Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்த ஏழு நாட்கள்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | March 24, 2016 | , , ,


பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே.... எங்கள் ஆலிம்ஷா மாமா அவர்கள் என்னுடைய அப்பாவிடமிருந்து நேரடியாகவே... பொதுத் தேர்வு முடிந்ததும் விடுமுறையில் நாற்பது நாட்கள் தப்லீக் ஜமாத்தில் அனுப்பி வைக்க பெயர் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்று பின்னர்தான் தெரிந்தது.

பரீட்சை முடிந்த இரண்டாம் நாள் 'ஜமால் ஹஜரத்' வீடு தேடி வந்தார்கள்.... 

`என்னப்பா ரெடியா இருக்கியா இன்னைக்கு சாய்ந்திரம் மர்கஸுக்கு வந்துடு... அங்கேயிருந்து தேரழந்தூர் இஸ்திமாவுக்கு போயிட்டு அங்கேதான் ரூட் போடுவாங்க எங்கே நம்ம 'ஜமாத் போவது`ன்னார்...

`நானும் சரி ஹஜரத்`ன்னுட்டு விளையாட போயிட்டேன்.... 

எங்களூர் காலேஜ் கிரவுண்ட்... அங்கேயும் ஒரு கும்பலாக வந்தார்கள்...

தஸ்கீல்... ஆரம்பமானது

நீ.... நாற்பது நாள் பேர் கொடுத்திருக்கேல்ல?`

`ம்ம்ம்` 

அட நீயும் இருக்கியா மூன்று நாள் ஜமாத்துக்கு உங்க வாப்பா சொல்லியிருந்தாங்களே....`

`ம்ம்ம்` 

`என்னப்ப நீ மவுனமா இருக்கே?`

`ம்ம்ம்`தான்...

அப்படியே எல்லோரையும் வலுக்கட்டாயமாக வாங்க நேரமாச்சு மஃக்ரிபுக்கு சப்ஜாரிக்கு போயிடலாம்...

போகும் வழையில் செடியன் குளத்தில் கால் கைகளை கழுவிக் கொண்டு அவர்கள் பின்னாலேயே போனோம்...

சரியான பசி... இஷா முடிந்து வீட்டுக்கு போக அனுமதி கிடைக்கவே இல்லை..... ரொம்ப லேட்டாதான் வீட்டுக் போனா அவங்க தேடுவாங்கன்னு பார்த்தா...

`நாளைக்கு சுப்ஹு தொழுதுட்டு அப்படியே கெளம்புறியா வாப்பா`ன்னு உம்மாவோட ஏக்கமான கேள்வி....

`என்னது நாளைக்கா ?`

`அதைத்தானே அப்போ இப்போ இவ்வ்ளோ நேரம் சொல்லிட்டு போனாங்க`

*-*-*-*

தேரழந்தூர் இஸ்திமா முடிந்தது.... அன்று மாலையே அசர் தொழுததும்... ஈரோட்டு, சேலம், ஏற்காடு, மேட்டூர் இப்படி ரூட்டு போட்டு கொடுத்து பஸ் ஏற வைத்தார்கள்...

எங்களோடு 17 பேர் இருந்தோம் அமீர் ஷாப் காயல்பட்டிணத்துக்காரர்... கும்பகோணத்திலிருந்து ரியாஸ் என்றொரு நல்ல நண்பன் அதில் அறிமுகமானான், அப்புறம் சென்னையிலிருந்து எங்களூர் `நெய்னா கம்பெனி சமைல் காரர்` ஒருத்தர் அவரும் ஜமாத்தில் கடைசிவரை வந்தார்...

கிளம்பிய 17 பேரில் 8 பேர் மட்டும்தான் நாற்பது நாட்கள் தொடர்ந்து மற்றவர்கள் 1 வாரம் மூன்று நாள் அதன் பின்னர் மற்ற ஊர்களில் சேர்ந்து கொண்டவர்கள் இப்படி அப்படி என்று எற்ற இறக்கமாக எண்ணிக்கையில் ஜமாத் பயணம் இருந்தது...

அதைச் சொல்ல தனி பதிவு ரெடி பன்னனும் இன்னொரு சந்தர்ப்பத்தில்.

எல்லாம் முடிந்து கடைசியில் திண்டுகல்லில் எங்கள் தப்லீக் ஜமாத் பயணம் நிறைவுக்கு வந்தது..

*-*-*-*-*-*

வியாழக்கிழமை மாலை ஊரூக்குள் நுழைந்ததும்... நேராகா வீட்டுக்கு போகலாமென்றால்...

ஹ்ஹ்ஹா அதெல்லாம் இல்லே இன்னைக்கு மர்கஸுக்கு போயிட்டு சம்ஜாரி முடித்துட்டுதான் வீட்டுக்கு போவனும்னு அடம்பிடிச்சார் கடைசி நேர அமீர்ஷாப் !

அதுவும் கடந்தது....’

வெள்ளிக்கிழமை சுப்ஹு தொழுததும் விட்டாப் போதும்னு வீட்டுக்கு போனதும் செம்ம தூக்கம்...

`தம்பி எழும்புங்கமா.... ஜும்மாவுக்கு நேரமாவுது குளிச்சுட்டு சீக்கிரம் கெளம்புங்க...` உம்மா எழுப்பியது...

`ஆ... நேரமாச்சா... என்னமா நீங்க சீக்கிரமே எழுப்பிவிடக் கூடாதா... இவ்வ்வ்ளோ நாள் பழகுனதெல்லாம் அர்த்தமில்லாம போயிடுமேம்ம்மா`

`சரி வாப்ப்பா இன்னும் பாங்கு சொல்லலை குளிச்சுட்டு போக நேரம் சரியாத்தானே இருக்கும்`

`அப்படி இல்லேம்மா மொத சஃப்புல போய் உட்காரனும்மா`

அவர்களுக்கு இந்த மாற்றம் அதிர்ச்சியாக இல்லாவிடினும் வித்தியாசமாக இருப்பதை உணராமலா இருப்பார்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள்...

எல்லா தொழுகையும் ஜமாத்தோடு தொழுதாச்சு....

இரவு படுக்கும்போது சொல்லிக் கொடுத்த எல்லா துவாவும் தஸ்பீஹும் ஓதிக்கிட்டாச்சு... இந்த கூத்தெல்லாம் உம்மாவும் கவனிக்காமல் இல்லை...

ராத்தம்மா வீட்டுல இருந்த அலாரம், என்னோட அலாரம் எல்லாத்தையும் பாங்கு சொல்ல ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே வச்சு ரைட் லெஃப்ட்டுன்னு தல மாட்டில வாச்சுகிடாச்சு....

தஹஜ்ஜதுக்கு எந்திரிக்கனுமே..... ஜமாத்துலேருந்து வந்த புள்ளைல நான்...

இந்த அலப்பரை... ஒரு நாள் இரண்டு நாள் இப்படியாக ஏழு நாட்கள் ஓடிவிட்டது...

`டேய் மாப்புள சுப்ஹு தொழுததும் மெயின்ரோட்டுக்கு போறோம் பேப்பர் வாங்கனும்டா....`

`ஆமால்லே, ரிஸல்ட் வருதுடா`

தெளிவா இருந்த வானம் இருட்டிகிட்டு வந்து கண்ணெல்லாம் இருட்ட ஆரம்பிச்சுடுச்சு, ஒரே பக் பக் பக்க்தான்.... (இந்த கதைதான் முன்னரே படிச்சாச்சே).

*-*-*-*-*-*

`தம்பி மணி ஆறு மணியாவுதுமா எழுந்திருச்சு தொழுவ போம்மா...`

`இருங்கம்மா சரியான அசதியா இருக்கு...`

`என்ன வாப்பா போனவரமெல்லாம் தஹஜ்ஜத் தொழுவுனே இப்பே இப்படி தூங்குறியேம்மா, சீக்கிரம் எழுந்திரும்மா`

`உம்மா இன்னும் கொஞ்ச நேரம்தாம்மா`

இவ்வ்வ்ளோதாங்க 40 நாள் தப்லீக் ஜமாத் எஃபெக்ட் அப்போதைக்கு....

அபுஇப்ராஹிம்

2 Responses So Far:

அப்துல்மாலிக் said...

இது எல்லா விசயங்களுக்கும் பொறுந்தும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு