காடுகள்
காடதுவே பசுமையினால் முகிலை ஈர்க்கும்
காதலினால் கார்முகில்கள் மழையைப் பெய்யும்
ஓடிவரும் பெருவெள்ளம் மிகைக்கா வண்ணம்
உறுதியுடன் தடுத்ததனைத் தேக்கி நிற்கும்
நாடுநகர் வளங்கொழிக்க வகையைச் செய்யும்
நன்னீரால் உயிரினங்கள் தாகந் தீர்க்கும்
பாடுபடும் விலங்கினங்கள் இணைக ளோடு
பதுங்கிடவும் காடுகளே இல்ல மாகும்.
அதிரை அஹ்மத்




0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.