1492 ஆம் ஆண்டு அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தவுடன். போர்ச்சுகலில் இருந்த வாஸ்கோடா காமாவை தொடர்பு கொன்டு (ஹாட் லைன்லாயன்டெல்லம் கேட்கப்புடாது) ஆசியா பக்கம் வகை வகையான கம கம மனமன உணவு வகைகளை சமைப்பதில் வல்லவர்கள் இருக்கிறார்களாம் அதை போய் கண்டுபிடித்து விபரம் சொல்ல சொல்லி கூறினார்.
வாஸ்கோடாகாமாவும் போர்ச்சுகல்லிருந்து 20 may 1498 (என் தங்கச்சி மகள் பிறந்த நாள் கூட 20 may தான்). அன்று கேரளாவின் காலிகட்டில் பொன்னானி அருகில் கப்படு என்ற ஊரில் வந்து இறங்கி உணவு வகைகளை பற்றி விசாரிக்க அங்கு உள்ள பெரியவர் ஒருவர் உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது அதிராம்பட்டினம்.... (அதாங்க எங்க ஊர் அதிராம்பட்டினம்.)
கடல் வழியே போனால் அங்கு துறைமுகம் உண்டு வாருஙகள் அங்கே போகலாம் என்று அழைத்து வந்து. கடற்கரைதெரு வந்த போதே உணவின் மணம் வாசணை மேலோங்க நமது சோம்முகம்மது அப்பாவின் முப்பாட்டனார். மம்தம்பியப்பா வரவேற்று உபசரித்து. மதிய உணவுடன் அன்றைய உணவுடன் உன்டகலியானையும் பறிமாற அதன் ரெசிபியை வாஸ்கோடாகாமா கேட்க அதற்கு மம்தம்பியப்பா. வாஸ்கோடா காமாவிடம் கேட்ட ஒரே உத்தரவாதம் பிற்காலத்தில் ஆன்டிபட்டி அரசபட்டி என்று எந்த ஊர்காரர்களும். இந்த உன்டகலியானுக்கு உரிமை கொண்டாடி வரக்கூடாது அதனால் இதன் காப்பி ரைட்ஸ் உரிமையை. அதிராம்பட்டினத்திற்கே வழங்க வேண்டும் என்று உத்திரவாதம் கேட்க அதற்க்கு வாஸ்கோடாகாமா அஃப்கோர்ஸ் இது அதிராம்பட்டினத்தார் கண்டுபிடித்த உணவுவகை இதற்கு நானே சாட்சி இதை பதிவு செய்கிறேன் என்று உத்தரவாதம் அளித்தாராம்.
மம்தம்பியப்பா அதற்கு பிறகு தான் செய்முறையை சொன்னார்களாம். இறால் தேங்காய் ஜீரகம் பச்சைமிளகாய்... கொஞ்சமாக தேவைபட்டால் உடச்சகடலை ... அத்துடன் முட்டையை கலந்து வானலியில் எண்ணெய் விட்டு சிறிது சிறுது விழுதுகளாக பொன்னிறத்தில் பொரித்து எடுத்தால் உண்டகலியான் ரெடி....
அத்தடன் மம்தம்பியப்பா....நமதூரின் பாரம்பரிய உணவு வகைகளான இறால் வடை. பிளாச்சப்பம.... வட்டி அடை இதன் காப்பிரைட்ஸ் உரிமையையும் 1498 ஆம் ஆண்டே வாங்கி விட்டார்களாம்.... இதன் அனைத்து விபரங்களையும் வாஸ்கோடாகாமா கொலம்ப ஸ்இடத்தில் தெரிவித்த உரையாடலின் கிராமபோன் தட்டு. கொலம்பியா யுனிவர்சிட்டி லைப்ரரியில் உள்ளதாம்.
அதிரையரின் உணவு வகைகள் அதிரையருக்கே காப்பிரைட்ஸ்.... !
M M S பஹுருத்தீன்
இது ஒரு கற்பனை பதிவு
3 Responses So Far:
வட்டுலப்பதுக்கு காப்பி ரைட் மம்தம்பிஅப்பா வாங்குலாங்களா? இல்லையா?
சுவையான கற்பனை பதிவு தான் என்றாலும் உன்டகலியான அதிரையில் மட்டுமே பரிமாறப்பட்டால் மட்டுமே காப்பி ரைட்டு நியாயமாக முயற்சிக்கலாம் ஆனால் இது கீழக்கரையிலும் கேரளத்தின் தலச்சேரியிலும் உள்ள இதன் பரம்பரை அபிமானிகள் காப்பி ரைட்டை எதிர்த்து வழக்கிடுவார்களே! பயங்கரவாதி வாஸ்கோட கமா முதல் காலடி வைத்ததும் கேரளத்தில் தானே. கேரளத்தில் கிடைக்கும் உன்டகலியானுக்காக ஏன் அம்புட்டு தூரம் அதிரைக்கு வர வேண்டும், லாஜிக் இடிக்குதே பகுருதீன்.
Post a Comment