ஒவ்வொரு தேர்தலிலும்
வெவ்வேறு கூட்டணிகள்
ஒவ்வாதோர் ஒன்றிணைந்து
உருவாக்கும் நாடகங்கள்
திரும்பும் திசைகளெங்கும்
தேர்தல் பிரச்சார சப்தம்
திகட்டுமளவு அனுதினமும்
வாக்குறுதிகள் நித்தம்
களப்பணியில் மூழ்கிடும்
தொண்டர்கள் கூட்டம்
காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
அத் தொண்டனின் குடும்பம்
ஆணவங்கள் கொண்டவரும்
அடங்கி வந்து பிரச்சாரம் செய்வர்
ஆசைகளை உள்ளடக்கி
ஆட்சியமைக்க காத்திருப்பர்
மானங்கள் போனபோதும்
மாற்றுக்கட்சி நகைத்தபோதும்
தானங்கள் பலவழங்கி
தன்னிலையை உயர்த்திக்கொள்வர்
மக்களாட்சி மலருமென
மனமுறுக வாக்குரைப்பர்
வந்தமர்ந்த மறுகணமே
சிந்தையைவிட்டு மறந்துபோவர்
எக்கட்சி எதிர்த்து நின்றும்
ஏகமாய் நம்பியிருப்பார்
இறுதியில் முடிவுகேட்டு
ஏமாறுவர் பாமர மக்கள்
இனியதனை வீழ்த்திடவே
இதிகாசம் படைத்திடவே
நலிந்தோரின் துயர்துடைக்க
நாட்டில் ஒழுங்கை சீர்படுத்த
நல்லாட்சி அமைந்துடவே
நாட்டுமக்கள் ஒன்றிணைந்து
தேர்தலெனும் சந்தையிலே
தேர்ந்து விலைபோய்விடாமல்
சிந்தையிலே உதிக்கும் நல்ல
சிறந்தோர்க்கு வாக்களிப்போம்
அதிரை மெய்சா
11 Responses So Far:
தேர்தல்/நாட்டையே கொள்ளையிடமக்களிடம் அனுமதிகேட்டு நடக்கும் திருவிழா!
போயஸ் தோட்டத்தில் 7 தனித்தனிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சிறப்புக் குறிப்புகள் -:
(1) இன்று , இதர கூட்டணி விரும்பும் கட்சிகளுடன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களால் இன்று அம்மையாரை சந்திக்க இயலவில்லை.
(2) இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர் அவர்களுக்கு சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது
(3) இதே போல திமுகவையும் சில கட்சிகள் சந்தித்து இருக்கின்றன. இவற்றுள் ஜனநாயக மனிதநேய மக்கள் கட்சியும் ஒன்று.
சிறைக்கைதிகளின் குடும்பங்களின் ஓலங்களுக்கிடையில் முஸ்லிம்களின் ஓட்டுகளுக்கான ஏலம் தொடங்கி இருக்கிறது.
தலைவர்களுக்கு ஏதாவது எழுது மெய்சா.
மக்களாகிய நமக்கு யாருக்கு ஓட்டுப்போட்றதுன்னே தெர்ல.
//களப்பணியில் மூழ்கிடும்
தொண்டர்கள் கூட்டம்
காய்ந்த வயிற்ருடன் கிடக்கும்
அத் தொண்டனின் குடும்பம்//
நம் பாமர மக்களின் அவலம்!
தேர்தலுக்கு நாள் நெறுங்கிக்கொண்டிருக்கிறது. இத்தேர்தலாவது மக்களுக்கு திருப்புமுனையாக இருக்கட்டும்.
கருத்திட்டு ஊக்கப்படுத்திய பாரூக் காக்கா இப்றாகீம் அன்சாரி காக்கா நண்பன் சபீர் அனைவர்களும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
சபீரு நண்பா எனக்கு முன்னய போல நேரமில்லை. ஆதலால் தலைவர்களை பற்றி ஒருகவிதை நீ எழுது.
சின்னச் சின்னதாய்
ஹைக்கூ:
விரலில் மை
தலையில் மிளகாய்
முடிந்தது தேர்தல்:
சின்னச் சின்னதாய்
ஹைக்கூ:
விரலில் மை
தலையில் மிளகாய்
முடிந்தது தேர்தல்:
கால்கள் இடம் மாறி
காலை வாரிடுமோ?
கலங்கியது
(தலைவரின்)பதவி
நாற்காலி:
மக்களின் உதவி
மந்திரியின் பதவி
மக்களுக்கே அவதி:
மக்களின் உதவி
மந்திரியின் பதவி
மக்களுக்கே அவதி:
Post a Comment