத்தும் கம்பெனி பெரிய முதலாளிகளிலிருந்து சிறுதொழில் செய்து வரும் சிறிய முதலாளிமார்கள் வரை அத்தனை வகை முதலாளிகளும் அவரவர் தகுதிக்கான வேலை வாய்ப்பைக் கொடுத்து வருகின்றனர். அப்படிக் கொடுக்கும் வாய்ப்பைக்கொண்டுதான் பலரின் குடும்பங்கள் கொஞ்சம் நிம்மதியுடன் வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.


சில முதலாளிமார்கள் சிடுமூஞ்சிக்காரர்களாக இருப்பார்கள் . ஆனால் இரக்க குணமும்,உதவிசெய்வதில் தாராள மனமும் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள் ஐந்து நயாபைசாகூட அதிகமாக எதிர் பார்க்கமுடியாது ஆனால் சம்பளத்தை மட்டும் சரியாக கொடுத்து விடுவார்கள். இன்னும் சில முதலாளிமார்கள் பொய் சொல்வது, திருடுவது, கெட்டபழக்க வழக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக அந்தநிமிடமே வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள். சில முதலாளிமார்கள் கண்டிப்புடன் அறிவுரை சொல்லி எச்சரித்து வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.ஒரு சிலர் யாரிடம் என்ன கெட்டபழக்கம் இருந்தால் நமக்கென்ன நேரம்தவறாமல் வேலைக்கு வந்து தவறு இல்லாமல் வேலை செய்தால் சரி என்று சுயநலமாக சிந்திப்பவர்களும் உண்டு. இப்படி முதலாளிமார்களில் பல ரகமாக இருப்பார்கள்.

ஒவ்வொரு முதலாளிமார்களும் குணத்தால் வெவ்வேறான வகையில் மாறுபட்டு இருந்தாலும் நிலைபாட்டில் பல குடும்பங்கள் அந்த முதலாளிமார்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பது உண்மைதானே.! அப்படியானால் அந்த முதலாளிமார்களும் நன்றியுடன் போற்றப்பட வேண்டியவர்கள்தானே.!

வேலையும் கொடுத்து மாதாமாதம் தவறாமல் சம்பளமும் கொடுத்து நிரந்தரமாக பணிக்கு வைத்துக் கொள்வதால் அந்தமனிதர் பணியாளர்களின் கண்களுக்கு மதிக்கத்தக்க மனிதராகத் தெரிகிறார்கள். பெரும்பாலான முதலாளிமார்கள் பரம்பரை முதலாளி வாரிசாக வந்தவர்கள் அல்ல.. ஆரம்பகாலத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து கடினமாக உழைத்து பின்பு சுயதொழில் தொடங்கி கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து வந்து இன்று பெரிய முதலாளியாகி பெயரும், புகழுடனும் இருப்பவர்களும் உண்டு.

இப்படி அடிமட்டத்திலிருந்து வந்த நல்ல தொழில் அனுபவமிக்க முதலாளிமார்களிடம் முறையான நடவடிக்கைகள் விதிமுறைகள் பேணப்படும்.பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பக்குவம் தெரிந்திருக்கும்.பணியாளர்களை எப்படி நடத்துவது என்பதினையும், பல நெளிவுசுளிவுகளையும் நன்கு அறிந்து வைத்து இருப்பார்கள்.

நல்ல விசுவாசமான பணியாளராய் இருந்து முதலாளிமார்கள் கோபத்தில் ஏதாவதுபேசுவதையெல்லாம் பெரும்பொருட்டாக எடுக்காமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் முழுகவனம் செலுத்தி நேர்மையாக நடந்து கொண்டால் எவ்வளவு மோசமான நடவடிக்கை உள்ள முதலாளிமார்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிடலாம்.

அது போன்று முதலாளிமார்களும் தான் ஒரு முதலாளி என்ற தலைக்கனமில்லாமல் பணியாளர்களை அரவணைத்து நடந்து கொள்வாரேயானால் அந்தப் பணியாளர்களும் பொறுப்புடன் தனது பணியினைச் செய்வார்கள்.. மென்மேலும் தொழில் சிறக்க முன்னேற்றமடைய அது வழி வகுக்கும். தொழிலாளர்களைச் சந்தோசப்படுத்தும் முதலாளிமார்கள் தோற்றதாகத் தெரியவில்லை.

அதுபோல என்னதான் குறைகளுள்ள முதலாளிமார்களாய் இருந்தாலும் நடுத்தர மக்களையும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களையும், வாழவைத்துக் கொண்டு அவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து கொண்டிருப்பது இந்த தனியார் முதலாளிமார் களாகத்தான் இருக்கமுடியும்.

முன்கோபம், எடுத்தெறிந்து பேசுதல், கெட்ட செயல்பாடுகள், வேலைக்கு தாமதமாக வருவது ஆகிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கொண்டு முதலாளியின் குணமறிந்து ஒரு தொழிலாளி நடந்து கொண்டாரேயானால் அவர்களது வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படி நடந்து கொள்பவர்கள் நாளைய முதலாளியாக வருவதற்கு வழிவகுக்கும்.

இன்று முதலாளியாக இருக்கும் பலர் ஒருகாலத்தில் தொழிலாளியாய் இருந்து கடும் உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறி முதலாளிகளாய் ஆனவர்கள்தான். அவர்களுடைய பிந்தையகால அனுபவமும், விடாமுயற்ச்சியும், தன்னம்பிக்கையும் தான் முதலாளி ஸ்தானத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே வேலையில்லாதோருக்கும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் வறுமையில் உள்ளோர்க்கும் வேலை வாய்ப்பளித்து வயிற்றுப்பசியை போக்கும் முதலாளிமார்களிடம் நல்ல விசுவாசியான வேலைக்காரனாக இருந்து பல தொழில் அனுபவம் பெற்று உயர்ந்து தாமும் ஒரு வருங்கால தங்க முதலாளியாக தம்மை வளர்த்துக் கொள்ள முயற்ச்சிப்போம்..!!!

அதிரை மெய்சா

7 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//தொழிலாளிகளை சந்தோசப்படுத்தும் முதலாளிகள் தோற்றதாக தெரியவில்லை//உண்மைதான்.ஆனால் பலமுதலாளிகள் அவர்களுக்கு பின்வரும் சந்ததிகளுக்கு அந்தவெற்றிபார்முலாவை கற்றுக்கொடுக்காமல் போனதால் சந்ததியர்கள் தந்தையின் சாதனைக்கு சமாதி கட்டினார்கள்.

sabeer.abushahruk said...

ஞாயமானப் பேச்சு, மெய்சா!

ZAKIR HUSSAIN said...

நண்பர் மெய்சா.....

நீங்கள் நல்ல வேலை மலேசியாவில் உள்ள சில முதலாளிகளிடம் வேலை பார்க்கவில்லை. வாக்குறுதி கொடுத்து விட்டு குருதியை உறிந்து குடிக்கும் அளவுக்கு வேலை வாங்குவதில் வள்ளவர்கள்.

வெளியில் போய் வேலை பார்க்கபோனால் 'சரி நம்மிடம் வேலை பார்த்தவன் நல்லா இருக்கட்டும்" என்று நினைக்காமல் 'கஷ்டப்படுகிறானா?" என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படும் நரி புத்தியெல்லாம் இவர்களிடம் உண்டு.

போனஸ் தருகிரேன்/ லாபத்தில் பங்கு என்று எல்லாம் சொல்லிவிட்டு கணக்கு பார்க்கும் சமயத்தில் "இவனிடம் எப்படி குற்றம் கண்டுபிடித்து " சொன்ன லாபத்தையும் , போனஸையும் ஆட்டையெ போடலாம் என்பதிலும் மிகக்காரியக்காரர்கள்.


இவர்களிடம் வேலை பார்த்தால் எங்கள் முதலாளி தகர முதலாளி என்று கூட எழுத வராது...அதை விட கேவலமானவர்களும் இங்கு உண்டு.


ZAKIR HUSSAIN said...

முட்டாள்தனமான பிடிவாத நோய் பிடித்த முதலாளிகளிடம் வேலை பார்த்த அனுபவத்தை சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களின் தந்தை மர்ஹூம் அப்துல் சமது மாமா அவர்களும் , இப்போது நமது அதிரை நிருபரில் சமயங்களில் எழுதும் எஸ்.முஹம்மது பாரூக் மாமா அவர்களும் என்னிடம் சொன்ன விசயங்களை புத்தகம் போடும் அளவுக்கு கொடுமையை அனுபவித்ததாக சொல்லி இருக்கிறார்கள்.

குடும்ப சூழ்நிலையும் , பொறுப்பு உணர்வும் அவர்களை எங்கும் போக விடாமல் தடுத்திருக்கிறது.

அதிரை.மெய்சா said...

இக்கட்டுரையின் நோக்கம் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் உள்ள பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது.

குறைநிறை இரண்டுபக்கமும் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் நமக்கு வேலைவாய்ப்பு அளித்து கஷ்டநிலையை போக்குவது முதலாளிமார்களே. அவர்களை மதித்தல் வேண்டும் .


கருத்திட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

மழைக் காலத்திலும்
குடை பிடித்து நீர் தெளித்தான்
செடிகளுக்கு,
கோபக்கார முதலாளியை
நினைத்து:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு