ஆறு
மலையருவி மழைமகளைச் சேர்த்துக் கொண்டு
மண்ணுலகில் பசுமையினை விளைப்ப தற்காய்
நிலைமாறி ஆறுகளாய்ப் பாய்ந்து வந்து
நீர்நிலையாய் அணைகளுமாய்த் தேங்கி நின்று
விலைபொருளாய்த் தானியங்கள் கிழங்கு காய்கள்
வெகுமதியாய் அன்புடனே அள்ளித் தந்து
நிலையான மறுமைக்கு மீளு தல்போல்
நீல்கடலைச் சென்றடைவாள் ஆற்று மங்கை.
அதிரை அஹ்மத்
4 Responses So Far:
அஸ்ஸலாமுபலைக்கும் வரஹ்...
ஆஹா,
சுவையான கவிதை!
மறுமைக்கு மீள்வதாய் முடித்திருப்பது விஞ்ஞான பூர்வமானது.
மீண்டும் கடல் நீர் மேகமாவதாகத் தொடர்ந்தால் மறுபிறவியென மார்க்கத்திற்கு முரணான வாதம் எழலாம் என தவிர்த்திருப்பது காக்காவுக்கே உரித்தான சாதுர்யம்.
மாஷா அல்லாஹ்!
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.
கடல்:
ஓடும்போதும் கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த தண்ணீர்
ஒரே இடத்தில்
ஓய்ந்து
படுத்துக் கிடந்ததால்
உப்புக் கூடி
உடல் பெருத்துக்
கடலானது.
எழுப்ப வேண்டாம்
எழுந்தால்
ஆழி பேரலையாய்
அழித்து விடும் உலகை!
ஆழ்கடல் முதல்
அலை ஆடையுடுத்தி
ஆடி அசைந்து வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கால்களில் விழும்
கலிமா சொல்லாதப் பெண்டிரைப்போல்!
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
எத்தனைத் தடைகள்
இத்தனை வளைவுகள்
அத்தனையும் தாண்டியது
ஆறு ! :
சின்னச் சின்னதாய் ஹைக்கூ:
எத்தனைத் தடைகள்
இத்தனை வளைவுகள்
அத்தனையும் தாண்டியது
ஆறு ! :
Post a Comment