Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம்... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | April 16, 2016 | , , , ,

ஆறு


மலையருவி  மழைமகளைச்  சேர்த்துக்  கொண்டு

மண்ணுலகில்  பசுமையினை  விளைப்ப  தற்காய்

நிலைமாறி  ஆறுகளாய்ப்  பாய்ந்து  வந்து 

நீர்நிலையாய்  அணைகளுமாய்த்  தேங்கி  நின்று

விலைபொருளாய்த்  தானியங்கள்  கிழங்கு  காய்கள் 

வெகுமதியாய்  அன்புடனே  அள்ளித்  தந்து        

நிலையான  மறுமைக்கு  மீளு  தல்போல் 

நீல்கடலைச்  சென்றடைவாள்  ஆற்று  மங்கை.

அதிரை அஹ்மத்

4 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமுபலைக்கும் வரஹ்...

ஆஹா,

சுவையான கவிதை!

மறுமைக்கு மீள்வதாய் முடித்திருப்பது விஞ்ஞான பூர்வமானது.

மீண்டும் கடல் நீர் மேகமாவதாகத் தொடர்ந்தால் மறுபிறவியென மார்க்கத்திற்கு முரணான வாதம் எழலாம் என தவிர்த்திருப்பது காக்காவுக்கே உரித்தான சாதுர்யம்.

மாஷா அல்லாஹ்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

கடல்:

ஓடும்போதும் கொட்டும்போதும்
ஒல்லியாக இருந்த தண்ணீர்
ஒரே இடத்தில்
ஓய்ந்து
படுத்துக் கிடந்ததால்
உப்புக் கூடி
உடல் பெருத்துக்
கடலானது.

எழுப்ப வேண்டாம்
எழுந்தால்
ஆழி பேரலையாய்
அழித்து விடும் உலகை!

ஆழ்கடல் முதல்
அலை ஆடையுடுத்தி
ஆடி அசைந்து வரும் கடல்
கரை வந்ததும்
நுரைப் பூச்சூடி
கால்களில் விழும்
கலிமா சொல்லாதப் பெண்டிரைப்போல்!

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

எத்தனைத் தடைகள்
இத்தனை வளைவுகள்
அத்தனையும் தாண்டியது
ஆறு ! :

Unknown said...

சின்னச் சின்னதாய் ஹைக்கூ:

எத்தனைத் தடைகள்
இத்தனை வளைவுகள்
அத்தனையும் தாண்டியது
ஆறு ! :

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு