அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
அல்லாஹ்விடம் ஆதரவு கொள்ளல்:
தமக்கு எதிராக
வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து
விடாதீர்கள்! பாவங்கள்
அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன். நிகரற்ற
அன்புடையோன் என்று (அல்லாஹ்
கூறுவதைத்) தெரிவிப்பீராக!
(அல்குர்ஆன்: 39:53)
(நம்மை) மறுப்போரைத் தவிர மற்றவர்களை நாம் தண்டிப்போமா?
(அல்குர்ஆன் :34:17)
எனது அருள், எல்லாப்
பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (அல்குர்ஆன்: 7:156)
''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற
அரபி வந்து,
''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கம் - நரகத்தை அவசியமாக்கிடும் இரண்டு
விஷயங்கள் என்ன?
என்று கேட்டார். ''ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்து விட்டால், அவர் சொர்க்கத்தில்
நுழைவார். அவனுக்கு எதையேனும் இணை வைத்தவனாக இறந்து விட்டால், அவன் நரகில்
நுழைவான்;'' என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 414)
அல்லாஹ்
படைப்புகளை படைத்தபோது, அர்ஷுக்கு மேலே தன்னிடம் உள்ள பதிவேட்டில், ''என்
கருணை,
என் கோபத்தை வென்று விட்டது'' என்று எழுதினான் என்று
நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 419)
''அல்லாஹ், கருணையை
100 பகுதிகளாக
ஆக்கினான். தன்னிடம் 99ஐ வைத்துக் கொண்டான். ஒரு பகுதியை மட்டும் பூமியில்
இறக்கினான். இந்த ஒரு பகுதி (கருணை) மூலம்தான், படைப்பினங்கள்
கருணை காட்டிக் கொள்கின்றன. உதாரணமாக, ஒரு மிருகம் தன் கால் குளம்பு தன் குட்டியின் மீது
படுவதை பயந்ததாக உயர்த்திக் கொள்கிறது'' என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:420)
''நிச்சயமாக
இறை மறுப்பாளர் ஒரு நன்மையைச் செய்தால், அதன் மூலம் இவ்வுலகில் அவனுக்கு உணவாக (கூலி) கொடுக்கப்படும்.
இறை நம்பிக்கையாளன் நன்மை செய்தால், நிச்சயமாக
அல்லாஹ் அவனுக்காக அவனது நன்மைகளை மறுமைக்காக சேகரிக்கிறான். மேலும் இவ்வுலகிலேயே அவனது
வழிபாட்டிற்காக உணவை அவனுக்கு வழங்குகிறான்''
என்று கூறினார்கள். (முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு
உள்ளது):
''நிச்சயமாக அல்லாஹ், இறை நம்பிக்கையாளனுக்கு
ஒரு நன்மைக்காக அநீதம் செய்ய மாட்டான். அதற்காக இம்மையில் கூலி கொடுக்கப்படும். மேலும்
அதற்காக மறுமையிலும் கூலி கொடுக்கப்படுவான். இறை மறுப்பாளன் அல்லாஹ்வுக்குரிய செயல்களைச்
செய்தால் நன்மைகளை இவ்வுலகிலேயே கொடுக்கப்படுவான். மறுமையை அவன் அடைகிறபோது, அவனுக்கு
கூலிக் கொடுக்கப்படத்தக்க நன்மை எதுவும் இருக்காது.'' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 428)
''ஜந்து நேரத் தொழுகைகளின் உதாரணம், உங்கள்
ஒருவரின் வாசலில் நிரம்பி வழிந்தோடும் ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்து தடைவ குளிப்பது போலாகும்,'' என நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 429)
''என் அடியான் என்னை எண்ணுமிடத்தில் நான் உள்ளேன். என்னை நினைவு கூரும் சமயத்தில் அவனுடன்
நான் உள்ளேன்''
என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ''அல்லாஹ்வின்
மீது சத்தியமாக,
வனாந்திரத்தில் வழி தவறிய ஒட்டகத்தை உங்களில் ஒருவர் பெற்றுக்
கொள்ளும் போது அடையும் மகிழ்ச்சியை விட, தன் அடியான்
பாவமன்னிப்பு கோரும் போது அல்லாஹ்வுக்கு அதிக
மகிழ்ச்சி ஏற்படுகிறது'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மேலும் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்
கூறுவதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
என்னிடம் அவன் ஒரு சாண் நெருங்கினால், அவனிடம்
நான் ஒரு முழம் நெருங்குவேன். என்னிடம் ஒரு
முழம் நெருங்கினால், அவனிடம் நான் இரண்டு முழம் நெருங்குவேன். என்பக்கம்
அவர் நடந்து வந்தால், நான் அவர் பக்கம் விரைந்தோடி வருவேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 440)
''இறந்தவரின்
உடல் (பெட்டியில்) வைக்கப்பட்டு, அதை மக்கள் தங்கள் தோள் பட்டைகளின் மீது சுமந்து
சென்றால், அப்போது
இறந்தவன் நல்லவனாக இருந்தால், ''என்னை சீக்கிரம் கொண்டு செல்லுங்கள். என்னை சீக்கிரம்
கொண்டு செல்லுங்கள்'' எனக் கூறுவான்.
நல்லவனாக இல்லை என்றால், ''எனக்கு வந்த கேடே, என்னை எங்கே
கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்பான். மனிதனைத் தவிர மற்ற அனைத்தும் இந்த
சப்தத்தைக் கேட்பார்கள். அதை மனிதன் கேட்டால், அவன் (மூர்ச்சையாகி)
கீழே அடித்து விழுந்து விடுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 444)
''சொர்க்கம் என்பது, உங்களில்
ஒருவருக்கு அவரது செருப்பின் வாரை விட மிக நெருக்கமாக இருக்கும். நரகமும் இதுபோல் தான்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள்
(புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 445)
''அல்லாஹ்வின்
அச்சம் காரணமாக அழுகின்ற மனிதர், கறந்தபால் மடுவுக்குள் மீண்டும் நுழைந்தாலும் நரகில்
நுழைய மாட்டார். அல்லாஹ்வின் வழியில் படிந்த புழுதியும், நரகப் புகையும், இணைந்திடாது'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 448)
''ஏழுபேர், இவர்களுக்கு தன் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத அந்த (மறுமை
நாளில்) தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் தருவான். (1) நீதமான
அரசன் (2) அல்லாஹ்வை
வணங்குவதில் ஈடுபடும் வாலிபர் (3) பள்ளிவாசல்களில் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மனிதர்
(4) அல்லாஹ்வுக்காக
பிரியம் கொண்டு,
அவனுக்காகவே ஒன்று சேர்ந்து, அவனுக்காகவே
பிரிந்தும் நிற்கின்ற இருவர் (5) அழகும், குடும்பப்
பெருமையும் நிறைந்தப் பெண் விபச்சாரத்திற்கு
அழைத்தும், ''நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்'' என்று கூறும்
நபர் (6) தன் வலது
கை செய்யும் செலவை இடது கைக்குத் தெரியாமல் அதை மறைத்துக் கொண்டு தர்மம் செய்கின்ற
ஒருவர் (7) கலப்பற்ற
நிலையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, இதனால் கண்கள் கண்ணீரைச்சிந்தும் ஒருவர்'' என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 449)
இர்பாழ் இப்னு ஸாரியா (ரலி)
அறிவிக்கின்றார்கள்:
''உள்ளங்கள் நடுங்கி கண்கள் கண்ணீரைச்
சிந்தும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்தார்கள்.''(அபூதாவூது, திர்மிதி)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 456)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
0 Responses So Far:
Post a Comment