இயற்கை இன்பம்...

கடல்உலகெல்லாம்  நிறைந்திருக்கும்  நினைவுத்  தோற்றம்!

ஒன்றுக்கு  மூன்றாக  இருக்கும்  ஏற்றம்!

இலகில்லாப்  பேரலைகள்  வீசிப்  பாய்ந்தே 

இருக்கின்ற  அனைத்தையுமே  அடங்கச்  செய்து 

கலகத்தில்  பிறக்கின்ற  நீதி  போல   

கடலென்னும்  பெயர்தாங்கி  மக்க  ளெல்லாம்

செலவுக்கும்  பிழைப்புக்கும்  உதவு  கின்ற

செல்வங்கள்  தந்துதவும்  கொடையின்  வள்ளல்!   


அதிரை அஹ்மத்

2 கருத்துகள்

Unknown சொன்னது…

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஆர்ப்பரிக்கும் ஆராவாரம்
அள்ளித்தரும் கருணை
கடல்:

Unknown சொன்னது…

சின்னச்சின்னதாய் ஹைக்கூ:

ஆர்ப்பரிக்கும் ஆராவாரம்
அள்ளித்தரும் கருணை
கடல்: