இயற்கை இன்பம் –13

மேகம் 


நெடுவானில்  விளையாடும்  மேகக்  கூட்டம்
                            நேருக்கு  நேராக  மோதிக்  கொண்டால்
கடிதான  ஒலியோடு  கண்கள்  கூசக்
                            ககனத்தை  ஒளியாக்கி  அச்சம்  ஊட்டும்
அடிவானுக்  கருகினிலே  துகள்கள்  வந்தால்
                            அருள்மழையால்  புவியதனைப்  பசுமை  யாக்கும்
சுடுநாளின்  அனலெல்லாம்  தணிந்தே  போகும்
                            சோலைகளும்  பசுமையினைப்  பெற்றெ  டுக்கும்.

அதிரை அஹ்மத் 

1 கருத்து

Unknown சொன்னது…

கவிதைக்குப் பொருத்தமான motion picture அருமை. மிக்க நன்றி.