Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045 8

அதிரைநிருபர் பதிப்பகம் | July 01, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

ஒப்பந்தத்தை , வாக்குறுதியை நிறைவேற்றுதல்:

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன்: 17:34)

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! (அல்குர்ஆன்: 5:1)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன்: 61:2)

நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது. (அல்குர்ஆன்: 61:2,3)

''நயவஞ்சகனின் அடையாளம், மூன்றாகும் :
1) பேசினால் பொய் பேசுவான், 2) வாக்குறுதி தந்தால் மாறு செய்வான், 3) நம்பினால் மோசடி செய்வான், என்று நபி (ஸல்) கூறினார்கள்.

''அவன் நோன்பு வைத்தாலும்,தொழுதாலும், தன்னை முஸ்லிம் என எண்ணினாலும் சரியே...'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 689)
                                  
'நான்கு குணம் ஒருவனிடம் இருந்தால், அவன் உண்மையான நயவஞ்சகன் ஆவான். அந்த குணங்களில் ஒன்று ஒருவனிடம் இருந்தால், அதை அவன் விடும்வரை நயவஞ்சகத்தின் குணம் அவனிடம் ஏற்பட்டு விடும். 1) அவனை நம்பினால் அவன் மோசடி செய்வான் 2) பேசினால் பொய் பேசுவான் 3) ஒப்பந்தம் செய்தால் மீறுவான் 4) தர்க்கம் செய்தால் வரம்பு மீறுவான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 690)

'அப்துல்லாஹ்வே! இரவில் சில காலம் தொழுதுவிட்டு, (பிறகு) இரவில் நின்று வணங்குவதை விட்டு விடும் ஒருவரைப் போல் நீர் ஆகிவிட வேண்டாம்'' என்று நபி  (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 692)

பிறரை சந்திக்கும்பொழுது முகமலர்ச்சியுடன் சந்திப்பதும் அழகிய முறையில் பேசுவதும்:

நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக! (அல்குர்ஆன்: 15:88)

(நபியே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம்  உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 3:159)

'ஒரு பேரீத்தம் பழத்துண்டை (தர்மம் செய்வது) மூலமேனும் நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். ஒருவரிடம் அது இல்லாவிட்டால், நல்ல வார்த்தைகள் பேசுவது மூலமேனும் (பயந்து கொள்ளட்டும்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (புகாரி,முஸ்லிம்)  (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 693)

'நல்ல வார்த்தை பேசுவது, தர்மம் ஆகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 694)

'நல்லவற்றில் எதையும் நீங்கள் மதிப்புக் குறைவாக கருதி விட வேண்டாம். உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதாயினும் சரியே'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 695)

''நபி(ஸல்)அவர்கள் எதையேனும் பேசினால், அதை விளங்கப்படும் வரை மூன்று முறை அதை திரும்பத் திரும்பக் கூறுவார்கள். ஒரு கூட்டத்தாரிடம் அவர்கள் வந்தால், மூன்று தடைவை அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.''  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 696)

'நபி(ஸல்) அவர்களின் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரும் அதை விளங்கிடும் வகையில் தெளிவான பேச்சாக இருக்கும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 697)

'கடவாய்ப் பற்கள் அனைத்தும் தெரியும் அளவுக்கு (வெடி சிரிப்பு) சிரித்தவர்களாக நபி(ஸல்) அவர்களை நான் பார்த்ததில்லை. அவர்கள் புன் சிரிப்பாக மட்டுமே சிரிப்பார்கள்.''  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 703)
                                     
'தொழுகைக்கு ''இகாமத்'' கூறப்பட்டால், நீங்கள் விரைந்து ஓடி வராதீர்கள். நீங்கள் நடந்தவர்களாக மெதுவாகவே வாருங்கள். அமைதியை நீங்கள் கடைபிடியுங்கள். கிடைத்ததை தொழுங்கள். உங்களுக்குத் தவறியதை நீங்கள் (தொழுது) முழுமைப்படுத்துங்கள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். 

(''உங்களில் தொழுகையை நாடி வந்தவர், தொழுகையில் இருந்தவர் போலாவார்'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூடுதலாக உள்ளது). (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 704)

'இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரபாநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், தனக்குப் பின்னே கடுமையாக எச்சரிக்கும் குரலையும், (வேகமாகச் செல்வதற்கு ஒட்டகையை) அடிப்பதையும், (இதன் மூலம்) ஒட்டகையின் சப்தத்தையும் கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தன் தோல் சாட்டையால் அவர்களுக்கு சமிக்ஞை செய்து விட்டு, மனிதர்களே! அமைதியைக் கடை பிடியுங்கள். நிச்சயமாக நன்மை, அவசரப்படுவதால் இல்லை''  என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 705)

விருந்தினரை கண்ணியப்படுத்துதல்:

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும்! அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் உறவினரோடு சேர்ந்து வாழட்டும்! அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், நல்லதைக் கூறட்டும்! அல்லது மவுனமாக இருக்கட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 706)

'அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டுள்ளவர், தன் விருந்தாளிக்கு தன் அன்பளிப்பு மூலம் கண்ணியம் அளிக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அவரின் அன்பளிப்பு என்றால் என்ன?'' என்று  நபித்தோழர்கள் கேட்டனர். ''ஓர் இரவு, ஒரு பகல் தான் அது. (ஒரு நாள் நல்ல உணவு வழங்குவதுதான் அன்பளிப்பு) விருந்து என்பது மூன்று நாட்களாகும். அதன் பின்னர் என்பது, அவருக்கு தர்மம் ஆகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு உள்ளது:

''தன் சகோதரனிடம் அவரை பாவியாக்கும் அளவுக்கு தங்குவது ஒரு முஸ்லிமுக்குக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அவரைப் பாவியாக்குவது என்றால் என்ன?'' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். ''அவரிடம் எதுவும் இல்லாத நிலையில் அவரிடம் தங்குவது. இதனால் அவர் (விருந்து கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு) பாவியாக ஆவது'' என்று நபி (ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் என்ற குவைலித் இப்னு அம்ருல் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 707)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

வாங்க ரொம்ப நாளாச்சு

மீண்டும் மறை உணர்ந்து உள்ளம் அமைதியுற தொடர் தருவதற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

sabeer.abushahruk said...

எம் ஹெஜ் ஜேயின் கருத்தை மீள்பதிகிறேன், மரியாதையான "வாங்க"வை மட்டும் 'வா' என்று மாற்றி.

Unknown said...

ஒவ்வொரு மனிதனும் தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்தை ஏன் இடை நிறுத்தம் செய்தீர்கள் ?

தொடர்ந்து இம்மருந்தை தரவும்.

அபு ஆசிப்.

ZAKIR HUSSAIN said...

எல்லாமே முக்கியம்வாய்ந்த ஹதீஸ்கள். வெகு நாட்களுக்கு பிறகு அலாவுதீன்...இனிமேலும் அதிகம் எழுத வேண்டும் என்பது எங்கள் ஆசை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்வரவு இனி உங்களின் சொல் வரவும்.... வாரம் தோறும் பரவட்டும் இன்ஷா அல்லாஹ் !

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் அலாவுதீன் , சில கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் பதிவைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடையும் அனைத்து சகோதரர்களுடன் நானும் இணைந்து கொண்டு தங்களை வரவேற்கிறேன்.

விருந்தை நிறுத்தினாலும் மருந்தை நிறுத்திவிடாதீர்கள் என வேண்டுகிறேன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட அன்புச் சகோதரர்கள் :
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)
sabeer.abushahruk
Abdul Khadir Khadir
ZAKIR HUSSAIN
m.nainathambi.அபூஇப்ராஹீம்
Ebrahim Ansari
அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

இன்ஷா அல்லாஹ்! அருமருந்து இனி தொடர்ந்து வரும்.

Yasir said...

வருக வருக மீண்டும் காக்கா....ஊரில் உங்களுடன் அதிகமாக தொடர்ப்பில் இருக்க முடிந்தது சந்தோஷமான தருணங்கள்...பக்கவிளைவு தராத பக்குவப்படுத்து விளையும் மட்டும் தரும் இம்மருந்து தேவை எப்பொழுதும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு